பணியில் உருகும் சூரியன் நானடி
விமர்சனம்.
பனிமலர் தன் அக்காவிற்கு நிச்சயம் செய்ய நினைக்கும் மாப்பிள்ளையை தான் மணக்க விரும்புகிறாள். அவள் நினைத்தபடியே அவள் கல்யாணம் நடந்தாலும் அதில் அவளுக்கு துளியும் மகிழ்ச்சி இல்லாமல் போகிறது.
பனிமலர் சூரியன் ரெண்டு பேரும் ஆழமான காதலை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டு வெளிப்படுத்திக் கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க அதுவே அவர்களின் மனதில் வலிகளையும் குழப்பங்களையும் ஏற்படுகிறது..
சூரியன் இவனோட பொசசிவ்ன்ஸ்காக தமிழை இரண்டு முறை அளிக்கிறத ஏத்துக்கவே முடியல
பனிமலர் தமிழ் இருவரின் ஆழமான நட்பும் அட்ராசிட்டியும் அருமை
பனிமலர் மீதான ஆகாஷின் அன்பும் அக்கறையும் சூப்பர்
தொழிலில் வேகம் முக்கியமல்ல விவேகமும் பொறுமை தான் முக்கியம், எதிரிகளை சம்பாதிப்பதை விட நட்புகளை சேர்ப்பது பெரிது என்பதை விளக்கும் சூர்யாவின் தாத்தாவின் காட்சி அருமை
குடும்ப உறவுகளின் பாசத்தை ரொம்ப நல்லா எடுத்து சொல்லி இருக்காங்க.
கதை கொஞ்சம் நீளமா இருந்த மாதிரி இருந்தது சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் சுருக்கமாக சொல்லி முடித்து இருக்கலாம்.
தலைப்புக்கு ஏற்ற கதை தான் பணியின் அன்பில் சூரியன் உருகி கரைகிறான்
கதை ரொம்ப நல்லா இருந்தது
சூப்பர்
வாழ்த்துக்கள்
(எழுத்துப் பிழைகள் நிறைய இருக்கு அதை கொஞ்சம் திருத்திக்கோங்க )