ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 13

pommu

Administrator
Staff member

வேல்விழி 13

யுவராஜ்ஜூம், நந்திதாவும் அந்த இடத்தை வந்து அடைந்ததுமே நிலத்தில் இருந்து எழுந்த ஸ்ரீயோ, "அப்போ கிளம்பலாமாடா?" என்று கேட்க, அவனும், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே முன்னே செல்ல, நந்திதாவோ ஸ்ருதி மற்றும் மதனாவுடன் நடந்து சென்றாள். ஸ்ருதியோ குரலை செருமிக் கொண்டே, "பெர்ரி சாப்பிட்டா லிப்ஸ் இவ்ளோ சிவக்குமா என்ன?" என்று கேட்க,

அதைக் கேட்ட யுவராஜ்ஜோ அடக்கப்பட்ட சிரிப்புடன் முன்னே நடந்து செல்ல, நந்திதா தான் பதில் சொல்ல முடியாமல் தவித்து போனவளோ, "ஆமா சிவக்கும்" என்று சொல்லிக் கொண்டே முன்னே பார்த்துக் கொண்டு நடந்தவள் தவறியும் ஸ்ருதியை திரும்பிப் பார்க்கவே இல்லை. அப்படியே அவர்கள் நடந்து போன நேரம், தன்னவன் முத்தமிட்ட நினைவில் மோன நிலையில் நடந்து வந்த நந்திதாவோ சமநிலை இன்றி தடுமாறி விழ போக, அவளை இன்றும் பிடித்துக் கொண்டது என்னவோ பின்னால் வந்த ராமின் கைகள் தான்.

அவள் தோள்களில் அவன் கைகள் பதிந்து இருக்க, அவள் சத்தம் கேட்டு சட்டென திரும்பிப் பார்த்தான் யுவராஜ். ஸ்ரீயோ இந்த காட்சியைக் கண்டு நெஞ்சில் கையை வைத்தவன், "போச்சு போ" என்று நினைத்துக் கொள்ள, ராமோ சட்டென அவள் தோள்களில் இருந்து கையை எடுத்தவன், "சாரி சார், தெரியாம" என்று சொல்ல, அவனது அழுத்தமான விழிகள் கனிவாக மாற, "தட்ஸ் ஓகே, விழ போறவங்களுக்கு ஹெல்ப் பண்ணுறது ஒண்ணும் தப்பில்லையே" என்று சொன்னவனோ, நந்திதாவைப் பார்த்தான்.

அவளோ அவனை மிரட்சியாக பார்த்தபடி நின்று இருக்க, யுவராஜ்ஜோ கரத்தை நீட்டியவன், "வா" என்று அழைக்க, அவளோ தனது கரத்தை எடுத்து அவன் கரத்தில் வைக்க, அவனும் அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டவன், "ஆர் யூ ஓகே?" என்று கேட்க, அவளோ, "ஓகே" என்று சொல்ல,

அவனுமே அவள் கையை பற்றிக் கொண்டே நடக்க ஆரம்பித்து விட, அனைவருக்குமே இது அதிர்ச்சி தான். அவன் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்வான் என்று அவர்கள் கனவில் கூட நினைக்கவே இல்லை அல்லவா? அவனோ அவள் விரல்களுடன் விரல்களை கோர்த்துக் கொண்டே நடக்க, அருகே நடந்தவளது தோள்களோ அவன் வெற்று மார்பில் உரசிக் கொண்டே வர, இருவருமே உணர்வின் பிடியில் தான் நடந்து கொண்டே வந்தார்கள்.

யுவராஜ்ஜோ அவளை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்து உஷ்ண பெருமூச்சு விட்டவனோ, தனது உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு அருகே வந்த ஸ்ரீயின் தோளில் கைகளை போட்டவன் அவனுடன் பேசிக் கொண்டே வந்தான். "டேய் எப்போடா நீ கல்யாணம் பண்ணிக்க போற?" என்று யுவராஜ் ஸ்ரீயிடம் கேட்க, பின்னால் மதனாவுடன் பேசிக் கொண்டு வந்த ஸ்ருதியோ காதை கூர்மையாக்கி கொள்ள, ஸ்ரீயோ, "ஒரு பொண்ண லவ் பண்ணுறேன்டா, அவ ஓகே சொன்னா உடனே கல்யாணம் தான்" என்றான்.

யுவராஜ்ஜோ, "நீ சொன்னா தானே ஓகே சொல்லுவா" என்று சொல்ல, அவனோ, "கொஞ்சம் பயமா இருக்கு மச்சி" என்று சொன்னான். யுவராஜ்ஜோ, "பச், யாருன்னு சொல்லு, நான் பார்த்துகிறேன்… இண்டஸ்ட்ரி தானா?" என்று கேட்க, ஸ்ரீயோ நான்கு பக்கமும் தலையாட்டியவன், "ம்ம் இண்டஸ்ட்ரி தான்" என்றான். ஸ்ருதியோ குரலை செருமிக் கொண்டே, "யாரு நமக்கு தெரியாத இண்டஸ்ட்ரி?" என்று கேட்க,

ஸ்ரீயோ அவளை திரும்பி ஒரு கணம் பார்த்து விட்டு, "எல்லாம் உனக்கு தெரிஞ்சவங்க தான்" என்றான். யுவராஜ்ஜோ, "அது நீயா கூட இருக்கலாம்" என்று சொல்ல, ஸ்ரீயோ, "டேய்" என்க, ஸ்ருதியோ, "க்கும்" என்று இதழ்களை சுளித்துக் கொண்டவளுக்கு மனதில் ஒரு பட்டாம் பூச்சி பறந்தது என்னவோ உண்மை தான். யுவராஜ்ஜோ, "சான்ஸ் இருக்கு தானேடா" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டவனுக்கு இருவரின் பார்வைகளும் ஏதோ உணர்த்திக் கொண்டு தான் இருந்தன.

ஸ்ரீயோ அதற்கு மௌனத்தையே பதிலாக கொடுத்தவன், "அத விடு, அப்புறம் இங்க போயி ஆகணும்னு என்ன அவசியம்?" என்று கேட்க, யுவராஜ்ஜோ, "படம் என்கிறத தாண்டி, புதைஞ்சு போன வரலாறு உலகத்துக்கு தெரிய வேணாமா?" என்று கேட்டான். பிரகாஷோ, "ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் சார், செலிபிரிட்டின்னா சொகுசு வாழ்க்கை தான் வாழ்வாங்கன்னு நினச்சு இருந்தேன்… ஆனாலும் நீங்க இவ்ளோ தூரம் ரிஸ்க் எடுத்து வந்ததே அதிசயம் தான்" என்று சொல்ல, அவனை எட்டிப் பார்த்த யுவராஜ் ஒரு மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தான்.

ஸ்ரீயோ, "சாரோட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் பத்தி என்ன நினைக்கிற பிரகாஷ்" என்று கேட்க, யுவராஜ்ஜோ, "டேய் ஏண்டா?" என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்டபடி அருகே தனது கையைப் பற்றிக் கொண்டே வந்த நந்திதாவை பார்க்க, அவளும் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். "நீ என்ன நினைக்கிற நந்திதா?" என்று அவளிடம் கேட்க, அவளும், "நினைக்க என்ன இருக்கு? அந்த துண்டாவது இருந்துச்சேன்னு மனசுல சின்ன சந்தோஷம்" என்று சொல்ல,

ஸ்ரீயோ பக்கென்று சிரித்தவன், "அந்த ட்ரெஸ் டிசைனர் நம்ம ஸ்ருதி தான்" என்று சொல்ல, அவளோ, "இப்போ உன்னை கேட்டாங்களா ஸ்ரீ" என்று கேட்டாள் சிரித்தபடி. யுவராஜ்ஜோ அடக்கப்பட்ட சிரிப்புடன் நடந்து வர, நந்திதாவோ, "அதுக்கு எதுக்கு டிசைனர்" என்று கேட்டவளோ ஸ்ருதியை பார்க்க, அவளோ, "சும்மா கலாய்க்கிறாங்க நந்திதா, அது துண்டு கம்பெனி கொடுத்தது, அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல" என்று சொல்ல, அவளோ ஏறிட்டு சிரித்துக் கொண்டே வந்த யுவராஜ்ஜைப் பார்க்க, அவனோ சற்று குனிந்து பார்த்தவன், "என்னடி?" என்று கேட்டான்.

அவளோ ஒன்றும் இல்லை என்கின்ற ரீதியில் தலையை ஆட்ட, அவனோ மென்மையாக புன்னகைத்தவன், "இனி அப்படி போட்டோஷூட் பண்ண மாட்டேன் போதுமா" என்று கேட்க, அவளும் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே, "ம்ம்" என்றவள் முன்னால் பார்த்துக் கொண்டே நடந்தாள். நீண்ட நேரம் நடந்து செல்ல, ஒரு கட்டத்தில் பெண்ணவளோ களைத்து ஓய்ந்து விட அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவள் கால்கள் தளர்ந்து விட, சட்டென அவளை திரும்பிப் பார்த்தான் யுவராஜ்.

அவளோ ஆழ்ந்த பெருமூச்செடுத்தவளோ, "இவ்ளோ ஸ்பீட் ஆஹ் வா நடப்பீங்க?" என்று கேட்க, அவனோ, "இது ஸ்பீட் ஆஹ்??" என்று கேட்டான். "எனக்கு ஸ்பீட் தான், ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கு" என்று சொல்ல, அவனும், "இப்போ தானே ரெஸ்ட் எடுத்தோம்" என்றான் அவள் வேகத்துக்கு தன்னுடைய நடையை தளர்த்தியபடி. அவர்கள் வேகம் குறைந்ததால் அனைவரும் அவர்களை தாண்டி செல்ல இருவருமே இறுதியாக தான் வந்தார்கள். அவர்களுக்கு பின்னால் யுவராஜின் பிரத்தியேக காவலாளி மட்டும் வர, அவளோ, "நம்ம ரெண்டு பேரையும் தவிர எல்லாரும் எடுத்தாங்க" என்றாள் அவனுக்கு கேட்கும் குரலில்.

அவனோ அடக்கப்பட்ட புன்னகையுடன் அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "இப்போ என்ன??" என்று கேட்க, "நிஜமாவே டயர்ட் ஆஹ் இருக்கு, நேற்று வேற" என்று ஆரம்பித்தவள் சட்டென பின்னால் திரும்பி அந்த பிரத்தியேக காவலாளியை பார்த்து விட்டு வாயை கப்பென்று மூடிக் கொள்ள, இதழ் பிரித்து சத்தமாக சிரித்தான் யுவராஜ். அவளோ, "இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க? நான் இங்கேயே நிக்கிறேன், நீங்க போயிட்டு வாங்க" என்க, அவனோ, "புலி சிறுத்தை எல்லாம் வரும் தனியா இருப்பியா??" என்று கேட்டான். அவளோ, "ஐயோ அது வேற இருக்குல்ல.. இப்போ என்ன தான் பண்ணுறது??" என்று நடையை நிறுத்தி விட்டு கேட்க,

அவனோ அடுத்த கணமே அவளை குழந்தை போல இரு கைகளிலும் தூக்கி கொள்ள, "ஐயோ விடுங்க எல்லாரும் பார்க்க போறாங்க" என்று அவள் கத்தியது அவனுக்கு பொருட்டாகவே இருக்கவில்லை. அவனோ தூக்கிக் கொண்டே நடந்து செல்ல, அவன் வெற்று மார்பில் மொத்தமாக சரிந்து கொண்டவளோ, "ப்ளீஸ்" என்று கெஞ்சுதலாக கேட்டாள். அவனோ அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு முன்னால் திரும்ப, சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவர்களுக்கே வெட்கமாகி போனது.

அவர்களை பார்த்து சங்கடமாக முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொள்ள, அவனோ, "கழுத்தை பிடிடி" என்றான். அவளோ மூடி இருந்த கையை எடுத்து அவன் கழுத்தில் மாலையாக கோர்த்துக் கொள்ள, இருவரின் முகமும் நூலளவு இடைவெளியில் தான் இருந்தது. அவன் மூச்சு காற்று அவள் மூச்சு காற்றுடன் கலந்து வெளியேறிய தருணமதில் இருவருக்கும் அது இன்ப அவஸ்தையாக தான் இருந்தது.

நந்திதாவோ அவன் விழிகளை ஏறிட்டுப் பார்க்க, அவன் விழிகளில் காதலும் மோகமும் நிறைந்து வழிய, அதனை பார்க்க முடியாமல் அவனது கழுத்துக்குள் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவள் இதழ்களோ அவன் கழுத்து வளைவில் படிய, அவனோ, "ரொம்ப டெம்ப்ட் பண்ணுறேடி" என்று ரகசியமாக சொல்லிக் கொள்ள, அவளுமே இதழ் பிரித்து சிரித்து விட்டு, யாரும் அறியாத வண்ணம் அவன் கழுத்தில் இதழ் குவித்து முத்தமும் பதிக்க, அவனோ இதழ் குவித்து ஊதி தனது உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர படாத பாடு பட்டான்.

சிறிது தூரம் சென்றதுமே, "நானே நடக்கிறேன், என்னால முடியும்" என்று நந்திதா சொல்ல, அவளை இறக்கி விட்டவன் கண்களோ தூரத்தில் தெரிந்த கோபுரத்தில் படிந்தது. என்ன தான் அந்த இடமே மரங்களினால் சூழப்பட்டு இருந்தாலும் வானை முட்டும் அரண்மனை கோபுரம் அவன் விழிகளில் படிய, அவன் இதழில் கம்பீர புன்னகை சூழ்ந்து இருந்தது. இரு பக்கமும் பெரிய மரங்கள் சூழப்பட்டு இருந்ததால் அந்த காலத்தில் கட்டப்பட்டு இருந்த வீடுகளோ வேறு அடையாளங்களோ அவர்கள் கண்ணில் படவே இல்லை. அந்த ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல, பிரகாஷோ பரவசமாக, "அங்க பாருங்க சார் கோபுரம் தெரியுது… அது அரண்மனை கோபுரமா தான் இருக்கும்" என்று சொல்ல,

அதனையே பார்த்துக் கொண்டு நடந்த யுவராஜ்ஜோ, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டான். அனைவருமே அந்த கோபுரத்தை பரவசத்துடன் பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பிக்க, அவர்கள் நடையும் ஆர்வத்தில் வேகம் எடுக்க, அவர்களும் அரண்மனையை நெருங்கி இருந்த சமயம் அது. அரண்மனையை நெருங்க நெருங்க நந்திதாவின் இதயத்தில் ஒரு படபடப்பு வர, அருகே வந்த யுவராஜ்ஜின் கரத்தை இறுக பற்றிக் கொண்டாள்.

அவனுக்கோ பரவசம் மனதில், எத்தனை வருடங்கள் கழித்த பிரவேசம் இது… அடர்ந்த கானகத்தின் நடுவே இப்படி ஒரு அரண்மனை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் அல்லவா? ட்ரொன் காமெராவினால் கூட அடையாளம் காண முடியாதளவு அந்த அரண்மனையை சுற்றி பெரிய மரங்கள் வளர்ந்து குடை போல அந்த அரண்மனையை மறைத்து இருக்க, அந்த தோற்றத்தையே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே அரண்மனை வாயிலுக்கு வந்து சேர்ந்தார்கள் அனைவரும்.

அந்த இடமே மரத்தின் அடர்த்தியால் குளிர்மையாக இருக்க, பிரமாண்டமான வாயில் கதவை அனைவரும் விழி விரித்து பார்த்தார்கள். முன்னால் சென்ற யுவராஜ்ஜின் செவிகளில் இப்போதும், அவனவளின் கதறல் ஒலி தான் கேட்க, கஷ்டப்பட்டு தன்னை கட்டுப் படுத்திக் கொண்டே நந்திதாவை நோக்கி திரும்பியவன், தலையசைத்து அருகே வரும்படி அழைக்க, அவள் மேனியிலோ அந்த இடத்தைப் பார்த்ததுமே ஒரு சிலிர்ப்பு உருவானது என்னவோ உண்மை தான். மெதுவாக அவனை நோக்கி வர, அவனோ அவள் கரத்தை பிடித்து அந்த வாயில் கதவில் வைத்தவன், "இது மூட காரணமான நீ தான் திறக்கணும் நந்திதா" என்று சொல்ல,

அவளோ புரியாமல் அவனைப் பார்த்த அடுத்த கணமே அவள் கை பட்டு அந்த வாயில் கதவு சட்டென திறந்து கொண்டது. அவளோ அதிர்ச்சியுடன் பார்வையை யுவராஜில் இருந்து அகற்றி முன்னே பார்க்க, அங்கே அவர்கள் கண் முன்னே தெரிந்தது என்னவோ பளிங்கு போல ஜொலித்த தங்க மாளிகை தான். ஆம் அந்த மாளிகையின் சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்த மரகதங்களும் மாணிக்கங்களும், தங்க சிற்பங்களுமே அந்த சாம்ராஜ்ஜியத்தின் செழுமையை எடுத்து உரைக்க, அனைவரும் அதிர்ச்சியாக தான் உள்ளே நுழைந்தார்கள்.

இவ்வளவு பெரிய பொக்கிஷம் யார் கையிலும் கிடைக்காமல் மறைந்து இருக்க காரணம் பத்தினி பெண்ணவளின் சாபம் அல்லவா? உள்ளே நுழையும் போதே அப்படி ஒரு பிரமாண்ட உணர்வு அவர்களுக்கு. நந்திதாவுக்கோ உடலில் பல்வேறு உணர்வுகள், மனதில் ஆழமான வலி உண்டாக, அழ வேண்டும் போல இருக்க, அவள் விழிகளில் இருந்தும் நீர் வழிய, அவளை திரும்பி பார்த்த யுவராஜ், "இன்னும் வலி தீரலையா?" என்று கேட்டான் தழுதழுத்த குரலில்.

அவளோ, "எனக்கு என்னாச்சுன்னு தெரியல, ஆனா அழணும் போலவே இருக்கு" என்று சொன்னவளது குரல் கம்மி தான் போனது. மெதுவாக அடி மீது அடி வைத்து உள்ளே நுழைந்தவர்கள் கண்ணில் பட்டது என்னவோ அருகருகே அமைக்கப்பட்டு இருந்த மூன்று சமாதிகள் தான்... அதனை நோக்கி செல்ல, முதலாவது சமாதியில், "யுவராஜ மகாராஜா" என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்க, யுவராஜ்ஜின் மனமோ, "நம்ம சமாதியை நாமளே பார்க்க எத்தனை பேருக்கு கொடுத்து வைத்து இருக்கும்?" என்று தான் நினைத்துக் கொண்டது.

அவனது சமாதிக்கு அருகே, "நந்திதா ராணி" என்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருந்த சமாதி இருக்க, அடுத்தது இருந்தது என்னவோ சிறு குழந்தையின் சமாதி தான். அதனைக் கண்டதுமே யுவராஜ் தனது நெஞ்சில் கையை வைத்துக் கொண்டவனுக்கு சுவாசிக்க முடியாமல் தான் போனது. ஒரு கணம் கூட அங்கே நிற்க முடியாமல் இருந்தவனோ சட்டென கண்களை மூடி திறந்து விட்டு அந்த சமாதியை தாண்டி வேகமாக நடக்க, ஸ்ரீயோ, "எங்கடா போற?" என்று கேட்டுக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தான்.

யுவராஜும் வேகமாக வந்து அங்கே இருந்த சுவர் அருகே நின்றவன், கண்களை மூடி அதில் சாய்ந்து நின்று ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்த முயன்றான். அவன் அருகே வந்த நந்திதாவோ, "என்னாச்சு?" என்று கேட்க, அவனோ கண்களை மெதுவாக திறந்து அவளை நோக்கியவன், "இல்லை" என்கின்ற தோரணையில் இரு பக்கமும் தலையாட்டிய கணம், பிரகாஷோ, "இது என்ன கல்வெட்டா?" என்று யுவராஜ் சாய்ந்து நின்ற சுவரைக் காட்ட, அவனும் சட்டென நகர்ந்து அந்த சுவரை ஏறிட்டுப் பார்த்தான். ஆம் அந்த சுவர் முழுதும் யுவராஜன் மற்றும் நந்திதாவின் வரலாறு தமிழ் பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டு படங்களும் செதுக்கப்பட்டு இருந்தது.

அனைவரும் பிரமிப்புடன் அதனையே பார்க்க, பிரகாஷ, "நாம இந்த வரலாற்றை படிச்சாலே போதும் போல இருக்கே" என்று சொல்ல, நந்திதாவை பார்த்த ஸ்ரீயோ, "உனக்கு தானே வாசிக்க தெரியும்" என்று சொல்ல, அவளும் அந்த கல்வெட்டின் முதலாவது வசனத்தை வாசிக்க ஆரம்பித்து இருந்தாள். அவள் வாசிக்க வாசிக்க, பின்னால் காலை வைத்துக் கொண்டே நடந்த யுவராஜ்ஜோ அடுத்த கணமே அங்கே இருந்த அரண்மனையை நோக்கி நடக்க ஆரம்பித்து இருந்தான்.

கம்பீர நடையும் வேகமும் ஒருங்கே சேர, அரண்மனை வாயிலில் கண்களை மூடிக் கொண்டே அவன் கையை வைக்க வாயிலும் திறந்து கொண்டது. அவன் தொட்டு திறக்காமல் இருக்குமா அவன் ராஜ்ஜியம்? அனைவரும் வரலாற்றை படிப்பதில் கவனமாக இருக்க, வரலாற்றை அறிந்தவனோ அடி மேல் அடி வைத்து அந்த அரண்மனைக்குள் நுழைந்தான்.

அந்த அரண்மனைக்குள் சுவரில் பதித்து இருந்த கற்கள் ஒளியை பரப்பிக் கொண்டு இருக்க, இத்தனை வருடங்கள் கழித்தும் பாழடைந்து போகாமல் ஜொலித்துக் கொண்டு தான் இருந்தது அந்த இடம். அவனுக்கே ஆச்சரியம் தாங்காமல் இருக்க, மெதுவாக அங்கே சிவப்பு நிறத்தில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு இருந்த சிம்மாசனத்தை நோக்கி வந்தான். அவன் செவிகளில் குதிரை சத்தமும், "யுவராஜ மகாராஜர் வர்றார்" என்று உரைக்கும் குரல்களும் ஒலிக்க, ஒவ்வொரு படியாக வைத்து அவன் மேலே ஏறும் கணம் அவன் இதயத்துடிப்பும் எகிறியது.

அவன் விழிகளோ, கறை படிந்து சிம்மாசனத்துக்கு கீழே கிடந்த வாளில் படிய, அவன் இதழ்களோ கேலியாக வளைய, சிம்மாசனத்தை நெருங்கியவன் காலை ஊன்றி வாளின் அருகே அடித்ததில் அந்த வாள் கண நேரத்தில் உரியவன் கரத்தை அடைந்தது. அந்த வாளின் ரத்த கறையை கைகள் கொண்டு வருடியவன் இதழ்களோ, "பாவத்தின் பலன்" என்று முணுமுணுக்க, அந்த சிம்மானத்தை கரம் கொண்டு வருடிக் கொண்டே அதில் கம்பீரமாக அமர்ந்தவனோ ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே கண் மூடி இருந்தான்.

அவன் செவிகளில் அப்போது விழுந்த வரிகள் தான் நந்திதாவும் வாசித்துக் கொண்டு இருந்தாள். வேங்கையவன், வீரனவன், எட்டுத் திக்கும் ஆட்சி செய்த வேந்தனவன், வேல்விழியாளின் இதயம் கவர்ந்தவனும் அவனே...!! ஆம் இந்த வேங்கையவனினதும் வேல்விழியாளினதும் முன் ஜென்ம கதை இனி...
 
Top