ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 22- கொஞ்சம் உள்ளம் சிந்திடு

கொஞ்சம் உள்ளம் சிந்திடு💜❣️💜-விமர்சனம்
843b90da6b5289c2d6caa6949d403d5c.jpg

இன்றைய தலைமுறையினரின் எண்ணத்தையும், செய்கையையும் நிதர்சனத்தில் உணர்த்தும் நிதர்சனமான கதைகளம் 🥰🥰🥰😍😍👌👌👌.

பிரனேஷ் விதுலன்: தன் சிறு வயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் தமக்கையின் வளர்ப்பில் மிளிர்ந்து நல் ஆண் மகனாக திகழ்ந்து பாசத்தையும் அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து தலை நிமிர்ந்து வாழ வளர்ச்சியை நோக்கி பயணித்தவன் உள்ளம் உயர்வானது தான் மறுப்பதற்கில்லை..

தான் என்ற அகங்காரம் இல்லாவிட்டாலும் தானே தன் உறவுகளுக்கு அனைத்துமாய் இருக்க வேண்டும் என்றவனின் உள்ள போக்கு திருமண பந்தத்தில் விஷத்தை துளித்துளியாக கலக்கச் செய்தது....

எந்த ஒளிவும் மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டு திருமணத்திற்கு முன்பே, தன்னவளிடம் தன்னைப் பற்றிய உண்மையை மொழிந்தவன் உள்ளம் அவளது செல்வாக்கு. நிலையைக் கண்டு தனக்குள் இருக்கும் அறிவீனமான ரகசியத்தை மறைத்துள்ளான் என்பது நிதர்சனம்🤷🤷🤷🤷🤷.

கல்வி அறிவு இருந்து என்ன பயன்??? 🤦🤦 தன்னவள் வீட்டு மனிதர்களைப் பற்றிய புரிதல் இவனது அறிவை மிகத் தெளிவாக சுட்டி காட்டியது..🤦🤦🤦🤦🤦

செல்வாக்கு உள்ள இடத்தில் தன்மானம் அடிப்பட்டுப் போனதாக நினைக்கும் அறிவொளி இவன் வாழ்க்கையின் முக்கிய முடிவை எடுத்து மறைத்த தாயின் மீது குரோதம் கொள்ளாமல் தன்னை நம்பி நம்பிக்கையுடன் வந்தவள் மீது துவேஷம் கொண்டது என்ன சொல்ல முட்டாள்தனத்தின் மைந்தன் என்று தோன்றியது😤😤😤.

நண்பர்கள் அனைவருக்கும் வரம் தான் மறுப்பதற்கில்லை இருப்பினும் பொறாமையும் போட்டியும் உள்ள நபர்கள் தன் துறையில் நண்பர்களாய் ஓநாய் வேஷம் போடுவார்கள் என்று அறிந்தும் அவர்களது எள்ளலையும் பேச்சையும் பெரும் அவமானமாய் எடுத்து வாழ்க்கையை சிக்கல் கோலமாக்கியவன் புத்தியை என்ன சொல்ல🤦🤦🤦🤦🤦.

தன் உணர்வோடு மட்டுமின்றி தன்னை நம்பியவள் உணர்வோடும் விளையாடி அவளுக்கான அங்கீகாரத்தை யாசித்து தனக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று இவன் செயல்படுத்திய ஒவ்வொரு விடயமும் அளவில்லா கோபத்தை ஏற்படுத்தியது..

பல்வேறு காரணங்களால் குழந்தை வரம் இன்று தடைபட்டு போகும் சூழ்நிலை வெகுவாக காண முடிகிறது அப்பேர்ப்பட்ட வரத்தை இவன் உதாசீனப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் பெயரளவில் கூட அதற்கான மகிழ்ச்சியை தன்னவளுக்கு கொடுக்காமல் அகங்காரத்தின் பிடியில் செய்த செயல்கள் இவன் மீது வெறுப்பை வாரி இறைத்தது😡😡😡😡😡.

தன் அன்னை தமக்கை உணர்வுகளுக்கு அளிக்கும் மதிப்பை தன் வாழ்க்கையே இவனை நம்பி அளித்தவள் மீது பாதி அளவு கூட மதிப்பில்லாமல் செயல்பட்டவனது செயல் கண் மற்றும் மூளை இருந்தும் ஒளியும் ஞானமும் அற்றவனாகவே தோன்றியது....🤨🤨.

இவன் மண்டையில் உள்ள தலைகணமும் அகங்காரமும் புயலாய் மையம் கொண்ட தன்னவளின் அடியில் மரணித்ததே இவன் அறிவொளிவாய் நடந்து கொண்டதற்கு கிடைத்த பரிசு🤭🤭🤷🤷.

நிதர்ஷனா : அறிவும் அழகும் விவேகமும் நிறைந்த அழகு மங்கை💞💞💞.

நல் பெற்றோர் வளர்ப்பில் அழகில் மிளிர்ந்ததை விட அறிவிலும் கனிவிலும் மிளிர்ந்தாள்❣️❣️❣️.

பெற்றோரின் மீதான அளவு கடந்த நம்பிக்கையினால் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து அந்த வாழ்க்கையை செழிப்போடும் காதலோடும் வாழ வேண்டும் என்றவள் கனவில் கரிதுகளை சேர்ப்பான் தன்னவன் என்று அறியாமல் போனது விதையின் சதியே😒😒😒😒😒.

தன் குடும்பம் தான் வாழ வந்த குடும்பம் என்றில்லாமல் அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி வாழ நினைத்தவள் உள்ளத்தை தன்னவனுடன் சேர்ந்து அவனது உறவுகளும் காயப்படுத்தி வேதனை கொள்ள செய்தது வேதனையை கொடுத்தது🥺🥺🥺🥺🥺.

எதற்கும் ஒரு தீர்வு உண்டு அதன் வழியை அடையும் முதல் படியை அறிந்தால் சமாளிக்க இயலும் என்ற படிப்பினையின் மூலம் உறவுகளை அன்பால் வளைத்தவள் பொறுமை பேரழகு☺️☺️☺️☺️👌👌.

மழலையின் வரவில் கனவில் மிதந்தவள் வேரோடு சாய தன்னவனே காரணியாக அமைவான் என்று துளியும் நினையாதவள் அடைந்த வலி கொடியது 💔💔💔.

இறுதியில் பொறுமையின் எல்லையும் எல்லையை கடந்து பூவானவள் புயலாய் மையம் கொண்டு தன்னவனின் மீது படையெடுத்து அவனை தெளிய வைத்து இல்லற வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிய வைத்து என பிரம்மிக்க வைத்தாள்..

.

💐 நிதர்சனா❣️ விதுலன்💐

வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை வண்ணப் பக்கங்களாய் ஓவியம் தீட்டி வலிகளை மறையவும் மன்னிக்கவும் செய்து இழந்த சொர்க்கத்தையும் காலத்தையும் ஈடு செய்யும் உவகையுடன், அன்புடன், புரிந்துணர்வுடன் முதல் மழலையின் வரவில் இழந்த அழகிய துளிகளை மறுமலலையின் வரவில் ருசித்து கரைந்து கரை காணா நேசத்தை நோக்கி படையெடுத்து நிதர்சனமான வாழ்வை என்றும் கரையை கடக்க விடாமல் வாழ்வது பேரின்பமாக அமைந்தது.

வாழ்க வளமுடன்💞💞💞💛💛💐💐💐💐💐

விவாகரத்தும் தற்கொலையும் மிகவும் எளிதாகி விட்டது தற்போதுள்ள நடைமுறை வாழ்க்கையில் சிறிய விவாதம் பெரிய விவாதமாகி தீர்வை யோசிக்காமல் தீர்மானமாக வாழ்வையே விட்டு வெளியேறும் முடிவை யாசித்து நீதி தேவன் வாசலை மிதிக்கும் இன்றைய தலைமுறையினரின் போக்கு வலிக்க செய்கிறது., அதற்காக பிரச்சினையை சகித்து வாழ வேண்டும் என்பது இல்லை. இருப்பினும் தற்கொலை வரை சென்று தீராத வேதனையும் வலியையும் பெற்றோருக்கு கொடுத்துவிட்டு செல்லாமல் தீர்வை பெற்றோரிடம் பெற்று வெளி வர வேண்டும். இந்தக் கதையில் நிதர்சனாவின் மன உறுதியும் பொறுமையும் எதையும் எளிதில் முடியாத போது தன்னை பெற்றோர் உற்றோர்களின் ஆலோசனையின் படி தெளிவாக முடிவெடுத்து நின்றது பிரம்மிக்க செய்தது.. வலிகள் நிறைந்த பாதையை வண்ண மலர்களால் அலங்கரித்து வலி சென்று மறைந்த இடம் தெரியாமல் வசந்தத்தை வரவேற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து இன்றைய தலைமுறையினருக்கு உதாரணமாக திகழ்கின்றாள்..

மிகவும் அழகான கதை போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ருத்ரபிரார்த்தனா ❣️❣️❣️💐💐💐💐💐

 
Last edited:
கொஞ்சம் உள்ளம் சிந்திடு

நிதர்ஷனா நம் நாயகி. ப்ரனேஷ் நம் நாயகன்...
நிதர்ஷனா நல்ல வசதியான வீட்டு பொண்ணு. அவளுக்கு அவ அப்பா கல்யாணம் பண்ண முடிவு பார்க்குற பையன் தான் ப்ரனேஷ். வசதி கம்மியா இருந்தாலும் பையன் நல்ல பையன்னு பொண்ணை கட்டி கொடுக்குறாங்க. ப்ரனேஷ்க்கு அப்பா யாருனு தெரியாது அவளை விட வசதி கம்மி கல்யாணத்துல அது பெரிய குறையா தெரியுது.

பணக்கார தனத்தை காட்டுறதா நினைச்சு அவளை தள்ளி வைக்குறான்.அவனோட குடும்பமே அவ பணக்காரி ப்ரனேஷ்ஷை பிரிச்சுடுவானு நினைத்து அவளை ஒதுக்குறாங்க.

நிதர்ஷனா ப்ரனேஷ் லைப் எப்படி போகுது அவன் வீட்ல அவளை ஏத்துக்கிட்டாங்களானு கதையில் தெரிஞ்சுக்கலாம்.
ப்ரனேஷ் இவனை என்ன சொல்றது சரியான லூசு பையன் 😬😬😬 அம்புட்டு ஈகோ பயபுள்ளைக்கு😏😏😏

அவளை புரிஞ்சுக்காமல் தள்ளி வைச்சு கஷ்டம் படுத்துறது அவளை வேலைக்கு போக விடாமல் கோவா கூட்டிட்டு போய் பண்ணுற வேலை எல்லாம் இவன் மேல அம்புட்டு கடுப்பு வருது 😤😤

நிதர்ஷனா இந்த பெட்டர்மாஸ் லைட் தான் வேணுமானு இருந்துச்சு. ஆனால் கடைசியில் அவனை வைச்சு அவனோட தப்பை உணர வைச்சு அவ லைப்பை அழகா கொண்டு போய்ட்டா.😍😍

எந்த ட்விஸ்ட்டும் இல்லாம இல்லாமல் அழகான ஸ்டோரி படிக்க நல்லா இருந்துச்சு.

ஆரம்பத்துல எனக்கு ப்ரனேஷ்ஷை பிடிக்கவே இல்ல. ஆனால் தன்னோட தப்பை புரிஞ்சுகிட்டு பொண்டாட்டி பிள்ளைக்காக வேலையை விட்டு அவனை ப்ரூவ் பண்ணது அவன் செய்தது நல்லா இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
கொஞ்சம் உள்ளம் சிந்திடு 💔

பெற்றவர்களினால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பணக்கார குடும்பத்தை சேர்ந்த நிதர்சனா,
மத்திய தர குடும்பத்தை சேர்ந்த பிரனேஷ் விதுலன்
அந்தஸ்த்து பேதத்தால் அடுத்தவர் பேச்சு கேட்டு மனைவியை அடக்கி ஆள நினைக்க, அவளுக்கு செய்யும் கொடுமைகள் ( பேச்சாலும், செயலிலும்) ஏராளம், பொருமையின் உச்சத்தில் நிதர்சனா, எத்தனையோ மன்னிப்புக்கள்,
மனைவி, குழந்தை இனி இல்லை என்ற பட்சத்தில் அவன் தப்பை உணர்ந்து,
மன மாற்றம் அதன் பின் அனைத்திற்கும் சேர்த்து அவனின் காதல் அழகு ♥️
 
ருத்ர பிரார்த்தனாவின்


கொஞ்சம் உள்ளம் சிந்திடு


நிதர்ஷனா. பிரனேஷ் விதுலன்



நம் சமுகம் நம் மனதில் எவ்வளவு ஆழமாக ஏற்ற தாழ்வுகளையும் தாழ்வு மனப்பான்மையும் நம்முள்

விதைத்திருக்கின்றது என்பதே கரு.



அதன் சுழலில் சிக்கி தெரிந்தும் தெரியாமலும், தெளிவில்லாமல் வெளி வர வழிதெரியாமல் குழம்பி பிரச்சனை இல்லாமல் போக வேண்டிய வாழ்க்கையை பிரச்சனையாக்கி கொள்கிறோம் என்பதே கதையின் நகர்வு




வசதி வாய்ப்புகளுடன் நன்கு படித்த தெளிவான பெண்ணான நிதர்ஷனாவை நடுத்தர‌ வர்க்கத்தை சேர்ந்த பையன் பிரனேஷ் விதுலனுக்கு பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர்.




திருமணத்தின் பொழுது பெண் வீட்டாரின் செல்வ வளமும் ,வம்பு கூட்த்தின் சொல் வளமும் சேர விதுலன் மனதின் தாழ்வு மனப்பான்மை தனக்கென ஓர் இடத்தை அழகாக பிடித்து கொள்கிறது.



விளைவு மருமகள் கைப்பட்டாள் குற்றம் கால் பட்டாள் குற்றமென செல்கிறது வாழ்க்கை.


இதில் ஆரம்பித்திலிருந்து வசதியான மருமகள் வந்தாள் தங்களை மதிக்கமாட்டாள் என குறைபாடும் மகள்கள்,அப்புறமென்ன தம்பி வாழ்கை தரிகிடதத்தோம் தான்.



தாயின் அறிவுரையும்,அவளது தெளிந்த சிந்தனை வாழ்க்கை செம்மைபடுத்த எடுக்கும் முயற்சியெல்லாம் , பிரனேஷின் முட்டுகட்டையாள்,முட்டுசந்தில் முட்டிகொள்வது போல் மாறிவிடுகிறது.


அப்புறமென்ன உருட்டி பெரட்டி பெங்களுர் வந்து சேர்கின்றனர் கணவனும் மனைவியும், இதறகு பிறகாவது தங்களுக்கான தனிமையும் புரிதுலும் கிடைக்குமென நிதர்ஷனா எதிர்ப்பார்க்க…ம்க்ம் …தள்ளாடி கூட நடக்க வழியில்லாமல் மனம் வெறுத்து தாய் தந்தையிடமே வந்து சேர்கிறாள்.




எவ்வளவு தெளிவும் தைரியமான பெண், நொந்து போகின்றனர் பெற்றவர்கள். தவறிழைத்துவிடாடோமோ என தவிக்ககன்றனர்.



இடையில் சிலபல சம்பவங்களா நிதர்ஷனாவினா குணத்தை மாமியார் நாத்தனார் .அவளை புரிந்துகொள்கின்றனர்.




என்னறிருந்து என்ன,மாற வேண்டியவன் மாற வேண்டுமே, அனைவரும் சேர்த்து அவர்களது சந்தித்தது,பயந்தது என ஆழமாக அவனுள் விதைத்துவிட்டது.அது விருட்சமாகவும் வளர்ந்தும் விட்டது.


அதை வெட்ட அவன் எடுக்கும் முயற்சி அனைத்தும் ,விழலுக்கு இறைத்த நீராக மாறிவிடுகிறது.



அதன் விளைவு இடைவெளி அதிகமாக ,நிரந்தர தீர்வாக முடிவுக்கு வருகிறாள் நிதர்ஷனா.,.




இவர்கள் பிரிந்தார்களா…விதுலனின் நிலைப்பாடு தான் என்ன???


இவர்களை பற்றி இந்நாவலை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்



கொஞ்சம் உள்ளம் சிந்திடும்…சிந்தாமல் சிதாறமல்


வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💖 💖 💖
 
கொஞ்சம் உள்ளம் சிந்திடு!

The story follows பிரனேஷ் விதுலன் and நிதர்சனா, who enter an arranged marriage with the blessings of their elders. While their wedding is celebrated with great grandeur, the real journey begins afterward as they navigate the complexities of married life
The author successfully portrays the reality of domestic life, highlighting how ego can make or break a relationship. It is a compelling study of how two people manage (or struggle) to live together when their temperaments are in constant conflict.
A Realistic Family Drama❤️✨
 
Top