ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 2- வித்தகனின் நர்த்தகி

APV 2- வித்தகனின் நர்த்தகி
Very nice starting hero heroine caracter semma yegalaivan is genuine and perfect husband material thempa very good wife sweet mother thempa manasu yarukkum varathu ivvalavu purithalana couple mahamani avanga storyla mattu me possible very good intresting story vazhthukkal ma 💐 🥰 💐
 

Fathima rijana

New member
வித்தகனின் நர்த்தகி

ஒரு அழகான ஆழமான லவ் ஸ்டோரி 😍😍

ஏகலைவன் ஒரு டைரக்டர். அவன் டைரக்டர் ஆகுறதுக்கு முன்னாடி லவ்ல விழுறான். அவளை ஆழமா லவ் பண்ணி சந்தர்ப்ப சூழ்நிலையால யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிறான்.

திடீர்னு பாவனி அவனை விட்டுட்டு போயிடுறா ஏன் போனானு தெரியாமல் கஷ்டப்பட்டுட்டு இருக்கான். அவனோட அம்மா அவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுடுறாங்க.

அவனோட கல்யாண லைப் ஜெய்ச்சுதா? அவனோட முதல் மனைவி என்ன ஆனானு கதையில் தெரியல தெரிஞ்சுக்கலாம்.

பாவனி ஏகலைவன் லவ் சூப்பரா இருந்துச்சு.

மகதி எல்லாம் என்ன ஆளோ 🤦‍♀️🤦‍♀️ பையன் மேல கூட பாசம் வைக்காத அம்மா 🤧🤧🤧அவளை சுத்தமா பிடிக்கவே இல்ல.

தமயந்தி ஒரு நல்ல அம்மாவே கிடையாது சரியான சுயநல பிசாசு 😡😡😡 சுத்தமா பிடிக்கல.

குட்டி பையன் திலக் தான் பாவம் அவனை பாவனி ஏதுக்கிட்டது மனசுக்கு நிறைவாக இருந்துச்சு🥰🥰🥰

கடைசயில் எல்லாரும் ஒன்னும் சேர்ந்து பாவனியை ஹரி, ராம் பிரசாத்தை ஏத்துக்கிட்டது சூப்பரா இருந்துச்சு. நல்ல அருமையான ஸ்டோரி.

படிக்க நல்லா விறுவிறுப்பா செம யா இருந்துச்சு

வாழ்த்துக்கள் 💐💐💐
 

shafnasri

Active member
#வித்தகனின்_நர்த்தகி_விமர்சனம்


அழகான காதல் கதை❤ லலித் ஏகலைவன் ஒரு இயக்குநர் அவரின் தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் இவருக்கு குடும்ப வாழ்க்கையில் வலியும் ஏமாற்றமும் மட்டுமே😞 அவரின் குடும்ப வாழ்க்கை சீர்ரானதா? எப்படி? தேம்பாவணி யாரு? அப்படி என்ன பிரச்சனை அவரின் குடும்பத்தில் என்பதே கதை ❤


கதையின் போக்கு சுவாரஸ்யமாக இருந்தது ❤ திரைதுறை பற்றிய காட்சி அமைப்பு மற்றும் காணவன் மனைவிக்குமான அந்நியோன்யம் மிகவும் இயல்பா இருந்தது ❤❤


தேம்பாவணி நல்ல கதாபாத்திரம் ❤ நல்ல காதலி, மனைவி மற்றும் தாய் ❤ கலைநிலா நல்ல அம்மா எல்லா சூழ்நிலையிலும் மகளுக்கு உறுதுணையாக இருப்பது சிறப்பு ❣️❣️


நனியிதழ், நச்சினார்க்கினியன் , திலீப் மெய்யோன், திகழினி மெய்யாள் 😲😲 அனைத்து பெயர்களும் அருமை ❤ நனியிதழை ரொம்ப பிடிச்சது ❣️❣️


ஏகலைவன் திரைதுறையில் கொஞ்சம் நல்லவங்களும் இருக்காங்கனு காட்டுது இவரின் கதாபாத்திரப் படைப்பு ❤ வலிகளுக்கு வடிகாலிட ஆயிரம் தீயவழிகள் சுற்றி இருந்தாலும் திலிப்பின் அருகாமையில் அன்பில் அவன் ஆறுதல் தேடியது அருமை 👌அவன் காதல் மற்றும் தாயுமானவனா மாறியது ரொம்பவே நல்லா இருக்கு❤


தமையந்தி ஒரு தாயாக தன் குழந்தைகள் நல்லா இருக்கனும்னு நினைச்சது தப்பில்லை ஆனால் அவர் எடுத்த முடிவில் தன் மகனின் மகிழ்வான வாழ்க்கை தொலைஞ்சிடும்னு சிந்திக்காமல் விட்டுட்டாங்க 😓😓 தன் மகனின் வாழ்க்கை எப்படி இருக்குனு தெரிஞ்சும் அவங்க செய்த தவறு புரியலை அங்கதான் எனக்கு கோவம் 😡😡😡
மஹதி இந்த சமூகத்தில் இருக்கும் விஷ கிருமிகளுக்கான ஒரு எடுத்துக்காட்டு 🥶🥶


அனிதாவும் அவங்க அம்மா போல தானோனு சில காட்சிகளில் யோசிக்க வெச்சாலும் இறுதியில் அண்ணனை புரிஞ்சுக்கிட்டது சிறப்பு ❣️


இந்த பரமபத ஆட்டத்தில் குடும்பமாக ஏணி ஏறி வெற்றி கனிய பறித்தது மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது ❣️


இந்த வித்தகனின் நர்த்தகி மேன்மேலும் பல விருதுகள் பெற்று போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
Top