ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

20. தேன்சுவை நீயடி - விமர்சன திரி

pommu

Administrator
Staff member
தேன்சுவை நீயடி - விமர்சன திரி
 

santhinagaraj

Active member
தேன்சுவை நீயடி

விமர்சனம்

வெற்றிவேந்தன் சின்ன வயதில் இருந்தே தன் மாமன் மகளின் மீது ஆசையை வளர்த்துக் கொண்டு காதலை மனதில் சுமந்து கொண்டு கிராமத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டு இருப்பவன்.

வெண்மதி தன் தந்தையினால் சிறுவயதிலேயே கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து விட்டதால் வெற்றி வேந்தன் பற்றிய நினைவு இல்லாமல் வளர்கிறாள்.

மதிக்கு அவள் தந்தையின் நண்பரின் மகனோடு திருமணம் ஏற்பாடு நடைபெற வெற்றி தன் வசதியை நினைத்து தன் காதலை மனதோடு புதைத்து மதியோட கல்யாணத்திற்கு செல்ல அங்கு எதிர்பாராத விதமாக வெற்றி மதி இருவருக்கும் கல்யாணம் நடைபெறுகிறது.

வெற்றி தன் உயிராக நினைத்தவளே தன் மனைவியாக ஆனதில் சந்தோஷத்தோடு அவளை தன் ஊருக்கு அழைத்து வருகிறான். எதிர்பாராத கல்யாணத்தை மதி ஏற்றுக் கொள்ளவும் அவளுக்கு கால அவகாசமும் கொடுக்கிறான்.

மதி நகரத்தில் வசதியாக வாழ்ந்து இருந்தாலும் கிராமத்தில் வெற்றியோட வீட்டில் இயல்பாக பொருந்தி கொள்வது அருமை.

வெற்றி மதி இருவருமே என்ன படித்திருக்கிறார்கள் என்னை வேலை செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் ஒருவர் மீது ஒருவர் அன்பாகவும் காதலாகவும் இருப்பது ரொம்ப எதார்த்தமா இருந்தது,

வெற்றி மதி காதல் காட்சிகளும் ரொமான்ஸ் காட்சிகளும் அருமை 😍😍😍

ரவி கவிதாவை விருப்பம் இல்லாமல் கல்யாணம் செய்து கொண்டு தன் அந்தஸ்துக்கு அவள் தகுதியானவள் இல்லை என்று அவளை ரொம்ப டார்ச்சர் பண்ணிக் கொண்டிருக்க
கவிதா அவளோட காதலை ரவிக்கு அன்பாலையும் அவன் மீதான அக்கறையிலும் காதலை உணர்த்தும் விதம் ரொம்ப நல்லா இருந்தது 👌👌👌

நிறைய எதிர்பாராத ட்விஸ்ட்களோட கதை ரொம்ப நல்லா விறுவிறுப்பாக நகர்ந்தது .

ரொம்ப நல்ல ஒரு பீல் குட் ஸ்டோரி 👌👌
ரொம்ப அருமையான நிறைவான முடிவு தேன்சுவைக்கான விளக்கம் அருமை 😍😍👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top