ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 12

வேல்விழி 12

அனைவரும் ஆயத்தமாக, யுவராஜ்ஜோ அங்கே நின்று இருந்த நந்திதாவின் கையை எட்டிப் பிடித்து இருந்தான். அவளோ அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க, அவர்களோ இருவரையும் பார்த்தும் பார்க்காமல் சிரித்துக் கொண்டே நடக்க ஆரம்பிக்க, அவனோ அவள் விரல்களுடன் விரல்களை கோர்த்துக் கொண்டே, "வா" என்றான். அவளும் வேறு வழி இல்லாமல் தயக்கமாக அவனுடன் நடக்க, ஆரம்பிக்க, இருவரின் தோள்களும் உரசிக் கொண்டு தான் வந்தன… அவனோ சூரியன் பட்டு தெறித்து இலைகளில் இருந்த நீர் ஜொலிப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டே, "ரொம்ப அழகா இருக்குல்ல" என்று கேட்க, அவளுமே, "ம்ம்" என்று மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டாள்.

அவனோ அவளை திரும்பிப் பார்த்தவன், "நீயும் ரொம்பவே அழகா இருக்க" என்று சொல்ல, அவளோ அவனை ஏறிட்டு விசித்திரமாக பார்த்தவளுக்கு அவனது துளைத்தெடுக்கும் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை. சட்டென முகத்தினை மற்றயப்பக்கம் திருப்பிக் கொண்டே கூட நடந்தாள். அவர்கள் நேரே வந்து சேர்ந்தது என்னவோ அந்த கோவிலுக்கு தான். அங்கே அமர்ந்து இருந்த சித்தரோ யுவராஜ்ஜை பார்த்து சிரித்தவர், "யுவராஜா வந்துட்டியா?" என்று கேட்க, அவனோ, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்த கல்வெட்டைப் பார்த்தான்.

ஐந்து ஜென்மங்கள் அவன் எழுதிய எழுத்துக்கள் அவை. பாவத்துக்கு விமோச்சனம் தேடி அலைந்த நாட்கள் அவை. இந்த கோவில் மண்டபத்திலேயே தஞ்சம் புகுந்தவன் அவன். அந்த கல்வெட்டின் அருகே சென்று அதனை விரல்கள் கொண்டு வருடிக் கொண்டே ஆழ்ந்த மூச்சு விட்டவனோ அருகே நின்று இருந்த நந்திதாவிடம், "கதவை திற" என்றான். அவளோ அவனை புதுமையாக பார்த்தவள், "நானா?" என்று கேட்க, அவனோ, "நேற்று நீ தானே திறந்த" என்று சொல்ல, அவளும் கோவிலின் மண்டப கதவில் கையை வைத்த அடுத்த கணமே அது சட்டென திறந்து கொண்டது.

அவளோ அவனை அதிர்ச்சியாக திரும்பிப் பார்க்க, எல்லாருமே அவர்களை தான் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவனோ அவளிடம், "ம்ம் போகலாம்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே செல்ல, மெல்லிய வெளிச்சமும் உள்ளே நுழைந்து கொண்டது. அவனை தொடர்ந்து அனைவருமே உள்ளே செல்ல, அவனோ அவளை அழைத்துக் கொண்டே கருவறையை நோக்கி சென்றவனோ, அவள் கையை பற்றி கருவறை வாசலில் வைத்த கணமே கருவறையும் திறந்து கொள்ள, அங்கே அம்மன் சிலை தான் பாழடைந்து போய் இருந்தது.

எத்தனை யுகங்கள் கழித்து அந்த கருவறை திறக்கப்படுகின்றது. கருவறையின் மேலே இருந்த மெல்லிய வெளிச்சத்தில் அம்மனின் சிலையில் இருந்த மூக்குத்தி மட்டும் ஜொலிக்க, யுவராஜ்ஜோ கையில் இருந்த தீப்பெட்டியை அவளிடம் நீட்டியவன், "இந்த விளக்கை ஏத்து நந்திதா" என்றான். அவளோ அம்மனின் காலடியில் இருந்த விளக்கைப் பார்த்தவளோ, "எண்ணெய் இல்லாம எப்படி ஏத்துறது?" என்று கேட்டவளுக்கு அதில் திரி மட்டும் தான் இருப்பது கண்ணில் பட்டது.

அவனோ, "நீ ஏத்துனா இந்த விளக்கு கண்டிப்பா எரியும்" என்று சொல்ல, ஸ்ரீயோ, "என்னடா உளர்ற?" என்று கேட்க, அவளோ அவனை புரியாமல் பார்க்க, அவனோ, "என் மேல நம்பிக்கை இருந்தா ஏத்து" என்றான். அவளும் மறுப்பாளா என்ன? அடுத்த கணமே வத்திக்குச்சியை பயன்படுத்தி விளக்கை ஏற்றிய கணம் அந்த தீபமும் எண்ணெய் கொஞ்சம் கூட இல்லாமல் பிரகாசமாக எரிய, அனைவரும் அதனை அதிர்ந்து பார்க்க, கண்களை மூடி அம்மன் சன்னிதானத்தில் கைகளை கூப்பிய யுவராஜ்ஜோ, "பல வருஷம் கழிச்சு உன் கிட்ட வந்து இருக்கேன் தாயே" என்றான். அவன் பேச்சு செயல் அனைத்துமே அவர்களுக்கு விசித்திரமாக இருந்தாலும் நந்திதா உட்பட அனைவருமே கண்களை மூடி இறைவனை வணங்க, யுவராஜ்ஜோ, "இப்போ கிளம்பலாம்" என்று சொன்னான்.

ஆம் அவன் விலக்கு ஏத்திய கணத்தில், இயற்கை வழிவிட, அரண்மனையை நோக்கி பாதை உருவாகி இருந்தது. அவர்கள் கோவிலுக்குள் இருந்து வெளியே வந்ததுமே, "இவ்ளோ நாள் மூடி இருந்த தேவிக்கு விடுதலை கொடுத்திட்டியா ராணி" என்று நந்திதாவிடம் கேட்க, அவளோ புரியாமல் யுவராஜ்ஜை பார்க்க, அவனோ மென்மையாக புன்னகைத்தவன், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே அரண்மனையை நோக்கி பயணத்தை ஆரம்பித்தான். கானகத்தை நோக்கி நந்திதாவின் கரத்தைப் பற்றிக் கொண்டே அவன் நடக்க, கானக வாசலை அடைந்தவர்களது விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன.

எந்த பாதை முதல் நாள் மரங்களால் சூழப்பட்டு இருந்ததோ இன்று அந்த இடத்தில் ஒற்றையடி பாதை உருவாகி இருந்தது. அனைவருமே அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, முதலில் யுவராஜ் தான் முன்னேறி செல்ல, அவனை தொடர்ந்து ஒவ்வொருவராக பின்னால் சென்றார்கள். முதல் நாள் கஷ்டப்பட்ட போல அவர்கள் கஷ்டப்படவே இல்லை. அந்த பாதை அவர்களை இலகுவாக நடக்க உதவ, பேசி சிரித்துக் கொண்டே நடந்த போதிலும் யுவராஜ்ஜின் விழிகளோ சுற்றி இருந்த இடங்களை தான் தழுவியது.

அடிக்கடி கண்களை மூடி, இந்த இடத்தில் இருந்தது என்ன என்று யோசித்துக் கொண்டே நடக்கலானான். நந்திதாவோ சுருதியுடனும் மதனாவுடனும் பேசிக் கொண்டே நடக்க, நீண்ட தூரம் நடந்து வந்தவர்களுக்கு தாகம் தான் எடுத்தது. கொண்டு வந்த நீரை குடித்துக் கொண்டே, "டேய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து போகலாம்டா" என்று ஸ்ரீ சொல்ல, யுவராஜ்ஜூம், "ம்ம்" என்று சொன்னான்.

அந்த கணம், அவனது கவனத்தை திசை திருப்பியது அவளின் குரல். "இது என்ன பழம்??" என்று கேட்டபடி மேலே பார்த்துக் கொண்டு நின்ற நந்திதாவை திரும்பி பார்த்தான் யுவராஜ். அவளோடு நின்று இருந்த ஸ்ருதியோ, "பெர்ரி போல இருக்கு" என்க, யுவராஜ்ஜோ விழிகளை உயர்த்தி மேலே பார்த்தவன், "ம்ம் க்ரன் பெர்ரி, தமிழ்ல குருதி நெல்லின்னு சொல்வாங்க" என்று சொல்ல, "அப்போ சாப்பிடலாமா??" என்று கேட்டாள் நந்திதா.

அவனோ, "ம்ம் தாராளமா" என்று சொன்ன கணமே அடுத்தவர்கள் ஓய்வெடுக்க ஆளுக்கொரு மரத்தடியில் அமர்ந்து விட, யுவராஜ்ஜோ அங்கே இருந்த மரத்தில் சாய்ந்து நின்று மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டே அவளை தான் பார்த்துக் கொண்டே நின்று இருந்தான். மெல்லிடைப் பெண்ணவளோ அலங்காரமே இல்லாமல் பேரழகியாக தான் தெரிந்தாள் அவன் விழிகளுக்கு.

அவளோ அந்த பழத்தை பறிக்க முடியாமல் போராடிக் கொண்டு இருக்க, அவளை நோக்கி அடிமேல் அடி வைத்து வந்தவன், "வேணுமா?" என்று கேட்டபடி பறிப்பதற்காக கையை உயர்த்த அவனது கையை பற்றியவள், "நானே பறிக்கணும்னு ஆசையா இருக்கு" என்று முடிக்கவில்லை அவள் இடையை இரு கைகளாலும் பற்றி தூக்க, "ஐயோ பயமா இருக்கு" என்று பதறினாள் அவள்.

ஸ்ரீயோ அருகே அமர்ந்து இருந்த ஸ்ருதியிடம், "ரெண்டு நாளைக்கு முதல் நந்திதா கையை பிடிச்சதுக்கு இவன் திட்டுனான்னு சொன்னா சின்ன குழந்தை கூட நம்பாது" என்று சொல்ல, ஸ்ருதியும் அடக்கப்பட்ட சிரிப்புடன், "ம்ம் ம்ம்" என்றாள். அவளை தூக்கிய யுவராஜ்ஜோ, "கீழே விழ விட மாட்டேன்டி" என்க, அவளோ பழத்தை பறித்துக் கொண்டே, "ஓகே" என்று சொல்ல அவனும் அவளை கீழே இறக்கி விட்டான்.

அவளும் பழத்தை பார்த்தவள், "ரொம்ப ரெட் ஆஹ் இருக்குல்ல" என்று சொல்லிக் கொண்டே வாய்க்குள் வைத்தபடி அவனைப் பார்க்க, அவனோ, "உன் லிப்ஸ் அளவுக்கு இல்ல" என்று சொன்னவன் விழிகள் தங்கியது என்னவோ அவள் செவ்வதரங்களில் தான். அவனோ அவள் இதழ்களை பார்த்தபடி தன்னையும் மீறி தனது இதழ்களை ஈரமாக்க சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளுக்கு அவன் பார்வையே மூச்சடைக்க வைத்தது. குரலை செருமி, இருக்கும் இடத்தை கண்களால் சுற்றி காட்டியவளோ, "வேணுமா?" என்று கையில் இருந்த பழத்தை நீட்ட,

அவனோ அவளது அடுத்த கரத்தை பிடித்து அவள் சாப்பிட்டு வைத்து இருந்த மீதி பழத்தினை அவளைப் பார்த்துக் கொண்டே கடிக்க, அவளுக்கோ அவன் பார்வை என்னவோ எண்ணங்களை எல்லாம் நினைவு படுத்த அவனைப் பார்க்க முடியாமல் விழிகளை தாழ்த்திக் கொண்டாள். அவனோ பழத்தை சாப்பிட்டு விட்டு, "இது மட்டும் சாப்பிட்டு என் பசி அடங்காது நந்திதா" என்று ரகசிய குரலில் சொல்ல, அவளோ அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்க்க, அவனோ ஒரு கணம் அவள் இதழ்களை ஆழ்ந்து பார்த்து விட்டு விழிகளை நோக்கியவன் கண்களால் அங்கே அருவி அருகே தெரிந்த மறைவான இடத்தை காட்டியபடி கையை பற்றிக் கொள்ள,

அவளோ அவன் செயலில் அதிர்ந்தாலும் அவனுடன் கூட செல்ல தான் அவள் மனம் ஏனோ விரும்பியது. வேல்விழியின் இதழில் குடி கொள்ள விரும்பும் வேங்கை அவனுக்கோ அடங்காத காதலும் வேட்கையும் போட்டி போட பஞ்ச ஜென்மங்கள் இழந்த உணர்வுகளின் மொத்த குவியலாய் அவன்... அவன் உணர்வுகளின் வடிகாலாய் அவள்… அவள் தான் அவனது வேல்விழியாள். நந்திதாவின் கரத்தை பற்றிப் பிடித்த யுவராஜ்ஜோ, "ஸ்ரீ, இதோ வந்திடுறேன்" என்று சொல்லிக் கொண்டே நடக்க, அவனும், "ம்ம்" என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டான்.

அவளோ, "என்ன நினைப்பாங்க" என்று சிணுங்களாக கேட்க, அவனோ, "என்ன நினைப்பாங்க?" என்று கேள்வியாக கேட்டான். அவளுமே, "தனியா வர்றது தப்பில்லையா?" என்று கேட்டதுமே சட்டென திரும்பி அவளைப் பார்த்தவனோ, "பொண்டாட்டியை தனியா அழைச்சிட்டு வர்றது தப்பே இல்ல" என்று கண் சிமிட்டி சொல்லிக் கொண்டவனோ அருவி அருகே அழைத்து செல்ல, அருவி ஓடும் சத்தத்தை கேட்டவள் முகத்தில் குளிர்ந்த காற்று பட்டென்று வீசியது.

அவளோ மரங்கள் நடுவே அருவியை பார்த்துக் கொண்டே நிற்க, அவனோ அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அதனை அறியாத பாவையவளோ, "ரொம்ப ரம்மியமா இருக்குல்ல" என்று சொல்லிக் கொண்டே அருகே நின்றவனை நோக்கி திரும்பியவளுக்கு அவன் வேட்கை நிறைந்த விழிகள் என்னவோ செய்ய சட்டென முகத்தை மீண்டும் அருவியை நோக்கி திருப்பிக் கொண்டவளுக்கு ஒற்றை விழி பார்வையே வயிற்றில் பட்டாம் பூச்சியை பறக்க செய்து அவளை பரவசமாக்கியது.

அவனோ தனது கரத்தை நீட்டி அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டவனோ, "உனக்கு ஒன்னு காட்டுறேன்" என்று சொல்லிக் கொண்டே அவளை அருகே இருந்த பாறையை நோக்கி அழைத்து செல்ல, அவளோ அவனை புரியாமல் பார்த்தாள். அந்த பாறையிலோ தமிழ் பிராமி எழுத்துக்கள் செதுக்கப்பட்டு இருக்க, அவள் கரத்தை பிடித்து அதனை வருடியவன், "என்னன்னு தெரியுதா?" என்று கேட்க, அவளோ அதனை வாசித்தவள், "வேல்விழிப் பெண்ணவளால் சித்தம் கலங்கும் வேங்கை நான், அப்படின்னு இருக்கு" என்று சொல்ல, அவனோ மென்மையாக புன்னகைத்தவன் மனமோ, "இது தான் நாம முதன் முதலில் சந்தித்த இடம்" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் வாயால் சொல்லவே இல்லை.

அவளோ அவனை திரும்பி பார்க்க, "யார் எழுதி இருப்பாங்க" என்று கேட்டாள். அவனோ, "யுவராஜான்னு நினைக்கிறேன்" என்று சொன்னவனோ அவளை தன்னை நோக்கி திருப்பி விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவன், "இது எனக்குமே இப்போ பொருந்தும்" என்று சொல்ல, அவளோ அவன் விழிகளை பார்க்க முடியாமல் முகத்தை தாழ்த்திக் கொண்டவளோ, "போகலாமா?" என்று கேட்டாள்.

அவனோ, "வந்த வேலையை இன்னுமே ஆரம்பிக்கவே இல்லையே" என்று சொல்ல, விலுக்கென அவள் நிமிர்ந்து பார்க்க, அவனோ அவள் இடையில் அழுத்தத்தை கொடுத்து தனது தேவையை உணர்த்த, அவன் அழுத்தியதில் அவள் இதழ்கள் மெலிதாக விரிய, அவள் முகத்தினை நோக்கி குனிந்தவன் அவள் அதரங்களில் தன்னிதழ்களை ஆழ பொருத்திக் கொண்டான்.

அவள் ஒரு கரமோ அவன் வெற்று மார்பில் இருந்த புலியின் உருவத்தை வருட, அடுத்த கரமோ அவன் சிகைக்குள் கையை கோர்த்து நெரிக்க, அப்படியே அந்த பாறையில் அவள் சாய்ந்து கொண்டாள் முத்த வேட்கையை தாங்க முடியாமல். அவனுமே நிறுத்தாமல் முத்தமிட்டுக் கொண்டே இருக்க, அவள் காதில் விழுந்தது ஒரு உறுமல் ஒலி. சட்டென கண்களை திறந்தவளோ அவன் இதழில் இருந்து தன்னிதழை பிரித்தெடுத்துக் கொள்ள, அவனோ அவளை கேள்வியாக பார்க்க, "ஏதோ சத்தம் கேக்குது" என்றாள். அவனுமே சட்டென திரும்பிப் பார்க்க, அங்கே உறுமிக் கொண்டு நின்றது என்னவோ புலி ஒன்று தான்.

அவளோ அதனைக் கண்டதுமே நெஞ்சில் கையை வைத்துக் கொண்டே அவன் இடையை பற்றிக் கொண்டு பின்னால் நின்றவள், "ஐயோ" என்று அலற, அவன் முகத்தில் பயத்தின் சாயல் கொஞ்சமும் இருக்கவே இல்லை. அவன் விழிகளும் புலியின் விழிகளும் சந்தித்துக் கொள்ள, அவனைக் கண்டதுமே அந்த புலி உறுமலை நிறுத்திக் கொள்ள, அவனோ சிறிய கண்ணசைவை மட்டுமே கொடுக்க, அந்த புலியும் அவனை நோக்கி வர, அவன் பின்னால் நின்று இருந்த நந்திதாவோ, "ஐயோ நம்ம கிட்ட தான் வருது" என்று சொல்ல, அவனோ, "ஒன்னும் பண்ணாதுடி" என்று சொன்னான்.

அவளோ, "இது என்ன நம்ம வீட்டு பப்பின்னு நினைச்சீங்களா? டைகர்… ஒன்னும் பண்ணாதா?" என்று கேட்டவளுக்கு பயத்தில் கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது. அவனோ இதழ் பிரித்து சிரிக்க, அவளோ, "உங்களுக்கு இந்த நேரத்தில சிரிப்பு கூட வருதா?" என்று கேட்டவளோ அவனை பின்னால் இருந்து இறுக அணைத்துக் கொண்டே அவன் வெற்று முதுகில் கன்னத்தை பதித்தபடி கண்களை மூடிக் கொள்ள, யுவராஜ்ஜோ புலிக்கு கண்ணசைவை மட்டும் தான் காட்டினான். புலியோ அவர்களை தாண்டி சென்று இருக்க, அவனோ கைகளை நீட்டி அதன் பிடரி முடியை வருடி விட்டான் அவளுக்கே தெரியாமல்.

அவள் தான் கண் மூடி நின்றாள் அல்லவா? புலியும் நடந்து சென்று மறைந்ததும், அவனோ, "எவ்ளோ நேரம் இப்படியே நிற்க போற?" என்று கேட்க, அவளோ, "எனக்கு பயமா இருக்கு" என்றாள். அவனோ, "கண்களை திற, புலி போயிடுச்சு" என்று சொல்ல, அவளோ சட்டென கண்களை திறந்தவள், "புலி போயிடுச்சா?" என்று கேட்டுக் கொண்டே எட்டிப் பார்த்தாள். ஆம் புலி இருந்ததற்கான சுவடே அங்கே இல்லாமல் இருக்க, சுற்றும் முற்றும் பார்த்தவள், பெருமூச்சு விட்டபடி, "அப்பாடா" என்க, அவனோ, "விட்டத நாம கன்டினியூ பண்ணலாமா?" என்று கேட்க,


அவளோ, "என்னால முடியாது, இப்போ புலி, அப்புறம் சிங்கம்னு ஒவ்வொன்னா வரும்... வாங்க கிளம்பலாம்" என்று பயத்தில் அவன் கரத்தை பிடிக்க, அவளை தன்னை நோக்கி இழுத்தவன் நினைத்ததை சாதித்து விட்டே அவளை விட்டான். அவளோ அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "நினைச்சதை சாதிச்சுடீங்க" என்று சொல்ல, அவனோ இதழ் பிரித்து சொல்லிக் கொண்டே அவள் கரத்தை பிடித்துக் கொண்டவன், பெருவிரலால் அவள் இதழில் கசிந்த குருதியை துடைத்து விட்டான். அவளோ கண்களை மூடி திறந்தவள் வெட்கத்தில் சிவந்த கன்னமும், அவன் இதழ் தீண்டி சிவந்த இதழ்களுமாக, அவன் அருகே நடந்து சென்றாள்.
Super sis
 
Top