வணக்கம் சகோதரிகளே ..
#பவாவிமர்சனம்
#முன்தினம்பார்த்தேனே..
விருட்சம் 36
முதல் விழியசைப்பில் உள்ளிட்ட நிலவு
மறு விழிவிரிப்பில் காதலான நிகழ்வு
பார்த்த நொடிகளெல்லாம் தவிப்பான காதல்
சேர்ந்த நிமிடங்களோ காதலாகிய கசிந்துருகிய நிலை..
தொடரூர்ந்து பார்வை தொடரான உறவாய்
இனிதே தொடர்ந்து நிறைவிட்டது அழகே..
இனிப்பான சுவை நீ..
இதழ் தித்திப்பான லாலிபப் நீ
என் நாவிலும் அதை சுவை
உன்னிலே நான் உருகிய போது..
முன் தினம் பார்த்தேனே
சாகாவர தோழமை காதல்..!!
பிரணவ் அழகான ஆர்பாட்டமில்லா அழகு நாயகன். யாரோ ஒரு பெண்ணவளை காப்பாற்ற அது தன்னவள் என உணர்ந்து. அதன் பிறகான அவனின் காதல் நேரங்கள் எல்லாமே அழகு.
காதலை சொல்ல தடுமாறும் போது ரசனையாக இருந்தது
அது என்ன லாலிபாப் அவளின் செல்லப்பெயர் அது வரும் நேரத்தை கதையூடு சென்று ரசித்தாலே அழகு.❤❤
இவனின் காதல் அழகானது.
ரஷிதா அருமையான இயல்பான அதிரடியான பெண்.
இவளின் சிறுவயது வாழ்வியல் கவலையும் கூட
இவளின் பாட்டியே இவளின் உயிர் மூச்சு.
பட்டை தீட்டிய நிமிர்ந்த பெண் என்றால் மிகையாகாது .
காதல் வந்தாலும் சொல்லாமல் தடுக்கும் அந்த செயலை நினைத்து வருந்துவது பாவமே.
பாட்டிகள் இருவரும் அருமையான தோழிகள். அவர்களின் எண்ணங்கள் வருடங்கள் சென்றாலும் நிறைவு பெருவது மிகவும் அழகு.❤❤
இவர்களின் தோழமை வம்சம் தாண்டிய ஒன்றாக தொடர்வது அருமை அருமை.
காதலை வைத்து ஒருவன் விளையாட அது சொத்துக்காக என்று அறிந்து அந்த சொத்தையே அனுபவிக்க முடியாமல் பரதேசியாக வரும் பல பாத்திரங்கள்...!!?? இவர்களுக்கு தேவைதான் என நினைக்க தோன்றியது ..
ஆசிரிய தோழியே.
ஒரு அழகான மெல்லிய காதல் கதையை .பல குடும்ப உறவுகள் மற்றும் நட்போடு இணைத்து கொண்டு சென்றது அழகே,
நட்பு நிலையை அழகாக எடுத்து சொல்லி சென்றீர்கள் .
காலங்கள் கடந்தாலும் அந்த நட்பே உச்சமான செயலாக இருந்தது
.
அந்த தொடர் ஊர்ந்து பயண நேரங்கள் இருநிலையும் மிகவும் அழகாக இருந்தது.
❤❤❤
படித்து முடித்த போது இதமாக இருந்தது .
❤
வாழ்த்துக்கள் மா.
போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.