zeenath Sabeeha
New member
ஹாய் நண்பர்களே
Pommu Novels அவர்களின் AP Verses contest AVP Writing excellence award போட்டிக் கதைகள்.
அம்மு இளையாள் அவர்கள் எழுதிய "வாக்கப்பட்டு வந்த வாசமலரே"
கந்தன்.. தெய்வானை.. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் காதலும்,திருமணமுமே கதை.
வீட்டினர் பெண் பார்த்து முடிவாகும் திருமணம். ஆனால் பெண் பார்க்க வந்த அன்றே இருவருக்கும் இடையே ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் வீட்டில் பார்த்த அரேஞ்ச்டு மேரேஜ் ஆக இல்லாமல் அவர்களுக்கிடையில் காலம் காலமாக இருந்த காதலால் காதலித்து மணமுடித்தவர்கள் போன்று நிலை. பார்த்ததும் பிடித்து விட்டது இருவருக்கும். அதுவே மாப்பிள்ளையின் அன்னையான நளினிக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் கந்தனின் அக்காக்கள் இருவருக்கும் ஏனோ பெண்ணவளை பிடிக்கவில்லை. இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என நினைத்து தாயை மூளை சலவை செய்கிறார்கள். அவர்களின் பேச்சுக்கு சில நேரம் கட்டுப்பட்டாலும் தன் சுய அறிவையும் அவரின் நல்மனதாலும் சுதாரித்து மகனின் கோபத்திற்கும் அஞ்சி தன்னை சரி செய்து கொள்கிறார் நளினி.
கந்தனின் தந்தை எப்போதும் நியாயவாதியாக இருக்கிறார். அவரைப் போலவே அவரின் மாப்பிள்ளைகள் இருவரும் அதே நல்ல குணநலனுடன்.
திருமணம் கோலாகலமாக நடக்கிறது.
அதீதக் காதலுடன் பயணிக்கிறது இவர்களின் வாழ்வும். திடீரென சுனாமியாக இவர்கள் வாழ்வில் இரு பிரிவுகள் வருகிறது. ஒன்று கந்தனின் அன்னை நளினியால் மற்றொன்று அவனின் சகோதரிகளால்.
இதில் பெண் அவள் கணவனையும் சந்தேகிக்கிறாள். அவன் வேண்டாம் என முடிவெடுக்க. அவள் முடிவுக்கு கட்டுப்பட்டானா அல்லது வெகுண்டு எழுந்தானா என்பது கதையில்.
மனைவியை தேடி மாமனார் வீட்டிற்கு வரும் கந்தனுக்கும் தெய்வானையின் தந்தைக்கும் நடக்கும் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் அருமை.. சீரியஸாக போய்க் கொண்டிருந்த கதைக்கு இடையில் நகைச்சுவையான காட்சி

சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.