#Twist21 #No4
#காதல்_விஷம்_நீயா
ஃபேண்டசி மிக்ஸட் லவ் ஸ்டோரி...
வீரா இவன் யாரின் சம்மதமும் இல்லாமல்(பொண்ணும் சேர்ந்து) கல்யாணம் பண்ண அடம் பண்ணி சம்மதம் வாங்கி இருக்கான்.. நிச்சயம் நடக்கும் நேரம் சுவீட்டியை ஒரு இருள் வந்து தூக்கிட்டு போகுது.. மோகினி அவ சுவீட்டி போலவே இருக்கா... சுவீட்டிய பாட்டில அடைச்சு வச்சுட்டு இங்க அவ இடத்தில் மோகினி இருக்கா.. அவ உலகை ஆள அவளுக்கு தேவையான சக்தியை தேடி வந்து இருக்கா.. அவலுள் இருக்கும் காதலன் மித்ரன் உயிரை மீட்க தாரகை வர, நாட்டை மீட்க மயூரன் வர, மயூரன் வீரா உடம்பில் போயிடறான்.. வீரா பாம்பு உடம்புல போயிடுரான்... அப்போ அவன் சுவிட்டி இருக்கும் பாட்டில் பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியலை...
வீரா பாம்பா பயங்கர சேட்டை.. நல்லா என்ஜாய் செய்யுறான்.. அங்க அவன் சந்திக்கும் காக்கா பிளாக்கி கூட சேர்ந்து காட்டில் உள்ள விலங்குகளிடம் ஒரே கச்சேரி.. பிளாகியின் காதலையும் சேர்த்து வைக்கிறான்... ரெமோ குட்டி காக்கா ஓவர் வாய்... அவனின் காரில் திருடிய முனியம்மாவை காப்பாற்ற போய் அப்போ அவ திருடின பாட்டிலை கேட்டு அவ வீட்டுக்கு போனாள் மறுபடியும் தாரகை வருகை... மோகினி உடலில் இருந்து மித்ரணை காத்தாலா? நாடே கல்லாக மாறி இருக்க அதை சரி செய்ந்தாங்களா? வீரா அண்ட் ஸ்வீட்டி பழையபடி மாருனாங்களா? எல்லாம் எப்படி கதையில்...
இன்னொரு பக்கம் சுவீடி வீராவை கல்யாணம் பண்ண காரணம் அவள் காணாமல் , இறந்து போனதாக நினைத்த கொண்டு இருக்கும் தங்கை சாந்தி.. ஒரே ஒரு க்ளூ வைத்து தேடி கொண்டு இருக்க, அவங்க கல்யாணமும் முடியுது.. அப்போ யாரும் இல்லா முனியம்மா மகளா ஏத்துகுறாங்க வீரா அம்மா.. அவங்க வீட்டுக்கு வரும் ராஜாவை காதலிச்சு அவனுடன் வீட்டிற்க்கு போகும் சமயம் அவனை ஏமாத்தி அவன் வீட்டை தேடி சாந்தி பொருட்களை எடுத்துட்டு வந்துடுறா. அவள் ஏமாத்துந்து தெரிஞ்சு அவன் கோபத்தில் இருக்கான்..
யார் குற்றவாளி வீராவா? இல்லை ராஜாவா? இவங்க காதல் சேருமா? சாந்தியை கண்டு பிடிப்பாங்களா? அவள் காணாமல் போய் இறந்து போனதாக சொன்ன பின்னணி என்ன? இருள் உலகுக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம், எல்லாம் மெதி கதையில் விளக்கி இருக்காங்க...
வீரா பாம்பா பண்ண லூட்டி எல்லாம் சூப்பர் அந்த விலங்குகள் கூட சேர்ந்து... பிளாக்கி, ரெமோ குட்டி ராஜா அலப்பறைகள் சூப்பர்..
ராஜா காதல், குமார் காதல் எல்லாம் சூப்பர்.. இதில் பார்வதி யார் என்று தெளிவா சொல்லலை.. தோழி சொல்லி இருக்கீங்க, சாந்திக்கு என்று என்னோட கெஸ் தான்... குமார் கிட்ட எப்போ காதல் சொன்னா, அவன் எப்போ மறுத்தான் இதுவும் சொல்லலை...
இரு உலகங்களில் நடக்கும் தவறுகள், சம்பந்தம், அதன் தீர்வுகள், இடையே அந்த விலங்குகளின் கலகலப்பு... எல்லாரையும் சேர்த்து வச்சுட்டீங்க, சூப்பர்...
வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே????