ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 11- அன்பிலே அசுரனடி

Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#APV11
சுஜாதா பிரபாகர் அவர்களின் எழுத்தில்
"அன்பிலே அசுரனடி"
ஜெய வீரபத்ரன்... உண்மையாகவே அன்பில் அசுரன் ஆகத்தான் இருக்கிறான். கோபம் அதிகமாக வருகிறது இவனுக்கு. ஒருவனை போட்டு தள்ளுகிறான். நல்லவனை அல்ல கேடு கெட்டவனை. கொலையாக இல்லாமல் சூரசம்காரமாக இருக்கிறது. அமைச்சரின் மகன் என்ற தைரியமும் அதிகமாக இருக்கிறது இவனிடம். அதோடு அல்லாமல் அந்த மண்ணிற்கே உரிய தெனாவட்டும் திமிரும் சற்று கூடுதலாக இருக்கிறது. நாக்கை மடித்துக்கொண்டு இவன் வரும் இடங்களை ரசிக்கத்தான் தோன்றுகிறது 🥰🙈

(அந்த ஊர் ரத்தம் கொஞ்சம் நம் உடம்பிலும் ஓடுவதால் இருக்குமோ... ஹிஹி )

தப்பு செய்தாலும் அதில் ஒரு நேர்மை இருக்கிறது. மனைவியை துன்புறுத்தும் நமக்கு போது கோபம் வருகிறது😡. பின் அவள் காலடியில் கிடப்பதும் நன்றாகத் தான் இருக்கிறது.
பரமேஸ்வரி பாட்டி.. பேரன் மட்டுமே உலகம் இவருக்கு. ஆனாலும் அவன் தப்பு செய்யும் போது கண்டிப்பதாகட்டும் மனைவியை மதிக்க வேண்டும் என அவனுக்கு பாடம் எடுப்பதாகட்டும் அருமை. 🥰
லிங்கேஸ்வரன்.. மாமன்.. அருமையான கதாபாத்திரம் 🥰

உமையாள் திருமகள்.. இவளும் கோபக்காரி தான். கோபத்தில் இவள் விடும் வார்த்தைகள் சற்று அதிகமாக இருந்தாலும் அதில் நியாயம் இருக்கிறது. வெறுப்பு எப்போது இவளுக்கு விருப்பாக மாறுகிறது என்பது கதையில்.
சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
Good luck 🥰❤️
 
சுஜாதா பிபாகரனின்


அன்பிலே அசுரனடி


எடுத்ததும் கொலையுடன் தொடங்கும்‌ நாவல்..


அதை கண்டுவிடும் நாயகி..


கண்ட காட்சி ,மனம் துடிக்க மயங்கி சரிகிறாள் நாயகி.



கொலை செய்தவர்களும் அவளை கண்டுவிடுகின்றனர்.



சாட்சியாக இருந்தாலும் பெண்ணாக இருப்பதால், அவளை ஒன்றும் செய்ய மனமில்லாமல் இருமனதாக அங்கிருந்து செல்கின்றனர்.


பெண்ணலளோ, மனசாட்சி குரல் கொடுக்க, சாட்சியாக மாற துடிக்க நாயகன் அவளை மிரட்டி திருமணம் செய்கின்றான். ஆம் நாயகன் ஜெயவீரபத்ரன் தான் கொலையாளி.அவனுக்கு துணை நின்றதோ தாய்மாமனும்,உற்ற நண்பனும்…காரணம் தான் என்னவோ…???



என்ன தான் கொலையை கண்டு அந்நேரம் மயங்கி சரிந்திருந்தாலும், நேரில் கண்டதன தாக்கம் சிறிது வேலை அந்நேரம் அவளுள் வேலை செய்துவிட்டதால் அவளை பலவீனமாக எண்ணிவிட, இவளோ பெண் புலியாக சீறி பாய்கிறாள்.



தாய் தந்தை, வைத்து மிரட்டி ,ஒரு திருமணம்.

கொலையாளிக்கு பகையாளி மாறிவிடுகிறாள்.



இடியும் மின்னலுமாய் செல்லும் அவர்களின் வாழ்க்கையும் செம்மை படுத்த விழைகிறார் மூத்த தலைமுறையினர்.இதில் பெரிதும் மெனக்கடல் பரமேஸ்வரி அம்மாள்.



பெண்ணவளோ அவனை முறைத்து கொண்டே திரிய, போடி என இவனும் வீஞ்சிக்கிட்டு திரிகிறான்.


காரணம் தலைவர் தலவரலாறு அவ்வாறு…கண்டதையும் தின்றுவிட்டு,கடைசியில் இவளையும் தின்று ஏப்பம்விட வர கண்ட இடத்தில் மேய்கிறவனுக்கு எல்லாம் கடை திறக்க முடியாது, என அவன் ஆகுறிது எல்லாம் அவன் வாயால் கேட்டவள் வார்த்தைகொண்டு அவனை கிழித்து தொங்கவிட, செய்த தவறு உணராது ,ஆண்மகன் அல்லவா….பெண்ணின் மீது பாய்ந்துவிடுகிறது.


பெண்ணவளுக்கு உடளவிலும்,மனதளவிலும் காயங்கள் மட்டுமே மிச்சமாய் போய்கிறது.


பேரனின் செயல் பாட்டியை அதிர வைத்தாலும்,அவள் சொல்லம்புகள் பேரனின் மீதான பாசமே வெல்ல,முறுக்கி கொள்கிறது மனம், என் பேரனை குறை கூறுவாளா என்று…இது தான் பாசம் கண்ணே மறைப்பதோ…



ஆனாலும் பெரியவராய் சிலபல அறிவுரைகளை பேரனுக்கும் வழங்க தவறவில்லை.



தீராத விளையாட்டு பிள்ளையின் விளையாட்டு திருமணத்திற்கு பிறகும் தொடர,மாமனின் கண்டிப்பபெல்லாம் காற்றோடு கறைய…



மீண்டுமொரு சண்டை…பிரிவுக்கு வழிவகுக்கிறது.




பிரிவில் வெம்மை பெண்ணவளை நாட, கடந்த கால கசடை ஒதுக்கி மீண்டும் சேர்கின்றனர்



எதிர்பார தாக்குதலில் ,இவர்கள் பிணைப்பு இன்னும் கூடுகிறது.



இப்படியே போனால், வாழ்க்கையின் என்ன இருக்கிறது.



மீணடும் ஒரு பிரிவு…புரிதல் இல்லா மனதால், புரிய வைக்க விழையாததால்…


கைபொருளை காவுகொடுத்து, ஒற்றையில் நிற்கிறாள் பெண்.




இவர்கள் மீண்டும் சேர்கிறார்களா..எப்படி …


அப்படி என்னதான் நடந்தது பிரியம் இருந்தும் பிரிந்திட்ட காரணம் என்ன…


அறிய …அன்பில் அசுரனடி கதையை வாசியுங்கள்.


வாழ்த்துகள் ரைட்டரிஜீ.
 
அன்பிலே அசுரனடி

followsஜெய வீரபத்ரன் , a hot-tempered, undisciplined hero whose attitude dominates the story. உமையாள் திருமகள்’s arrival tries to bring a change, but the hero’s frustrating behavior overshadows the plot.
While the premise had potential, the execution is disappointing, and the story struggles to engage because of the central character’s flaws🙃
 
அன்பிலே அசுரனடி விமர்சனம்


இது ஒரு கிராமத்து பிண்ணணி கொண்ட கதை..பேசும் விதங்களை பார்க்கும்போது தாமிரபரணி படம் பார்த்த மாதிரி இருந்தது...


ஆரம்பமே அமர்க்களமா கொலை பண்ணுறதுல ஆரம்பிக்கறது 😦 நாயகன் ஜெயவீரபத்ரன் செய்யுற கொலையை நாயகி உமையாள் பார்த்திடுறா 😳..பார்த்ததும் மயங்கி விழுந்துடுறா அதனால இவளை எதுவும் பண்ணாம போயிடுறாங்க வீரா குரூப்ஸ்..இவனை எப்போடா ஆதாரத்தோடு பிடிப்போம்னு கண்ணுல விளக்கெண்ணெய் விட்டு தேடிட்டு இருக்கான் இன்ஸ்பெக்டர் செங்கதிர் செல்வன் 🧐 இவன் பண்ண கொலைக்கு சாட்சிக்கு நான் இருக்கேன்னு உமையாள் வர அவளை சாட்சி சொல்ல விடாம பண்ணுறதுக்காக விருப்பமே இல்லாம தாலி கட்டிடுறான் நம்ம வீரா..பொறவுஎன்ன அவங்க வாழ்க்கை எப்படி போகுது?? நாயகன் எதுக்காக இந்த கொலை பண்ணாண்? வீரா உமை எப்படி சேர்ந்தாங்கன்றதுதான் கதை...


நாயகன் ஜெய் ஆஹா ஓஹோன்னு புகழ்ற அளவுக்கு நல்லவன்லாம் இல்லே ..பயபுள்ள ஓவர் அடாவடி‌😬 கோபத்துக்கும் குறைவில்ல சட்டு சட்டுன்னு உமையாள அடிக்கிறதுலாம் நமக்கே வீராவ போட்டு மொத்தனும்னு தோணிச்சு 👊 பெரிய வல்லவர் தீராத விளையாட்டுப் பிள்ளை போல இருந்துட்டு பண்ண தப்பெல்லாம் பொண்டாட்டி கிட்ட சொல்றாரு 😏 அடாவடியா சுத்துன நம்ம வீரா கல்யாணம் பண்ண பிறகு மாறிட்டானேனு தோணும்போது பயபுள்ள அதெல்லாம் இல்லைனு காட்டுது 😬😬😬 முதல் பாதில அப்படி இப்படினு இருந்தாலும் இரண்டாம் பாதில நம்ம உமையாளுக்கேத்த வீராவ மாறியது நல்லா இருந்தது ..❣️❣️


நாயகி உமையாள் இவளும் அப்பாவி பெண்ணுலாம் இல்லை ..கோபக்காரி கோவப்பட்டு நறுக்குன்னு எதையாவது சொல்லிட்டு வீரா கையால அடி வாங்கிட்டு இருக்கது 😕 அவளும் இவனை மதிக்காம கோபத்தோடு திரிய வீரா அதுக்கும்மேலன்னு திரியிறான் ..பிரிவு கொண்டு உமையாள் செல்ல அவளைத் தேடி தன் செல்லும் வீரா...அங்கே இவர்கள் வாழ்க்கை மலர்கிறது..🙈இவன் மேல ரொம்ப வெறுப்பா இருக்க உமையாளுக்கு சடன்னா வெறுப்பு எப்படி விருப்பாச்சுன்னு தெரியல இதுதான் மஞ்சள் கயிறு மேஜிக்போல 😯புரிதலுடன் வாழ்க்கை துவங்கிய நேரம் மீண்டும் ஒரு பிரிவு சரியான புரிதல் இல்லாமல்😏 பிரிவு மீண்டும் இணைவுனு நல்லா இருந்தது 😍


பரமேஸ்வரி பாட்டி பேரனை யாரிடமும் எந்த இடத்திலும் விட்டுக்குடுக்காமல் இருப்பதாகட்டும் 😍 அவனுக்கு சரியான சமயத்தில் புத்தி சொல்வதாகட்டும் உமையாளையும் வீராவையும் சேர்த்துவைக்க முயலுவதாகட்டும் வயதில் மூத்தவராக அவர் காட்டும் அக்கறை நம் மனதை கவர்ந்துட்டாங்க..ஆரம்பத்துல உமையாள் மேல காட்டுற அக்கறை, பவளக்கொடிய லெஃப்ட் ரைட் வாங்குறது, உமையாள் பிரிஞ்சி போயி மீண்டும் சேரும்போது கோவம் கொண்டு நடக்குறதுன்னு பாட்டி பின்னிட்டாங்க 😍😍


மாமா லிங்கேஸ்வரன் , அத்தை வனபார்வதி , அம்மா பெரியநாயகி, அப்பா கல்யாண சுந்தரம்னு எல்லாருடைய கதாபாத்திரமும் அருமையா இருந்தது...❤️


எதற்காக கொலை பண்ணுறான்னு தெரிஞ்சி அவனை புரிஞ்சி ஏத்துகிட்டா உமையாள்..அதேபோல உமையாளின் அன்பிற்காக அவள் பின்னே குட்டி போட்ட பூனைபோல சுத்துற வீரா இரண்டு பேரும் செம்ம‌...❣️


ஆனா ஹாஸ்பிடல்னு கூட பார்க்காம இதுங்க பண்ண வேலை இருக்கே அவ்வ்வ் 🙈🙈🙈🙈


அன்பினால் எதையும் மாற்றலாம்ன்ற மாதிரி உமையாள் வீராவ தன்னுடைய அன்பால மாத்திட்டா 🤩


அன்பில் அசுரனாகிய வீராவும் உமையாளும் வெற்றி பெற ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!!
 
அன்பிலே அசுரனடி



நம்ம நாயகன் அதிரடியா நாயகிக்கு தாலி கட்டறான்.. அது எதற்காக கட்டறான்.? அப்படி அவன் என்ன பண்ணி தொலைஞ்சான்.? நாயகி அதுல எப்படி இடைல வந்தா.? என்பதை கதைல தெரிஞ்சுக்கோங்க.

நம்ம நாயகன் வீரபத்ரன்.. பொண்ணுக தான் அவனுக்கு உயிர்மூச்சு.. கருமம் கருமம் அதையும் பெருமையா பொண்டாட்டி கிட்ட சொல்றானு பாருங்களேன் அப்ப அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்.. அதோட விட்டனா என்ன பொண்டாட்டி அடிக்கறதோட விட கடிச்சும் வேற வெக்கறான்.. இவனை எதை கொண்டு அடிக்க.?

உமையாள் கணவன் செஞ்ச தப்பு எதுக்காக தெரிஞ்சுட்டு அவனை ஏத்துட்டு வாழவும் ஆரம்பிக்கறா.. ஆனா இடைல ரெண்டு பேருக்கும் சரியான புரிதல் இல்லாம போக.. இரண்டு பேரும் பிரியறாங்க..

அப்பறம் புரிஞ்சுட்டு சேர்ந்தது நல்லா இருந்தது. பேரனுக்காக துணை நின்ற வீரபத்ரனின் பாட்டியோட அலப்பறை😂😂😂😂🤣🤣🤣

கதை அருமை..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்..
 
Top