#வித்தகனின்_நர்த்தகி
நாயகன்: லலித் ஏகலைவன்
நாயகி : தேம்பாவணி
இது ஒரு பக்கா காதல் கதை. காதலே அழகு அந்த காதல் ஆத்மார்த்தமாவும் ஆழமாவும் இருந்தா பேரழகு. எந்த பிரச்சனையோ பிரிவினையோ வந்தாலும் ஆழமான காதலே பிரச்சனை நீக்கி சேர்த்து வைச்சிடும். அதனாலதான் மனித குலத்தோட பெரும்பான்மையான குடும்ப அமைப்பு குலையாம இருக்கு. அதை அழுத்தமா பதிவு செய்த கதை இது.
நாயகன் லலித் அறிமுகமாகுறதே அவனோட மனைவி மஹதி, பையன் திலக் மெய்யோன், அம்மா தமயந்தியோடதான். மஹதி மகா சோம்பேறின்னு நினைச்ச நினைப்பை மாத்தி மகா அரக்கிங்குற நினைப்பை கொண்டு வந்துடுறா அவளோட செய்கைகளால. பெரிய பட தயாரிப்பாளர்களான அப்பா தேவேந்திர பிரசாத் ,அண்ணன் ஹரி பிரசாத், அள்ள அள்ள குறையாத பணம் அப்புறம் என்ன வேணும் தறிகெட்டு திரியிறதுக்கு. அப்படி அலைஞ்சவளைத்தான் பொண்ணெடுத்து பொண்ணு குடுக்குறேன்னு அந்த பெரிய மனுஷன் ஏகன் தங்கச்சி அனிதாவை மகனுக்கு எடுத்திட்டு இவளை ஏகன் தலைல கட்டி வைச்சிடுறாரு.சுருங்கச் சொன்னா ஸ்ரீதேவியை அவரு வீட்டுக்கு கூப்பிட்டுட்டு அவ அக்காவை ஏகன் வீட்டுக்கு அனுப்பிடுறாரு.
அவ குடியும் கூத்துமா ஜெகஜ்ஜோதியா நடக்க ஏகன் அவனோட படங்கள், பையன் திலக் இவங்களால வாழ்க்கையை ஓட்டிக்குறான். இந்த நிலைமைல அகமதாபாத்துக்கு ஷுட்டிங் போன இடத்தில நாட்டிய பள்ளி வைச்சிருக்கும் நாயகி தேம்பாவணி அவளோட இரட்டைக் குழந்தைகள் அவ அம்மா எல்லாரையும் ஒரு இக்கட்டான சூழல்ல சந்திக்கிறான். அங்க அவனோட வாழ்க்கையையே பொரட்டி போட்ட பல உண்மைகளை கண்டுபிடிச்சு அவனோட வாழ்க்கையை சீராக்கி குடும்பமா சந்தோஷமா வாழுறான்.
இதில மனைவி குழந்தையோட இருக்கிற ஏகன் பாவணியை பாத்ததும் ஷாக்காகுறதும் அவ குழந்தைகளை பாத்து கதறுறதும் முதல்ல நெருடலைக் குடுத்தாலும் அவங்களை பத்தின உண்மை தெரிய வரும் போது நம்ம கண்ணும் வேர்க்குது. ஏகனோட காதல், குழந்தைகளை பாத்து அவன் துடிச்ச துடிப்பு, அம்மா ப்ளாக்மெயில் பண்ணி செஞ்சு வைச்ச கல்யாணத்தில வந்த விரக்தி, திலக் மேல அவனுக்கிருந்த பாசம், அவனோட வாழ்க்கையில நடந்த பல கருப்பு பக்கங்களுக்கு அவன் நீதி கேட்டு நின்ன நிமிர்வு எல்லாத்திலேயும் ஏகன் மனசை பறிக்குறான். அவன் எடுத்த முடிவுல மஹதியை பத்தி கவலையே படல. ஆனா திலக் பத்தி யோசனை இருந்திச்சு. ஆனா திலக் பத்தின உண்மை தெரிஞ்சு மனசு அப்படியே ஏகன் பக்கம் சாஞ்சிடுச்சு.
தேம்பாவணி அறிமுகமாகுறது இரட்டை குழந்தைங்களோட விதவை அம்மாவாத்தான். ஆனா அப்படி இல்லைனு தெரிய வரும் போது அவ வாழ்க்கைல பட்ட கஷ்டம், சந்திச்ச துரோகம், ஏகனோட காதலுக்கு கொஞ்சமும் குறையாத காதல், திலக்கை அவ மகனாகவே ஏத்துக்கிட்ட விதம் எல்லாத்துலயும் பாவணியும் ஏகனை சமன் பண்ணிடுறா. குழந்தைகள் இதழ், இனியன், திலக் இவங்களோட சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் இன்னும் அழகாக்குது கதையை. அது போக கடைக்குட்டி திகழினி அவங்க பிரிவுக்கு பிறகான காதலுக்கு சாட்சியா கெடைச்ச குட்டி தேவதை.
அம்மானாலே அன்புதான்னு சொல்லுவாங்க. ஆனா பிள்ளைங்களோட வாழ்க்கையையே தன்னோட சுயநலத்துக்காக அழிக்கிற அம்மாக்களும் இருக்காங்க. அம்மாங்குற பேருக்கே தகுதி இல்லாத அம்மாக்களும் இருக்காங்க. இதிலேயே மூன்று விதமான அம்மாக்கள் இருக்காங்க. யார் எப்படின்னு கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க. இதில வர்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரொம்ப ஆழமா மனசில பதியிறாங்க. எல்லாத்துக்கும் துரோகம் பண்ணின அந்த கதாபாத்திரம் அதுக்குரிய தண்டனையை அடையல அது மட்டும்தான் என்னோட வருத்தம் மகாம்மா.
உண்மையான காதல் யாரு பிரிச்சாலும் எத்தனை வருஷம் பிரிஞ்சிருந்தாலும், ஒண்ணா சேர்ந்தே தீரும் அப்படிங்குறத அழுத்தமா பதிவு பண்ணியிருக்கீங்க.
நல்ல கதையை எங்களுக்கு தந்ததுக்கு நன்றியும், போட்டில வெற்றி பெற வாழ்த்துக்களும் சொல்லிக்குறேன் மகாம்மா








