#ஓய்வதில்லை_காதல்_மழை_விமர்சனம்
இந்த காலகட்டத்திற்க்கு ஏற்ப எதார்த்தமான கதைகளம்❤❤
பருவவயதில் வரும் காதல் இயல்பானது ஆனால் அந்த வயதிலேயே திருமணம்? படிக்கும் வயதில் திருமணம் செய்து இரண்டு வீட்டாரின் கோபத்தை சம்பாதித்து அதனால் வரும் விளைவுகளை சொல்லுது கதை ❤❤❤
காதல், திருமணம் அதன் விளைவாக வரும் உயிர் அதர்வா

பதினொரு வயது வரை தாய் ஈழைநிதி அதர்வாவின் தந்தையின் பெயரைகூட சொல்லாமல் வளர்க்கிறாள்

அதர்வா தன் தந்தையை கண்டுபிடித்தானா?
பிரிந்த காதலர்கள் ஒன்றிணைந்தார்களா? என்பது முற்பாதி கதை ❤
விவாகரத்து ரொம்பவே கொடுமையானது அதனால் பாதிக்கப்படைவது பிள்ளைகள்.
கட்டியவன் கயவனாக இருந்தால் விவாகரத்து என்பது ஏற்ப்புடையது ஆனால் இங்கு செம்பரிதி மற்றும் ஈழநிதியின் சூழ்நிலை, பெற்றவர்கள் மற்றும் வயது பிரிவுக்கு காரணம் ஆகிவிடுகிறது

அதர்வா

செம்பா முதல் சந்திப்பே அழகு.
தந்தை யாரென்று அரியாமல் செம்பாவிடம் அப்பாவை கண்டுபிடிச்சு கொடுங்க அங்கிள் னு சொன்னது எல்லாம் கொடுமை

தந்தையின் பெயர் கூட தெரியாமல் அப்பு படும் வேதனை ஆகட்டும், நீதிமன்றத்தில் ஏன் எதற்கு என்று அறியாமல் தனித்து இருந்தது ஆகட்டும், அப்பாவை அறிந்தபின் அவன் வீட்டில் இருந்து சென்றது ஆகட்டும் அப்பப்பா கொடுமையின் உச்சம்


முதல் பாதி முழுக்க அதர்வா அலை

அவனின் தனிமை, தேடல் ,அப்பா அம்மாவை சேர்க்க அவன் படும்பாடு

மற்றும் அவன் செய்யும் சின்ன சின்ன குறும்புகள்

, அப்பா மகனின் உரையாடல்கள்

இப்படியெல்லாம் அழகு

ஈழநிதி செம்பா இரண்டுபேரையும் பார்க்க பாவமா இருக்கு சுத்தி இருக்கவங்க செய்யும் சூழ்ச்சி தெரியாமல் அவங்க வலையில் சிக்கிக்கிறாங்க

ஈழநிதி கல்யாணம் பண்ணி அனுபவிச்சது கொடுமை

குழந்தை பிறந்த பிறகு அவனை வளர்க்க அவளின் போராட்டம் எல்லாம் ஒற்றை தாயா படும் கஷ்டத்திற்க்கு எடுத்துகாட்டு❤
செம்பரிதி பெற்ற பிள்ளைகிட்ட அப்பானு சொல்ல முடியாமல் நின்னது ரொம்பவும் கஷ்டமா இருந்தது


அக்காவுக்கும் அம்மாவுக்கும் கொடுத்த பதிலடி அருமை


பருவக்காதல் பக்குவகாதல் இரண்டிலும் இருவிரின் காதலும் நெருக்கமும் அடிதூள்



கதையில் வரும் உவமைகள் எல்லாம் உங்கள் எழுத்துக்கு வலுசேர்க்கிறது ❤❤
காதல் மழையை ரொம்ப பிடிச்சிருக்கு ❤

❤
வாசகர்களின் மனதிலும் ஓயாமல் காதல் மழை பெய்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
