Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP12
"உயிர் வாங்கிடும் மோகினி நீயடி"
மோகினியின் எழுத்தில்.
பெண்கள் பேச வேண்டும் என நினைத்தாலும் இதைப் பற்றி எப்படி சொல்வது என பல நேரங்களில் தயக்கம் கொண்டு பேசாமல் தவிர்த்து விடும் ஒன்றைப் பற்றி எழுதி இருப்பது பாராட்டுக்குரியது.

வசுந்தரா... மூன்று பெண்களுக்கு இடையில் நடுவில் பிறந்தவள். அதனாலேயே நிறைய விஷயங்கள் இவளுக்கு கிடைக்காமல் போகிறது. பெற்ற அன்னையே இவளின் நிறம் கொண்டு வெறுப்பது நமக்கு இவளின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது

அன்னையும் சகோதரிகளும் இவளுக்கு செய்யும் கொடுமைகளை வாய் மூடி பொறுத்துப் போகிறாள். இவளுக்கு ஒரே ஆதரவாக இருப்பது இவளின் தந்தை ரகுபதி மட்டுமே. ரகுபதி இரண்டாவது மகளின் மீது அதிக பாசம் கொள்கிறார். மனைவியை எதிர்க்க முடியாமல் சில இடங்களில் தவித்தாலும் பல இடங்களில் மகளுக்காக நிற்கிறார்
இப்படி தனக்கு வேண்டியவற்றை கூட கேட்டு பெற்றுக்கொள்ள தைரியம் இல்லாமல் அதற்கு விருப்பமும் கொள்ளாமல் அமைதியாகவே நிறைய விஷயங்களை கடந்து விடும் இவளை விரும்பி மணமுடிக்கிறான் ஒருவன். அவன் காதலில் திளைத்து மகிழ்வுடன் வாழ்ந்தாலும் ஒரு நிலையில் இவளுக்கு ஒரு விதமான விரக்தி நிலை ஏற்படுகிறது. தன் மனதில் உள்ளவற்றை தயக்கம் கொண்டு பேசாமல் எப்போதும் மௌனமாக இருப்பவள் தன் கணவனிடமும் அதே நிலைப்பாட்டை கொண்டுள்ளாளா அல்லது தனக்கானவற்றை தான், தான் பேசி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் தன் தயக்கத்தை தகர்த்து தன் வாழ்வை வளமாக்கி கொண்டாளா என்பது கதையில்.
சஞ்சய் குமார்..
ஒரு சூழ்நிலையால் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவனுக்கு தேவதையாகவோ அல்லது மோகினி ஆகவோ கண்களில் அகப்படுகிறாள் வசுந்தரா. தன் மனதிற்கு பிடித்தமான பெண்ணின் பின்னே சென்று காதலித்து அவளையும் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்ள நேரமில்லாமல் தன் பெற்றோரிடம் தன் ஆசையைக் கூற மகனின் ஆசைக்கிணங்க அவன் ஆசைப்பட்ட பெண்ணை அவன் மனைவியாக்கி விடுகிறார்கள் மருத்துவரான அவன் பெற்றோர்கள். நல்ல பெற்றோர்

மனதிற்கு பிடித்த பெண் மனைவியான பிறகு ஒரு குழந்தையும் வந்துவிட அதற்குப்பின் வேலை மட்டுமே கவனத்தில் இருக்கிறது இவனுக்கு. ஆணைப் போல பெண்ணுக்கும் ஆசைகளும் தேவைகளும் உண்டு என்பதை தெரிந்து கொள்கிறான். தான் தவறவிட்ட விஷயங்களை மருத்துவரான அன்னையின் வழிகாட்டுதலில் தன்னை சரி படுத்திக் கொண்டு தன் வாழ்வை எந்த சிக்கலும் இல்லாமல் வளமாக்கிக் கொண்டானா என்பது கதையில்.
பிரபு...அனுபமா.. ஒரே செல்ல மகனின் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். அவன் ஆசைப்பட்ட அனைத்து நல்லவைகளும் அவனுக்கு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் அவன் ஆசைப்பட்ட பெண்ணையும் இரு வீட்டு சம்மதத்துடன் அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
அனுபமா வசுந்தராவின் பாண்டிங் மிக அழகு

அன்னையிடம் கிடைக்காத அனைத்து பாசங்களும் மாமியாரிடம் கிடைக்கிறது இவளுக்கு

மகள் இல்லாத குறையை மருமகளை வைத்து நிறைவேற்றிக் கொள்கிறார் அனுபமா. மாமியாராக இல்லாமல் மருத்துவராக வசுந்தராவிடம் இவர் பேசுவதும் அவளைப் பேச வைத்து அவள் மனதில் உள்ளவற்றை தெரிந்து கொள்வதும் அருமை

கோகிலா.. இதெல்லாம் தாயா சரியான பேய்

வசுமதி.. தங்கைக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைத்து விடக்கூடாது என அதை தடுக்க முயற்சி செய்யும் சதிகாரி.
தன் மனைவியை இவர்களுக்கு பிடிக்காது ஆனால் அவளின் பணம் மட்டும் இவர்களுக்கு தேவையா என்று கோபப்பட்டு சஞ்சய் இவர்களை நிற்க வைத்து கேட்கும் கேள்விகள் அனைத்தும் சபாஷ்

திருமணமான பல பெண்கள் பத்து வருட வாழ்க்கைக்கு பிறகு தங்களுக்கு வேண்டிய சிலவற்றை பேச முடியாமல் தயங்கி தவிர்த்து வருவது நிஜமே. வசுந்தராவின் மனக்குமுறல்கள் அனைத்தும் பல பெண்களுக்கு இன்று வரை இருப்பதுதான். தங்களுக்கு வேண்டியதை பெண்கள் தான் பேசி பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு தயங்குவதோ வெட்கப்படுவதோ தேவையில்லாதது. ஒரு ஆணுக்கு எப்படி அனைத்தும் தேவையோ அது போலவே பெண்களும். அவளுக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கிறது. அனைத்து இன்பங்களும் அவளுக்கும் சரிசமமாக கிடைக்கத்தான் வேண்டும். அதை எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் தைரியமாக எழுதிய எழுத்தாளருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்

விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்


Good luck

Please read this amazing book on AP Verses App. Click on the link to read the story -