மாயலீலா
விமர்சனம்
சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் நடிகன் வருண்தேவன் நடிகை மாயா இவர்களின் வாழ்க்கை பிரச்சினை ஒரு பக்கமும்
தாய் தந்தையை இழந்து பெரியம்மா பெரியப்பாவின் ஆளுமைக்குள் சிக்கித் தவிக்கும் நிலாவின் வாழ்க்கை ஒரு பக்கமும் என்று கதை நகர்கிறது.
சினிமா துறையில் நடிகர் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் மீடியா அவர்களின் வாழ்க்கையில் செய்யும் குளறுபடிகளையும் ரொம்ப அருமையா எடுத்துச் சொல்லி இருக்காங்க.
சினிமாக்காரர்களை நடிகர் நடிகைகளாக மட்டுமே பார்க்காமல் அவர்களை பெற்றவர்களுக்கும் பெரிதாக நினைத்து தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ள நினைக்கும் இளைஞர்களை பற்றியும் ரொம்ப அழுத்தமா சொல்லி இருக்காங்க.
மீடியாக்காரர்கள் நாட்டில் கவனிக்கப்பட வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போதும் நடிகர் நடிகைகளின் குடும்ப பிரச்சனைகளை முன்னிறுத்தி முக்கியத்துவம் கொடுத்து துருவன் மாதிரி நேர்மையான மக்களின் நலனுக்காக உயிரைவிடும் பல காவல்துறை அதிகாரிகளின் தியாகத்தை பின் நிறுத்துவது ரொம்ப வருந்தக்கூடிய செயலாக இருக்கிறது.
நிச்சயமா இப்படி இப்படி ஒரு முடிவை ஏற்க முடியவில்லை. வருண் முடிவு கூட பரவாயில்லை ஆனால் துருவனோட முடிவு ஏற்க முடியவில்லை.
லீலாவோட அழுகையும் கதறலும் மனசை உருக வைக்கிறது
நடிகர் நடிகைகளை அவர்கள், அவர்கள் தொழிலை செய்கிறார்கள் என்று நினைக்காமல் அவர்களை பெரிதாக நினைத்து அவர்களின் பின்னால் அலையும் மீடியாக்காரர்களுக்கும்,இளைஞர்களுக்குமான ஒரு விழிப்புணர்வு நிறைந்த கதை..
நல்ல ஒரு சமூக விழிப்புணர்வு குறித்த கதை
வாழ்த்துக்கள்