ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

36. முன் தினம் பார்த்தேனே - நாவலுக்கான விமர்சனங்கள்

#yagnithaareview

#முன்தினம்பார்த்தேனே

#விருட்சம்_36

😍😍 ஃபீல் குட் ஸ்டோரி நட்பு பற்றி நீங்க சொன்ன விஷயம் ரொம்ப ரசிக்கும்படி இருந்தது😍😍

பிரணவ் அதிரடி மன்னன், யார் என்று தெரியாத பெண் மீது முதல் பார்வையிலேயே காதலில் விழுந்தவன், அவனின் லாலிபப் பின் மீது கொண்டுள்ள காதல் அழகு 😍...

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவனுடன் ஒன்றாக தங்க நேரிடுகிறது... அங்கு என்ன நடக்கின்றது, இவர்களுக்குள் இருக்கும் உறவு என்ன....!!!

இதற்கிடையே மீனாள் அனுபவிக்கும் வேதனை😔😔 நம் உண்மையான அன்பிற்கு தகுதி இல்லாதவர்கள் மேல் அன்பு வைத்தால் இதுதான் நிலைமை😔😔...

இதுல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கேரக்டர் செல்வி காமாட்சி& பார்வதி பாட்டி தான் அப்பா என்ன ஒரு நட்பு உங்க நட்பை பார்த்து நான் மெர்சலாயிட்டேன்..... நீங்க பேச பேச எனக்கு என்னோட லைஃப் தான் ஞாபகம் வந்துச்சு😍😍😍 ஆனால் இவங்களோட ஆசை நிறைவேறியதா...????இவங்க ரெண்டு பேரையும் ஹீரோயின போட்டு ஒரு கதை, ப்ளீஸ் ரைடர் மேடம்😍😍😍.....

ரக்ஷி உண்மையிலேயே இவ்வள நினைச்சா பாவமா இருக்கு.... எந்தப் ஒரு பொண்ணுக்கும் ரக்ஷி நிலைமை வரக்கூடாது.... இப்படி ஒரு விஷயம் நடந்ததா இல்லையான்னு நினைச்சு நினைச்சு நம்பள நாமலே வெறுத்துக் கொள்வது கொடுமை🤧🤧....... அதுவும் அந்த சட்டை மேட்டர்🙈🙈🙈 லிவிங் டுகெதர்🤣🤣 செம🤭....

ராமநாதன் ராகா இவங்க எல்லாம் என்ன ஜென்மம்🤬🤬 ரொம்ப சுயநலமான மனிதர்கள்... இப்படி ஒரு முகமூடி அணிந்து இருந்தால் யாராலயும் இப்படிப்பட்ட கயவர்களை கண்டுபிடிக்க முடியாது.... அடுத்தவன் காசுல வாழணும்னு இப்படிதான், உங்களுக்கெல்லாம் தண்டனை கொடூரமா கொடுத்து இருக்கணும் 😤😤😤 உங்க ரெண்டு பேத்தையும் நினைச்சாலே 🤮🤮🤮🤮

கோமளம் பையன் கூட சேர்ந்து நல்லா ஆடி நீங்க இல்ல அனுபவிங்க 😤😤😤

அருமையான கதை நகர்வு, சிறிது எழுத்துப் பிழை மட்டுமே.... ஸ்டோரி முடிந்த உடனே வாவ் ஃபீலிங் 👏👏👏👏👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் மேடம் 😍😍😍😍😍
 
#priyareviews

கதை எண் 36

முன் தினம் பார்த்தேனே

ரக்ஷிதா ஒரு ஆபத்தில் சிக்கி இருக்க அவளை காத்து தன்னோடு அழைத்து செல்கிறான் பிரணவ், இவளை தான் தேடி கொண்டு இருக்கும் நிலையில் பிரணவ் கைகளில் அவளாகவே வந்து சேர பிரணவ் தன் மனதில் இருப்பதை அவளிடம் சொல்வானா? அவளுக்கு இருக்கும் ஆபத்தை முறியடிப்பானா? காதலே பிடிக்காத ரக்ஷிதா பிரணவ்வை ஏற்று கொள்வாளா?

ரக்ஷிதா நல்ல தைரியமான பெண்ணான இவளுக்குள் ஏகப்பட்ட காயங்கள், வலிகள் எல்லாம் இருக்க காதலே பிடிக்காத இவளிடம் அழகான காதல் வந்து சேர ஏற்று கொள்வோமா வேண்டாமா என்று இவள் தவிக்கும் நிலையில் இவளின் பாட்டி ஒரு மணமகனை தேர்ந்தெடுத்து வைத்து இருக்க பாட்டி கொடுத்த வாக்கா? தன்னிடம் வந்து சேரும் அழகான காதலா ரக்ஷிதா முடிவு தான் என்ன?

பிரணவ் சிறிதே அதிரடி, அடாவடி அழகான காதலன் அவளை அவள் போக்கில் கொண்டு சென்று எல்லாவற்றையும் அவளிடம் இருந்து வாங்கி அவளுக்கு நன்மை செய்து 🥰🥰🥰 செம லவ்வர் 🤩

பார்வதி பாட்டி செல்வி பாட்டி இருவரின் நட்பும், அவர்கள் இருவரும் எடுக்கும் முடிவு எல்லாம் சூப்பர் 🥰🥰

ராமநாதன், ராகா 🤧🤧🤧🤧 கோகிலம் பாட்டி கொஞ்சம் ஓகே

காதல், வலி, நகைச்சுவை, துரோகம் எல்லாம் கலந்த கலவையாக சூப்பர் 👌👌👌

ரொம்ப டென்ஷன் பண்ணாமல் டக்குனு டக்குனு அடுத்தது கொண்டு வந்துட்டீங்க விருவிருப்பாக இருந்தது ☺️☺️☺️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

லிங்க் 👇👇👇
 
#முன் தினம் பார்த்தேனே
நாயகன் :பிரணவ்
நாயகி :ரக்ஷிதா
நல்ல கதை ரொம்ப விறுவிறுப்பா அதோட சீக்கிரம் முடிஞ்சு போன மாதிரி ஒரு எண்ணம் 😊😊.
பிரணவ் ஆர்ப்பாட்டமில்லாத நாயகன்🥰🥰🥰.இவனோட அந்த லாலிபாப் என்ற அழைப்பு அருமை 💞💞.இவன் காதலிக்காக நியாயம் செய்தது எல்லாம் ரொம்ப அருமை 👌🏻👌🏻👌🏻.
ரக்ஷிதா நல்ல பெண்.ஆனால் இவளுக்கு நடந்தது கொஞ்சம் கஷ்டமான நிகழ்வு தான் 😔😔.ஆனால் அதுலேர்ந்து மீட்டு கொண்டு வந்த பாட்டிக்கு பெரிய சபாஷ் போடணும் 👏👏👏.
ராமநாதன் இவரை எல்லாம் மனுஷஜென்மமா கூட நினைத்து பார்க்க முடியலை 😡😡😡.வினை விதைத்தவன் வினை அறுத்து தான் ஆகணும் 🤧🤧🤧.
ராகசுதா பேரு நல்லா தான் இருக்கு ஆனால் செய்யுற செயல் எல்லாம் கேடித்தனம் நிறைஞ்சு இருக்கு 🤧🤧🤧.இது எல்லாம் பெண் பிறப்புக்கே சாபக்கேடு 🤐🤐🤐.
மீனாள் இவளுக்கு இவ்ளோ கஷ்டம் வந்துருக்க வேண்டாம் 😔😔😔.ஆனால் அதுலேர்ந்து மீட்டு கொடுத்த அவுங்க அம்மாவை பாராட்டியே ஆகனும் 👏👏👏

செல்வி,பார்வதி இவர்களின் நட்பு அருமை 👌🏻👌🏻👌🏻.

இதுல வர எல்லா கதை மாந்தர்களும் அருமை 💞💞💞

காலம் கடந்து நட்பு அழகான காதலை இணைத்துள்ளது 🥰🥰🥰.

நட்பு,காதல்,குடும்பம் எல்லாம் கொண்ட அருமையான கதை 🥰🥰🥰.அதோட காட்சிக்கு இணையா அந்த பாடல் தெரிவு அருமை 🥰🥰🥰.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👏👏💐💐💐💐.
 
Top