#நெஞ்சிலாடும்_நினைவலைகள்
நாயகன் : விக்ரமாதித்தன்
நாயகி : ப்ரியம்வதா
மருத்துவ மாணவியான ரியா,அதே மருத்துவக் கல்லூரியில படிக்கிற அவ அக்கா ப்ரீத்திகா, ரித்துவோட நண்பர்களான பரணி, சோமு, சுமதி, அபிநயா, ரேணு, கௌதம், சுவாதி இவங்க ஒன்பது பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா போன இடத்தில பரணி ஏரியில மூழ்கி இற*ந்திடுறான்.அப்போ அவன் கூட இருந்த ரியாவுக்கு ஆக்*ஸிடெண்ட் ஆகி கோ*மாவுக்கு போய் உயிர் பிழைச்சு வர்றா. ஆனா அந்த ஒரு வருஷ நினைவுகள் அவளுக்கு மறந்து போயிடுது. இந்த நிலைமையில அவளுக்கு வரன் பாக்குறாங்க வீட்ல. மூணு வரன்கள் தகைஞ்சு வந்த நேரத்தில அவளையும், பரணியையும் பத்தி அவதூறா கடிதமும், ஃபோட்டோவும் அவங்களுக்கு கெடைக்கவே மூணு சம்பந்தமும் கை நழுவி போகுது. இந்த நேரத்தில டிடெக்ட்டிவ்வா இருக்கிற விக்ரமுக்கு பொண்ணு கேக்குறாங்க ரியாவை. விக்ரமோட கொலீக் மற்றும் உற்ற நண்பனான பிரபு ரியாவுக்கு உடன்பிறவா அண்ணன் மாதிரி. அவன் மூலமா ரியாவைப் பத்தின எல்லா விஷயமும் விக்ரம் காதுக்கு வருது. அதுக்கு முன்னே கல்யாணத்தில ஆர்வமில்லாம இருக்கிற விக்ரமுக்கு ரியாவோட உதவும் மனப்பான்மையும், தைரிய குணமும் ரொம்ப பிடிச்சு போகவே அவளை கல்யாணம் பண்ணிக்குறான். பரணியோட மர*ணம் கொ*லையா, தற்*கொ*லையான்னு கண்டுபிடிச்சு,பரணியோட இற*ப்புக்கும்,ரியாவோட நிலைமைக்கும் காரணமானவங்களை சட்டத்துக்கு முன்னால நிறுத்துறான். அதை யாரு பண்ணியிருப்பான்னு கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க தோழிகளே


இதில ரியாவோட குணத்தை பத்தி சொல்லியே ஆகணும். தான் இருக்கிற இடத்தை கலகலப்பா வைச்சிட்டு எதையுமே தைரியமா ஃபேஸ் பண்ணி, முகத்துக்கு நேரா எதையுமே சொல்ற தைரியமுள்ள, அடுத்தவங்களை காயப்படுத்தாத, எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அடுத்தவங்களுக்கு உதவி பண்ற ரொம்ப ஸ்வீட்டான பொண்ணு. அவளை எந்த நிலையிலேயும் வருத்தப்படுத்தாம, அவளை சந்தேகப்படாம அவளோட கஷ்டத்தை தன்னோட கஷ்டமா நினைச்சு அதில இருந்து வெளிய கொண்டு வர போராடுற விக்ரம் ரியாவுக்கு கொஞ்சமும் சளைச்சவனில்லை. ரியா தளர்ந்து போற ஒவ்வொரு நேரமும் தன் காதலால, அரவணைப்பால அவளுக்கு மிகப்பெரிய சப்போர்ட் குடுத்து அவளோட பயத்தில இருந்தும், துன்பத்தில இருந்தும் வெளிய கொண்டு வர்ற விக்ரம் ஒரு பக்கா ஹீரோ மெட்டீரியல். இதில வர்ற எல்லா கதாபாத்திரங்களுமே ரியாவை ஒரு குழந்தை மாதிரி நடத்துறத பாக்கிறப்போ அவ்வளவு அருமையா இருக்கு.


பரணி-ரியா-சோமு இவங்களோட பாண்டிங் ரொம்ப சூப்பர். அதை விக்ரமும், சோமுவோட மனைவி கீதாவும் உணர்ந்து அங்கீகரிச்சது அதை விட அருமை. ரியா மற்றும் விக்ரமோட அம்மா வசு இவங்க பாண்டிங் செம. தோழியைப் போல மாமியார் கெடைக்குறது வரம். கணடிப்பான ஆளா இருந்தாலும் விக்ரமோட அப்பா கல்யாண சுந்தரம் அவரோட பாசத்தை வெளிய கொட்டலைனாலும் நல்லா உணர வைக்குறாரு. மகளுக்கு இப்படி ஆகிடுச்சுன்னு அவளை மூலைல உக்கார வைக்காம அவளுக்கு அதை விட்டு வெளியே வர்றதுக்கு உதவி செஞ்சு அதே நேரத்தில அவளோட உயிருக்கு இருக்கிற அச்சுறுத்தல் தெரிஞ்சு பாதுகாக்கிற சிறந்த பெற்றோர் வேதாச்சலம், வாசவி. ரொம்ப பாசமான அதே சமயம் கொஞ்சம் வெகுளித்தனமான அக்கா ரித்து அவளோட காதல் கணவன் ஆகாஷ்.ரியாவுக்கு தன்னோட நட்புனாலதான் பிரச்சனைன்னு தெரிய வரும் போது ரித்து துடிக்கிறதும், ஆகாஷோட புரிந்துணர்வோடு கூடிய ஆறுதலும் ரொம்ப அருமை.


பிரபு கூடப்பிறக்காத அண்ணனா ரியாவுக்கும், உற்ற நண்பனா விக்ரமுக்கும் தோள் குடுக்கிற ஒரு அருமையான மனிதன். ரியாவோட உற்ற தோழி ரம்யாவுக்கு ரியாவை மீட்டெடுத்ததில பெரிய பங்கு இருக்கு. ரியா, ரம்யா ரெண்டு பேருக்குமே ரெண்டு விதமான பிரச்சனைகள். ரெண்டு பேரும் நட்புங்குற ஒற்றை படகுல அதை கடந்து வர்றது அருமை. பரணியோட அம்மா திலகவதி பரணியோட குணம் எங்கிருந்து வந்திச்சுன்னு அவங்களை பாத்தா புரிஞ்சுக்கலாம். ஆனா ஒரு கண்மூடித்தனமான, மூர்க்கமான அவசியமே இல்லாத கோபத்தால நல்லவனான பரணி இல்லாம ஆகிட்டான். அது ரொம்ப வருத்தம்.

நண்பர்கள்னு நினைச்சு பழகினவங்களே துரோகிகளா மாறுறது அதிர்ச்சியா இருக்கு. புரிதல் இல்லாம தனக்குத்தான் எல்லாமும் கெடைக்கணும் தான் நினைச்சது நடக்கணும்னு அகங்காரத்தில ஒரு உயிர் போயிடுச்சு. ஆனா அதுக்கப்புறமும் அது தெரிஞ்ச ரியா அவ நினைவுகளை மீட்டெடுக்கக்கூடாதுன்னு நினைச்சு அவங்க செய்த செயல்களும் அவ கல்யாணம் நடக்கவே கூடாதுன்னு வன்மமா செஞ்ச செயல்களும் அதை செஞ்சவங்க யாருன்னு தெரிய வரும் போதும் பயங்கர ஷாக் குடுக்குது நமக்கு.


அதிலேயும் அந்த குற்றவாளியோட பெற்றோர் வந்து ரியாவை அந்த குற்றவாளியை மன்னிச்சு அவங்ககூட பேசணும்னு சொல்லும் போது அவ்வளவு கோபம் வந்தது எனக்கு. வளர்க்கத் தெரியாம வளர்த்து இப்படி அடுத்த குடும்பத்து பிள்ளைங்க வாழ்க்கையை கெடுத்த தன் புள்ளையை மன்னிச்சு கேஸை வாபஸ் வாங்கணும்னு கேக்குறதுக்கு எப்படி மனசு வருது. பாதிக்கப்பட்டவங்க மனுஷங்க இல்லையா? மனசில வன்மம் வைச்சுக்கிட்டு ஒரு தப்பு பண்ணி அதை உணராம பிடிபடுற வரை தப்பு பண்ணின அந்த குற்றவாளிக்கு பரிஞ்சு பேசின மனசாட்சி கெட்ட மனுஷங்க அந்த குற்றவாளியை பெத்தவங்க


இதில ரைட்டரை பாராட்டியே ஆகணும்.மொதல்ல இருந்தே பாக்குறவங்க எல்லார் மேலயும் நம்மளை சந்தேகப்பட வைச்சுக்கிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்தில ஒரு ஆளை நாம உறுதியா நம்புவோம் இவங்கதான் பண்ணியிருக்காங்கன்னு ஆனா அது அப்படியே வேற ட்விஸ்ட்டுக்கு கொண்டு போய் நம்மளை அதிர்ச்சியடைய வைக்குது. கடைசி வரை விறுவிறுப்பா கொண்டு போயிருக்காங்க. இடையிடையே குடும்ப பாசம், விக்ரம் ரியாவோட விரசமில்லாத ரொமான்ஸுன்னு ரொம்ப அழகா கதையை நகர்த்தியிருக்காங்க. இந்த கதையோட நினைவுகள் எங்கள் நெஞ்சிலும் ஆடும் எப்போதும். போட்டியில வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.




