ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

♥️♥️ என்னவள் ❤️❤️ 12

priyalini

Member
Wonderland writer
விஜய்க்கு துபாயில் அவன் சென்ற வேலை முடியாத காரணத்தால் மேலும் சில நாட்கள் தங்கும்படி ஆயிற்று.

இளங்கோ, தனது மகள் ஐஸ்வர்யாவை காண லண்டன் சென்றார். மகளுடன் தங்கி அவளின் படிப்பு, மற்றும் ஹோட்டல் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டார்.

அவர் கிளம்பும் நாள் முதல் அவரிடம் கெஞ்சி கூத்தாடி தானும் இந்தியா வர சம்மதம் வாங்கினாள்.

வீட்டில் உள்ளவர்களும் இளங்கோ, மகளுடன் இருக்கவும், பிரியா வந்த விசயத்தை அவரிடம் தெரிவிக்கவில்லை.

ஐஸ்வர்யா, பிரியாவை பார்த்து என்ன செய்வாள் பார்ப்போம்.

பிரியா ஷியா முடன் அவனின் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.
எல்லோரும் அவளுடன் மிகுந்த பாசமாக நடந்து கொண்டாலும், அவளின் மாமியாரும் , நாத்தனாரும் சற்று விலகியே நின்றனர்.

ஆதிரை, சுகன்யா குற்றவுணர்வில் அவளுடன் பேசாமல் பட்டு படாமல் இருந்தனர்.

ஷியாம் தனது மகன்களுடன் தான் இருக்கும் புகைப்படங்களை தங்கள் அறையில் நிரம்பினான்.

ஒரு நாள் பிரியா குளிக்க செல்ல அவளது Cellphone ஒளித்தது. அவன் எடுத்து பார்க்கும் முன்பு அது நின்றது. அப்போது அவளின் Wallpaper பார்த்து ஆச்சரியாமானான்.

அதில் பிறந்த நாள் அன்று அவள் தனது மகவுகளை இருபக்கமும் தனது கன்னத்துடன் அனைத்திருந்ததுப் போல் இருந்தது.

பிரசவ நேர களைப்பு முகத்தில் தெரிந்தாலும் அதை மீறி தனது மகன்களை பார்த்த சந்தோஷித்தில் அழகாக மிளிர்ந்தது.

அந்த புகைபடத்தை யாழினி எடுத்திருந்தாள்.

அந்த photo வை பார்த்து இவன் ஆனந்த அதிர்ச்சியில் கட்டிலில் அமர்ந்தான் .

மகன்கள் வர வாய்ப்பு இருப்பதால் இவள் Room கதவ தாழ்பாள் போடவில்லை.
இவனும் தனது சட்டையில் எதிர்பாரதா விதமா கொட்டிய காபி காரணமாக உள்ளே வந்து தாழ்பாள் போட்டான். அப்போது தான் photoவையும் பார்த்தது.

குளித்து விட்டு உடலில் டவலுடன் வந்தவள் கண்டது தனது கணவன் கண்ணீருடன் அமர்ந்த காட்சி தான்.

பதட்டமானவள் தான் இருக்கும் நிலை அறியாமல் அவனிடம் ஓடினாள்.
அவன் அருகில் ஓடிவந்தாள்.அவன் அருகில் வந்து அவன் வெற்று தோளில் கை வைத்தாள். அவனின் வெம்மையான தேகத்தில் அவளின் குளிர்ச்சியான கை படவும். நிமிர்ந்து அவளை பார்த்து விட்டு அப்படியே அவளை வயிற்றுடன் இறுக கட்டி கொண்டு அவளின் வயிற்றில் முகம் புதைத்தாான்.

அந்த அணைப்பில் துளியும் காமம் இல்லை , தனது குழந்தையை அரவணிக்கும் அன்னை போன்றது.

பிரியாவுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது. ஷியாம் நிமிர்ந்து அவளை பார்த்து சத்தியமாக இனி உன்ன தனியாக விட மாட்ேடன் .டி, ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தது இருக்க இல்ல, Pls என்னை மன்னிச்சுரு pls என்றான். நான் செய்தது துரோகம் தான் மறுபடியும் pls மன்னிச்சுரு டி என்றான்.

அவனின் மன்னிப்பு அவளையும் உருக்க தான் செய்தது. pls டா அதை எல்லாம் மறுபடியும் நியாபக படுத்த வேணாாம் pls ரொம்ப வலிக்குதுடா என்றாள் வலியாக.

அவனும் கண்களை துடைத்து அவளிடம் ஆமாடி நீ சொல்லுவதும் சரி என்னை மன்னிச்சுருவ இல்லை என்றான்.

அவனின் கண்களை பார்த்து முயற்சிக்கிறேன், சீக்கிரம் மன்னிச்சுருவேன் என்றாள்.

இவர்களின் வாழ்க்கையில் விளையாட ஐஸ் வந்து சேர்ந்தாள்.

பிரசவ நேர photoை வை ஷியாம் ஹாலிலும், அவனது படுக்கறையிலும் பெரியளவில் Frame செய்து மாட்டினான்.

ஐஸ்வர்யாவும், இளங்கோவனும் விமான நிலையத்தில் இருந்து வந்து ஆதிரையை காண ஷியாமின் வீட்டிற்கு வந்தனர்.
வாசலில் வரும் போதே அத்தை என்ற குரலும், ஷியாமை காண துடித்த கண்ணுமாக வந்தாள்.

நிறுவனத்து கிளம்பிய ராம்சுந்தர் இளங்கோவனை வரவேற்று வேண்டா வெறுப்பாக ஐஸ்வர்யாவையும் வா என்று விட்டு இளங்கோவனிடம் தொழில் பேச்சு பேச தொடங்கினார்.

ஐஸ்வர்யாவின் குரல் கேட்டு அபி, அவியுடன் ஹாலுக்கு வந்தார் ஆதிரை.
புதியவர்களை கண்ட குழந்தைகள் தனது அம்மாவிடம் செல்வதாக சொல்லி ஓடினர்.

ஐஸ்வர்யா தனது அத்தையிடம் கொஞ்சி கொண்டு இருந்தாள்.
அப்போது ஷியாம் வெளியே செல்ல வந்தவனை ஐஸ்வர்யா ஷியாமை இறுக அணைத்து I Miss You அத்தான் என அனைவரும் முன்பு அவன் கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்தாள்.

அதை பார்த்து அனைவரும் அதிர , அழுகையின் விம்மல் சத்தத்துடன் குழந்தைகளுக்கு பால் காய்ச்ச வந்த பிரியா ஓடினாள்.

ஷியாம் ஐஸ்வர்யாவை தன்னிடம் இருந்து பிரித்து பளார் என விட்டான் ஒரு அறை.

ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி அவன் அடித்ததில் இல்லை பிரியாவை பார்த்தாள்.

அவன் மனைவியை தேடி செல்ல, இளங்கோ பிரியா பாப்பா வந்துருச்சா என்றார் சந்தோசமாக, ஆம் என்றார் ராம்சுந்தர்.
ஐஸ்வர்யா அப்பா அத்தான் என்னை அடித்தது உங்களுக்கு தெரியல, அவ வந்தது ரொம்ப முக்கியம் என தந்தையிடம் காய்ந்தாள்.

இங்கு பிரியா கண்ணுருடன் படுத்திருந்தாள்.

புயல் பூவை சமதானம் செய்யுமா பார்ப்போம் 🌪️💖🌹
 
Top