#கொஞ்சம்_உள்ளம்_சிந்திடு_விமர்சனம்
எதார்த்தமான கணவன் மனைவி உறவு பற்றின கதை ❤
பிரனேஷ் விதுலனுக்கும் நிதர்சனாவுக்கும் பெரியவங்க பார்த்து இவங்களும் சம்மதம் சொல்லி வெகு விமரிசையாக திருமணம் நடக்குது. அதன்பிறகான அவங்க இல்வாழ்க்கை எப்படி இருக்கு? என்னென்ன பிரச்சினைகள் வருது? அதை எப்படி சமாளிக்கிறாங்க?னு கதை நகருது ❤
ஆணவம், ஆணாதிக்கம், மனைவியை அவமதிப்பது, அவதூறான பேச்சு, மனைவிக்கு மரியாதை தராமல் நடத்துவது, சுயநலம், அவளின் நிலையில் இருந்து அவளை பற்றி சிந்திக்காதது, சுயபுத்தியில்லாதது, துணை இருக்க வேண்டிய சமையத்தில் இல்லாமல் இருப்பது இப்படி இன்னும் நிறைய சொல்லலாம் பிரனேஷ் விதுலனை பற்றி

மொத்த எதிர்மறையான எண்ணங்களையும் குத்தகை எடுத்துறிருக்கான் இவன். இவனை திட்டி கோபபட்டு

எரிச்சல்ப்பட்டு

அச்சோ முடியலடா சாமினு ஆகிடுச்சு

இவனுக்கு அப்படியே எதிர் நிதர்சனா

பணம் இருக்குனு திமிர் இல்லை, எல்லையற்ற பொறுமைசாலி, தன்னம்பிக்கை, முடிவு எடுக்கும் திறன், தன் அன்பாலையும் செயல்களினாலும் புகுந்தவீட்டு ஆட்களின் மனதை மாற்றுவதுனு இன்னும் நிறைய சொல்லலாம் ❤
இரண்டு கதாபாத்திரங்களும் செதுக்கியிருக்கீங்க
ஒரு கட்டத்தில் இப்படி ஒருத்தன் கூட வாழனுமா இவனு தோணாமல் இல்ல

ஆனால் விவாகரத்து ஒன்னும் சாதாரணமான விஷயம் இல்லையே. அந்த முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி எவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கு. அதை தவிர்க்க ரொம்பவும் போராட வேண்டி இருக்கு
நிதர்சனாவும் இப்படிதான் பிரனேஷ் தான் கணவன்னு முடிவு எடுத்தப்பின் அந்த முடிவு சரிதான் அவன் நல்லவன்னு நம்பி அவனுக்கு அவள் குடுத்த வாய்ப்புகளும் மகிழ்வான வாழ்விற்கான போராட்டமும் என்ன பிரம்மிக்க வெச்சது

நிதர்சனாவின் பெற்றோர்கள் எல்லா நேரங்களிலும் அவளுக்கு உருதுணையா நின்னது சிறப்பு ❤ முக்கியமான சம்பூர்ணத்தின் சரியான அறிவுரைகள்

பழநி கொஞ்ச நேரமே வந்தாலும் மனசுல நிக்கறார்❤ ஆரம்பத்தில் பிரனேஷ் மாமியார் மற்றும் அக்காக்கள் நிதாவை படுத்துனது கோபம் வந்தாலும் இறுதியில் அவளுக்காக பிரனேஷிடம் சண்டையிட்டது சூப்பர் ❤
குரங்கு கையில் பூ மாலை கொடுத்து வெச்சிருக்கீங்களே என்ன ஆகுமோனு மனசு பக்கு பக்குனு அடிச்சுக்கிட்டாலும் நிதாவின் அன்பாலும் புரிதலாலும் பூமாலைக்கு பாதகம் வராமல் பார்த்துகிட்டது அழகு

கதை எனக்கு மிகவும் பிடித்தது❤
கொஞ்சம் இல்ல இல்ல நிறையவே வாசகர்கள் உள்ளம் சிந்தி போட்டியில் வெற்றி பெற வைக்க வாழ்த்துக்கள்
