ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 9

pommu

Administrator
Staff member

வேல்விழி 9

மதனாவோ, "எங்களுக்கும் என்ன பண்ணுறதுன்னு தெரியல, யுவா கிட்ட சொல்றது தான் சரின்னு படுது" என்க, அவளோ, "அது தான் வேணாம்ன்னு சொல்றேன்ல ப்ளீஸ் போங்க, நானே என்னை பார்த்துகிறேன்" என்று வலியின் பிடியில் சொல்லிக் கொண்டே இருந்தவளது இதழ்களோ தாங்க முடியாமல் முனக ஆரம்பிக்க, "அது தான் ஏன்??" என்று சற்று கடுப்பாகவே கேட்டு விட்டாள் ஸ்ருதி.

நந்திதாவோ அதற்கு மேல் பொறுமை இல்லாதவளாக, "ஏன்னா எனக்கும் அவருக்கும் அப்படி ஒரு ரிலேஷன்ஷிப் இல்ல புரியுதா? ஒரு பிரெண்ட் ஆஹ் கூட நான் அவரோட பழகுனது இல்ல" என்று வாய் விட்டு சொன்னவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. அதைக் கேட்டு ஸ்ருதியும் மதனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, "அப்போ ஆதித்ரி" என்று ஒருங்கே கேட்க, அவளிடம் மௌனம் மட்டுமே பதிலாக,

"ஆர்டிபிஷியல் இன்செர்மினேஷசன் ஆஹ்?" என்று கேட்டாள் மதனா. நந்திதாவுடன் அதற்கும் மௌனம் தான் பதிலாக இருக்க வெகுண்டெழுந்தது என்னவோ ஸ்ருதி தான். அவன் நண்பனாக இருந்தாலும் சக பெண்ணாக அவளால் இதனை ஏற்றுக் கொள்ளவே முடியவே இல்லை. "அவன் என்ன தான் மனசில நினைச்சிட்டு இருக்கான். நீ பொண்டாட்டியா இல்லை வேலைக்காரியா? கல்யாணம் பண்ணுவான்... அவன் குழந்தைய வேற நீ சுமக்கனும், ஆனா உன் மேல கையை வைக்க மாட்டான், நீ இதெல்லாம் கேட்க மாட்டியா? நீ தொட்டாலும் தொட்டு பேசாதேன்னு அவ்ளோ பேர் முன்னாடி அசிங்கப்படுத்திறான். நீயும் சாரின்னு சொல்லிட்டு நிக்கிற... கொஞ்சம் கூட உனக்கு வெட்கம் மானம் இல்லையா?" என்று கேட்க,

நந்திதாவிடம் இருந்து கண்ணீர் மட்டும் பதிலாக வர, மதனாவோ, "நான் கூட பப்லிக்ல தான் இப்படி நடந்துக்கிறான். பிரைவேட் ல ஓகேயா இருப்பான்னு நினச்சேன்... ஆனா ச்ச" என்று தனது அதிருப்தியை வெளியிட்டாள். ஸ்ருதியோ, "நீ ரத்தமும் சதையும் கொண்ட மனுஷி... ஒன்னும் மெஷின் இல்ல, நீ சும்மா இருந்தாலும் நான் சும்மா இருக்க போறது இல்ல. அவனால முடியலைன்னா டைவர்ஸ் கொடுத்துட்டு போக சொல்லு… இப்படி ஒரு வாழ்க்கை வாழணுமா என்ன?? பிரென்ஷிப் கட் ஆனாலும் பரவாயில்லை இன்னைக்கு நாக்கை புடுங்குற போல கேக்கிறேன் பாரு" என்று எழ,

அவள் கையை பிடித்த நந்திதாவோ, "ப்ளீஸ் வேணாம், ஏற்கனவே வலி தாங்க முடியல" என்று கண்ணீருடன் கெஞ்சினாள். ஸ்ருதியோ, "அவன் உன் புருஷன் தானே? அவன் பார்த்துக்கட்டும்… அவன் கிட்டயே சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டே மதனாவை அழைத்துக் கொண்டே வெளியே வர நந்திதா, "ப்ளீஸ்" என்று கெஞ்சியது காற்றில் கரைந்து தான் போனது.

வெளியே வேகமாக வந்த ஸ்ருதியோ, "யுவா" என்று சத்தமாக அழைக்க, அவனோ சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டே என்ன என்கின்ற ரீதியில் ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டான். அவளோ அவன் முன்னே வந்து நின்று கொண்டே, "நீ மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க யுவா?" என்று ஆக்ரோஷமாக கேட்க, அனைவரும் சட்டென அவர்களை திரும்பிப் பார்த்தார்கள். அவனோ, "வாட்?" என்று எரிச்சலாக கேட்டுக் கொண்டே அமர்ந்து இருக்க, அவளுக்கு இன்னும் கோபம் சுர்ரென்று எகிறியது.

அவளோ தைரியத்தை வரவழைத்தவளாக, "உன்னால சாதாரணமா அவ கூட சந்தோஷமா இருக்க முடியலைன்னா எதுக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட?" என்று கேட்க, அவனோ புருவம் சுருக்கிப் பார்த்து விட்டு திறந்து இருந்த கதவினூடு தெரிந்த நந்திதாவை ஒரு கணம் பார்க்க, அவளோ அவனைப் பார்க்காமல் விழிகளை தாழ்த்திக் கொண்டாள். அவனோ அவளை முறைத்து விட்டு, "இப்போ என்ன?" என்று கடுப்பான குரலில் கேட்டான் ஸ்ருதியிடம்.

அவளோ, "என்னவா? உன் குழந்தை ஆர்டிபிஷியல் ஆஹ் தான் பிறந்துச்சாமே, அது தான் உன்னால முடியலைன்னா எதுக்கு கல்யாணம் பண்ணி அந்த பொண்ணு வாழ்க்கைய கெடுத்த?" என்று கேட்டு முடிக்க பாய்ந்து எழுந்தவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான். அவளோ தள்ளிக் கொண்டே கீழே விழுந்தவளோ கன்னத்தை பொத்தியபடி அவனை அதிர்ந்து பார்க்க,

அவனோ ஆக்ரோஷமாக அவளை பார்த்தவன், "நானும் பார்த்துட்டே இருக்கேன், ஓவரா பேசிட்டு இருக்க, அவ என் பொண்டாட்டி… என்ன வேணும்னாலும் பண்ணுவேன், அவளே அத பத்தி கவலைப்படல உனகென்னடி பிரச்சனை? ஓவரா பேசுன பிரெண்டுன்னு கூட பார்க்காம சாவடிச்சிடுவேன்" என்று கர்ஜித்தபடி, அவளுக்கு அறைந்த கரத்தை உதறிக் கொண்டான். அவள் கீழே விழுந்ததும், "ஸ்ருதி" என்று சொல்லிக் கொண்டே அவளை ஓடிச் சென்று ஸ்ரீயும் மதனாவும் தூக்கி விட,

ஸ்ரீயோ, "யுவா எதுக்கு இப்படி நடந்துகிற?" என்று ஆற்றாமையுடன் கேட்டான். அவனை முறைத்த யுவராஜ்ஜோ, "அவ என்ன பேசுனா பார்த்த தானே? அவ பேச கேட்டுட்டே இருக்கணுமா? வாய மூடிட்டு இருக்க சொல்லு" என்று கண்கள் சிவக்க சீறியவனின் மேனி கூட சிவந்து தான் போனது... அனைவருமே அந்த இடத்தில் கூடி இருக்க, யுவராஜுக்கோ ஆத்திரம் உச்சத்தில் தான் வந்தது.

அனைவரின் முன்னிலும் தன் இயலாமையை படம் போட்டு காட்டிய கோபத்தில் இருந்தவனின் மேனியின் நரம்புகள் கூட புடைத்துக் கிளம்பி இருந்தன. கன்னத்தை பொத்தியபடி எழுந்து நின்ற ஸ்ருதியோ கண்ணீருடன் ஸ்ரீயைப் பார்த்தவள், "அந்த பொண்ணை பார்க்கவே பாவமா இருக்கு ஸ்ரீ… இப்போ அவளுக்கு பால் கட்டி துடிச்சிட்டு இருக்கா, ஆனா இவன் கிட்ட ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேங்குறா, மனசே பதறுது… இப்படி ஒரு வாழ்க்கை வேணுமா?" என்று கேட்க,

அவளை முறைத்த யுவராஜோ, "என் கூட வாழணுமா இல்லையான்னு அவ தான் முடிவு பண்ணனும்... இப்போ உனகென்னடி பிரச்சனை?" என்று சீறியவனுக்கு கோபத்தின் மத்தியில் நந்திதாவின் வலி கூட பொருட்டாக தோன்றவே இல்லை. நந்திதாவுக்கோ வலி மேலும் மேலும் அதிகரிக்க, வாய் விட்டே கதற ஆரம்பித்து இருக்க, அங்கே இருந்த அனைவருக்குமே இதயம் பிசைய தொடங்கியது ராமையும் சேர்த்து.

அவனுக்கோ அவள் கதறல் என்னவோ போல இருக்க, யுவராஜைப் பார்த்தவனோ, "சண்டை அப்புறம் போட்டுக்கலாம் சார், நந்திதாவைக் கொஞ்சம் பாருங்க" என்று கெஞ்சலாக கேட்க, அவனோ ராமை முறைத்துப் பார்த்தவன், "நான் பார்ப்பேன் பார்க்காம விடுவேன்… அது என் இஷ்டம், உனக்கென்னடா பிரச்சனை?" என்று கேட்டான். அவனுக்கு தான் ராம் மீது கொலைவெறி ஆத்திரம் இருக்கின்றது அல்லவா?

ஸ்ரீயோ, "யுவா உன் கோபத்தை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம், அவ கதறுறத பார்க்க எங்களுக்கே கஷ்டமா இருக்குடா… நீயும் பார்க்க மாட்டேங்குற அடுத்தவங்களையும் விட மாட்டேங்குற?" என்று கேட்க, ராமோ அங்கிருந்து அவசரமாக தனது அறைக்குள் நுழைந்தான். நந்திதாவோ வலியின் உச்சத்தில் படுக்கை விரிப்பை பற்றிக் கொண்டே அழ ஆரம்பிக்க, சட்டென திரும்பி திறந்து இருந்த கதவினூடு அவளைப் அழுத்தமாக பார்த்தான். அவள் கண்ணீர் என்னவோ செய்தாலும் அவனுக்கு வீம்பு உச்சத்தில் இருக்க, இறுகி போய் நின்று இருந்தான்.

மேலும் தன்னை பற்றி அவள் ஸ்ருதியிடம் சொன்ன கோபம் வேறு ஏகத்துக்கும் எகிறி இருந்தது. இதே சமயம் அறைக்குள் இருந்து ஓடி வந்த ராமோ கையில் இருந்த சுடுநீர் பாட்டிலை மதனாவிடம் கொடுத்தவன், "என்னன்னு கொஞ்சம் பாருங்க" என்று தழுதழுத்த குரலில் சொன்னவனுக்கு நிலை கொள்ளவே முடியவில்லை. யுவராஜுக்கு அவன் செயல் கடுப்பாக இருந்தாலும், நந்திதாவை பார்க்க கொஞ்சம் மனம் இளகி போனதால் என்னவோ மௌனமாகவே நின்று இருந்தான்.

மதனாவோ சுடுநீரை எடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைய போக, அவள் கையை பிடித்த ஸ்ருதியோ, "நீ எதுக்கு போற? அவ புருஷன் கிட்ட கொடுத்து விடு, அவனுக்கே அக்கறை இல்லாதப்போ நாம எதுக்கு அக்கறை படணும்?" என்று கடுப்பாக கேட்டாள். இதற்கு யுவராஜ்ஜை விட துடித்தது என்னவோ ராம் தான்.

"ஐயோ! இந்த நேரத்திலே எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கீங்க?" என்று சற்று காட்டமாகவே கேட்டவனுக்கு நந்திதாவின் குரல் என்னவோ செய்தது. பிரகாஷ் கூட, "இப்போ எதுக்கு இதெல்லாம் பார்த்துகிட்டு, அவங்க கத்துறது கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று சொன்னான். உடனே ஸ்ருதி, "இப்போ கூட இங்க இருக்கிற ஆம்பிளைங்க கவலைபடுற அளவுக்கு சாருக்கு கொஞ்சமும் கவலை இல்ல, இவன் குழந்தைய சுமந்து பெத்துக்கிட்ட அவளை சொல்லணும்" என்று கடுப்பாக சொல்லிக் கொண்டே மதனாவின் கையில் இருந்த சூடு நீர் குவளையை வாங்கியவள்,

யுவராஜ் முன்னே சென்று நின்று கொண்டே அதனை நீட்டி, "நீ சரியான ஆம்பிளையா இருந்தா உன் பொண்டாட்டிய நீ பாரு" என்று சொல்லிக் கொண்டே திண்ணையில் வைத்து விட்டு விறு விறுவென சென்று விட்டாள். அவனோ அப்போதும் மௌனமாக இறுகி போய் நின்றவன் உள்ளே துடித்துக் கொண்டு இருந்த நந்திதாவை திரும்பி இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க, பொறுமை இழந்த ராமோ, "நானே கொண்டு கொடுத்துட்டு வரேன்...

நந்திதாவே ஏதாவது பண்ணிக்கட்டும்" என்று சொல்லிக் கொண்டே சூடு நீர் பாட்டிலை எடுக்க போக முதல், அதனை சட்டென தூக்கி எடுத்த யுவராஜ்ஜோ தன் முன்னே நின்ற ராமை முறைத்துக் கொண்டே, "என் பொண்டாட்டிய எனக்கு பார்த்துக்க தெரியும், அவ மேல உன் நிழல் கூட படக் கூடாது" என்று சொல்லிக் கொண்டே அறையின் உள்ளே நுழைந்தவன் கதவை அடித்து சாற்றி தாளிட்டுக் கொண்டான்.

அவன் சாற்றியதுமே அனைவரும் கண்களை மூடி திறந்து கொள்ள, ஸ்ருதியோ, “அவனே பார்த்துக்கட்டும், நீங்க வாங்க" என்று சொல்லி விட்டு அங்கிருந்து அகல, ஒவ்வொருவரும் அங்கிருந்து அகன்று சென்றார்கள். இதே சமயம் உள்ளே வந்தவனோ அங்கே கட்டிலில் அமர்ந்தபடி துடித்துக் கொண்டு இருந்த நந்திதாவை ஆழ்ந்து பார்த்தவனுக்கு இருக்கும் கோபத்தையும் அவளிடம் காட்ட மனசு வரவே இல்லை.

அடுத்த கணமே, சுடுநீர் பாட்டிலை திறந்து அருகே இருந்த தனது டீ ஷேர்ட்டை எடுத்து நீரை ஊற்றியவன் அவளை நோக்கி சென்று அவளிடம் அதனை நீட்ட, அவளால் அதனை பற்றிக் கொள்ளக் கூட முடியாதளவு வலி உயிரையே எடுத்துக் கொண்டு இருந்தது. கையை நீட்டியவள் அதனை வாங்கினாலும், அவளால் எதுவுமே செய்ய முடியாமல் இருக்க, "என்னால சத்தியமா முடியல... ரொம்ப வலிக்குது" என்று திக்கி திணறி சொன்னவளது வார்த்தைகள் என்னவோ செய்ய அவனோ மௌனமாகவே அவள் துடிப்பதை பார்த்தவனுக்கு அதற்கு மேல் ஜீரணிக்கும் சக்தி இருக்கவே இல்லை.

சட்டென அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்து கொண்டே அவள் அணிந்து இருந்த ஷேர்ட்டில் கையை வைக்க, அவளோ அவன் கரத்தை பிடித்துக் கொண்டவள், "வேணாம்" என்றாள் ஈனக் குரலில். அவனோ, "கையை எடு" என்று உறுமலாக சொல்ல, அவளுக்கும் அவனை எதிர்த்து பேசும் அளவுக்கு சக்தி இருக்கவே இல்லை. அவன் குரலைக் கேட்டு அவள் கரம் தானாக விலக, அவனோ அவசரமாக அவள் ஆடைகளை அகற்றினான். அவளுக்கோ வலியின் மத்தியில் கூச்சம் எல்லாம் எங்கோ பறந்து தான் போய் இருந்தது.

ஆனால் அவனுக்கோ இதெல்லாம் விசித்திரமான உணர்வாகவே இருக்க, கண்களை மூடித் திறந்தவன் தனது கையில் இருந்த சூடு நீர் ஊற்றப்பட்ட தனது டீ ஷேர்ட்டை எடுத்து அவள் மேனியில் வைத்தான். அவன் வைத்த கணம் வலி தாங்க முடியாமல் துடித்த பெண்ணவள் கரமோ முன்னே மண்டியிட்டு அமர்ந்து இருந்தவனின் வெற்றுத் தோளில் அழுந்த பதிந்தது. அவள் வலியின் விளைவு அவன் தோள்பட்டையில் நகக்கண்களால் பதிக்கப்பட்ட ரணமாக மாற, அவனுக்குமே அது வலித்தது தான்.

ஆனாலும் அந்த வலி எல்லாம் அவள் வலியின் முன்னே அவனுக்கு ஒன்றும் இல்லாதது போல தான் இருக்க, ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டே ஆரம்பித்த வேலையை தொடர, அவள் கதறிய சத்தம் வெளியே இருந்த அனைவரின் காதிலும் விழ, அருகே இருந்த ஸ்ருதியிடம், "பாவமா இருக்குடி" என்று சொல்லிக் கொண்டாள் மதனா. ஸ்ருதியோ, "பொண்ணுன்னா அவனுக்கு இளக்காரம் ஆஹ் இருந்திச்சுல… ஒரு பொண்ணோட வலிய பக்கத்தில இருந்து பார்க்கட்டும்" என்று சொல்லிக் கொண்டவளுக்கும் நந்திதாவின் அலறல் சத்தம் மனதை பிசைந்தது தான்.

அவனுக்கோ பெண்ணின் உடலை தீண்டுவது புதிதாக இருக்க, அவன் கரம் அவள் மேனியில் படும் போதெல்லாம் உடலில் ஏதோ புதுவித உணர்வு தோன்ற, அவன் காதில் குதிரைகள் ஓடும் சத்தமும், "வலிக்கின்றது அரசே" என்று ஒரு பெண் அழும் குரலும் கேட்க, தலையை உலுக்கி தன்னை நிலைப்படுத்த படாத பாடு பட்டான். அவளோ இன்னுமே வலியில் இருந்து விடுபட போராடிக் கொண்டு இருக்க,

கரம் கொண்டும் அவள் வலியை முழுமையாக போக்க முடியாமல் அடுத்ததாக இதழ்கள் கொண்டு அவள் வலியை போக்கி விடும் முனைப்பில் இறங்கி விட, இதனை எதிர்பாராத நந்திதாவோ சற்று தடுமாறி தான் போனாள். ஆனாலும் அவளுக்கு அவனை விட்டு விலகும் அளவுக்கு உடல் வலி இடம் கொடுக்காமல் இருக்க,

கண்ணீருடன் அவன் தோள்களைப் பற்றிக் கொண்டவளது கண்ணீர் அவன் உச்சந்தலையில் விழ, அவன் காதிலோ, "சாப விமோச்சனத்தை தேடி வந்து இருக்கிறாயா அரசே?? சுமை ஏறிய கொங்கையின் சுமையை இறக்கி விடு, உன் பழியும் பாவமும் இந்த ஜென்மத்தில் அகன்று விடும், சுமையேறியவள் சாபம் சும்மா விடாது" என்று சித்தர் சொன்ன வார்த்தைகளே கேட்டுக் கொண்டு இருந்தது.

ஆம் அவள் சுமையை இறக்கிக் கொண்டே இருந்தவன் மனதில் சுமை ஏறிப் போனது முன்ஜென்ம ஞாபகங்களினால். அவள் விழிகள் மட்டும் அல்ல, அவன் விழிகளுமே இப்போது கலங்கி போக, நந்திதாவின் கரமோ அவன் தோளில் இருந்து அவன் தலைக்கு இடம் மாறி அவன் சிகையை கரம் கோர்த்து நெரித்தது. சற்று முன் இருந்த வலி குறைந்து இருக்க, அவன் இதழ்களை இப்போது தான் அவள் உணர்ந்து இருக்க, அவள் மேனியோ உணர்வுகளில் துடிக்க ஆரம்பித்து இருந்தது.

அவனுக்கு சாப விமோச்சனம் கொடுத்தவள், இப்போது உணர்ச்சிப் பிளம்பாய் மாறி தன்னையே கொடுக்க ஆயத்தமாகி இருக்க, அவனோ அப்படியே இருந்து கொண்டே அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவள் இமைகளோ மூடி இருக்க கண்ணீர் அவள் கன்னத்தை நனைத்து இருக்க, அவள் கரமோ அவன் சிகையை அழுந்தப் பற்றி இருக்க, அவள் பாதமோ, மண்டியிட்டு அமர்ந்து இருந்தவனின் பாதத்துடன் பிணைந்து இருந்தது.

இதுவரை எந்த பெண்ணையும் பார்த்து அவனுக்கு உணர்வுகள் தோன்றவில்லை, ஐந்து ஜென்மங்களாக சேர்த்து வைத்து இருந்த உணர்வுகளின் மொத்த வடிகாலாக அவன் முன்னே அவள் மோன நிலையில் அமர்ந்து இருக்க, பெண்களைக் கண்டதுமே உண்டாகும் மோக உணர்வென்றால் என்ன என்று இப்போது தான் தெரிந்து கொண்டான் அவன். தன் முன்னே சிலையாக இருந்தவளது மேனியில் பதிந்து இருந்த அவன் கைகளோ அவள் இதழ்களுக்கு இடம் மாற, அவள் அதரங்களை அழுத்தமாக வருடிக் கொடுக்க, அவள் இதழ்களோ மெதுவாக தன்னவனின் இதழ் அணைப்பை வேண்டி விரிந்து கொண்டது.

அவனோ, "எத்தனை ஜென்மம் கடந்து உன் இதழ் தீண்ட போகிறேன் தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே, அதற்கு மேல் தாமதிக்க முடியாதவனாக, மண்டியிட்டபடியே நிமிர்ந்து அமர்ந்தவனோ அவள் கழுத்தில் கரத்தை வைத்து தன்னை நோக்கி இழுத்தவன் விரிந்த அவளது இதழ்களில் ஆழமாக தனது இதழ்களைப் பொருத்திக் கொண்டான். எத்தனை ஆழமான முத்தம் அது. அவன் கரமுமே சற்று முன்னர் வலி தீர்க்க வருடிய அவள் மேனியை இப்போது மோகத்தின் பிடியில் வருட ஆரம்பிக்க,

அவளது ஒற்றைக் கரமோ அவன் சிகைக்குள் இருக்க, அடுத்த கரமோ அவன் முதுகை இறுக அணைத்துக் கொள்ள, உணர்வுகள் உடைப்பெடுத்த நிலையில் இருவருமே தன்னிலை மறந்து இருந்த சமயம் அது. ஒற்றை முத்தத்தில் அத்தனை உணர்வுகளை கொடுக்கவும் உள்வாங்கவும் முடியுமா என்று கேட்கும் அளவுக்கு அவர்கள் இதழ்கள் இரண்டறக் கலந்து கொண்டு இருக்க, அவன் கரமோ அவள் இடையில் அணிந்து இருந்த ஜீன்ஸில் பதிந்த கணம், அவர்கள் அறைக் கதவு தட்டப்பட, நிதானத்துக்கு வந்தவர்கள் சட்டென பிரிந்து கொண்டார்கள்.

அவளோ தான் இருக்கும் நிலையைக் கண்டு அதிர்ந்தவளாக தன்னை இரு கைகளாலும் மறைக்க போராட, அவனோ கண்களை மூடித் திறந்து கொண்டே கீழே கிடந்த அவள் ஆடையை எடுத்து நீட்டிக் கொண்டே மறுபக்கம் திரும்பி நின்றவனுக்கு பழைய நினைவுகள் பாதியும் தற்போதைய நினைவுகள் பாதியும் என குழப்பமான மனநிலை தான். அவளோ அவசரமாக உடையை அணிந்து கொண்டே எழுந்து நிற்க, அவளை ஒரு கணம் திரும்பிப் பார்த்தான்.

அந்த பார்வையில், "நீ வேண்டும்" என்ற வார்த்தை மட்டுமே அடங்கி இருக்க, அவனுக்கோ மனதில் ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் அதனை எல்லாம் தள்ளி வைத்து விட்டு உணர்ச்சிகள் மட்டுமே போட்டியிட்டுக் கொண்டு முன்னுக்கு வந்தன. ஐந்து ஜென்மங்களாய் மரத்துப் போய் இறந்தவனின் உணர்வுகளை தட்டி எழுப்பினால் அது எல்லை கடந்து ஓடத் தானே முயற்சிக்கும். அவளுக்கோ அவனது இந்த அவதாரம் முற்றிலும் புதிது. அவள் கை தெரியாமல் பட்டாலே கொதித்து எழுபவன், இன்று அவனாக எல்லை மீறி தீண்டியது மட்டும் அல்லாமல் முத்தம் வேறு பதித்து இருக்கின்றான்.

அவளுமே அவன் விழிகள் யாசித்ததை புரியாமல் பார்த்துக் கொண்டே இருக்க, அறைக் கதவு மீண்டும் தட்டப்பட, மறுபடி நிதானத்துக்கு வந்தார்கள் இருவரும்.
 
Super and intresting sis
 
Top