Narmadha mf
New member
கொஞ்சம் உள்ளம் சிந்திடு

-விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் எண்ணத்தையும், செய்கையையும் நிதர்சனத்தில் உணர்த்தும் நிதர்சனமான கதைகளம்
எந்த ஒளிவும் மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டு திருமணத்திற்கு முன்பே, தன்னவளிடம் தன்னைப் பற்றிய உண்மையை மொழிந்தவன் உள்ளம் அவளது செல்வாக்கு. நிலையைக் கண்டு தனக்குள் இருக்கும் அறிவீனமான ரகசியத்தை மறைத்துள்ளான் என்பது நிதர்சனம்
கல்வி அறிவு இருந்து என்ன பயன்???
செல்வாக்கு உள்ள இடத்தில் தன்மானம் அடிப்பட்டுப் போனதாக நினைக்கும் அறிவொளி இவன் வாழ்க்கையின் முக்கிய முடிவை எடுத்து மறைத்த தாயின் மீது குரோதம் கொள்ளாமல் தன்னை நம்பி நம்பிக்கையுடன் வந்தவள் மீது துவேஷம் கொண்டது என்ன சொல்ல முட்டாள்தனத்தின் மைந்தன் என்று தோன்றியது
நண்பர்கள் அனைவருக்கும் வரம் தான் மறுப்பதற்கில்லை இருப்பினும் பொறாமையும் போட்டியும் உள்ள நபர்கள் தன் துறையில் நண்பர்களாய் ஓநாய் வேஷம் போடுவார்கள் என்று அறிந்தும் அவர்களது எள்ளலையும் பேச்சையும் பெரும் அவமானமாய் எடுத்து வாழ்க்கையை சிக்கல் கோலமாக்கியவன் புத்தியை என்ன சொல்ல
பல்வேறு காரணங்களால் குழந்தை வரம் இன்று தடைபட்டு போகும் சூழ்நிலை வெகுவாக காண முடிகிறது அப்பேர்ப்பட்ட வரத்தை இவன் உதாசீனப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் பெயரளவில் கூட அதற்கான மகிழ்ச்சியை தன்னவளுக்கு கொடுக்காமல் அகங்காரத்தின் பிடியில் செய்த செயல்கள் இவன் மீது வெறுப்பை வாரி இறைத்தது
தன் அன்னை தமக்கை உணர்வுகளுக்கு அளிக்கும் மதிப்பை தன் வாழ்க்கையே இவனை நம்பி அளித்தவள் மீது பாதி அளவு கூட மதிப்பில்லாமல் செயல்பட்டவனது செயல் கண் மற்றும் மூளை இருந்தும் ஒளியும் ஞானமும் அற்றவனாகவே தோன்றியது....
இவன் மண்டையில் உள்ள தலைகணமும் அகங்காரமும் புயலாய் மையம் கொண்ட தன்னவளின் அடியில் மரணித்ததே இவன் அறிவொளிவாய் நடந்து கொண்டதற்கு கிடைத்த பரிசு
நிதர்ஷனா : அறிவும் அழகும் விவேகமும் நிறைந்த அழகு மங்கை
நல் பெற்றோர் வளர்ப்பில் அழகில் மிளிர்ந்ததை விட அறிவிலும் கனிவிலும் மிளிர்ந்தாள்
பெற்றோரின் மீதான அளவு கடந்த நம்பிக்கையினால் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து அந்த வாழ்க்கையை செழிப்போடும் காதலோடும் வாழ வேண்டும் என்றவள் கனவில் கரிதுகளை சேர்ப்பான் தன்னவன் என்று அறியாமல் போனது விதையின் சதியே
தன் குடும்பம் தான் வாழ வந்த குடும்பம் என்றில்லாமல் அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி வாழ நினைத்தவள் உள்ளத்தை தன்னவனுடன் சேர்ந்து அவனது உறவுகளும் காயப்படுத்தி வேதனை கொள்ள செய்தது வேதனையை கொடுத்தது
எதற்கும் ஒரு தீர்வு உண்டு அதன் வழியை அடையும் முதல் படியை அறிந்தால் சமாளிக்க இயலும் என்ற படிப்பினையின் மூலம் உறவுகளை அன்பால் வளைத்தவள் பொறுமை பேரழகு
மழலையின் வரவில் கனவில் மிதந்தவள் வேரோடு சாய தன்னவனே காரணியாக அமைவான் என்று துளியும் நினையாதவள் அடைந்த வலி கொடியது
வாழ்க வளமுடன்
மிகவும் அழகான கதை போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ருத்ரபிரார்த்தனா

.
பிரனேஷ் விதுலன்: தன் சிறு வயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் தமக்கையின் வளர்ப்பில் மிளிர்ந்து நல் ஆண் மகனாக திகழ்ந்து பாசத்தையும் அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து தலை நிமிர்ந்து வாழ வளர்ச்சியை நோக்கி பயணித்தவன் உள்ளம் உயர்வானது தான் மறுப்பதற்கில்லை..
தான் என்ற அகங்காரம் இல்லாவிட்டாலும் தானே தன் உறவுகளுக்கு அனைத்துமாய் இருக்க வேண்டும் என்றவனின் உள்ள போக்கு திருமண பந்தத்தில் விஷத்தை துளித்துளியாக கலக்கச் செய்தது....
எந்த ஒளிவும் மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டு திருமணத்திற்கு முன்பே, தன்னவளிடம் தன்னைப் பற்றிய உண்மையை மொழிந்தவன் உள்ளம் அவளது செல்வாக்கு. நிலையைக் கண்டு தனக்குள் இருக்கும் அறிவீனமான ரகசியத்தை மறைத்துள்ளான் என்பது நிதர்சனம்

.
கல்வி அறிவு இருந்து என்ன பயன்??? 
தன்னவள் வீட்டு மனிதர்களைப் பற்றிய புரிதல் இவனது அறிவை மிகத் தெளிவாக சுட்டி காட்டியது..

செல்வாக்கு உள்ள இடத்தில் தன்மானம் அடிப்பட்டுப் போனதாக நினைக்கும் அறிவொளி இவன் வாழ்க்கையின் முக்கிய முடிவை எடுத்து மறைத்த தாயின் மீது குரோதம் கொள்ளாமல் தன்னை நம்பி நம்பிக்கையுடன் வந்தவள் மீது துவேஷம் கொண்டது என்ன சொல்ல முட்டாள்தனத்தின் மைந்தன் என்று தோன்றியது

.
நண்பர்கள் அனைவருக்கும் வரம் தான் மறுப்பதற்கில்லை இருப்பினும் பொறாமையும் போட்டியும் உள்ள நபர்கள் தன் துறையில் நண்பர்களாய் ஓநாய் வேஷம் போடுவார்கள் என்று அறிந்தும் அவர்களது எள்ளலையும் பேச்சையும் பெரும் அவமானமாய் எடுத்து வாழ்க்கையை சிக்கல் கோலமாக்கியவன் புத்தியை என்ன சொல்ல

.
தன் உணர்வோடு மட்டுமின்றி தன்னை நம்பியவள் உணர்வோடும் விளையாடி அவளுக்கான அங்கீகாரத்தை யாசித்து தனக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று இவன் செயல்படுத்திய ஒவ்வொரு விடயமும் அளவில்லா கோபத்தை ஏற்படுத்தியது..
பல்வேறு காரணங்களால் குழந்தை வரம் இன்று தடைபட்டு போகும் சூழ்நிலை வெகுவாக காண முடிகிறது அப்பேர்ப்பட்ட வரத்தை இவன் உதாசீனப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் பெயரளவில் கூட அதற்கான மகிழ்ச்சியை தன்னவளுக்கு கொடுக்காமல் அகங்காரத்தின் பிடியில் செய்த செயல்கள் இவன் மீது வெறுப்பை வாரி இறைத்தது

.
தன் அன்னை தமக்கை உணர்வுகளுக்கு அளிக்கும் மதிப்பை தன் வாழ்க்கையே இவனை நம்பி அளித்தவள் மீது பாதி அளவு கூட மதிப்பில்லாமல் செயல்பட்டவனது செயல் கண் மற்றும் மூளை இருந்தும் ஒளியும் ஞானமும் அற்றவனாகவே தோன்றியது....
.
இவன் மண்டையில் உள்ள தலைகணமும் அகங்காரமும் புயலாய் மையம் கொண்ட தன்னவளின் அடியில் மரணித்ததே இவன் அறிவொளிவாய் நடந்து கொண்டதற்கு கிடைத்த பரிசு

.
நிதர்ஷனா : அறிவும் அழகும் விவேகமும் நிறைந்த அழகு மங்கை

.
நல் பெற்றோர் வளர்ப்பில் அழகில் மிளிர்ந்ததை விட அறிவிலும் கனிவிலும் மிளிர்ந்தாள்

.
பெற்றோரின் மீதான அளவு கடந்த நம்பிக்கையினால் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து அந்த வாழ்க்கையை செழிப்போடும் காதலோடும் வாழ வேண்டும் என்றவள் கனவில் கரிதுகளை சேர்ப்பான் தன்னவன் என்று அறியாமல் போனது விதையின் சதியே

.
தன் குடும்பம் தான் வாழ வந்த குடும்பம் என்றில்லாமல் அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி வாழ நினைத்தவள் உள்ளத்தை தன்னவனுடன் சேர்ந்து அவனது உறவுகளும் காயப்படுத்தி வேதனை கொள்ள செய்தது வேதனையை கொடுத்தது

.
எதற்கும் ஒரு தீர்வு உண்டு அதன் வழியை அடையும் முதல் படியை அறிந்தால் சமாளிக்க இயலும் என்ற படிப்பினையின் மூலம் உறவுகளை அன்பால் வளைத்தவள் பொறுமை பேரழகு

.
மழலையின் வரவில் கனவில் மிதந்தவள் வேரோடு சாய தன்னவனே காரணியாக அமைவான் என்று துளியும் நினையாதவள் அடைந்த வலி கொடியது 

.
இறுதியில் பொறுமையின் எல்லையும் எல்லையை கடந்து பூவானவள் புயலாய் மையம் கொண்டு தன்னவனின் மீது படையெடுத்து அவனை தெளிய வைத்து இல்லற வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிய வைத்து என பிரம்மிக்க வைத்தாள்..
.
நிதர்சனா
விதுலன்
வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை வண்ணப் பக்கங்களாய் ஓவியம் தீட்டி வலிகளை மறையவும் மன்னிக்கவும் செய்து இழந்த சொர்க்கத்தையும் காலத்தையும் ஈடு செய்யும் உவகையுடன், அன்புடன், புரிந்துணர்வுடன் முதல் மழலையின் வரவில் இழந்த அழகிய துளிகளை மறுமலலையின் வரவில் ருசித்து கரைந்து கரை காணா நேசத்தை நோக்கி படையெடுத்து நிதர்சனமான வாழ்வை என்றும் கரையை கடக்க விடாமல் வாழ்வது பேரின்பமாக அமைந்தது.
வாழ்க வளமுடன்

விவாகரத்தும் தற்கொலையும் மிகவும் எளிதாகி விட்டது தற்போதுள்ள நடைமுறை வாழ்க்கையில் சிறிய விவாதம் பெரிய விவாதமாகி தீர்வை யோசிக்காமல் தீர்மானமாக வாழ்வையே விட்டு வெளியேறும் முடிவை யாசித்து நீதி தேவன் வாசலை மிதிக்கும் இன்றைய தலைமுறையினரின் போக்கு வலிக்க செய்கிறது., அதற்காக பிரச்சினையை சகித்து வாழ வேண்டும் என்பது இல்லை. இருப்பினும் தற்கொலை வரை சென்று தீராத வேதனையும் வலியையும் பெற்றோருக்கு கொடுத்துவிட்டு செல்லாமல் தீர்வை பெற்றோரிடம் பெற்று வெளி வர வேண்டும். இந்தக் கதையில் நிதர்சனாவின் மன உறுதியும் பொறுமையும் எதையும் எளிதில் முடியாத போது தன்னை பெற்றோர் உற்றோர்களின் ஆலோசனையின் படி தெளிவாக முடிவெடுத்து நின்றது பிரம்மிக்க செய்தது.. வலிகள் நிறைந்த பாதையை வண்ண மலர்களால் அலங்கரித்து வலி சென்று மறைந்த இடம் தெரியாமல் வசந்தத்தை வரவேற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து இன்றைய தலைமுறையினருக்கு உதாரணமாக திகழ்கின்றாள்..

Last edited: