#வாக்கப்பட்டுவந்த_வாசமலரே_விமர்சனம்
இயல்பான மற்றும் அழகான காதல் கதை❤
பெண்ப்பார்க்கும் படலத்தில் ஆரம்பிக்கும் கதை திருமண வாழ்க்கையின் இன்பத்துன்பங்களின் பயணித்து முடிவு பெறுகிறது ❤
திருமணத்திற்கு முன்பு பெண்ணும் மாப்பிள்ளையும் விடியவிடிய பேசுவதும் குறுஞ்செய்தி அனுப்புவதும் ரொம்பவும் இயல்பா இருந்தது ❤
அட நம்மலும் இது எல்லாம் கடந்துதானே வந்துருக்கோம் சிந்திக்க வைக்கும் காட்சிகள் நிறைய இருந்தது
நுணுக்கமான உணர்வுகளை சாதாரணமாக சொல்லிட்டு போய்டுறீங்க


என்னதான் சாதாரணமாக நட்பா பேசுனாலும் கடைசியில் மாமியார் நான்னு நளினி உறுதிப் படுத்திடுறாங்க
கந்தன் ❤ தெய்வானை பெயர் பொருத்தம் மாதிரி இவங்க காதலும் அருமை

திருமண வாழ்க்கைனா வெறும் காதலும் ரொமான்ஸ் மட்டும் தானா என்ன? அப்பறம் எதுக்கு இரண்டு நாத்தனாரும் மாமியாரும்னு பிரச்சினையை இறக்கி இரண்டு பேரையும் பிரிச்சு விட்டு, இடையில பிரியாணிய வேற கண்ணுல மட்டும் காட்டி சாப்பிடவிடாம பண்ணி

, கந்தனை மாமியார் மருமகளுக்கு நடுவுல படுத்தி எடுத்துனு

அப்பப்பா சுவாரஸ்யத்திற்க்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் போகுது கதை ❤
கந்தன் ❤ தெய்வானை வாசகர்கள் நெஞ்சத்தில் வாசமலராய் வாசம் செய்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
