கங்குல்
விக்ரம், வைபவ், சக்தி, அனு இவங்க 4 பேரும் அண்ணன் தங்கச்சிங்க...
இவங்க கிட்ட ஒரு பரம்பரை வாள் இருக்கு. வருஷத்துல ஒரு முறை மட்டும் கோவில் திருவிழாக்கு வெளிய எடுத்து உள்ள வைச்சுடுவாங்க. அவங்க ஊரு கோவில் மாசத்துல ஒரு மட்டும் தீட்டு நாள்னு கோவிலை மூடி வைக்கிறாங்க.
அப்போ யாரும் அங்க போக கூடாது மீறி போனா யாரும் திரும்பி வர மாட்டாங்கனு ஊரு நம்புது. சக்தி அப்படி எல்லாரும் சொல்றதை மீறி அப்படி என்ன தான் நடக்குதுனு பார்க்கலாம்னு கோவில்க்கு நைட் போறான்.
ஆனால் காலையில் அடிபட்டு அவனை தூக்கிட்டு வராங்க. 2 நாள் வீட்ல இருக்கான் திடீர்னு இறந்து போயிடுறான். அவன் இறந்து 2வது நாள் வைபவ்வும் இறந்து போயிடுறான்.
இவங்க குடும்பத்துக்கு ஏதோ நடக்க போகுதுனு அகோரி ஒருத்தர் அடிக்கடி அவங்கள எச்சரிக்கை பண்ணிட்டே இருக்காரு. விக்ரம் அவனோட பிரண்ட் மாறன் இது எல்லாம் எப்படி நடக்குதுனு அங்க என்ன மர்மம் இருக்குதுனு சக்தி வைபவ் சாவுக்கு யாரு காரணம்னு சொல்லும் கதை.
விக்ரம், மாறன் 2 பேரும் இது எல்லாம் யாரு பண்றாங்கனு அருமையா கண்டு பிடிக்கிறாங்க. விக்ரம்க்கு எதுவும் ஆகிடுமோனு திகிலோடவே படிச்சேன்.
ஆனால் கடைசியில் அந்த சிகப்பு சட்டை காரன் இந்த ஆளுனு யோசிக்கவே இல்ல.
அகோரி ஏன் பாம்பு சடலத்தை பத்திர படுத்துறாரு. சக்தி, வைபவ்வை ஏன் கொலை பண்ணாங்கனு தெளிவா சொல்லி இருக்கலாம்.
கதை ஸ்டார்ட்டிங்ல இருந்து ரொம்பவே சுவாரஸ்யமா விறு விறுப்பா கொண்டு போனீங்க ஆனால் கடைசியில் முடிவு ஏதோ முழுமை அடையாத பீல். நிறைய கேள்விக்கு விடை இல்லாம முடிச்ச மாதிரி ஒரு பீல்.
ஸ்டோரி படிக்க நல்லா திகிலோட இருந்துச்சு.
வாழ்த்துக்கள்


