ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 18

pommu

Administrator
Staff member

வேல்விழி 18

பிரசவவலியில் துடித்துக் கொண்டு இருந்த நந்திதாவுக்கு தன்னை விட்டு ஏதோ போய் விட்ட உணர்வு... ஆம் அவள் குழந்தை வயிற்றிலேயே உயிர் நீத்து இருக்க, "என்னுடைய குழந்தை" என்று ஆக்ரோஷமாக கத்தியவளுக்கு பிறந்தது என்னவோ உயிரற்ற ஜடம் தான். பதறி எழுந்தவளும், குருதியின் நடுவே இருந்த குழந்தையை கையில் ஏந்திக் கொண்டாள்.

ஆண் குழந்தை அவன் மார்பிலோ அந்த வம்சத்துக்கு உரிய வேங்கை மச்சம் இருக்க, அதனை வெறித்துப் பார்த்தாள் பெண்ணவள். இதனை விட என்ன வேண்டும் அது யுவராஜனின் குழந்தை என்பதற்கு சான்று? குழந்தையை இழந்த வலி அவ்வளவு விரைவாக தீரக் கூடியது அல்லவே, கையில் இறந்த குழந்தையை ஏந்திக் கொண்டே மேனியில் இருந்து குருதி வடிய வடிய நடந்து சென்றாள் சிறை வாயிலுக்கு. அவள் மார்போ பால் நிரம்பி வலிக்க ஆரம்பிக்க, அதனை புகட்ட உயிருடன் குழந்தை இருந்தால் தானே?

வேகமாக வாசலுக்கு வந்தவள், "கதவை திற" என்று சொல்ல, காவல் காரனோ, அவள் நிலையை பார்த்து தானாகவே கதவை கண்ணீருடன் திறந்து விட்டான். கையில் குழந்தையை தூக்கிக் கொண்டே அரசசபைக்குள் நுழைந்தவள் முகத்தில் கோபம் ஆக்ரோஷம் என்று அத்தனை உணர்வுகள் இருக்க, அவளை யாருமே தடுக்கவில்லை. அவள் வருவதைக் கண்டதுமே யுவராஜன் அதிர்ந்து பார்க்க, மார்பகத்தில் பால் வழிய, குழந்தை பிறந்ததால் மேனி முழுதும் குருதி வழிய கண்ணில் ஆக்ரோஷம் கலந்த கண்ணீருடன், நடந்து வந்தவளோ எழுந்து நின்றவன் காலடியில் குழந்தையை வைத்து விட்டு அவனை ஏறிட்டுப் பார்த்தவள்,

"தங்கள் குழந்தை அரசே! தங்கள் தவறால் இறந்து விட்டது, அவன் மார்பை பாருங்கள் உங்கள் மார்பில் இருக்கும் அதே வேங்கை முத்திரை இருக்கின்றது, இதனை விட என்ன சான்று தங்களுக்கு வேண்டும்?" என்று கேட்க, அவனோ சற்று குனிந்து காலடியில் உயிரற்று கிடந்த குழந்தையை பார்த்தான். மார்பில் வேங்கை முத்திரையுடன் பிறந்த ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு அவன். இறந்து கிடந்த சிசு அவன் மனதை பிசைய அதனை குனிந்து தூக்க போக, "அதனை ஸ்பரிசிக்காதீர்கள்" என்று அந்த அறையே அதிரும் வண்ணம் சீற, அவனோ அதிர்ந்து போனான்.

உடனே, மித்ரகுமாரியோ, "சிறையில் இருந்து உன்னை யார் விடுவித்தது" என்று கேட்ட அடுத்த கணம் அருகே நின்று இருந்த காவலாளியின் உரையில் இருந்த கத்தியை உருவி எடுத்த நந்திதா அதனை அவள் கழுத்தில் நூலளவு இடைவெளியில் வைத்தவள், "உண்மையை சொல் மித்ரா" என்றாள். அவளோ, "அரசே பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களே" என்று சொல்ல, யுவராஜனோ, "நந்திதா" என்று சீற, அவனை அனல் தெறிக்க திரும்பி பார்த்தவள், "குற்றம் மேல் குற்றம் புரிந்து கொண்டே இருக்கின்றீர்கள் அரசே" என்று சொல்லிக் கொண்டே அவள் கழுத்தில் மெலிதாக கீற,

அவளோ, "சொல்லி விடுகிறேன்… என்னை எதுவும் செய்து விடாதே, நடந்தது இது தான்" என்று உயிர் பயத்தில் உளர ஆரம்பிக்க, யுவராஜனுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. பெண் ஆசையில் நீதி தவறி விட்டான் அல்லவா? நந்திதாவோ, அவள் உண்மையை உரைத்ததுமே விலக, அடுத்த கணமே மித்ரகுமாரியின் தலை துண்டிக்கப்பட்டது. துண்டித்தது வேறு யாருமல்ல யுவராஜன் தான்.

அவன் முகத்தில் அவள் குருதி தெளிக்க, நந்திதாவை குற்ற உணர்வுடன் ஏறிட்டுப் பார்த்தவன் சட்டென மண்டியிட்டு அமர்ந்து கொண்டே, "என்னை மன்னித்து விடு நந்திதா" என்றான் இருகரம் கூப்பி… இதுவரை அவனை சிந்தை இழக்க செய்த அனைத்தும் நீர்த்து இருக்க, நிதானம் கொண்டு விட்டான் அரசனவன். ஆனால் இழந்தது திரும்ப கிடைத்து விடுமா என்ன? இல்லை என்றபடி பின்னால் சென்றவளோ, "வலிக்கின்றது அரசே, என் மார்பு வலிக்கின்றது, குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் துடிக்கிறேன்… என் குழந்தையை கருவறுத்து விட்டீர்கள், என்னால் இந்த வலியை தாங்கவே முடியவில்லை… மன்னிக்கவும் முடியவில்லை,

எந்த ராஜ்ஜியத்தில் ஒரு கர்ப்பவதிக்கு அநீதி இழைக்கப்பட்டதோ அந்த ராஜ்ஜியமே அழிந்து போகட்டும், எந்த மோகத்துக்கு மயங்கி என் குழந்தையின் உயிர் பிரிய காரணம் ஆனீர்களோ அந்த மோக உணர்வே இல்லாமல் ஐந்து ஜென்மங்களுக்கு மரத்து போவீர்கள்… பெண்களை கண்டாலே அருவருப்பீர்கள், ஐந்து ஜென்மங்களும் இந்த ஜென்ம நினைவுடன் பிறந்து வருந்தி அழுந்தி இறப்பை நாடுவீர்கள்.

ஒரு பவித்திர பெண்ணின், குழந்தையை இழந்து துடிக்கும் தாயின் சாபம் இது" என்று சொல்லிக் கொண்டே அடிமேல் அடி வைத்தபடி பின்னால் சென்றவளோ, "என் குழந்தை சென்ற இடத்துக்கே நான் சென்று விடுகின்றேன்" என்று கையில் இருந்த கத்தியால் தன்னை தானே மாய்த்துக் கொள்ள, அவனோ, "நந்திதா" என்று கண்ணீருடன் சீறியவன், வாளினால் தன்னையும் அங்கேயே மாய்த்துக் கொண்டான்.

விஷயம் கேள்விப்பட்டு சிறையில் இருந்து தப்பி ஓடி வந்த ராமவர்மனோ, "மனைவி மீது சந்தேகம் கொண்டு ஒரு ராஜ்ஜியமே அழிந்து விட்டதே அரசே" என்று கண்ணீர் விட்டவன், அவர்கள் கதையை சிற்பமாக அங்கே இருக்கும் சுவரில் வடிக்க ஆரம்பித்தான். அவன் வடித்த சிற்பமும், எழுத்துக்களும் தான் இன்று வரை நிலைத்து நின்றன. அரசன் இல்லாத ஊரில் மக்கள் குடியிருப்பார்களா என்ன? கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை விட்டு செல்ல ஆயத்தமாக, பஞ்சம், பசி, பட்டினி என்று எஞ்சி இருந்தவர்களையும் நந்திதாவின் சாபம் விரட்டி அடித்தது.

அனைத்து வளங்களும் பொருந்தி செழித்து இருந்த ராஜகோட்டையே கொஞ்சம் கொஞ்சமாக கானகத்தினால் சூழப்பட்டது. அவர்கள் வரலாற்றை சுவரில் பொறித்து விட்டு அங்கேயே உயிர் நீத்து இருந்தான் ராமவர்மன். அதே சமயம், அழுதழுதே அம்பாள் சந்நிதியில் நாட்களை கடத்திய அவள் தந்தை திருமூலரோ, "என் புதல்வி கரம் பட்டால் மட்டுமே இந்த சந்நிதி திறக்கப்படும், அவள் விளக்கேற்றினால் மட்டுமே இந்த கானகம் வழி தரும், அவள் கொங்கையின் பாரம் இறக்கினால் மட்டுமே யுவராஜனுக்கு சாப விமோசனம் கிடைக்கும்" என்று சொல்லி அதனைப் பற்றி உதிரத்தினால் எழுதி வைத்து விட்டு கோவிலையும் மூடி விட்டு மாய்ந்து போனார்.

ஐந்து ஜென்மங்கள் அவள் பிறவி இன்றி அந்த கோவிலில் ஆன்மாவாக குடி இருக்க, ஒவ்வொரு ஜென்மமும் பழைய நினைவுகளுடன் பிறந்த யுவராஜனோ அந்த கோவிலை தேடி வந்து விடுவான். ஜென்ம ஜென்மத்துக்கும் அவளிடம் மண்டியிட்டு மன்னிப்பு யாசித்தே இறந்து போவான். ஒவ்வொரு ஜென்மமும் அதில் நினைவுகளை பொறித்து விட்டு இறந்து போனதால் தான் வெவ்வேறு கையெழுத்துக்கள் அந்த கோவில் வாசலில் இருந்தன. அனைத்தும் அவனுடைய கையெழுத்துக்கள் தான் வெவ்வேறு ஜென்மத்தில் எழுதப்பட்டவை.

சாபத்துக்கு விமோசனம் தேடி ஐந்து ஜென்மங்கள் அழுந்தியவன் விமோசனம் பெற்ற ஜென்மம் தான் இந்த ஜென்மம். அவளுமே அவனுக்கு விமோசனம் கொடுக்க அனைத்தும் மறந்து புதிதாக பிறந்து இருந்தாள். ஆனால் துரதிஷ்டம் என்னவோ அனைத்தையும் வாசித்து முடித்த கணம் பழைய நினைவுகள் மீண்ட நந்திதா ராணியாக அவளும், ராம வர்மனாக அவனும் மாறி இருக்க, அரண்மனையில் இருந்து அடிமேல் அடி வைத்து வந்தவனை வாயிலில் நின்ற இருவருமே வெறித்துப் பார்த்தார்கள்.

அவனோ கலங்கிய கண்களுடன் தன்னையே பார்த்துக் கொண்டு நின்ற நந்திதாவை நோக்கி அடிமேல் அடி வைத்து வந்தவன். அவளை நெருங்கி, "நந்திதா" என்று சொன்ன அடுத்த கணம், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் பெண்ணவள். அதனைக் கண்ட ஸ்ரீயோ வாயில் கையை வைத்துக் கொள்ள, ஸ்ருதியோ, "என்னடா இது?" என்று கேட்க, கண்களை மூடி திறந்த யுவராஜ்ஜோ அவள் கண்ணீருடன் நின்ற அவள் விழிகளை பார்த்துக் கொண்டே, "சாரி நந்திதா இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல" என்று சொன்னதுமே,

அவனை முறைத்துப் பார்த்தவள், விறுவிறுவென அழுதபடியே அங்கே இருந்து நடந்து செல்ல, தொடங்க, ராமோ யுவராஜனை முறைத்து விட்டு அவளை பின் தொடர்ந்து சென்றான். மூவரையும் தவிர யாருக்குமே எதுவும் புரியவே இல்லை. அவள் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த யுவராஜ் அருகே வந்த ஸ்ரீ, "டேய் என்னடா ஆச்சு, நல்லா தானே இருந்தீங்க" என்று சொல்ல, அவனோ, "மன்னிக்க முடியாத தப்பு பண்ணி இருக்கேன்டா" என்று சொல்ல, ஸ்ரீயோ, "என்னடா சொல்ற?" என்று கேட்டான்.

அவனும் பெருமூச்சுடன் ஸ்ரீயை நோக்கி திரும்பியவன், "இப்போ நீ படிச்சியே அது எங்க கதை தான்… அதே பெயர்ல பிறந்து இருக்கோம். யுவராஜ், நந்திதா, ராம்" என்று சொல்ல, ஸ்ருதியோ, "என்னடா சொல்ற?" என்று கேட்க, அவனும் கண்களை மூடி திறந்தவன், "எனக்கு எப்போவோ நினைவு வந்திடுச்சு, அது தான் தடையே இல்லாம உங்க எல்லாரையும் இங்க அழைச்சு வந்தேன்... ராமுக்கும் நந்திதாவுக்கும் இப்போ தான் நினைவு வந்து இருக்கும் போல" என்று சொல்ல,

மதனாவோ, "போன பிறவில பயங்கர வில்லன் போல" என்று சொல்ல, அவனோ விரக்தியாக சிரித்தபடி அங்கே இருந்த யுவராஜன், நந்திதா, ராணி மற்றும் அவர்களின் குழந்தை என்று மூவரின் சமாதியையும் பார்த்துக் கொண்டே குழந்தையின் சமாதியை கையால் வருடியவன், பெருமூச்சுடன் எழுந்து நின்றான்.

பிரகாஷ்ஷோ, "இப்போ என்ன பண்ணுறது சார்?" என்று கேட்க, யுவராஜனோ, "கண்டிப்பா இந்த படத்தை எடுக்கலாம், நானே பைனான்ஸ் பண்ணுறேன்… இங்கேயே எடுக்கலாம், இப்போ கிளம்பணும், அப்புறம் வரலாம், நந்திதா கண்டிப்பா இங்க இருக்க விரும்ப மாட்டா" என்று சொல்லி கொண்டே வேகமாக நடக்க,

அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றாலும் ஓரளவு வேகமாக அவனை பின் தொடர்ந்தார்கள். ஸ்ருதியோ ஸ்ரீயிடம், "இவன் அரசன், அவ அரசி, நாம எல்லாம் என்னவா இருந்து இருப்போம்டா" என்று கேட்க, மதனாவோ, "நீ தான் அரசனுக்கு சாமரம் வீசுற பொண்ணாம்" என்று சொல்ல, ஸ்ரீயோ பக்கென்று சிரித்தவன், ஸ்ருதியை பார்க்க, அவளோ, "அடிங்" என்று மதனாவுக்கு சிரித்தபடி திட்டி விட்டு நடக்க தொடங்கி இருந்தாள்.

இதே சமயம், நந்திதா அழுது கொண்டே நடக்க, பின்னால் வந்த ராமோ, "நந்து" என்று அழைக்க, அவளோ சட்டென நின்று திரும்பிப் பார்த்தவள், "முடியல ராம், இன்னுமே வலிக்குது… எதுக்கு இந்த நினைவு வந்திச்சுன்னு தெரியல, என் நிம்மதியே போயிடுச்சு... இந்த பூமில கூட நிற்க முடியாம இருக்கு, எனக்கு அவர் கூட வாழவே முடியாது இதுக்கு மேல" என்று சொல்ல, அவனோ, "புரியுது நந்து, கொஞ்சம் நிதானமா இரு, அழணும்னா அழுதிடு… இத பத்தி அப்புறம் பேசிக்கலாம், நீ வா" என்று சொல்லிக் கொண்டே அவளை காட்டேஜுகளை நோக்கி அழைத்து சென்றவனுக்கோ யுவராஜ் மீது கோபம் இருந்தாலும் அவர்கள் பிரிவில் பிடித்தம் இருக்கவே இல்லை.

காட்டில் இருந்து வெளியே நடந்து வந்தவர்களோ கோவிலை தாண்டி செல்ல, அங்கே இருந்த சித்தரோ, "மன்னித்து விடு தாயே, ஐந்து ஜென்மமாக அழுந்திய ஆன்மா அது" என்று சொல்ல, அவரை ஒரு கணம் திரும்பி பார்த்து இல்லை என்று அழுத்தமாக தலையாட்டியவள் விறுவிறுவென நடந்து சென்றாள். இதே சமயம், யுவராஜ்ஜூம் அவளை நெருங்கி இருக்க, வேகமாக வந்து காட்டேஜினுள் புகுந்தவளை பின் தொடர்ந்து உள்ளே சென்ற யுவராஜ்ஜோ கதவை தாளிட, திரும்பி அவனை முறைத்துப் பார்த்த நந்திதாவோ உடைகளை அடுக்க ஆரம்பித்து இருந்தாள்.

அவள் பின்னாடி வந்து நின்றவன், "முன் ஜென்மத்துல நடந்ததுடி இது... இப்போ எதுக்கு என் மேல இவ்ளோ கோபம்? மன்னிப்பு கேக்கிறத தவிர என்னால என்ன பண்ண முடியும்னு சொல்லு பார்ப்போம்" என்று கேட்க, அவளோ அவனை திரும்பி முறைத்தவள், "மனுஷனா நீங்க?? எவ்ளோ பாவம் பண்ணி இருக்கீங்க?" என்று கேட்டவளுக்கு கண்ணீர் வழிய கண்களை துடைத்துக் கொண்டாள்.

"பாவம் பண்ணி இருக்கேன் தான்... இல்லன்னு சொல்லல, அதுக்கு அஞ்சு ஜென்மமா தண்டனை அனுபவிச்சிட்டேன். இப்போ கூட ரொம்பவே குற்ற உணர்வா இருக்கு" என்று தழுதழுத்த குரலில் கேட்க, "குற்ற உணர்வா இருந்தா பண்ணினது இல்லன்னு ஆய்டுமா? எனக்கு இன்னுமே வலிக்குது, என் குழந்தை" என்று சொன்னவள் அருகே வேகமாக வந்தவன் அவளை இறுக அணைத்துக் கொண்டே, "இப்போ என்னடி பண்ண சொல்ற?" என்று இயலாமையுடன் கேட்டான்.

அவனும் என்ன தான் செய்வான்?? அவன் செய்த பாவம் இன்று வரை அவனை ஏதோ ஒரு ரூபத்தில் துரத்திக் கொண்டு தான் இருந்தது. அவளோ அவன் அணைப்பில் இருந்து விடுபட போராட அவனே அவளை விட்டபடி அவள் முகத்தை தாங்க, அவன் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவள், "ஏன் இப்படி ராட்சஷன் போல நடந்துக்கிட்டிங்க??" என்று வலி நிறைந்த குரலில் கேட்டாள்…

அவனோ அவள் கண்களில் முத்தம் பதித்தவன், "எனக்கு தெரியல... முட்டாள் தனமா நடந்துக்கிட்டேன், அதுக்குன்னு இந்த ஜென்மத்திலயும் தண்டனை கொடுப்பியா??" என்று கேட்க, அவளோ, "நான் எந்த ஜென்மத்துலயும் உங்கள மன்னிக்கிறதா இல்ல" என்று சொல்லிக் கொண்டே அவன் கைகளை தட்டி விட்டவள் உடமைகளை எடுத்துக் கொண்டே வெளியே செல்ல முற்பட, "இப்போ எப்படி போக போற?" என்று கேட்க, அவளோ, "எனக்கு தெரியல, ஆனா இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல" என்று சொல்லிக் கொண்டே வெளியேற,

அவள் கையை பிடித்து இழுத்தவன், "இங்கேயே இரு, இன்னைக்கே கிளம்ப நான் ஏற்பாடு பண்ணுறேன்" என்று சொல்லி விட்டு வெளியேற, அவளோ முகத்தை மூடி வலி தீரும் வரை அழ ஆரம்பித்து விட்டாள். வெளிய வந்தவனோ, அங்கே நின்று இருந்த ஸ்ரீயிடம், "அவ போகணும்னு சொல்றாடா இப்போ என்ன பண்ணுறது?" என்று கேட்க, அவனோ, "எனக்கும் தெரியல… ஆனா போறது அவ்ளோ ஈஸி இல்ல. இங்க டவரும் இல்ல கன்டாக்ட் பண்ணுறதுக்கு” என்று யோசிக்க, "நம்ம நடேசன் கிட்ட கேட்டு பார்க்கலாம்" என்று சொன்ன யுவராஜ்ஜோ, "நடேசன்" என்று அழைக்க,

அங்கே முருகனுடன் பேசிக் கொண்டு இருந்த நடேசனோ, "சொல்லுங்க சார்" என்றபடி ஓடி வந்தான். யுவராஜ்ஜூம், "இங்க இருந்து போக கொஞ்சம் வழி சொல்லுடா, எப்படியும் வண்டிய எடுக்க முடியாது... அந்த பாறையை மூவ் பண்ணுறது அவ்ளோ ஈஸி இல்ல" என்று சொல்ல, நடேசனோ, "நான் இந்த வழியால வர்ற பஸ்ஸுல தான் போவேன் சார், நம்ம ராம் அண்ணாவுக்கு தெரிஞ்சு இருக்கும்" என்று சொல்லிக் கொண்டே, "ராம் அண்ணா" என்று அழைக்க, அங்கே அருவி அருகே இறுகிய முகத்துடன் நின்று இருந்தவனோ பெருமூச்சுடன் நடேசனை நோக்கி வந்தவன் விழிகள் இப்போதும் யுவராஜ் மீது கோபமாக தான் படிந்தது.

யுவராஜ்ஜோ மனதுக்குள், "இவனுக்கும் நினைவு வந்து இருக்கும். அது தான் நம்மள இப்படி முறைச்சிட்டே இருக்கான்" என்று யோசித்துக் கொண்டே, அவனிடம், "இங்க இருந்து எப்படி போறது ராம்?" என்று கேட்க,

அவனோ ஸ்ரீயை பார்த்தவன், "கொஞ்ச தூரம் நடந்து போனா தெரிஞ்சவங்க ட்ராக்டர் இருக்கு… அதுல ஏறிட்டோம்னா டவர் கிடைக்கிற ஊருக்கு போயிடலாம்" என்று சொன்னான். அவன் யுவராஜ் கேட்ட கேள்விக்கு ஸ்ரீயை பார்த்தே பதில் சொன்னது அவனுக்கு யுவராஜ்ஜூடன் பேச இஷ்டம் இல்லை என்று அப்பட்டமாக காட்டி கொடுக்க, யுவராஜ்ஜூம் பெருமுச்சுடன், "அப்போ கிளம்பலாம்" என்று சொல்லிக் கொண்டே நந்திதாவை தேடி சென்றான்.

அவளோ அழுதழுது கண்கள் வீங்கி போய் இருக்க, கதவை திறந்தவனோ, "எவ்ளோ நேரத்துக்கு அழுதுட்டே இருக்க போற?" என்று கேட்டான். அவளோ பதில் சொல்லாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள், "நான் போகணும்" என்றாள். அவனோ, "அதுக்கு தான் கூப்பிட வந்தேன், கிளம்பலாம்" என்று சொல்ல, அவளும் கட்டிலில் இருந்து எழுந்த போது தான் பார்த்தான் அவள் உடை முழுதும் பால் சுரந்து ஈரமாகி இருந்தது.

இறந்து போன குழந்தையை நினைத்து அழுதழுதே தாய்மை வீறிட்டு எழுந்திருக்க, அவனோ, "இப்படியே வர போறியா?" என்று கேட்க, அவளோ அப்போது தான் குனிந்து பார்த்தவள், "வெளியே போங்க ட்ரெஸ் மாத்தணும்" என்று சொல்ல, அவனோ, "மாத்துனா மட்டும் போதுமா? வலிக்காதா?" என்று கேட்டான்.

அவளோ அவனை முறைத்தவள், "இவ்ளோ நடந்தும் இப்படி பேச எப்படி மனசு வருது?" என்று கேட்க, அவனோ கதவை தாளிட்டவன், "இங்க பாரு, நான் ஒண்ணும் லஸ்ட்ல பேசல, உனக்காக தான் பேசுறேன்" என்று சொல்லிக் கொண்டே அவள் அருகே வந்தவன், அவள் உடையில் கையை வைக்க, அவளோ, "கையை எடுங்க" என்று தட்டி விட்டாலும் அவன் செய்கையை தடுக்க முடியவில்லை. பலம் பொருந்தியவன், அவள் பாரங்களை இறக்கி விட்டே விலக, அவனை முறைத்தபடி அங்கிருந்த போர்வையால் தன்னை மறைத்துக் கொண்டவளோ, "வெளிய போங்க, நான் ட்ரெஸ் மாத்தணும்" என்றாள் கண்ணீருடன்.

அவனோ, அவளை இறுக அணைத்துக் கொண்டவனோ, "ஐ லவ் யூ நந்திதா" என்க, அங்கே பதிலுக்கு கண்ணீர் மட்டும் தான் வந்தது. அவளை மேலும் அழ வைக்க விரும்பாதவன், அவளை விட்டு விலகி வெளியேறி விட, அவளும் கண்ணீரை துடைத்துக் கொண்டே ஆயத்தமானவள் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள்.

வெளியே வந்தவளை பரிதாபமாக பார்த்த ஸ்ருதியோ, "பாவம்ல" என்று சொல்ல, மதானவும், "ம்ம்," என்றவள், "நந்திதா" என்று அழைக்க, அவளும் அவர்களை நோக்கி செல்ல, ஸ்ருதியோ, "ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதே, நாம ஊருக்கு போய் பார்த்துக்கலாம்" என்று சொல்ல, அவளும், சரி என்று தலையாட்ட, நடேசன் சமைத்து வைத்து இருந்ததை சாப்பிட்டவர்கள், நடேசனிடம் சொல்லி விட்டு ஊரை நோக்கி புறப்பட்டு இருந்தார்கள்.

அவர்கள் பொதிகளை யுவராஜ்ஜின் காவலாளிகள் தூக்கிக் கொண்டு வர, யுவராஜ்ஜூம் பயணத்துக்கு ஏற்ற போல ஷார்ட்ஸ் ஆர்ம்கட் சகிதம் ஆயத்தமாகி இருந்தான். நந்திதாவோ ஸ்ருதி மற்றும் மதனாவுடன் வர, அவளை தொந்தரவு செய்ய விரும்பாதவனோ அவர்கள் பின்னால் ஸ்ரீ மற்றும் பிரகாஷுடன் தான் பேசிக் கொண்டே வந்தான்.

ராமோ முருகனுடன் பேசிக் கொண்டே முன்னால் நடந்து செல்ல, அங்கிருந்து வாசலை கடக்கும் போது மூவருக்கும் எதையோ இழந்த உணர்வும் எதையோ பெற்ற உணர்வும் உண்டானது. மீண்டும் வரும் எண்ணத்துடனேயே மூவரும் வாசலை கடந்து சென்றவர்கள், பாறையின் அருகே இருந்த சின்ன வழியால் பாறையை தாண்டி சென்றார்கள்.
 
Top