vallimotcham
Member
Nice
Super sisவேல்விழி 10
அவனோ வேகமாக சென்று கதவை திறக்க, அங்கே வாசலில் நின்றது வேறு யாருமல்ல ஸ்ருதியும், மதனாவும் தான். ஸ்ருதியோ அவனை தாண்டி உள்ளே எட்டிப் பார்த்தவள், "இப்போ எப்படி இருக்கு?" என்று நந்திதாவிடம் கேட்க, அவளோ "இப்போ ஓகே" என்று நலிந்த குரலில் சொல்ல, ஸ்ருதியை ஆழ்ந்து பார்த்து விட்டு தாண்டி வெளியே சென்று இருந்தான் யுவராஜ்.
அவன் சென்றதுமே மதனா, "சாப்பாடு ரெடி ஆஹ் இருக்கு, வா" என்று அழைக்க, அவளுக்கும் பசிக்க ஆரம்பித்து இருக்க, நடந்து வெளியே வந்திருந்தாள். அங்கே உணவு வைக்கப்பட்டு இருக்க, அதன் அருகே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்த யுவராஜ்ஜோ கண் மூடி சாய்ந்து இருந்தபடி தனது உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர படாத பாடுபட்டுப் போனான்.
எந்த உணர்வுகள் வராமல் இருக்கிறது என்று சற்று முன்னர் வரை கவலைப்பட்டானோ அதனை இப்போது எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாத தவிப்பில் அவன் அமர்ந்து இருக்க, ஒவ்வொருவரும் சென்று ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து சாப்பிட தொடங்கி விட, அவளுக்கு கிடைத்து இருந்தது என்னவோ யுவராஜ் அருகே இருந்த இடம் தான். அவள் முகத்தை உற்று நோக்கிய ராமோ, அதில் வலியின் சாயல் இல்லை என்றதுமே நிம்மதியாக சாப்பிட ஆரம்பிக்க, சற்று முன்னர் இருந்த இறுக்கம் தளர்ந்த நிலையில் தான் அனைவரும் இருந்தனர்.
பிரகாஷோ அந்த அமைதியை குலைக்கும் பொருட்டு, "நடேசா சாப்பாடு பிரமாதம்" என்று சொல்ல, அவனோ, "நன்றி சார்" என்று பதிலளித்துக் கொண்டான். நந்திதாவோ அமராமல் அப்படியே நின்று இருப்பதைக் கண்ட ஸ்ரீயோ, "நந்திதா வந்து இருந்து சாப்பிடு" என்று சொல்ல, அவளும் ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே யுவராஜ் அருகே வந்து அமர்ந்து அங்கே வைக்கப்பட்டு இருந்த தட்டில் சாப்பாட்டை எடுத்து போட்டாள்.
மதனாவோ அருகே இருந்த பிரகாஷிடம், "கரண்ட் இல்ல, போன் இல்ல, சோசியல் மீடியா இல்ல, சேர்ந்து இருந்து நிலவு வெளிச்சத்துல சாப்பிடுறோம், வித்தியாசமா இருக்குல்ல" என்று கேட்க, அவனோ, "ம்ம் சொகுசு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டதால லைட்டா கஷ்டமா இருந்தாலும் மனசுக்கு இதமா இருக்கு" என்று சொன்னான். அனைவருமே சாப்பிட்டுக் கொண்டு இருந்தாலும் யுவராஜ் மட்டும் உணவை தொடவே இல்லை. “டேய் ஏண்டா சாப்பிடல" என்று ஸ்ரீ கேட்க,
அப்படியே அமர்ந்து இருந்து கண்களை மூடிக் கொண்டே, "பசிக்கல" என்று ஒற்றை வரியில் பதில் சொன்னவனை திரும்பிப் பார்த்த நந்திதா, "ஏன் பசிக்கல" என்று மென்குரலில் கேட்டாள். அவனோ இருக்கையில் சாய்ந்து இருந்தபடியே கண்களை மட்டும் மெதுவாக திறந்து அவளைப் பார்த்தவனோ ஒரு கணம் அவள் இதழ்களை அழுத்தமாக பார்த்து விட்டு விழிகளை பார்த்தவன், "ஏன்னு உனக்கு தெரியாதா?" என்று கேட்க, அவளோ சட்டென பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டவளுக்கு அவனை ஏறிட்டு பார்க்கவே கூச்சமாக தான் இருந்தது.
அவன் விழிகளோ நிலவு வெளிச்சத்தில் தெரிந்தவளை கண்களால் மொத்தமாக ஒரு கணம் அளந்து விட்டு மீண்டும் மூடிக் கொண்டது. கண்களை மூடிக் கொண்டவனுக்கோ புது புது நினைவுகள் தான் வந்து கொண்டு இருந்தன. அனைத்துக்கும் மேல் நந்திதாவுடன் கலந்து விட வேண்டும் என்கின்ற முனைப்பு வேறு. இதே சமயம், காட்டில் இருந்த கோவில் மண்டபத்தில் தனியாக அமர்ந்து இருந்த சித்தரோ பூரண நிலவைப் பார்த்துக் கொண்டே, "உன் கஷ்டம் தீர்ந்து விட்டதா யுவராஜா? நாளை உன் அரியசானத்தை தேடிச் செல்" என்று சொல்லிக் கொண்டார்.
நந்திதாவோ சாப்பிட்டு முடித்து கையை கழுவிக் கொண்டே எழுந்து கொள்ள, ஸ்ருதியோ, "வா நந்திதா அங்கே போய் இருக்கலாம், நல்லா இருக்கும்" என்று அவள் கையை பிடித்துக் கொண்டே மதனாவுடன் அழைத்து சென்றவள் அங்கே இருந்த புல்தரையில் அமர, அவள் அருகே அமர்ந்தாள் நந்திதா. ஸ்ருதியோ நந்திதாவை மென்மையாக பார்த்தவள், "யுவா கிட்ட மோசமா பேசிட்டேன்னு என் மேல கோபமா?" என்று கேட்க,
அவளோ, "ச்ச ச்ச, எனக்காக தானே பேசுன" என்று சொல்லி சமாளித்தவளுக்கு இன்னுமே அவன் கரம் பட்ட இடங்கள் மேனியில் குறுகுறுத்துக் கொண்டு இருந்தது. இத்தனை உணர்வுகளை எதுக்காக அடக்கி வைத்துக் கொண்டு என்கின்ற கேள்வி அவளிடம், அவனிடமோ இப்போது தடையின்றி பேயாட்டம் ஆடும் உணர்வுகளை எப்படி அடக்குவது என்று தெரியாத தவிப்பு.
கண்களை திறந்து அவள் முதுகையே வெறித்துப் பார்த்தவனோ தலையை கோதிக் கொண்டே இதழ் குவித்து ஊதியவன், "இப்படியே இருக்காம ஏதாவது பண்ணலாமா? போரிங் ஆஹ் இருக்கு" என்று சொன்னவனுக்கு எப்படியாவது கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்கின்ற எண்ணமே இருந்தது. தனக்குள் இப்படி ஒரு மாற்றம் எப்படி வந்தது என்றும் அவனுக்கு தெரியவே இல்லை.
பிரகாஷோ "இப்போ என்னடா பண்ணா முடியும்?" என்று கேட்க, அவனோ, "ஸ்விம் பண்ணலாமா?" என்று கேட்டான். ராமோ சட்டென்று "இப்போ வேணாம், இரவில பாதுகாப்பு இல்ல" என்று சொல்லி விட, ஸ்ரீயோ, "ஐயோ இவன் அட்வைஸ் பண்ண வந்துட்டானே. இப்போ யுவாக்கு சுர்ருன்னு ஏறுமே" என்று நினைக்க, யுவராஜ்ஜோ ராமை திரும்பி பார்த்தான். இப்போது அவன் விழிகளில் அனல் இருக்கவே இல்லை, அவனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தவன், "ம்ம், நீ சொன்னா சரியா தான் இருக்கும்" என்று மட்டும் சொல்லிக் கொண்டே மீண்டும் கண் மூடி அமர,
அவனது நடவடிக்கையை கண்டு ராமுக்கே அதிர்ச்சி தான். அவனை தடுக்க வேண்டும் என்று அவசரமாக பேசி விட்டான். திட்ட போகின்றான் என்று தான் அவன் எதிர்பார்த்து இருக்க, அவனோ இத்தனை சாவகாசமாக பதில் சொல்லிக் கொண்டு இருக்கின்றான் அல்லவா? தன்னையே நம்பாமல், தனக்கு தானே கிள்ளிப் பார்த்தவனோ, "கனவு இல்ல, நிஜம் தான்" என்று நினைக்க, கண்களை மூடி இருந்த யுவராஜ்ஜோ, "நிஜம் தான் ராம்" என்று இதழ் பிரித்து சொல்லிக் கொண்டான்.
நந்திதா, மதனா மற்றும் ஸ்ருதி என மூவரும் நிலவின் வெளிச்சத்தில் இருந்து பேசிக் கொண்டு இருக்க, கண்களை மெதுவாக திறந்த யுவராஜ்ஜோ, "வாஷ் எடுக்கணும்டா" என்று ஸ்ரீயிடம் சொல்லிக் கொண்டே, நந்திதாவின் முதுகை ஆழ்ந்து பார்த்து விட்டு காட்டேஜினுள் நுழைந்தான். அவனுக்கோ நீராவது தனது வேட்கையை அடக்காதா? என்கின்ற நப்பாசை. அவ்வளவு சீக்கிரம் அடங்கி விடக் கூடியதா அவன் வேட்கை?
அவனோ குளிக்க சென்று இருக்க, ஸ்ருதியோ, "தூக்கமா வருதுடி" என்று மதனாவிடம் சொல்ல, அவளும், "ஆமா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா நல்லா இருக்கும்" என்று சொல்லிக் கொண்டே எழுந்து விட, தனியே அங்கே தனித்து விடப்பட்ட நந்திதாவுக்கு என்ன செய்வதென்றும் தெரியவே இல்லை. அப்போது தான் திரும்பி யுவராஜ்ஜை பார்க்க, அவன் இடமோ வெறுமையாக இருந்தது. அங்கு ராம் இருந்ததால் என்னவோ அவளுக்கு அங்கே நிற்கவும் சங்கடமாக இருந்தது.
ஏற்கனவே கணவனுடன் ராம் விஷயத்தில் பிரச்சனை உண்டாகி இருக்க, மெதுவாக நடந்து அறைக்குள் நுழைந்த கணம், அவனும் குளித்து விட்டு இடையில் டவலுடன் வந்தான். அவளோ அவனைப் பார்க்காமலே உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து விட, அவள் பார்க்காவிட்டாலும் அவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டே இருந்தான். அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டவனுக்கு, "அவள் இப்போதே வேண்டும்" என்று தான் மனம் சொல்லிக் கொண்டே இருக்க, இதழ் குவித்து ஊதிக் கொண்டே அமர்ந்தவனுக்கு தூக்கம் வர மறுத்தது.
அப்படியே கண்களை திறந்து இருந்த ஜன்னலினூடு சுழலவிட, ஒவ்வொருவராக தத்தமது அறைக்குள் சென்று புகுந்து கொள்ள, யாருமில்லாத அந்த இடத்தில் சந்திரன் மட்டும் பூரண வெளிச்சத்தைத் பரப்பிக் கொண்டு இருந்தது. அப்படியே அதனை வெறித்துப் பார்த்தபடி அவன் அமர்ந்து இருக்க, குளித்து உடை மாற்றிக் கொண்டே வெளியே வந்த நந்திதாவுக்கோ வெளியே இருந்து ஜன்னலினூடு அடித்த குளிர் காற்றில் உடலில் மெல்லிய நடுக்கம் உருவாக ஆரம்பித்தது.
அவள் இதழ்களோ தந்தியடிக்க, சட்டென திரும்பிப் பார்த்த யுவராஜ்ஜோ, "குளிருதா?" என்று கேட்க, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே ஜன்னல் அருகே சென்று அதனை மூட முயற்சித்தாள். அவளுக்கோ வெளியே இருந்த ஜன்னலின் முனை எட்டாமல் இருக்க, கையை எட்டி அதனை இழுக்க முயன்றவள் கண்களோ விரிந்து கொண்டன. ஆம் அவளுக்கு பின்னே மேனி முழுதும் உரச நின்று இருந்தான் யுவராஜ். அவன் கரமோ அவள் கரத்தை வருடிக் கொண்டே ஜன்னலை பிடித்து உள் நோக்கி இழுக்க, அவனது வெற்று மார்பின் கதகதப்பு குளிருக்கு இதமாக இருக்க, மேனியில் மீண்டும் உணர்வலைகள் தோன்ற ஆரம்பித்தன.
அவன் மூச்சுக் காற்று வேறு அவளது கழுத்து வளைவில் பட்டு அவளை உணர்ச்சிப் பிழம்பாக மாற்றிக் கொண்டு இருந்த தருணம் அது. அவளோ கீழ் அதரங்களை கடித்து தன் உணர்வுகளை அடக்க படாத பாடு பட்டுக் கொண்டு இருக்க, அவனோ இரு ஜன்னல்களையும் இழுத்து அடைத்தபடியே, தனது கரத்தை அவள் இடையில் பதித்துக் கொண்டே கழுத்தில் முகம் புதைத்து இருந்தான்.
அவள் கரமோ மேலெழுந்து பின்னால் நின்றவனின் சிகையை கோத, அவள் விழிகளோ மூடிக் கொள்ள, இடையில் இருந்த கையோ மேலும் முன்னேறி அவள் ஷேர்ட் பட்டனில் கையை வைத்து அவள் ஆடைகளுக்கு விடுதலை கொடுக்க ஆரம்பிக்க, அவளோ அவன் கையை பிடித்துக் கொண்டாள். அவனோ அவள் செவி மடலில் முத்தம் பதித்து, "கையை எடு நந்திதா" என்று ஹஸ்கி குரலில் சொல்ல, அவளும் கையை மெதுவாக அகற்ற, அவனோ தனது வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்து இருந்தவன் அவள் கழுத்தை பற்றி முகத்தை மட்டும் தன்னை நோக்கி திருப்பி அவள் இதழில் தனது இதழை அழுந்த பதித்துக் கொண்டான்.
நீண்ட நெடிய முத்தத்தின் முடிவில் அவளை தூக்கிக் கொண்டே மஞ்சத்தில் படுக்க வைக்க, அவளுக்கோ தீபங்களில் வெளிச்சத்தில் தெரிந்த அவன் மோக விழிகளை பார்க்கவே முடியாதளவு வெட்கம் வந்து சேர, கண்களை மூடிக் கொண்டாள். அவள் வெட்கத்தை உணர்ந்து தீபங்கள் தாமாக அணைந்து போக, அந்த காட்டேஜின் கூரையில் இருந்த சிறிய கண்ணாடி தட்டின் ஊடாக நிலவின் வெளிச்சம் மட்டுமே உள்ளே வந்தது.
நிலவை சாட்சியாக கொண்டு அரங்கேறியது அவர்களது கலவி யுத்தம். மாதங்கள் அல்ல, வருடங்கள் அல்ல, யுகங்கள் தாண்டி இரு உயிர்களும் பிணைந்து கொண்டன. யுவராஜ் ஆக ஆரம்பித்த அவன் முத்தப் போர் யுவராஜனாக தான் முடிவு பெற்றது. ஆம் அந்த கலவியின் முடிவில் ஜென்ம நினைவுகள் மீண்டு வர, அவனோ கண் மூடி அவன் அணைப்பில் இருந்தவளது முகத்தைப் பார்த்துக் கொண்டவன் கண்ணீர் அவள் நெற்றியில் விழ, சட்டென கண்களை திறந்து அவனைப் பார்த்தவளுக்கு எதுவுமே புரியவில்லை. அவன் தான் யுவராஜன் நினைவில் இருக்கின்றான் தவிர, அவள் இப்போதும் சாதாரண நந்திதா தான்.
அவளோ, "என்னாச்சு?" என்று கேட்டுக் கொண்டே அவன் முகத்தை தாங்கி கன்னத்தில் முத்தம் பதித்தாள். அவனோ கண் மூடி அவள் முத்தத்தை அனுபவித்துக் கொண்டே ஆழ்ந்த மூச்செடுத்தவனுக்கு நிலை கொள்ளவே முடியவில்லை. அவளை மொத்தமாக ஆண்டு விட்டு விலகிப் படுத்தவன் விழிகளோ கூரையினூடு தெரிந்த நிலவில் படிய, அவன் இதழ்களோ, "எத்தனை யுகங்கள் தாண்டிய சங்கமம் இது?" என்று கேட்டான்.
அவனது தூய தமிழைக் கேட்டு சட்டெனெ திரும்பி அவனை விசித்திரமாக பார்த்தளுக்கோ அவன் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் என்னவோ செய்தது. அவன் அழுது இதுவரை அவள் பார்த்ததே இல்லை அல்லவா? அவன் கண்ணீர் அவள் மனதைப் பிசைய இருவருக்கும் இடையான சிறிய இடைவெளியை நிரப்பிக் கொண்டே அவனை நெருங்கி படுத்தவள் கரமோ அவன் மார்பில் வரையப்பட்டு இருந்த டாட்டூவில் பதிய, அதனை மெதுவாக வருடினாள்.
அவளுக்கோ நீண்ட நாட்களாகவே அதனை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அவா இருக்க, இன்று அவன் அருகாமையில் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, அவனோ கரத்தை அவளை சுற்றி நீட்டி தன்னுடன் அணைத்துக் கொண்டவனோ தனது மார்பில் கன்னத்தை வைத்துப் படுத்து இருந்தவளை விழிகள் தாழ்த்தி பார்த்தான். பழைய நினைவுகள் இவ்வளவு வலிக்குமா என்கின்ற உணர்வு தான் அவனுக்கு? இந்த நினைவுகள் வராமலே இருந்து இருக்க கூடாதா என்கின்ற தவிப்பு… ஆனாலும் விதி வலியது அல்லவா?
அப்படியே அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்தவன் தனது மார்பில் வருடிக் கொண்டு இருந்தவளை பார்த்து, "என்ன பண்ணனும்னு தோணுதோ பண்ணிடு" என்றான். அவளும் அந்த அனுமதிக்காக காத்துக் கொண்டு இருந்தவள் போலவே அவன் மார்பில் முத்தம் பதிக்க, அவனோ கண்களை மூடிக் கொண்டே அவள் ஸ்பரிசத்தை அனுபவித்துக் கொண்டே மோன நிலையில் இருக்க, அவளது ஒற்றை முத்தத்தின் இறுதியில் வேல்விழியாளை மீண்டும் வேட்டையாட ஆரம்பித்து இருந்தான் வேங்கையவன்.
மீண்டும் மீண்டும் கட்டுக்கட்டிடங்காத அவன் உணர்ச்சிகளுக்கு வடிகாலாகி போன, எதுவுமே தெரியாத பாவையவளோ தன்னவன் மார்பின் கதகதப்பில் துயின்று இருக்க, அவளை அணைத்துக் கொண்டே சந்திரனைப் பார்த்த யுவராஜனுக்கு தான் தூக்கம் தொலைந்து போனது. சில நினைவுகள் அவனை முற்றாக நொறுக்கி இருக்க, அவனோ இன்று முற்றும் கலைந்து ரெண்டறக் கலந்த கலவி நிலையில் தனது கோபம் ஆக்ரோஷம் திமிர் என்னும் அனைத்தையுமே சேர்த்து கலைந்து இருந்தான்.
இன்று வரை யுவராஜ் ஆக இருந்தவன் நாளை முதல் யுவராஜனாக…