வேல்விழி 20
அவளும் அவனை முறைத்து விட்டு வெளியேற, "என்ன சொன்னாலும் முறைச்சுட்டே இருக்கா" என்று சொல்லிக் கொண்டே இருக்கையில் அமர்ந்தவன் அழைத்தது என்னவோ அந்த படத்தின் இயக்குனருக்கு தான். அவன் போனை எடுத்ததுமே, "நான் யுவராஜ்" என்று சொல்ல, அவனும், "சொல்லுங்க சார்" என்று சொன்னான். உடனே யுவராஜ்ஜோ, "மித்ராவை படத்தில இருந்து தூக்கிடுங்க" என்று சொல்ல, இயக்குனர் சற்று அதிர்ந்து தான் விட்டான்.உடனே, "ஏன் சார்?" என்று இழுவையாக கேட்க, "டூ வாட் ஐ சே, இல்லன்னா நான் விலக்கிக்கிறேன்" என்று சொன்னதுமே ஆடிப் போன இயக்குனர், "ஐயோ! வேணாம் சார், நானே தூக்கிடுறேன்" என்று சொன்னதுமே போனை வைத்து விட்டான். அவன் திகதிகளுக்காக லைனில் அத்தனை இயக்குனர்கள் காத்துக் கொண்டு இருக்கும் போது கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவானா அந்தப் பட இயக்குனர்.
காரணமே இல்லாமல் அடுத்த கணமே மித்ரா படத்தில் இருந்து தூக்கப்பட்டாள். இப்படியே இரு நாட்கள் நகர, யுவராஜ்ஜூக்கு வீடு தேடி திருமணத்துக்கான அழைப்பு வந்து சேர்ந்தது. அழைப்பிதழை வைத்து விட்டு போனார் சினிமா இண்டஸ்ரியில் பெரிய இயக்குனராக இருக்கும் பரத்வாஜ்.
அவருடைய மகனின் திருமண விருந்துக்கு அழைத்து விட்டு செல்ல, அவனுக்கு இந்த இடத்துக்கு வர உதவி செய்தவரின் அழைப்பை அவனால் மறுக்கவே முடியவில்லை. அடுத்த கணமே ஸ்ரீக்கு அழைத்தவன், "டேய் வர்ற 23 ஒரு கமிட்மென்ட்ஸும் இல்ல தானே” என்று கேட்க, அவனும், "இருடா பார்த்து சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டே பார்த்தவன், "இல்லடா டேட் ப்ரீயா தான் இருக்கு, பரத்வாஜ் சார் பையனோட கல்யாணத்துக்கு போற பிளான் ஆஹ்?" என்று கேட்க, அவனும், "ம்ம் யெஸ் டா, இக்னோர் பண்ண முடியல… நீயும் வர்ற தானே" என்று கேட்க,
அவனும், "ஷோர்டா" என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். ஹாலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தவனோ, குழந்தையை தூக்கிக் கொண்டே ஹாலுக்குள் வந்த நந்திதாவைப் பார்த்து, "வர்ற வியாழக்கிழமை, பரத்வாஜ் சாரோட வீட்ல பங்க்ஷன் ரெடியா இரு" என்று சொல்ல, அவளோ, "நான் வரல" என்று சொல்ல வந்தவள், என்ன நினைத்தாளோ தெரியவே இல்லை, "வரேன்" என்று சொல்லி முடித்து இருந்தாள்.
பார்த்து இருக்க, திருமண நாளும் வந்து சேர, யுவராஜ்ஜூக்கு தலையலங்கார நிபுணர்கள் வீட்டுக்கே வந்து இருந்தார்கள். வழமையாகவே அப்படி தானே. நந்திதாவோ தானே ஆயத்தமானவள், "எப்போ பார்த்தலும் அப்படி ஹேர் ஸ்டைல் இப்படி ஹேர் ஸ்டைல்னு வச்சிட்டு இருக்க வேண்டியது, வர்ற கோபத்துக்கு தலை முடிய புடிச்சு வெட்டி விடணும் போல இருக்கு" என்று நினைத்துக் கொண்டாள்.
குழந்தையை அங்கே இருந்த நீலாம்பரியிடம் கொடுத்து விட்டு அவள் அமர்ந்து இருக்க, யுவராஜ்ஜூம் ஆயத்தமாகி வெளியே வந்தான். கருப்பு நிற ஷேர்ட் அணிந்து அதன் மேலிரு பட்டன்களும் திறந்து இருக்க, அவன் திண்ணிய மார்பில் வரையப்பட்ட டாட்டூ அதனூடு தெரிய, ஷேர்ட்டை முட்டி வரை மடித்து விட்டு இருந்தவனோ பாக்கெட்டில் கையை போட்டுக் கொண்டே, "ம்ம்" என்று கண்களால் அழைத்தபடி முன்னே செல்ல, அவளும் பின்னால் சென்றாள்.
அவர்கள் வண்டியின் பின் பக்கமே இருவரும் ஏறிக் கொள்ள, வண்டியும் முன்னால் பாடி கார்டை ஏற்றிக் கொண்டே புறப்பட்டது. காரில் ஒவ்வொரு ஓரத்தில் அமர்ந்து இருந்தவர்கள் பேசிக் கொள்ளவே இல்லை. அதுவரை அமைதியாக இருந்த நந்திதாவோ, அவர்களது பார்ட்டி நடக்கும் இடத்துக்கு வந்ததுமே, இறங்க போனவனின் கையை பிடித்தாள். அவனோ, "வாட்??" என்று கேட்க, அவளோ, "அதென்ன ஷேர்ட் ல மூணு பட்டன் ஓபன் ல இருக்கு??" என்று கேட்டாள்.
அவனோ, "ஊப்" என்று இதழ் குவித்து ஊதியவன், "அதுல என்ன இருக்கு ??" என்று கேட்க, அவளோ "இத பார்த்து நாலு பொண்ணுங்க பின்னால் வரணும், அது தானே உங்க ஆசை" என்றாள். அவளை கோபமாக முறைத்துக் கொண்டே ஷேர்ட் பட்டனை பூட்டியவன, "போதுமா?" என்று கேட்க, அவனை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, "ஓகே" என்றாள். அவனும் இறுக்கமான முகத்துடன் இறங்க அங்கே நின்ற புகைப்படக்காரர்கள் அவனை புகைப்படம் எடுக்க தொடங்க, "இரிட்டேடிங்" என்று வாய்க்குள் திட்டியவனோ யாரையும் பார்க்காமல் விறுவிறுவென உள்ளே நுழைய அவனை தொடர்ந்து நந்திதா உள்ளே நுழைந்தாள்.
இருவரும் நடந்து வந்த தோரணையை வைத்து நாளைக்கு என்ன தலைப்பு வரும் என்று அவன் சரியாக யூகிக்க உள்ளே வந்தவனை அங்கே இருந்தவர்கள் வரவேற்க, சட்டென திரும்பி பார்த்தான். நந்திதாவோ அங்கே வந்து இருந்த ஸ்ருதியுடன் பேசிக் கொண்டு இருக்க, தனது நண்பனும் நடிக்கனுமான நந்தாவின் தோளில் கையை போட்டவனோ, "ட்ரின்க் பண்ணலாமா?" என்று கேட்க, அவனோ, "என்னடா வந்ததுமே" என்றான் அவன்.
யுவராஜ்ஜோ, "வாடா" என்று அழைத்துக் கொண்டே மதுபானம் வழங்கப்படும் இடத்திற்கு செல்ல, அவனை தேடி வந்து அவனுக்க்கு தேவையானதை கொடுத்தார்கள் அங்கே இருந்தவர்கள். உச்ச நட்சத்திரம் அல்லவா? அவனும் மது குவளையுடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த கணம், அவன் முன்னே கையை பிசைந்து கொண்டே வந்து நின்ற பெண்ணோ, "சார்" என்றாள். யுவராஜ்ஜோ அவளை புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டே, "எஸ் மித்ரா சொல்லு" என்று சொல்ல,
அவளோ, "என்னை உங்க படத்துல இருந்து தூக்க சொன்னீங்களாமே சார்" என்றாள் இழுவையாக. அவன் நண்பனோ, "ஏன்டா தூக்க சொன்ன? நல்ல நடிகை தானே" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "எஸ்… பட் அந்த காரெக்டருக்கு சூட் ஆக மாட்டா" என்று சொல்ல, அவளோ, "உங்க எக்ஸ்பெக்டேஷன் புரியுது சார்… எனக்கு எல்லாத்துக்கும் ஓகே" என்றாள்.
அதனைக் கேட்ட நந்தாவோ, "அப்புறம் என்னடா?" என்று சொல்லிக் கொண்டே சத்தமாக சிரிக்க, அவனை முறைத்த யுவராஜ் மித்ராவை அழுத்தமாக பார்த்து, "ஹலோ நான் என்ன எக்ஸ்பெக்ட் பண்ணுறேன்னு உனக்கென்ன தெரியும்?? ஜஸ்ட் கெட் அவுட் ப்ரோம் ஹியர்" என்று சொல்லிக் கொண்டே திரும்ப அங்கே தூர இருந்து அவனையே பார்த்து முறைத்தது வேறு யாருமல்ல நந்திதா தான்.
"இவ எதுக்கு நம்மள முறைக்குறா?" என்று நினைத்தவனுக்கு அப்போது தான் பொறி தட்டுப்பட்டது தான் பேசிக் கொண்டு இருந்தது மித்ராவிடம் என்று. "சுத்தம்" என்று சொல்லிக் கொண்டே நந்திதாவை சமாதானபடுத்த அவளை நோக்கி நடக்க முற்பட்ட யுவ்ராஜ்ஜின் கையை பிடித்த மித்ராவோ, "ப்ளீஸ் சார், நீங்க என்ன சொன்னாலும் பண்ணுறேன்" என்க, அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
சட்டென்று கையை உதறியவன், அங்கே நின்று இருந்த நந்திதாவை நோக்கி வேகமாக செல்ல, அவளோ அவனை முறைத்து விட்டு விறு விறுவென வெளியேற போக, அவள் கையை எட்டி பிடித்தவனோ, "நந்திதா, கொஞ்சம் நில்லு, எல்லாருமே பார்த்திட்டு இருக்காங்க" என்று சொல்ல, அவளோ, அவனை திரும்பி முறைத்துக் கொண்டே, "இது இப்போ தான் தெரியுதா? அந்த பொண்ணு கையை பிடிச்சு கொஞ்சிட்டு இருக்கும் போது தெரியலையா?" என்று கேட்க, அவனுக்கு எரிச்சலாய் தான் வந்தது.
"கொஞ்சிட்டு இருந்தேனா? ஆர் யூ கிரேசி?" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க, அவன் கையை உதறியவள், "ஆமா உங்கள கல்யாணம் பண்ணின நான் பைத்தியக்காரி தான்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, "ஹாய் யுவா வெல்கம்" என்று ஒரு சத்தம் கேட்டது. அங்கே நின்றது வேறு யாருமல்ல பரத்வாஜ் தான்.
யுவராஜ்ஜோ அவரைப் பார்த்து விட்டு நந்திதாவைப் பார்க்க, அவளோ ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே உணர்வுகளை அடக்கிக் கொண்டே பரத்வாஜ்ஜைப் பார்த்து புன்னகைத்தாள். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் சட்டென்று நிதானமாகி விட்ட நந்திதாவை மென் புன்னகையுடன் பார்த்து விட்டு, "ஹாய் சார்" என்று சொல்லி கையினை நீட்ட, அவரும் கையை நீட்டியவர், "ரொம்ப பெரிய ஸ்டார் ஆயிட்டே… வர மாட்டேன்னு நினச்சேன்" என்றார். அவனோ, "இந்த ஸ்டார் பொசிஷன்க்கு அஸ்திவாரம் போட்டதே நீங்க தானே சார், அப்புறம் எப்படி மறுக்க முடியும்?" என்று கேட்க,
அவரும், "தட்ஸ் மை பாய்" என்று அவனை அணைத்து விடுவித்தவர், நந்திதாவைப் பார்த்து மென் புன்னகையுடன், "எப்படிம்மா இருக்க?" என்று கேட்க, அவளும், "பைன் சார்" என்று பதில் அளித்தாள். சற்று நேரம் யுவராஜ்ஜுடன் சினேகமாக பேசிக் கொண்டு இருந்த பரத்வாஜ்ஜோ, "பை தெ வே, முக்கியமான ஒரு ஆளை இண்ட்ரடியூஸ் பண்ணனும்," என்று சொல்லிக் கொண்டே, "அக்ஷரா" என்று அழைக்க,
அங்கே நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்த அக்ஷராவோ, "டாட்" என்று சொல்லிக் கொண்டே அவரை நோக்கி வந்தாள். வெண்ணிற நீளமான கவுனில் அழகு சிலையாக வந்தவளோ, யுவராஜ்ஜைக் கண்டதுமே, "வாவ், சார்" என்று சொல்லி விழிகளை விரித்துக் கொண்டாள்.
யுவராஜ்ஜோ, அவளை மென் புன்னகையுடன் பார்த்து விட்டு, பரத்வாஜ்ஜிடம், "சார் இது உங்க பொண்ணு தானே? நிறைய வருஷம் முன்னாடி பார்த்தேன்… ஜெர்மன்ல டைரெக்ஷன் கோர்ஸ் படிக்கச் போனா தானே" என்று சொல்ல, அவரோ, "எக்ஸ்சாக்ட்லி அவளே தான்... இப்போ டைரெக்ஷன் மட்டும் இல்ல மேடம்க்கு ஆக்டிங்லையும் இன்டெரெஸ்ட் வந்து இருக்கு" என்று சொல்ல, அவனோ, "தட்ஸ் குட்" என்று அவளைப் பார்த்து சிரித்தபடி சொன்னான்.
இதனிடையே அங்கே அவர்கள் மத்தியில் நின்று இருந்த நந்திதா பார்வையாளராக தான் இருந்தாள். அவள் என்ன தான் ப்ரொடியூசரின் மகளாக இருந்தாலும் இந்த நடிப்பு, டைரெக்ஷன், ப்ராடக்க்ஷன் என்று எதிலுமே ஆர்வம் இல்லாதவள் அல்லவா? பரத்வாஜ்ஜோ, "இவ தான் உன்னை பார்க்கணும்னு சொல்லிட்டே இருந்தா... உனக்கு ஜோடியா நடிக்கணும்னு ஆசை வேற, நான் சொல்லிட்டேன் அதுக்கு நீ முதல் நல்லா நடிக்க பழகணும்னு" என்று சொல்ல,
அவரை முறைத்த அக்ஷராவோ, "டாட் சும்மா இருங்க" என்று சொல்லி விட்டு யுவராஜ்ஜிடம், "ரியலி நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல, இப்போ தான் மேக்கப் முடிச்சிட்டு கீழ வந்தேன், வந்ததுமே இப்படி ஒரு ஷாக், உங்க ஆக்டிங் எல்லாம் வேற லெவல் சார், தியேட்டர் ல விசில் அடிச்சுட்டே பார்ப்பேன்" என்று சொல்ல, அவனோ, அனைவரும் பாராட்டி பாராட்டியே சலித்த வார்த்தைகளை வலுக்கட்டாயமாக சிரித்தபடி கேட்டுக் கொண்டு இருந்தான் பரத்வாஜ்ஜுக்காக.
பரத்வாஜ்ஜோ, "நீங்க பேசிட்டே இருங்க, இதோ வந்திடுறேன்" என்று சொல்லி விட்டு நண்பர்களை கவனிக்க சென்று இருக்க, அக்ஷராவோ பேசிக் கொண்டே இருந்தபடி அவன் பக்கத்தில் நின்ற நந்திதாவை ஒரு கணம் பார்த்து விட்டு, "ஒரு ரகசியம் சொல்லட்டுமா?" என்று கேட்க, அவனோ, "ம்ம்" என்றான். அவளோ, "உங்க கல்யாணம் அன்னைக்கு நான் அழுதுட்டே இருந்தேன்… அதுவும் அந்த கிஸ்ஸிங் போட்டோ பார்த்து செம டென்ஷன்" என்று சொல்ல,
அவனோ, "இவ வேற நந்திதாவை வெறுப்பேத்துறாளே" என்று நினைத்துக் கொண்டே பக்கவாட்டாக திரும்பி நந்திதாவை பார்த்தான். அவள் முகமோ, எண்ணெய் சட்டியில் விழுந்த ஐஸ்கட்டி போல தான் திகு திகுவென கோபத்தீயில் எரிந்து கொண்டு இருக்க, அக்ஷ்ராவோ, "என் அளவுக்கு இல்லன்னாலும் ஏதோ பரவாயில்லை" என்று சொல்லிக் கொண்டே இருக்க, அவளது நண்பிகள், "அக்ஷரா" என்று அழைத்தார்கள்.
அவளோ, "நிம்மதியா பேசக் கூட விடமாட்டாங்க" என்று வாய் விட்டு புலம்பிக் கொண்டே, "சரி சார், நாம அப்புறமா நிறைய பேசலாம். மறந்திடாதீங்க உங்க கூட நான் ஜோடியா நடிக்கணும்" என்று கண் சிமிட்டி சொல்லி விட்டு செல்ல, அவனோ பெருமூச்சுடன் இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவனோ அவனை முறைத்தபடி நின்றவளிடம், "நான் என்னடி பண்ணுறது?" என்று கேட்டான்.
அவளோ பதில் ஒன்றும் சொல்லாமல் அவனை முறைத்து விட்டு நகர போக, அவள் அருகே வந்து ஸ்ருதியோ, "நந்திதா, நாம சாப்பிடலாம் வா" என்று அழைத்து செல்ல, அவளும் எதுவும் சொல்லாமல் ஸ்ருதியுடன் சென்று விட்டாள்.
யுவராஜ்ஜோ சலிப்பாக, "மூட் மொத்தமா ஸ்பாயில் ஆயிடுச்சு" என்று நினைத்துக் கொண்டே உள்ளே வந்த ஸ்ரீயை நோக்கி கையைக் காட்ட, ஸ்ரீயும், "ஹாய் யுவா" என்று சொல்லிக் கொண்டே அவனை நோக்கி செல்ல, அவள் தோளில் கையை போட்டுக் கொண்டே தனியாக சென்றவனோ, "எங்க போனாலும் ஆப்பு மேல ஆப்பு தான் வைக்கிறார் கடவுள்" என்று புலம்ப ஆரம்பித்து விட்டான்.