ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 17

pommu

Administrator
Staff member

வேல்விழி 17

"என்ன பேசி விட்டீர்கள் அரசே... நான் பவித்திரமானவள், என்னை இப்படி நீங்கள் சந்தேகப்படலாமா?" என்று கேட்கும் போதே அவள் குரலில் கோபமும் வலியும் வெளிப்பட, அவளை ஆழ்ந்து பார்த்தவனோ, "இன்று உன் காதலன் அந்தப்புரத்துக்கு வர காரணம் என்ன? பதில் சொல்" என்றான் கர்ஜிக்கும் குரலில்.

அவளோ தனது வயிற்றில் கையை வைத்துக் கொண்டே, "என் குழந்தை மீது சத்தியம் செய்கின்றேன் அரசே, எனக்கு கொடுக்கப் பட்ட பாலில் விஷம் கலந்து இருப்பதாக அறிந்து என்னை காப்பாற்ற தான் வந்தார்" என்று சொல்ல, யுவராஜனின் இதழ்கள் கேலியாக வளைய, "காதலியை காப்பாற்ற காதலன் ஓடி வந்து விட்டானா?" என்று அவளை வதைக்கும் கேள்வியை கேட்க, தனது செவிகளை இரு கரங்களினாலும் மூடிக் கொண்டாள் பெண்ணவள்.

"தரம் தாழ்ந்து பழி போடாதீர்கள் அரசே" என்று சொல்ல, அவனோ, "நிறுத்து, நான் தரம் தாழ்ந்து பேசவில்லை நீ தான் தரம் தாழ்ந்து நடந்து கொள்கின்றாய், ஒரு அரசனுக்கு அழகு விசாரித்து தண்டனை கொடுப்பது தான்… இந்த சம்பவம் அரச சபையில் நாளைக்கு விசாரணைக்கு வரும்" என்று சொல்லி விட்டு வேகமாக நடந்து வெளியேற, அவளோ வாயில் கையை வைத்துக் கொண்டே அதிர்ந்து போய் நின்று விட்டாள்.

அவள் எந்த குற்றமும் செய்யாமலே அவளை குற்றவாளி கூண்டில் ஏற்ற தயாராகி விட்டான் அல்லவா? வேகமாக தனது அறைக்குள் வந்த யுவராஜனுக்கு நிலை கொள்ளவே முடியவில்லை. "என் முதுகில் குத்தி விட்டாய் நந்திதா" என்று சொல்லிக் கொண்டே அங்கும் இங்கும் நடந்தவனுக்கு தூக்கம் தொலைந்து போக, அவளும் தூக்கம் இன்றி நிலவையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

அடுத்த நாள் பொழுது புலர்ந்ததுமே அரச சபைக்கு ராமவர்மன் அழைக்கப்பட்டு இருக்க, அவனும் சற்று குழப்பத்துடன் தான் உள்ளே நுழைந்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனுக்கே அதிர்ச்சி தான். அரசனுக்கு அருகே அரசியாக அமர வேண்டிய நந்திதாவோ குற்றவாளி போல நின்று இருக்க,

இறுகிய முகத்துடன் புஜங்கள் புடைத்து அமர்ந்து இருந்த யுவராஜனோ ராமவர்மனைக் கண்டதுமே, "வாருங்கள் தளபதியாரே" என்று அழைத்தான் கேலி நிறைந்த குரலில். அவன் குரலில் பேதத்தை அறிந்து கொண்டே யோசனையுடன் யுவராஜன் முன்னே வந்து நின்ற ராமவர்மனோ, "வணங்குகிறேன் அரசே" என்று வணக்கம் தெரிவிக்க, "வணக்கம்" என்றவன், அங்கே நின்ற அமைச்சரும் அவள் தந்தையுமான திருமூலரிடம், "வழக்கைப் பற்றி கூறுங்கள்" என்றான் கட்டளையிடும் குரலில்.

காலையில் வந்ததுமே விஷயத்தைக் கேட்டு துடித்துப் போன திருமூலரோ, தலையை குனிந்து கொண்டே, "நேற்றைய நாள் அரசியின் அந்தப்புரத்துக்குள் தளபதியார் அனுமதி இன்றி நுழைந்தது சம்பந்தமான வழக்கு இது" என்று சொல்ல, யுவராஜனோ, "இதற்கு என்ன கூறுகிறீர்கள் தளபதி" என்று கேட்டான். ராமவர்மனோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "அரசே!!! அரசிக்கு கொடுக்க இருந்த பாலில் விஷம் கலந்து இருப்பதாக புகார் வந்தது. தாங்கள் முக்கிய கலந்துரையாலில் இருந்த காரணத்தினால் நானே அங்கே சென்றேன். மேலும் இந்த அரண்மனையில் எந்த இடத்துக்கும் செல்லும் அதிகாரம் தங்களை அடுத்து எனக்கு இருக்கின்றது" என்று சொல்ல,

யுவராஜனோ புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தவன், "அதற்காக என்னுடைய மஞ்சம் வரை நுழைந்து விடுவாயா?" என்று கேட்க, நந்திதாவின் மேனி கூசி போக, ராமவர்மனுக்கு கூட அங்கே நிற்க முடியவே இல்லை. "எதுவாக இருந்தாலும் தக்க விசாரணை மேற்கொண்ட பின்னர் பழியை போடலாம் அரசே" என்றான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டே. அவனை மேலிருந்து கீழ் பார்த்த யுவராஜனோ, "சரி விசாரிக்கலாம், உன்னிடம் புகார் கொடுத்தது யார் என்று கூறு, மேலும் அந்த பாலில் விஷம் கலந்து இருக்கின்றதா என்றும் பார்க்கலாம்" என்று கட்டளையிட, பாலை பரிசோதித்த காவலாளி அங்கே வந்து நின்றான்.

யுவராஜனோ, "அந்த பாலை பரிசோதித்தாயா?" என்று கேட்க, அந்த காவலாளியோ, "பரிசோதித்தேன் அரசே, அதில் விஷம் கலந்து இருக்கவில்லை" என்று சொல்ல, ராமவர்மனோ, "என்ன சொல்கிறாய்?" என்று அதிர்ந்தே விட்டான். யுவராஜனோ, "சற்று பொறுக்கலாம் தளபதியாரே, உன்னிடம் புகார் கொடுத்தவர் யார் என்று சொல் இங்கே அழைத்து வரலாம்" என்றான்.

ராமவர்மனோ இறுகிய குரலில், "வள்ளி" என்று சொல்ல, அவளும் சற்று நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தாள். தன்னை வணங்கி விட்டு நின்றவளை பார்த்த யுவராஜனோ, "நேற்று தளபதியாரிடம் புகார் அளித்தாயா?" என்று கேட்க, அவளோ, "இல்லை அரசே, நான் எந்த புகாரும் அளிக்கவே இல்லை" என்று சொல்ல, அவனை உறுத்து விழித்த ராமவர்மனோ, "பொய் உரைக்காதே வள்ளி" என்றான் இறுகிய குரலில்.

"நிறுத்து ராமா" என்று கர்ஜித்த யுவராஜனோ, "நீ எந்த புகாரும் அளிக்கவில்லை என்பது உண்மை தானே" என்று கேட்க, அவளோ, "என் குழந்தை மீது சத்தியம் செய்து சொல்கின்றேன், நான் எந்த புகாரும் அளிக்கவே இல்லை" என்று நீலிக் கண்ணீருடன் சொல்ல, அவள் சத்தியத்தையும் கண்ணீரையும் நம்பிய யுவராஜனோ, "ஒரு தாய் குழந்தை மீது பொய் சத்தியம் பண்ண மாட்டாள், நீ தான் பொய் உறைகின்றாய் ராமா" என்றான் ஆக்ரோஷமாக.

உடனே நந்திதா, "நான் கூட என் குழந்தை மீது சத்தியம் செய்தேன் அரசே, ஆனால் நீங்கள் நம்பவே இல்லையே" என்று சொல், அவனோ, "அது கள்ள தொடர்பில் உருவாகிய குழந்தை தானே? அந்த பொய் சத்தியத்தை நான் நம்ப வேண்டுமா?" என்று அரங்கமே அதிரும் வண்ணம் கர்ஜுக்க கூனி குறுகி போனாள் பெண்ணவள். அவள் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய,

திருமூலரோ அங்கே நிற்க முடியாமல் கூனி குறுகி போனவர், "நான் இப்போதே எனது அமைச்சர் பதவியில் இருந்து விடை பெறுகிறேன் அரசே" என்று சொல்லிக் கொண்டே தனது மகுடத்தை இறக்கி வைக்க, அவரை அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருந்த யுவராஜனோ எதுவும் பேசவில்லை. அவர் செல்லும் வரை பார்த்துக் கொண்டு இருக்க, நந்திதாவோ, "நான் எந்த தவறும் செய்யவில்லை தந்தையே" என்று கதறியது காற்றில் தான் கரைந்து போனது.

ராமவர்மனோ, குரலை செருமிக் கொண்டே, "அரசே இறுதியாக அரண்மனை காவலாளிகளை சற்று விசாரித்து பாருங்கள், நான் அரசியின் அறைக்குள் கூட நுழையவில்லை" என்று சொல்ல, யுவராஜனோ, "உனக்கு கீழ் பணி புரியும் வீரர்கள் உனக்கு சார்பாக தானே இருப்பார்கள்" என்று சொல்ல, அவனோ யுவராஜனை ஏமாற்றமாக பார்த்தான். எந்த அரசன் நீதியை நிலை நாட்டுவான் என்று நினைத்து இருக்க, அவனே அநீதியின் பக்கம் அல்லவா சென்று கொண்டு இருக்கின்றான்.

யுவராஜனுக்கோ, அவள் ராமவர்மனின் காதலி என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, அவர்களை பழி வாங்க எந்த அளவுக்கும் செல்ல தயாராக இருந்தான். யுவராஜனோ, "கணவனுக்கு துரோகம் செய்த உனக்கும், ராமவர்மனுக்கும் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளிக்கின்றேன்" என்று சொல்ல, "அரசே" என்று அவள் வாயில் கையை வைக்க, ராமவர்மனோ யுவராஜனை அழுத்தமாக பார்த்து விட்டு, "சிறை செல்ல தயார் அரசே, ஆனால் செய்யாத தவறுக்கு சிறை செல்ல நான் விரும்பவில்லை" என்று சொன்ன அடுத்த கணம் இடையில் இருந்து உருவிய கத்தியை யுவராஜனைப் பார்த்துக் கொண்டே வீசினான் வள்ளியை நோக்கி.

அடுத்த கணமே வள்ளி சபை நடுவே உயிர் துறந்து இருக்க, யுவராஜன் அதிர்ந்து எழுந்து நிற்க, இரு கைகளையும் தூக்கியவன், "என்னை இப்போது கைது செய்யுங்கள் அரசே" என்று சொல்ல, யுவராஜனும் கண்ணால் காவலாளிகளுக்கு கட்டளை இட, அடுத்த கணமே ராமவர்மனின் கையில் கைவிலங்கு அணிவிக்கப்பட்டது. அதே போல நந்திதாவின் கையிலும் கை விலங்கு அணிவிக்கப்பட, "தவறு செய்கிறீர்கள் அரசே" என்று கண்ணீருடன் சொன்னவளோ சிறையை நோக்கி சென்றாள் அவன் குழந்தையை சுமந்து கொண்டே.

இருவரையும் ஆழ்ந்து பார்த்துக் கொண்ட யுவராஜனுக்கோ கோபம் மட்டுமே எஞ்சி இருக்க, அவனால் அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் போக, வேகமாக எழுந்து வெளியேறி தனது அரண்மனையின் அறைக்குள் நுழைந்து இருந்தான். அங்கே மஞ்சத்தில் அமர்ந்தவனோ கோபமாக முஷ்டியை இறுக்கியவனுக்கு மனது வலிக்க ஆரம்பித்து இருந்தது.

இதே கணம், விஷயத்தை கேள்விப்பட்டு சந்தோஷ கடலில் மூழ்கி போனது என்னவோ மித்ரகுமாரி தான். வள்ளி இறந்தது கூட அவளை பாதிக்காமல் இருக்க, அரசரை சாமாதானப்படுத்த போகின்றேன் என்னும் போர்வையில் யுவராஜனின் அறையை நோக்கி புறப்பட்டு இருந்தாள். அவள் அரச வம்சம் என்பதால் காவலாளிகள் தடுக்காமல் இருக்க, இலகுவாக நுழைந்து விட்டாள் யுவராஜனின் அறைக்குள்.

அவனோ அவளைக் கண்டு கோபமாக எழுந்தவன், "உன்னை யார் இங்கே அனுமதித்தார்கள், வெளியே செல்" என்று கையை காட்ட, அவளோ, "அரசே, எதற்கு இந்த கோபம்? யார் மேல் இருக்கும் கோபத்தை என்னிடம் காட்டலாமா?" என்று கேட்டுக் கொண்டே அவனை நோக்கி அடி மேல் அடி வைத்து நடந்து வந்தாள். அவனை சந்திக்க வரும் போதே அலங்காரம் செய்து இருந்தவளோ, நேரே அவன் அருகே இருந்த மேசையில் இருந்த மதுபானத்தை அங்கே இருந்த குவளையில் நிரப்ப, அவனோ, "உன்னை வெளியே போக சொன்னேன்" என்றான் அழுத்தமாக.

அவளோ யுவராஜனை நோக்கி குவளையுடன் வந்தவள், "இதனை அருந்துங்கள் அரசே, வலி மறந்தே விடும்" என்று சொல்ல, அவளை முறைத்துப் பார்த்தான் யுவராஜன். அவளோ, குவளையை அவன் முகத்தின் முன்னே நீட்ட, அதனை அவசரமாக வாங்கியவன், வாய்க்குள் ஊற்றிக் கொண்டான். அடுத்த கணமே அவள் இதழில் ஒரு வக்கிர புன்னகை உதிக்க, "சோரம் போன மனைவியை நினைத்து வருந்தாதீர்கள் அரசே,

உங்கள் ஆண்மைக்கும்" என்று சொல்லிக் கொண்டே அவன் மார்பில் கையை வைத்தவள் அதனை வருடிக் கொண்டே, "உங்கள் வீரத்துக்கும் எத்தனையோ பெண்கள் பின்னால் வருவார்கள், என்னையும் சேர்த்து" என்று சொல்லிக் கொண்டே அவன் முகத்துக்கு நேரே முகத்தை கொண்டு வந்து உரச, மதுபானத்தின் பிடியில் இருந்தவனோ தனது வலியை போக்க மாதுவை நாடும் நிலைக்கு வந்திருந்தான்.

ஆம் அவள் நெருக்கமும் அவன் மேனியில் அவள் கைகள் கோலம் போட்டதால் உண்டான உணர்வினாலும் அவள் முகம் தாங்கி முத்தமிட்டவன், அவள் மேனியில் அத்து மீற ஆரம்பிக்க, அவளும் அவனுக்கு சொர்க்கத்தை அள்ளி வழங்க ஆரம்பித்து இருந்தாள். காதல் இல்லாத காமம், ஆக்ரோஷமும் அதிரடியுமே நிறைந்து இருக்க, கலவி கொண்டு விலகியவனுக்கு வலியை மறக்க செய்யும் அந்த சிற்றின்பம் பிடித்து இருந்தது.

அவளோ அவன் அருகே படுத்துக் கொண்டே, "இந்த இன்பத்தை விட்டு வேறு ஆணை நாட எப்படி தான் மனம் விரும்பியதோ, முட்டாள் பெண்" என்று சொல்ல, அவனோ அவளை திரும்பி பார்த்தவன், "இந்த இன்பம் எனக்கு தினமும் வேண்டும்" என்றான். அவளோ அவனை நோக்கி சரிந்தவள், "நான் உங்களுக்காக படைக்கப்பட்டவள் அரசே" என்று சொல்லிக் கொண்டே அவனுள் மூழ்க ஆரம்பித்து இருந்தாள்.

ஒரே நாளில் காதலை தூக்கி போட்ட யுவராஜன் காமத்துக்கு அடிமையாகி போக, வயிற்றில் குழந்தையுடன் சிறைக்குள் தவித்த நந்திதாவை முற்றாக மறந்தே போனான். ராமவர்மனும் காவலாளிகள் மூலம் யுவராஜனின் நிலையை அறிந்தவன், "குற்றம் செய்து கொண்டு இருக்கின்றீர்கள் அரசே" என்று வாய்க்குள் உரைத்து இருந்தான்.

தினமும் அரச சபைக்கு சென்று திரும்பும் யுவராஜனோ இரவானால் மதுவை அருந்தி விட்டு மித்ரகுமாரியுடன் மஞ்சத்தில் சங்கமிக்க ஆரம்பித்து விடுவான். நந்திதா சிறை சென்றதில் இருந்தே வருந்தி வருந்தி உடல் சோர்ந்து போன விக்ரமராஜனுக்கு யுவராஜன் செய்யும் தவறை தட்டி கேட்க கூட உடல் நிலை ஒத்துழைக்கவே இல்லை. யுவராஜனோ காமத்துக்கும், மதுவுக்கும் அடிமை ஆகி, அரச சபையை கூட நடத்த முடியாமல் ராஜ்ஜியம் சரிய ஆரம்பித்து இருந்தது.

"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" என்று சும்மாவா சொன்னார்கள்? இதே கணம், யுவராஜனின் நினைவுடனேயே குழந்தையை சுமந்து கொண்டு இருந்த நந்திதாவுக்கு பிரசவ வலியும் ஆரம்பித்த தருணம் அது. அவளோ சிறைக்குள் வலியில் துடிக்க ஆரம்பித்தவளோ, அங்கே இருந்த பணிப் பெண்ணிடம், "எனக்கு பிரசவ வலி வந்து விட்டது என்று அரசரிடம் சொல்லி அரச சபை மருத்துவிச்சியை அழைத்து வர சொல்லு, குழந்தையின் துடிப்பு குறைந்து கொண்டே இருக்கின்றது" என்று சொல்ல,

இருந்த ஒரே பணிப் பெண்ணும் அவள் வலியை கண்டு பொறுக்க முடியாமல் அரசரை தேடிப் புறப்பட்டாள். இதே சமயம், நந்திதாவின் தாய்மை விழித்து பால் சுரக்க ஆரம்பித்து விட, மேனி முழுதும் ஈரம் சொட்ட, அவளோ வெற்று தரையில் படுத்துக் கொண்டே பிரசவ வலியில் துடிக்க ஆரம்பித்து விட்டாள். வாசலில் நின்ற காவல்காரனுக்கே அவள் வலியை பார்க்க முடியாமல் போக, கண்களை மூடிக் கொண்டான்.

இதே சமயம் அரசரை தேடி வந்த பணிப்பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட, அவளோ பல மன்றாடல்களுக்கு பிறகு அரசரின் பணியறைக்குள் நுழைய, பணியறை என்றும் பாராமல் அங்கே மித்ரகுமாரியை முத்தமிட்டுக் கொண்டு இருந்தான் யுவராஜன். தலையை குனிந்து கொண்ட பணிப்பெண்ணோ, "வணங்குகிறேன் அரசே" என்று சொல்ல, அவனோ கோபமாக, "யாரங்கே, யார் இவளை உள்ளே அனுமதித்தது?" என்று சீற, மித்ரகுமாரியோ, அவன் மடியில் அமர்ந்து கொண்டே, "என்ன விஷயம் என்று கேட்கலாம் அரசே" என்றவள் அந்த பெண்ணைப் பார்த்து, "என்ன விஷயம்?" என்று கேட்க,

அவளோ, தலையை நிமிராமல், "நந்திதா ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது. அரண்மனை மருத்துவிச்சியை அழைத்து வர சொன்னார்கள்" என்று சொல்ல, சத்தமாக சிரித்த மித்ரகுமாரியோ, "அவள் ராணியே இல்லை" என்று சொன்னாள். யுவராஜனோ, "கைதி அவளுக்கு அரண்மனை மருத்துவிச்சியா? இன்னுமே தன்னை அரசியாக எண்ணிக் கொண்டு இருக்கின்றாளா?" என்று கேட்க, அந்த பெண்ணோ, "தாயினதும் சேயினதும் நிலைமை மோசமாக இருக்கின்றது அரசே," என்றாள் மனம் கேட்காமல்.

மித்ரகுமாரியோ சற்றும் இரக்கம் இன்றி, "அப்படி என்றால் இறந்துவிடட்டும்" என்று சொல்ல, அந்த பெண்ணும் அதற்கு மேல் நிற்க முடியாமல், "விடை பெறுகின்றேன் அரசே" என்று சொல்லிக் கொண்டே வெளியேற, யுவராஜனை முத்தமிட்ட மித்ரகுமரியோ, "அரச சபைக்கு போகலாமா அரசே" என்று கேட்க, அவனோ, "சற்று சல்லாபித்து விட்டு போகலாம்" என்று சொல்லிக் கொண்டே அவளை ஆட்கொள்ள ஆரம்பித்து இருந்தான்.

இதே சமயம், பிரசவ வலியில் துடித்துக் கொண்டு இருந்தாள் காரிகையவள்… அவள் அறைக்குள் அந்த பணிப்பெண்ணை தவிர யாரும் செல்ல கூடாது என்று யுவராஜனின் உத்தரவு இருக்க, அவள் கதறல் ஒலியை கேட்டு வருந்த மட்டுமே முடிந்தது. அந்த பணிப்பெண்ணோ மீண்டும் சிறைக்குள் வந்து நந்திதாவின் அருகே செல்ல,

அவளோ, "மருத்துவிச்சி எங்கே?" என்று கேட்க, அவளோ, "காணவில்லை அரசி" என்றாள் அவள் விழிகளை பார்க்க முடியாமல். நந்திதாவோ, "என் மேல் சத்தியமாக நடந்ததை சொல்" என்று அவள் கையை பிடித்து கேட்க, அவளும் இதயத்தை கல்லாக்கிக் கொண்டே நடந்ததை உரைக்க, உயிருடன் மரித்துப் போனாள் பெண்ணவள்.

பிரசவவலி கூட அவளுக்கு பெரியதாக தெரியவில்லை ஆனால் யுவராஜன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வலித்தது. அப்படியே கரத்தை எடுத்து தனது வயிற்றில் வைத்தவள், "எனது குழந்தையின் அசைவு குறைந்து கொண்டே வருகின்றது, சற்று நேரத்தில் குழந்தை வெளியே வரவில்லை என்றால் இறந்து விடும்" என்று சொன்னவள் குரலில் தாயின் தவிப்பு.

அந்த பெண்ணோ சின்ன பெண், அவளுக்கும் இதனை பற்றி தெரியாமல் இருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து போனாள். இதே சமயம், மித்ரகுமாரியுடன் சல்லாபித்து விட்டு அரண்மனைக்கு புறப்பட்டு இருந்தான் யுவராஜன்.
 
So sad
 
Top