இலையின் மேலாடும் பனித்துளி
கதையின் நாயகன் பார்த்திபன் அவனுக்கு தெரியாமலேயே அவனோட அண்ணி தங்கச்சி கூட கல்யாணம் பேசிடுறாங்க அவங்க அம்மா கிருஷ்ணவேணி அது தெரியும் போது அவனுக்கு விருப்பம் இல்லைனு சொல்லிடுறான்.
அதுனால குடும்பத்துல கலவரம் ஒரு பக்கம்.
அவனுக்கு பொண்ணு கொடுக்க விருப்பப் பட்டு வரும் வரன் பவித்ரா அவ போட்டோ பார்த்து அவ மேல ஆசை பட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கிறான் இந்த கலாட்டால அவன் லைப் எப்படி போகுதுனு கதையில் தெரிஞ்சுக்கலாம்.
லலிதா அடாவடி பணக்கார அண்ணி அவளோட அலப்பறை தாங்க முடியல. பார்த்தி நல்லா வரது பிடிக்காமல் கிருஷ்ணாவேணியை ஏத்தி விடும் போது எல்லாம் அவ்வளவு கடுப்பாகுது அவ மேல

கிருஷ்ணவேணி என்ன அம்மானே புரிஞ்சுக்க முடியல பணத்துக்காக பார்த்தியை அவனோட விருப்பம் கேட்காமல் ஷிபாக்கு பேசுறது.லலிதாக்கு அடிமையாய் இருக்குறதுனு அவங்கள சுத்தமா பிடிக்கவே இல்ல


பவித்ரா பார்த்தியோட கியூட் பொம்மை


அவங்களோட லவ் ரசிக்கும் படியா இருந்துச்சு.
ஜீவா பவித்ராக்கு அவ்வளவு சப்போர்ட்.
அபி பவித்ரா பாண்டிங் நல்லா இருந்துச்சு.
ஷிபா சரியான சைக்கோ


ஸ்டோரி படிக்க நல்லா விறு விறுப்பா சூப்பரா இருந்துச்சு


வாழ்த்துக்கள்


