#வித்தகனின்_நர்த்தகி_விமர்சனம்
அழகான காதல் கதை❤ லலித் ஏகலைவன் ஒரு இயக்குநர் அவரின் தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் இவருக்கு குடும்ப வாழ்க்கையில் வலியும் ஏமாற்றமும் மட்டுமே

அவரின் குடும்ப வாழ்க்கை சீர்ரானதா? எப்படி? தேம்பாவணி யாரு? அப்படி என்ன பிரச்சனை அவரின் குடும்பத்தில் என்பதே கதை ❤
கதையின் போக்கு சுவாரஸ்யமாக இருந்தது ❤ திரைதுறை பற்றிய காட்சி அமைப்பு மற்றும் காணவன் மனைவிக்குமான அந்நியோன்யம் மிகவும் இயல்பா இருந்தது ❤❤
தேம்பாவணி நல்ல கதாபாத்திரம் ❤ நல்ல காதலி, மனைவி மற்றும் தாய் ❤ கலைநிலா நல்ல அம்மா எல்லா சூழ்நிலையிலும் மகளுக்கு உறுதுணையாக இருப்பது சிறப்பு

நனியிதழ், நச்சினார்க்கினியன் , திலீப் மெய்யோன், திகழினி மெய்யாள்


அனைத்து பெயர்களும் அருமை ❤ நனியிதழை ரொம்ப பிடிச்சது

ஏகலைவன் திரைதுறையில் கொஞ்சம் நல்லவங்களும் இருக்காங்கனு காட்டுது இவரின் கதாபாத்திரப் படைப்பு ❤ வலிகளுக்கு வடிகாலிட ஆயிரம் தீயவழிகள் சுற்றி இருந்தாலும் திலிப்பின் அருகாமையில் அன்பில் அவன் ஆறுதல் தேடியது அருமை

அவன் காதல் மற்றும் தாயுமானவனா மாறியது ரொம்பவே நல்லா இருக்கு❤
தமையந்தி ஒரு தாயாக தன் குழந்தைகள் நல்லா இருக்கனும்னு நினைச்சது தப்பில்லை ஆனால் அவர் எடுத்த முடிவில் தன் மகனின் மகிழ்வான வாழ்க்கை தொலைஞ்சிடும்னு சிந்திக்காமல் விட்டுட்டாங்க


தன் மகனின் வாழ்க்கை எப்படி இருக்குனு தெரிஞ்சும் அவங்க செய்த தவறு புரியலை அங்கதான் எனக்கு கோவம்



மஹதி இந்த சமூகத்தில் இருக்கும் விஷ கிருமிகளுக்கான ஒரு எடுத்துக்காட்டு

அனிதாவும் அவங்க அம்மா போல தானோனு சில காட்சிகளில் யோசிக்க வெச்சாலும் இறுதியில் அண்ணனை புரிஞ்சுக்கிட்டது சிறப்பு
இந்த பரமபத ஆட்டத்தில் குடும்பமாக ஏணி ஏறி வெற்றி கனிய பறித்தது மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது
இந்த வித்தகனின் நர்த்தகி மேன்மேலும் பல விருதுகள் பெற்று போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
