ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

💖♥️ என்னவள் ❤️💖 10

priyalini

Member
Wonderland writer
ஆர்த்தி எடுத்த உடன் குழந்தைகளுடன் பெரும் மனச்சச்சலம் ஏற்பட நின்ற வலின் கையில் சிறு அழுத்தம் கொடுத்து அவனுடன் அழைத்து வீட்டினுள் வந்தான்.

வந்த உடன் மகன்கள் இருவரையும் தங்களின் அறையில் உள்ள படுக்கையில் படுக்க வைக்க முனைகையில் இருவரும் தூக்க கலக்கத்தில் தங்களின் அம்மாவை தேட மீண்டும் ஹாலில் தரையில் அமர்ந்து தனது மடியில் படுக்க வைத்து கொண்டாள்.

அவளை சூழ்ந்து அனைவரும் அமர pls எல்லாரும் என்ன மன்னிருங்க, அப்புறம் அவளின் தவறை சரி செய்ய இயலாமல் கண்ணீர் விட்டாள்.

அவன் மட்டும் தானே அவளின் மீது அப்போது கோபம் கொண்டது. மற்ற எல்லோரும் அவளின் மீது பாசம் கொண்டனர்.

வீட்டின் உறுப்பினர்கள் குழந்தைகளை கொஞ்சி குலாவி கொண்டாடி தீர்த்தனர்.

ஆதிரை மற்றும் சுகன்யா இருவரும் குற்றவுணர்வில் குழந்தைகளை கொஞ்ச முடியாமல் பிரியாவில் அருகில் சொல்லாாமல் இருந்தனர்.

குழந்தைகள் எழுந்த உடன் முகம் கழுவி வீட்டின் சாமியறையில் பிரியா விளக்கேற்றினாள்.

பிறகு தம்பதி சமேதமாக குழந்தைகளுடன் ஈஸ்வரி, பூரணி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். உடன ஷியாம் அப்பா நீங்களும் வாங்க என்று அவனது அப்பாவை மட்டும் அழைக்க, பிரியாதான் அத்தை நீங்களும் மாமா உடன் வாங்க என அழைக்க., ஷியாம் ஏய் நீ சும்மா இரு டி என்று அவளை அடக்க அவள் pls எனக்காக என கண்ணால் கெஞ்ச ஐயா உடன சரண்டர் ஆகினான்.

அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி நிமுற அவி, இனி என்னால் முடியாது என முனக அனைவரும் குழந்தைகளை கொஞ்ச ஆரம்பித்தனர்.
ஆதிரை குழந்தைகளை ஏக்கமாக பார்க்க பிரியா குழந்தைகளை தனது மாமியார் மற்றும் சுகன்யாவிடம் அனுப்பினாள்.

ஆதிரையும், சுகன்யாவும் குழந்தைகளை கொஞ்ச இருவரும் அவர்களிடம் விளையாட தொடங்கினர்.

பிரியா, ஈஸ்வரி யின் செல்லம். எனவே பாட்டியின் மடியில் தலைவைத்து படுத்தாள். பாட்டி, உங்க அக்கா இன்னுமா என் மேல கோபமாக இருங்காங்க என்று பூரணியை பார்த்து கேட்டாள்.

உடனே ஈஸ்வரி அவங்க ஒன்னும் நான் இல்லை. அவங்க அப்படிதான் போக போக பேசுவாங்க என்று அவளின் தலையை வருடி கொடுத்தார்.

அந்த வருடலின் இதத்தில் பாட்டி எனக்கு மட்டும் ஏன் பாட்டி இப்படி நடக்கனும் என்று ஏதையோ யோசித்து, கண்களில் நீருடன் பாட்டி அபியும், அவியும் பிறக்கும் போது எப்படி கஷ்டபட்டேன் தெரியுமா? என அழுதாள்.

அதுவரை இருந்த இலகு தன்மை மறைய அனைவரும் அவளின் நிலையை நினைத்து கலங்கினார்.

ஆதிரை, சுகன்யாவுக்கு குற்றவுணர்வில் தலையை குனிந்து கொண்டனர்.

எப்படி கஷ்டபட்டேன் தெரியுமா? இவனோட கையைப் பிடிச்சு அந்த வலிய தாங்க நினைச்சேன் முடியல என உதட்ட பிதுக்க, நீங்க இரண்டு பெரும் இப்படி தலை வருடி ஆறுதல் சொல்லும் நினைச்சேன் முடியல இன்னும் என்னென்னவோ நினைத்து ஏங்கினேன் என சிறுப்பிள்ள போல் அழுதாள்.

அனைவரும் அவளின் இந்த நிலைக்கு காரணம் ஆதிரை சுகன்யா என நினைக்க உயிர் வலி வந்தது.

தன்னுடைய துரோகத்தால் மனையாள் எவ்வளவு வலி சுமந்தால் என நினைக்க இவனுக்கு உடலே நடுங்கியது.

புயலின் நடுக்கத்தை பூ மட்டுமே குறைக்கும்.🌪️💖🌹
 
Top