ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

4 காதல் விஷம் நீயா கதைக்கான விமர்சனங்கள்

Art pearl

Member
வீரா 10 அரியர் வச்சிக்கிட்டு எக்ஸாம் எழுதி பாஸ் ஆகணும்னா அவன் மாமா பொண்ணு ஸ்வீட்டிய கல்யாணம் பண்ணி வைக்க சொல்றான் அவ போலீஸ். அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை, அவளுக்கு மட்டும் இல்லை வீட்ல யாருக்குமே விருப்பம் இல்லை ஆனாலும் கல்யாணத்துக்கு ஓகே சொல்றா?? ஏன்??


நிச்சயம் அன்னிக்கு வீராக்கு மட்டும் சில கனவு மாதிரி காட்சி வருது. அதுல ஸ்வீட்டி காணாம போயிடுறா ஆனா தூங்கி எழுந்து பாக்கும் போது இருக்கா அவ ஸ்வீட்டினா காணாம போனது யாரு???


வீரா க்கு ஸ்வீட்டி நடந்துக்குற விதம் பாத்து சந்தேகம் வருது ஆனாலும் கனவு நினைவு ரெண்டும் அவனை குழப்பி எது உண்மைனு தெரியாம இருக்கான்.


இதே நேரம் ஸ்வீட்டி ஒரு குடுவைல அடைப்பட்டு இருப்பா அவளை அதுல வச்சிட்டு அவ ரூபத்துல வீரா கூட இருக்குறது மோஹினி இருள் உலக ராணி மந்திரம் தந்திரம் தெரிஞ்சவ. அவ உலகத்துல உள்ள எல்லாரையும் கல்லா மாத்தி இருப்பா. நல்லா இருந்த அவ இப்படி மாற காரணம் என்ன??அவ ஸ்வீட்டிய அடைச்சு வைக்கிறத ஒரு தங்க நிழல் பாக்கும் அது யாரு??மோஹினி ஏன் அப்படி பன்றா??


வீரா ஸ்வீட்டி (மோஹினி ) வெளிய போகும் போது அந்த தங்க நிழல் வந்து அவ காதலன் உயிர மோஹினி உடம்புல இருந்து எடுக்க ஏதோ மந்திரம் சொல்ல, அவ காதலன் வராம மோஹினி காதலன் உயிர் வீரா உடம்புக்குள்ள போய்டும் வீரா உயிர் பாம்பு உடம்புக்கு போய்டும்.




இப்போ வீரா வீரா இல்லை ஸ்வீட்டி ஸ்வீட்டி இல்லை


இன்னும் 15நாள்ல கல்யாணம் அதுக்குள்ள எல்லாம் சரி ஆகுமா???


லவ் இல்லாம ஸ்வீட்டி வீரா வ கல்யாணம் பண்ண காரணம் என்ன???
வீரா பாம்பா மாறினப்பா அவனுக்கு ஹெல்ப் பண்ண முனிம்மா யாரு??


இப்படி ஏக்கப்பட்ட கேள்வி நெறய சஸ்பென்ஸ் சூப்பர் ஸ்டோரி


கிளைமாக்ஸ் எதிர் பாக்காத ஆள் வில்லன் /வில்லி.


வீரா ப்ளாக்கி ரெமோ காம்போ செம சிரிச்சி முடில


வாழ்த்துக்கள் ??ரைட்டர்.


(சாந்தி கேரக்டர் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரோங் சொல்லி இருக்கலாம் ஏதோ மிஸ் ஆன பீலிங்ஸ். டான் யாருனு சொல்லாம டைரக்ட் என்கவுட்ர் போட்டது கொஞ்சம் தனிச்சு தெரிஞ்சிது.)



மத்தபடி #காதல்_விஷம்_நீயா ஜாலியா படிக்க கூடிய ஒரு பான்டசி திரில்லர் ஸ்டோரி.
 

Sriraj

New member
வணக்கம்.

Twist 21 போட்டி

கதை விமர்சனம்

கதை எண்: 4 - காதல் விஷம் நீயா?

நாயகர்கள் - வீரா, ராஜா
நாயகிகள் - சக்தி, பார்வதி

இவ்நால்வரை பற்றி கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.?

அருமையான திருப்பங்களுடன் கூடிய காதல் கதை.?

கனவின் கற்பனை கலந்த நிஜ உலக சூழலின் கதை.?


காதல் விஷம் நீயா???

தீடிர் என்று நடக்கும் திருமண பந்தத்தின் ஏற்பாடு அதை மன சுணக்கத்துடன் - எதிர்ப்பார்ப்புடன் பலர் செய்ய…?

நடந்தேறியது பல விசித்திரமான மாற்றங்கள்…?

விசித்திரத்தின் ரகசியங்கள் ரகசியங்களாய் போற்ற வேண்டி நிழலுக்கும் - நிஜத்துக்கும் மத்தியில் தள்ளாடினர் இவர்கள்…?

நிழலை காப்பாற்ற
நிஜத்தின் உதவி தேவைப்பட…?

நடந்தேறியது பல கண்டறியாத மாற்றங்கள்…

உயிரும் - மனதும் பல கோணங்களில் உரச…?

நிழலுக்கும் - நிஜத்துக்கும் பல அரிய தகவல்கள் பரிமாறி கொள்ள…

நிழலின் தொலைந்த உயிர்ப்பை நிஜத்துடன் சேர்ந்து மீட்டெடுக்க நினைக்க…

மீண்டும் வந்தது சோதனை நிஜத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால்…?

நிஜத்தில் நடந்தேறிய விபத்தை நிஜத்தில் உள்ளவர்கள் மீட்டெடுத்தனரா…

நிழலில் தொலைந்த உயிர்ப்பை நிழலில் உள்ளவர்கள் நிஜத்துடன் சேர்ந்து மீட்டெடுத்தனரா என்பதை கதையில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…?


காதல் விஷம் நீயா? ??

"நீயாக விஷமாய் வந்தவளே
பின் நீயே அமிர்த்தமாய் மாறி
என்னுள் விஷமமாய் நுழைந்து
என் வாழ்க்கையின் தித்திக்கும் காதல் விஷமாகி போனாயோ என் காதல் விஷம் நீ…!!"❣❣??


கற்பனை கலந்த பல சுவாரஸ்யங்கள் கூடிய அழகிய காதல் கதை. அதை கொடுத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.??


போட்டியில் வெற்றி பெற அன்பு வாழ்த்துக்கள்.??


அன்புடன்
ஸ்ரீராஜ்







 
Top