ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

?? லவ் பன்னலாம பேபி...... ??

Status
Not open for further replies.

Shalu storys

Member
Wonderland writer
?? லவ் பன்னலாம பேபி........ ??

டீசர்........

"இங்க தான் அடி பட்டு இருக்கு..... " என்று அவளின் நெஞ்சின் மேல் கை வைத்து காட்ட......

அவனோ அவளின் விளையாட்டு தனத்தில் வந்த கோபத்தில் இடியென அவளின் கன்னத்தில் தன் கையை இறக்கி இருந்தான்........

அவளோ இதை சிறிதும் எதிர் பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த முகமே பறைசாற்றியது......

கன்னத்தில் கைவைத்து அவனை அவள் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்......

" இங்க பாரு இன்னொரு வாட்டி என் கண்னுள நீ பட்ட..... உன்னை என்ன பன்னுவேன் னு எனக்கே தெரியாது சொல்லிடேன்...... போடி இங்க இருந்து....... " என்று கை நீட்டி கர்ஜனையாக அவளை பார்த்துக் கூற.......

குழந்தை மனகுமரியவளோ அவனின் கர்ஜனை வார்த்தைகளில் பயந்து தான் போனாள்......

அவனை பார்த்து விம்மி அழுதுக் கொண்டே " நா நான் இனி இங்க வர மா மாட்டேன்....... ஆனா ஒரு ஒரு நாள் நீ நீங்க என்னை தே தேடி வருவிங்க....... அப்போ நான் உ உங்க கூட பேச மாட்டேன்..... நீங் நீங்க எப்டி என்னை இப்போ திட்டினிங்களோ அதே போ போல நானும் உங்கள திட்டுவேன்...... " என்று அழுதுக் கொண்டே குழந்தை போல் விம்மி விம்மி கூறியவள் அங்கு இருந்து ஓடிவிட்டாள்........


????????????????????

"அது உங்களுக்கு என்னை தெரியாது...... அதே மாதிரி எனக்கும் உங்கள தெரியாது..... ஆனாலும் ஐ.... " என்று இழுத்தாள்.....

அவள் சொல்ல வருவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்து எச்சிலை முழுங்கியவள்.......

" அது வந்து..... ஐ லவ் யூ...... " பட்டேன்று கூறிவிட்டாள்......ஶ

????????????????????

" இங்க பாரு பேபி நான் பொய் சொல்ல..... உண்மையா தான் கேட்குறேன் லவ் பன்னலமா...... "என்று கேட்க அவளுக்கு தான் தலை சுற்றி விட்டது.......

" பைத்தியமா சார் நீங்க.... இப்டி நீங்க என்க்கிட்ட கேக்குறது மட்டும் உங்க வைப்க்கு தெரிஞ்சா என்ன ஆகும் கொஞ்ச யோசிச்சி பாருங்க...... " என்று கரராக திட்ட......

அவனோ " இங்க பாரு உனக்கு அந்த கவலைலாம் தேவல..... என் வைப்கிட்ட நான் பேசிக்கிறேன்..... நீ ஓகே ஆ இல்லயானு மட்டும் சொல்லு..... " என்று சாதாரணமாக கூற......

அவளோ அவனை முகம் சுழித்து அருவருப்பாக பார்த்தவள் " சீ வெக்கமா இல்ல உங்கள இப்டிலாம் பேச...... நான் ஒன்னும் உங்கள மாதிரி கீழ்தரமானவ இல்ல என்னை பொருத்தவரை காதலிச்சா கல்யாணம் பன்னிகனும்...... " என்று ஆவேசமாக பேச........

அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே
" நானும் உன்னை கல்யாணம் பன்ன நினைச்சி தான் லவ்க்கு ஓகே சொன்னேன்..... ம்ம் சரி....... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கௌம்புறேன் நல்ல முடிவா சொல்லனும் என்ன பேபி......
லவ் பன்னலாம் னு சொல்லனும் புரிஞ்சிதா...... பாய்.... " என்று கொஞ்சல் போல் மிரட்டலாக கூறியவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.......

????????????????????

" என்ன டி சொன்ன உன்னை உரிமையா கூப்பிட கூடாதா...... எந்த உரிமைல திட்டுறனு வேற கேட்டில...... இப்போ சொல்லுற கேட்டுகோ நீ தான் என் பொண்டாட்டி இதோ இருக்க என் புள்ளைக்கி அம்மா.....
நான் தான் உன் புருஷன்...... என்ன புரிஞ்சிதா..... என்னை தவிற வேற எவனாலையும் உன்னை உரிமைக் கொண்டாட இயலாது....... உன் உடம்புக்கும் மனசுக்கும் முழு சொந்தகாரன்
நாதான்......." என்றவனோ அவனை பேய் அறைந்தாற் போல் பார்த்தவளின் பின்னங்கழுத்தை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவளின் இதழில் ஆழ்ந்த முத்தமொன்று இட்டான்......


? வாசகர்களே இனி உங்களுடன் இணைந்து இவர்களும் பயணிக்க போகிறார்கள்........?

தொடரும்......


(நைட் யூடி வரும் நட்பூக்களே..... ?)
 

Shalu storys

Member
Wonderland writer
? ?லவ் பன்னலாம பேபி.....??

Episode :- 01....

தனது வண்டியில் தார் சாலையில் பறந்து கொண்டிருந்தாள் அவள்......

தோள் வரை வளர்ந்து இருந்த முடியை விரித்து விட்டு இருந்ததில் காற்றில் பறந்து கொண்டிருந்தது.......

மீன் போன்ற இரு விழிகள், முகத்திற்கு ஏற்ப மூக்கு, செதுக்கி வைத்த கன்னங்கள், சிறிய அழகனா பார்ததும் போதை ஏற்றும் இதழ்கள் என்று பார்போரை ஒரு முறையேனும் திரும்பி பார்க்க செய்யும் அழகி அவள் ருத்ரவிஷா.........

ஆண்கள் பைக் ஓடினால் மட்டுமா கெத்து இதோ நிருபித்து விடாள் அல்லவா பெண்கள் பைக் ஒடினாலும் கெத்து என்று........ஶ

சிலரை வாய் பிளந்து பார்க்க வைக்கும் அளவிற்கு பறந்து கொண்டிருந்தாள் தன் வண்டியில்..........

மிகவும் தைரியசாலி தான் நினைததை செய்து முடிக்கும் பிடிவாதகாரி ஆனாலும் பாசமிக்கவள்.......

மற்றும் புத்தகங்களின் உயிர் பிரியை இரவில் தலையணை இல்லாமல் கூட தூங்குவாள் ஆனால் புத்தகம் வாசிக்காமல் தூங்க மாட்டாள்........

அவள் வந்து நின்றது என்னவோ தனது உயிர்தோழி ரேஷ்மா வீட்டில் தான்........

தலை கவசத்தை கழட்டியவள் " ரேஷூ...." என கத்தி கொண்டே உள்நுளைந்தாள்........

அங்கு இருந்து என்னவோ ரேஷ்மாவின் அன்னை சாரதா தான்.........

அவளை கண்ட சாரதா
" அட வா ருத்ரா...... இவ்ளோ சிக்கரம் வந்துட இன்னைக்கு எதாவது ஸ்பெஷல் ஆ....... " என்று ஒன்றை புருவம் உயர்த்தி கேட்க.......

" அட அப்டிலாம் ஒன்னும் இல்ல டார்லிங்..... இன்னைக்கு சண்டேல office லிவ்..... சோ மோர்னிங் மூவி போகலாம்னு பேலன் அது தான் சிக்கிரமா வந்துடேன்....... " என்று சொல்லிக் கொண்டே அவரை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்தாள்.........

சாரதாவும் அதே போல் அவளுக்கு திருப்பிக் கொடுத்தார்........

அப்போது அவள் தலை ஒரு பலமான கொட்டு ஒன்று விழுந்தது.......

" ஆஆஆ அம்மா " கத்தி கொண்டே திரும்பியவளுக்கு கண்களுக்கு தெரிந்தது என்வோ தலையை விரித்து போட்டு அரைதூகத்தில் னைட்டியுடன் அவளை உக்ரமாக முறைத்துக் கொண்டிருந்த அவள் சகி ரேஷ்மா தான்........

அவளை பார்தவள்
" அய்யோ பேய்ஈஈஈ...." என்று மீண்டும் கத்த.......

"சும்மா கத்தாதடி.... " என்று ரேஷ்மா போட்ட அதட்டலில் தான் வாய்மூடி அமைதியனாள்.......

" ஏய் நீ ஏன்டி காலைலயே இப்டி பேய் மாதிரி வந்து நிக்கிற........ " என்று சாரதா கேட்கவும்........

"ம்ம்ம் வேண்டுதல் இவ பண்ண வேலையால தான் நான் இப்டி நிக்கிற குரங்கு....... " என்று ருத்ராவை பார்த்துக் கோண்டே திட்ட.......

அவளோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்......

அதை பார்த்த சாரதா அம்மா உருகி விட.....

ரேஷ்மா வை பார்த்து
" ஏன்டி சும்மா அவ மேல பலிய போடுற பாவம் புள்ளை..... "என்று பரிந்துக் கொண்டு பேச.......

அதை பார்த்து தன் அம்மாவை முறைத்தவள்
" நானா பலி போடுறன் நீயே இதக்கேட்டு பாரு அப்போ புரியும்....... " என்று சொல்லிக் கொண்டே தன்போனை அம்மாவிடம் நீட்ட........

அதை தடுக்க முனைந்த ருத்ராவை பிடித்துக் கொண்டாள் ரேஷ்மா.......

அவரும் வாங்கி போனை தன் காதில் வைத்து கேகளானார்.........

அதில் சில வினாடிகள் அமைதியாக ஒரு இரைச்சலுடன் செல்ல திடிர் என்று பயங்கர சத்ததுடன் ஒரு பேய் கோரமாக சிரித்தது........

திடிர் என்று கேட்ட சத்ததில் சாரதா அம்மா பயந்து போனை கிழே விட்டு விட......

ரேஷ்மா " அய்யோ என் போன்....... " என்று பயந்து பிடிக்க முன்னே அந்த போனை பிடித்திருந்தது ஒரு வலிய கரம்..........

அது ரேஷ்மாவின் ஆர்ருயிர் சகோதரன் சரவணன்........

"யப்பா நல்ல வேலை போன் கீழ விழ இல்ல...... " என்று நெஞ்சில் கைவைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்..........

"ஒரு நிமிஷம் பயந்தே போய்டேன்....... என்ன கருமம் டி அது....... " என்று சாரதா திட்ட.......

" ஆ கண்டானியா அப்போ காலைலயே இத கேட்ட எனக்கு எப்டி இருந்து இருக்கும்........ எல்லா இத பிசாசு செஞ்ச வேலை தான்....... " என்று கடுப்பாக ருத்ராவை முறைக்க.......

இப்போது சாரதா அம்மாவும் சேர்ந்து அவளை செல்லமாக முறைத்து பார்த்தார்.......

அதை பார்த்து ருந்ரா "ஈஈஈஈ...... " என தன் முப்பத்திரண்டு பற்களும் தெரிய இளித்து வைத்தாள்........

" அட என்ன ஆள்ளாலுக்கு என் செல்லத்தப் பார்த்து முறைக்கிரிங்க..... " என்று கொஞ்சிக் கொண்டே ருத்ராவின் தோளில் கைப்போட்டுக் கொண்டான் அவன் சரவணன்........

"ம்ம்ம் என்னனு கேளு சரோ...... சும்மா சும்மா என்ன முறைக்குறாங்க......" என்று பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டாள்.........

அதை பார்த்து இருவரையும் முறைத்தவள் " மாஆ பாருமா இவன அவளுக்கு சபோர்ட் பன்னுறான்....... " என்று சினுங்கிக் கொண்டே தன் அம்மா இருந்த பக்கம் திரும்ப .....

இது தான் நடக்கும் என்று ஏற்கனவே தெரிந்த சாரதா அம்மா எப்போதோ அங்கு இருந்து எஸ் ஆகி இருந்தார்........

அவளோ அதை பார்த்து இன்னும் சினுங்க இவளை பார்த்து சாரவணனும் ருத்ராவும் வயிற்றை பிடித்துக் கொண்டு வெடித்து சிரித்தனர்........

அவளோ அவர்கள் இருவரையும் துரத்த இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் தெரித்து ஓடினர்.......

சிறிது நேரம் ஓடி விளையாடியவர்கள் களைத்து போய் இருக்கையில் அமர.....

அதற்கிடையில் சாரதா அம்மா காலை உணவை தயாரித்தவர் மூவரையும் சாப்பிட அழைக்க அவர்கள்லும் இருந்த களைப்பில் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தனர்.........

முதலில் சாப்பிட்டு எழுந்த சரவணன் தன் தாய் இருக்கையில் அமரவைத்து தன்கையால் தாய்க்கு உணவை பரிமாரினான்........

இதான் அவன் வீட்டில் விளையாட்டு தனமாக இருந்தாலும் தன் பொறுப்புகளை சரியாக செய்கூடியவன்.....

இதை எதையுமே கண்டுக்கொள்ளாத ரேஷ்மாவும் ருத்ராவும் சாப்பாட்டை வெலுத்துக் கட்டிக் கொண்டிருந்தனர்.......

அதை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவன் தன் அறைக்கு சென்றான் அழுவலகம் செல்ல தயாராகும் பொருட்டு.......

இரண்டே நிமிடத்தில் அறையில் இருந்து வெளியே வந்தவனிடம் முன்னர் இருந்த குறுப்பு தனமோ விளையாட்டு தனமோ கோஞ்சமும் இல்லை உதட்டில் சிறு சிரிப்பு கூட இல்லாமல் இறுகி இருந்தது........

தன் காக்கிசட்டை காலரைசீர் செய்துக் கொண்டே சாப்பிடும் இடத்திற்கு வந்தான்......

ஆம் அவன் அவர்கள் வசிக்கும் ஊரின் AC யாக பணியாற்றுகிறான்........

எந்தளவுக்கு விளையாட்டு தனமோ அந்தளவுக்கு கடுமையானவனும் கூட......

அவனை பார்த்த ரேஷ்மா
" வந்துடான் ஸ்டிக்ட் ஓபிசர்...... " வாய்க்குள் முனு முனுத்துக் கொள்ள.....ஶ

அதை கேட்டு ருத்ரா வாய்குள் சிரித்துக் கொண்டாள்......

இது எதை சட்டை செய்யாதவன் அவர்கள் இருவரையும் பார்த்து
" ஆமா நீங்க ரெண்டுபேரும் எங்க போகபோரிங்க...... " என்று கேட்க.......

அதற்கு " இன்னைக்கு லீவ்ல அண்ணா அது தான் சும்மா தியேட்டர்க்கு போகலாம்னு இருக்கோம்...... "என்று பவ்யமாக பதிலலிதாள் ருத்ரா.....

"அடிபாவி இது உலகமகா நடிப்புடா சாமி..... "என்று சாரதாவும் ரேஷ்மாவும் வாய்யில் கைவைத்து பார்தனர்.......

அவளோ அவர்களை பார்த்து சரவணனுக்கு தெரியாத வகையில் ஒற்றைக் கண்னை சிமிட்டினாள்.......

" பார்த்து போய்ட்டு வாங்க...... " என்றவன் தன் அம்மாவை பார்த்து "போய்டு வரேன் மா...... " என்று கூற.....

"சரிபா பார்த்து போய்ட்டுவா...... " என்க அவனும் தன் ஜீப்பில் புறப்பட்டிருந்தான்........

சிறிது நேரத்திலயே ரேஷ்மாவும் ருத்ராவும் கிளம்பி இருந்தனர்........

ருத்ராக்கு தெரியாது அங்கு தான் தன் வாழ்கையை மாற்ற போரவனை காணபோகிறோம் என்று.......

?? தொடரும்...... ??
 

Shalu storys

Member
Wonderland writer
??லவ் பன்னலாம பேபி.....??

Episode :- 02

சரவணன் தன் ஜீப்பில் ஸ்டேஷன் நோக்கி சென்று கொண்டிருந்தான்.......

அப்போது அவன் வண்டியை கடந்து ஒரு ஸ்கூடி சென்றது முதலில் கவனிக்காதவன் பின்னர் தான் கவனிதான்........

அதை பார்ததும் அவனின் முகத்தில் சிறு எரிச்சல் உண்டாது........

ஸ்டேஷன்னிற்கு வந்தடைந்தவன் தன் ஜீப்பை நிறுத்தி விட்டு உள்ளே நுளைய போக அப்போது அவனை வழிமறைத்து நின்றாள் ஒருத்தி........

அவள் ரித்திகா......

சரவணனை ஒன்றறை வருடமாக தூரத்தி தூரத்தி லவ் டாச்சர் பன்னுபவள்......

" ஹாய் சரா..... " என்று கையாட்டிக் கொண்டே தான் அணிதிருந்த தலைகவசத்தை கலட்டினாள்.......

சிறுபிள்ளை போல் அழகான மாசுமருவற்ற முகத்துடன் கண்களில் காதலுடன் அவனின் முன் நின்றிருந்தாள்.......

அவளின் குறை என்று சொல்ல போனால் அவளின் உயரம் மட்டும் நம்ம சரவணனின் மார்பு அளவிற்கு தான் இருப்பாள்.......

"ப்ச் என்ன வேணும் உனக்கு சொல்லி இருக்கன்ல ஸ்டேஷன்கலாம் வரகூடாதுனு....... " என்று சரவணன் முறைத்துக கொண்டே கேட்க........

அதலாம் காதில் வாங்க கூடியவாளா அவள்.....

" வாவ் இன்னைக்கு செம ஹென்சமா இருக்க சரா....... " என்று அவனை பார்த்துக் கொண்டே ரசனையாக கூற.......

அதை கேட்டு தலையில் அடித்துக் கொண்டவன்
" இதுலாம் திருந்தாத ஜென்மம்...... " முனுமுனு கொண்டே அவளை தான்டி ஸ்டேஷனுக்குள் நுளைந்துக் கொண்டான்.......

அவன் உள்நுளையும் முன் அவன் காதுகளுக்கு கேட்டது என்னவோ அவளின் " இப்ப தப்பிச்சிட்டதா நினைக்காதிங்க ஈவ்னிங் வருவேன்....ஶ" என்ற வார்தைகள் தான்........

??????????

ரேஷ்மாவும் ருத்ராவும் வண்டியில் சென்றுக் கொண்டிருந்தனர்........

அப்போது அவர்களை தான்டி வேகமாக சென்றது ஒரு டுகாட்டி பைக் ஒன்று......

" பாரு எவ்ளோ வேகமாக போராங்கனு...... எதுவும் ஆகம இருந்த சரி தான்......ஶ" என்று திட்டினாள் ரேஷ்மா......

" ஏய் உனக்கு என்னடி தெரியும் பைக் வேகமா ஒட்டுரதுட சுகம்...... எந்த ஒரு செயற்கை சத்தமும் இல்லமா இயற்கை சத்தம் மட்டும் அனுபவிக்க முடியும்....... வானத்துல பறவை பறக்குறது மாதிரி நாம சாலைல பறக்குற பிலிங் டி...... " ரசித்து ருத்ரா கூற.........

" ஏன்டி பைக் வேகமா போகுது எதும் ஆகிற கூடாதுனு மட்டும் தானடி சொன்ன அதுக்கு ஏன்டி இவ்ளோ பெரிய லெக்ச்சர்....." என்று அலுத்துக் கொண்டு ரேஷ்மா கேட்க........

" உன்கிட்ட போய் இதலாம் ரசிச்சி ரசிச்சி சொன்ன பாரு என்னை அடிக்குரதுகே புதுசா எதாச்சும் ஒன்னு கண்டுபிடிக்கனும் டி....... " என்று ருத்தரா கோபமாக கூறவும் சிக்னல் விழவும் சரியாக இருந்தது......

அவர்களை தாண்டி சென்ற டுகாட்டி பைக்கும் அவர்களுக்கு சற்று முன் தான் நின்று கொண்டிருந்தது.......

ருத்ரா தன் வண்டியை மெது மெதுவாக ஓட்டி சென்று எப்படியோ அந்த பைக்காரனின் பக்கமாக நிறுத்தி விட்டாள்.....

ரேஷ்மாவிடம் மெதுவாக
" ஏய் அந்ந வண்டிகாரன் இதோ பக்கத்துல தானே இருக்கான் முடிச்சா என்கிட்ட சொன்னத அவன்கிட்ட சொல்லு பாக்கலாம்........ " என்று ஒற்றைபுருவம் உயர்த்தி சொல்ல........

அதை கேட்டவளோ
" ஏன்டி நடுரோட்டு ஒருத்த கையால நான் அடிவாங்கனும் அத பார்க்க உனக்கு ஆசை அப்டினு சொல்ல வேண்டியது தானே...... அதவிட்டு ஏன் சுத்திவலைச்சி சொல்லுற...... " என்று மற்றவர்களுக்கு கேக்காமல் ருத்ராவிடம் எகிற.....ஶ

" ஏன்டி இப்டி பயந்து சாகுர...... இப்ப பாரு நான் எப்டி சொல்லுரனு...... " என்று திமிறாக கூறினாள்.......

" ஏய் வேணா டி அப்றம் பிரச்சினையாகிற போகுது..... " என்க அதை எதை கண்டுக் கொள்ளாதவள்.....

திரும்பி அவனை அழைக்க சென்ற நேரம் அவன் தனது தலை கவசத்தை கலற்றினான்........

அவனை பார்தவளோ அதே இடத்தில் உறைந்துவிட்டாள்.......

ரேஷ்மாகோ அவனை எங்கோ பார்தது போல் நினைவு ஆனால் எங்கு என்று தான் நினைவில்லை......

இருவரும் தத்தமது நினைவுகளில் உளன்று கொண்டிருக்க இங்கோ சிகனல் விழுந்து விட்டது.....

அந்த புதியவனோ அங்கு இருந்து பறந்து விட......

இவர்களே தான் அங்கு உறைந்து நின்றது......

பின்னாடி இருந்தவர்கள் ஹார்ன் அடித்து " யம்மா வண்டி எடுமா டைம் ஆச்சி....... " என்று திட்ட தான் சுயநினைவடைந்தனர்......

ருத்ராவோ தலையை உலுக்கிவிட்டு வண்டியை எடுத்தாள்.......

இருவரும் அந்த ஊரிலயே மிக பெரிய மால் ஒன்றுக்குள் நுளைந்தனர்.......

" ஏய் ஆமா தியேட்டர் எதுனானவது மாடில இருக்கு....... "என்று ரேஷ்மா அந்த மாலை அன்னார்ந்து பார்த்துக் கொண்டே கேட்க........

" 4வது மாடில இருக்கு...... " என்று பதிலளிதாள்.....

" ம்ம்ம்...... " என்று கூறிக் கொண்டே இருவரும் லிப்ட் டை நோக்கி சென்றனர்........

இருவரும் லிப்ட்டில் நுளைய அப்போது தான் ருத்ராவுக்கு ஒரு நினைவு வந்தது......

" ஸ்ஸ்ஸ் ஏய் நான் பைக்ல கீஆ மறந்து வச்சிட்டு வந்துடேன் நீ போ நான் எடுத்துட்டு வரேன்...... " என்று ரேஷ்மாவிடம் கூறிக் கோண்டே வேகமாக வாயிலை நோக்கி ஓடினாள்......

ரேஷ்மாவின் "ருத்ரா..." என்ற அழைப்பு காற்றோடு காற்றானது.......

அதற்கிடையில் லிப்ட் கதவும் முடிக்கொள்ள ருத்ராவும் அங்கு இருந்து பறந்து இருந்தாள்.....

பைக் பாக்கிங்கிற்குள் நுளைந்து அவசரமாக தன் வண்டி இருந்த இடத்தை அடைந்தவள் சாவி இருந்த இடத்தை பார்க்க அதோ காலியாக இருந்தது........

அபோது ருத்ராவின் செல்லுக்கு அழைப்பு வர எடுத்துப் பார்க்க அழைத்தது ரேஷ்மா.....

இவள் போனை எடுத்து காதில் வைத்ததுமே பொரிய ஆரம்பத்திவிட்டாள் அவள்.......

" நான் கூப்ட கூப்ட காது கேக்காத மாதிரி ஓடிட எறும மாடு....... நான் தானடி கீ ஆ எடுத்தன்...... மறந்து போச்சா...... எல்லாதிலயும் உனக்கு எப்பவும் அவசரம் தானா.....ஶ"என்று காட்டுகத்து கத்த......

ருத்ராவோ போனை கொஞ்சம் நகர்தியவள் சுட்டு விரலைவிட்டு காதை குடைது விட்டு போனை காதில் வைத்தாள் "ஸ்ஸ்ஸ் ஏன்டி கத்துற நீ கத்தின கத்துல் என் காதே போச்சி உனக்கு பக்கத்துல இருகக்வங்களுக்கு என்னாசோ....... " என்று கின்டலாக கூற......

அப்போது தான் ரேஷ்மா உணர்ந்தாள் தன் இருப்பது ஒரு பொது இடத்தில் என்று......

அக்கம் பக்கம் சுற்றி பார்க அவளை கடந்து சென்றவர்கள் அருகில் நின்றவர்கள் அனைவரும் அவளை ஒரு மாதிரி பார்த்து வைத்தனர்......ஶ

அதை கண்டு அசடுவலிந்தவள்.......

போனில் " உன்னால தான் சிக்ரமா வந்து தொலடி ஷோ ஆரம்பிக்க போகுது...... " என்று கூற......

" இதோ ஒரே செக்கன்ல வந்துரேன்....... " எனறவள்.....

அவசரமாக உள் நுளைந்து லிப்ட்ஐ நோக்கி வேகமாக ஓட அதில் எதிரில் வந்தவனை கவனிக்க தவரியவள் அவனை இடித்து விட்டாள்....

" சாரி சாரி..... " எனறு நிமிர்தவளோ மீண்டும் உறைந்து போனாள் அவள் சிக்னலில் பார்த்த அதே நெடியவன்........

அவனோ அவளை நிமிர்ந்து கூட பாராமல் " இட்ஸ் ஓகே.....ஶ" என்று கடந்து சென்று விட......

இங்கு நம் ருத்ராவோ ரேக்கை இல்லாமல் வானில் பறந்துக் கொண்டிருந்தாள்......

சிறிது நேரத்நில் சுயம் வந்தவள் அவசரமாக நான்காம் தளத்தை அடைந்தாள்........

இருவரும் ஆசுவாசமாக இருக்கை அமர படமும் ஆரம்பமானது......

நம்ம கலக்கல் காமடியன் சந்தானதின் 'டிக்கிலோனா' படம் போட பட்டது.......

ரேஷ்மாவோ படத்தில் கவனமாக ருத்ராவிட்ற்கு தான் அதில் ஒன்ற முடியவில்லை........

அவனை இரு தடவை எதர்ச்சியாக சந்திட்டு விட்டாள்.......

கதைகளில் அவள் வாசித்த படி அவனை இன்னும் ஒரு தடவை சந்திதாள் என்றாள் அவனுக்கும் இவளுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்க வேண்டும்.......
ஆம் அவள் கதைகளில் வாசிப்பதை அடிக்கடி தன் வஆழ்க்கையில் பொருத்திப் பார்ப்பாள்......

யோசித்துக் கொண்டிருந்தவள் ஏதோ தோன்ற அவசமாக தனக்கு மறு பக்கமாக திரும்பி பார்க்க அவளுக்கோ புஸ் என்றானது.......

பக்கத்தில் ஒரு பாட்டி தன் பொக்கைவாயில் பாப்கோனை போட்டு கொரித்துக் கொண்டிருந்தார்.......

அதை பார்தவளுக்கு தான் புஸ் என்றானது.....

தலை சிலுப்பிக் கொண்டவள் முயன்று தனது கவனத்தை படத்திற்குள் திருப்பி எடுத்தாள்.......

படம் முடிய இருவரும் வெளியே வந்தனர்......

ரேஷ்மா அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் ருத்ரா ஏதோ யோசனையில் இருப்பதை......

அதற்கான காரணத்தை வெளியே வந்ததும் ருதராவிடம் கேட்டவளுக்கோ அழுவதா சிரிப்பாதா என்று தெரியவில்லை.......

ருத்ரா கூறியுது இது தான்
" நாம வரும் போது பைக் வேகமா ஒருத்தன் ஓட்டிட்டு வந்தான்ல அவன் நான் இங்கயும் பார்தேன்......ஶ எதேர்ச்சியா இரண்டு தடவை பார்த்துடேன் அதே மாதிரி இந்த நாள் முடிய முன்னாடி இன்னும் ஒரு தடவை அவன பார்த்தன்ன அவனுகும் எனகும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருக்குனு அருத்தம்...... அப்டி நான் மட்டும் அவன பார்த்தன்னா..... அவன எனக்கு புடிச்சி இருக்கு சோ ப்ரோபோஸ் பன்னலாம்னு இருக்கேன்.......ஶ" என்று கூறி கொண்டே அவள் லிப்டுக்குள் நுளைந்து விட ரேஷ்மா தான் அவள் கூறியதை கேட்டு அங்கயே நின்று விட்டாள்......

இது தான் ருத்ரா எதவானலும் என்ன ஆகும் ஏது ஆகும் என்று யோசிக்க மாட்டாள் உடனே அதிரடியாக முடிவெடுத்து விடுவாள்......

இவளின் அதிரடியில் அடிக்கடி உறைந்து நிற்பது என்னவோ ரேஷ்மா தான்..... அதே போல் தான் இப்போதும்.....ஶ

சிறிது நேரத்தில் உணர்வு வந்தவள் அவசரமாக லிப்ட்டினுள் ஏறிக்கொண்டாள்.......

" ஏன்டி அடிக்கடி எனக்கு இப்டி அதிர்ச்சி கொடுக்குர...... லுசா டி நீ..... அவன ரெண்டு தடவை பார்தாங்களாம் இன்னோரு முறை பார்த்த பூர்வ ஜென்ம பந்தமாம் ப்ரோபோஸ் பன்ன போராங்களாம் எவனாச்சும் இப்டி பன்னுவானாடி..... இல்ல இல்ல யோசிக்க கூட மாட்டாங்க......" என்று மூச்சிமுட்ட பேசிமுடித்தவள் மூச்சி வாங்க.....ஶ

" மெதுவா மெதுவா...... " என்று அவளின் முதுகை வருடி விட ரேஷ்மாவோ கோபமாக அவளின் கையை தட்டிவிட்டாள்.......

" சரி சரி பேபி கூல் டௌன் உனக்கு தான் தெரியும்ல நான் இப்டிதானு..... அப்றம் ஏன் இவ்ளோ பேசி உன் டைம் வேஸ்ட் பன்னிக்குர.....ஶநீ சொன்னா மட்டும் நான் என்ன திருந்தாவா போறேன்..... " என்று ஏற்றதாழ்வுகளுடன் படுகேலியாக அவளின் தோளின் மேல் கை போட்டுக் கொண்டு கேட்க.....

அவளின் கையை மீண்டும் தட்டி விட்டவளோ " ஏதோ பன்னுடி அப்றம் ஏதாச்சும் பிரச்சினையாச்சினா என்கிட்ட சொல்ல வேணாம்...... " என்று ரேஷ்மா கூற.......

" பிரச்சினை ஆனா பார்த்துக்கலாம்..... " என்றாள் ருத்ரா கூலாக.......

இருவரும் பேசி கொண்டே கீழ்தளத்தை அடைந்திருக்க இருவரும் வேளியேர எண்ணிய நேரம் ருத்ராவின் கண்னில் சிக்கியது ஒரு புத்தக கடை......

அதை பார்தவள் " ரேஷ் ஓன் மினிட்..... இதோ வந்துறேன்...... " என்றவள் கண்கள் மின்ன அந்த கடைக்குள் நுளைந்திருந்தாள்.......

" இவள வச்சிக்கிட்டு கடவுளேஏஏ...... " என்று புலம்ப மட்டுமே முடிந்தது ரேஷ்மாவால்.......

அங்கு நிறைய புத்தகங்கள் வரிசையாக அடிக்கி வைக்கப்பட்டிருக்க.......

ஒவ்வொரு புத்தகங்களாக பார்த்துக் கொண்டு வந்தவளின் கண்ணில் விழுந்தது அந்த புத்தகம்......

" காரிகையவளின் காத்திருப்பு....... " என்ற புத்தகம் அவளை வெகுவாக கவர்ந்தது அந்த தலைப்பும் அதில் ஒரு பெண் ஜன்னல் ஓரத்தில் தூணில் தலை சாய்த்து இரவின் முழு நிலவை வெறித்துக் கொண்டிருப்பது போல் இருந்த புகைபடமும்.......

அதை கையில் எடுதவள் பில் போட்டுவிட்டு வெளியில் வர அவளை முறைத்துக் கொண்டிருந்தாள் ரேஷ்மா.......

அதை பார்த்து தன் 32 பற்களை காட்டி "ஈஈஈஈ....." என இழித்து வைத்தாள் ருத்ரா........

" சரியான புத்தக பேய் வந்து தொல டி....... " என்று திட்டிக் கொண்டே முன்னேர " சீ புகழாதடி எனக்கு வெக்க வெக்கமா வருது..... " கூறிக் கொண்டே நகத்தை கடித்துக் கொண்டு ரேஷ்மாவை பார்க்க.......

ரேஷ்மாவோ அவளின் இந்த சைகைகளை வேற்றுகிரக வாசியை பார்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.........

அதலாம் கவனிக்காத ருத்ராவோ சென்று வண்டியை உயிர்பித்தாள்.......

ரேஷ்மாவும் பின்னாடி ஏறிக்கொள்ள " ரேஷ் இப்பவே மதியானம் ஆகிருச்சி....... நாம சாப்ட்டு அப்டியே பீச்கு போய்ட்டு வீட்டுக்கு போகலாம பிலீஸ்...... " என்று கெஞ்சுதலாக ருத்ரா கேட்க.........

" நீ சொல்லுரது நல்லா தான் இருக்கு ஆனா அம்மா...... அம்மாவ விடு என் தங்ககட்டி அண்ணா..... அவன் விடுவான நம்ம ரெண்டு பேரையும்...... " என்று ஏளனமாக கேட்க.......

"அத பத்தி நீ ஏன்டி செல்லம் கவலை படுர அத நான் பார்துக்குறன் உனக்கு ஓகேவா சொல்லு....... " என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க .......

ரேஷ்மாவும் சம்மதமாக தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.......

அதில் உற்சாகமாகிய ருத்ரா வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.......

ஆனால் ருத்ரா அப்டி கேட்டதுதற்கு காரணமோ வேறு அதை ரேஷ்மாவும் அறிவாள்.......

ஆனால் இருவரும் அதை காட்டிக் கொள்ளவில்லை........

??????????

மதியம் ஆகா சாரதா அம்மா சமைத்ததை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு புறப்பட்டார்........

சிறிது நேரத்திலயே அங்கு வந்தவர் ஆட்டோவிற்கு காசு கொடுத்து விட்டு உள்நுளைய.........

அவரை அங்கு இருந்த அனைவருக்கும் தெரியும் என்பதால் ஸ்னேகமான புன்னகையோடு வரவேற்றனரே ஒளிய தடுக்கவில்லை.......

சாரதா அம்மாவும் யாரின் அனுமதியும் வாங்காமல் சரவணனின் அறைக்குள் நுளைந்துக் கொண்டார்.......

சரவணனோ ஏதோ திவிர சிந்தனையில் இருக்க சாரதா அம்மா வந்ததை கவனிக்கவில்லை.......

அவன் அருகில் வந்து அவர் அவனின் தலையை வருடவும் தான் சுயநினைவுக்கு வந்தான்........

"ம்மா எப்ப வந்த...... " என்று அவரை பார்த்து கொண்டே கேட்க.......

" இப்போதான் பா வந்தேன் நீ தான் நான் வந்ததை கூட கவனிக்காம ஏதோ யோசிச்சிட்டு இருந்த...... " என்க
" அதுலாம் ஒன்னும் இல்ல மா சும்மா கேஸ் விஷயமா தான்....... " என்றது தலையை ஆட்டியவர் அவனுக்கு உணவை எடுத்து வைத்தார்........

சரவணன் உண்டு கொண்டு இருக்க சாரதா அம்மாவோ அவனுக்கு இன்னும் உணவை எடுத்து வைத்துக் கொண்டே

" ஏன் பா இன்னைக்கும் அவ வந்தாளா....... " என்று கேட்க.......

சரவணனோ ஒரு கணம் அவரை நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் உணவில் கவனம் செலுத்திக் கொண்டே
" எவ...... " என்றான் தெரிந்தும் தெரியாதது போல்......

" நடிக்காத டா நான் உன் அம்மா..... அதன் டேய்லி காலைல உன்ன பார்க்குரதுகாகவே வந்து நிற்பாளே ஒரு பொண்ணு..... அந்த பொண்ண தான் கேட்குறேன்........ " என்க " ம்ம்ம் வந்தா இப்போ அதுக்கு என்ன..... எத்துனை தடவை வர வேணானு சொன்னாலும் கேக்கவே மாட்டிங்குறா....... பிடிவாதகாரி....... " என்று திட்ட.......

" ஏன்டா திட்டுர பாவம் டா அந்த பொண்னு...... ஓகே தான் சொல்லேன்...... " என்று சாராதா அம்மா கூற.......

" ம்மா ஒரு அம்மா மாதிரியா பேசுற....... உன்ன பத்தி தெரிச்சும் உன்கிட்ட இத சொன்ன பாரு என்ன சொல்லனும்........ " என்று திட்டியவன் பேச்சை மாற்றும் பொருட்டு
" அவளுங்க ரெண்டு பேரையும் ஆறு மணிக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து சேர சொல்லு....... " என்றவன் கை கழுவ எழுந்து செல்ல.......

சாரதா அம்மாவோ அவன் சொன்னாதிற்கு தலையாட்டியவரோ ஏதோ திவிர சிந்தனையில் இருந்தார்........

???????????????

ரேஷ்மாவும் ருத்ராவும் மதிய உணவை முடித்துக் கொண்டு நேராக சென்றது என்னவோ கடற்கரைக்கு தான்.......

மணலில் இருவரும் அமர்ந்திருக்க ருத்ராவின் கண்களோ அங்கும் இங்கும் அழைந்துக் கொண்டே இருந்தது........

அதை ரேஷ்மாவும் கவனித்தாள் பைக்கில் வரும் போதும் சரி உணவு உண்ணும் போதும் சரி அவளின் கண்களில் ஒரு தேடல் இருந்துக் கொண்டே இருந்தது........

அது எதற்கு என்று அவளும் அறிவாள்......

ருத்ராவை உலுக்கியவள்
" ஏய் என்ன தான்டி உன் பிரச்சானை..... யாரையோ தேடிட்டே இருக்க என்ஜோய் பன்னதானே வெளில வந்தோம் ஆனா நீ என்ஜோய் பன்னுற போலயே தெரிலயே என்ன தான் டி ஆச்சி...... " என்று சலிப்பாக கேட்க......

"ஏன் என்னனு உனக்கு தெரியாத என்ன.... ஏன்டி பொய் சொல்லுர....... அவன தான் தேடிட்டு இருக்கன்...... " என்றாள் அப்போது கண்களை அழைய விட்டுக் கொண்டே.......

" லூசா டி நீ எந்த நம்பிக்கைல அவன் இருப்பான்னு தேடிட்டு இருக்க....... " என்று கோபமாக கேட்க......

ரேஷ்மாவின் பக்கம் திரும்பியவள் " என் லவ் மேல உள்ள நம்பிக்கைல டி....... " என்றாள் ருத்ரா சாதாரணமாக......

ரேஷ்மாவோ வேகுவாக அதிர்ந்து போனாள்......

" என்னது லவ் ஆ......ஏய் ஓரு ரெண்டு தடவை அவன பார்த்து இருப்பிய...... அந்த ரெண்டு தடவைல உனக்கு லவ் வந்துருச்சா...... " என்று கத்தி கேட்க.......

"ஸ்ஸ்ஸ் ஏன் கத்துற லவ் அட் பெஸ்சேய்ட் கேள்வி பட்டது இல்லயா..... " என்றாள் அதற்கு ரேஷ்மா ஏதோ சொல்ல வர அதற்கு முன்னே ருத்ராவே பேச ஆரம்பித்தாள்.......

" புரிது நீ என்ன கேட்க வரனு..... அவன் யாரு என்ன..... ஏன் பெயர் கூட தெரியாது அப்றம் எப்டி லவ் னு கேட்க வர...... சரியா....... ஆனா லவ்க்கு அதுலாம் பார்க்க தெரியாதுல அது எப்போ வரும் எப்டி வரும்லா தெரியாது ஆனா வர வேண்டி நேரத்தில் வந்தே தீரும்..... எனக்கு இப்போ வந்து இருக்கு...... நீ கவலை படாத அவன நான் பார்க்காட்டியோ இல்லா அவன்கிட்ட லவ் சொல்லி அவன் எக்சப்ட் பன்னலனாளோ சோகமாகி ஆகி பீல் லாம் பன்ன மாட்டேன்........ கேஷ்வள தான் எடுத்துபன்...... சோ பயப்பிடாத....... பட் ஸ்டில் ஐம் இன் லவ்....... "என்றாள் மணலில் சாய்ந்து கொண்டே........

அவள் கூறியதை கேட்ட ரேஷ்மாவுக்கோ ' எல்லாம் நல்லதே நடக்கனும் ' என்று வேண்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது.......

நிறைய நேரம் அவர்கள் அங்கயே இருந்தனர்......

மாலை 6 மணியை நெருங்கவே ரேஷ்மா
" ருத்ரா வா போலாம் ரொம்ப லேட் ஆச்சி அண்ணா 6மணிக்கு முன்னாடி வர சொன்னான்...... ப்லிஸ்.... கிளம்பலாமா...." என்றது மனமே இல்லாமல் அங்கு இருந்த எழுந்துக் கொண்டாள்........

அவள் அவன் வரமால் இருந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்வேன் என்று வாய் வார்த்தையாக சொன்னாலும் மனதின் ஓரத்தில் அவனை பார்காதது லேசாக வலிக்கவே செய்தது.........

இருவரும் சிறிது தூரம் நடந்தும் தான் ருத்ரா இவ்வளவு நேரமாக காத்துக் கொண்டிருந்தவன் அவள் கண்ணில் பட்டான்......

ஆம் அந்த நெடியவன் அங்கு இருந்த தன் காரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தான்......

அவனை பார்த்த ருத்ராவுக்கோ மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.......

ரேஷ்மாவின் கையை பிடித்தவள் அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள் அந்த நெடியவனை நோக்கி......

இருவரும் சென்று அவன் முன் நிற்க அவனோ இருவரையும் கேள்வியாக பார்த்தான்.........

?? தொடரும்...... ??
 

Shalu storys

Member
Wonderland writer
?? லவ் பன்னலாம பேபி...... ??

Episode:- 03

இருவரையும் அவன் யார் என்ற விதமாக பார்க்க......

அதை புரிந்துக் கொண்டது போல் ருத்ரா " ஹாய் சார் நான் ருத்ரவிஷா இது என் பிரண்ட் ரேஷ்மா....... " என்க........

அவனும் யார் என்று தெரியாவிட்டாலும் மரியாதை நிமிர்தமாக ஓரு புன்சிரிப்பை உதிர்தவன்
" ஹாய் ஐம் யாதேஷ் தேவன்....... " என்று இருவரும் கை குழுக்கிக் கொண்டனர்.......

" நீங்க யாருனு எனக்கு தெரியல யாரு நீங்க....." யோசனையாக யாதேஷ் கேட்க.......

"அது உங்களுக்கு என்ன தெரியாது...... எனக்கும் உங்கள தெரியாது..... ஆனா ஐ.... " என்று இழுத்தவள் ரேஷ்மாவை ஒரு கணம் பார்க்க......

அவளோ வேர்வையில் குளித்திருந்தாள் பதற்றத்தில்......

அதை பார்த்து மானசிகமாக தலையில் அடித்துக் கொண்ட ருத்ரா அவள் சொல்ல வருவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த யாதேஷ் ஐ பார்த்து எச்சிலை முழுங்கியவள்.......

" ஐ லவ் யூ யாதேஷ் சார்...... " பட்டேன்று கூறிவிட்டாள்......ஶ

அதை கேட்டு ஒருகணம் திகைத்த யாதேஷ் மறுநிமிடம் வெடித்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன்.......

அதை பார்த்து பதற்றதில் நின்ற ரேஷ்மாவும் அவன் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்த ருத்ராவும் ஒன்னும புரியாமல முழித்தனர்........

அவனோ சிரிப்பை நிறுத்துவதாக இல்லை......

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த ரேஷ்மா "ஹலோ சார்..... எதுக்கு இப்போ இப்டி சிரிச்சிட்டு இருக்கிங்க...... அவ என்ன காமடியா பன்னா...... " எரிச்சலாக கேட்க........

அவனோ " இப்...... நான்..... வந்து.... அது..... " அவன் சிரிப்புக்கு இடையில் பேச நினைக்க அவனால் முடிந்தால் தானே அந்தளவுக்கு அவனால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை........

சில கணங்களுக்கு பிறகே கஷ்டப்பட்டு சிரிப்பை நிறுத்தினான்........

சிறிது நேரத்தில் பேய் அறைந்தாற் போல் ருத்ரா வர அவளுக்க பின்னால் ரேஷ்மாவோ எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் அவளுடன் அவர்கள் பைக் இருந்த இடத்திற்கு வந்தாள்......

????????????????????

" ஏய் உங்களதான் டி கேட்டு இருக்கேன்...... இரண்டு பேரும் ஏன் பேய் அறைச்ச மாதிரி உக்கார்ந்து இருக்கிங்க...... " என்று சாரதா அம்மா பொறுமை இழந்து கத்தி கேட்க......

அப்போதும் கூட அவர்கள் இருவரிடமும் எந்த ரியேக்ஷனும் இல்லை......

சரவணனோ அப்போது தான் வேலை முடிந்து வீட்டுக்குள் நுளைய அவன் காதுகளுக்கு கேட்டது என்னவோ சாரதா அம்மாவின் கடுப்பானா கத்தல் சத்தம் தான்.......

" என்ன மா என்னைக்கும் இல்லாமா இன்னைக்கு இப்டி கத்திட்டு இருக்க....." என்று கேட்டுக் கொண்டே தன் சட்டையின் மேல் இரு பட்டன்களை கழட்டிக் கொண்டே இருக்கையில் அமர......

அப்போது தான் கவனித்தான் அவனுக்கு எதிர் இருந்த இருவர் அமரும் இருக்கையில் ரேஷ்மாவும் ருத்ராவும் அசையாமல் அமர்ந்திருப்பதை.......

அதை பார்த்து புருவம் சுருக்கியவன் " என்னாச்சி மா இவளுங்களுக்கு இப்டி உக்கார்ந்து இருக்காளுங்க...... " என்று கேட்க......

" அததான் டா அவளுங்க வந்ததுல இருந்து நானும் கேட்டு இருக்கேன் வாய்ய திறக்க மாட்றாளுங்க..... " என்று கடுப்பாக கூறிக் கொண்டே சரவணனிற்கு பக்கதில் சலிப்பாக அமர்ந்தார்......

மாலை வீட்டிற்க்கு வந்து இருவரும் அந்த இருக்கை அமர்ந்தவர்கள் தான் சாரதா அம்மா எவ்வளவு அழைத்து பார்த்தும் எந்த ரியேக்ஷனும் இல்லை......

சிறிது நேரம் ஏதோ யோசனையாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்த சரவணன்
" இப்போ பாரு எப்டி அவளுங்கள சொல்ல வைக்குறேனு...... " என்று அக்கம் பக்கம் பார்தவன் தன் எதிரில் இருந்த தண்ணீர் குவளையை எடுத்து இருவர் தலையிலும் அபிஷேகம் செய்திருந்தான்.....

அதை பார்த்து சாரதா அம்மா பதறி " டேய் டேய் என்ன டா பன்னுற...... " என்று அவன் கையில் இருந்த குவளையை பறிக்க.....

அதற்கிடேயே அனைத்து நீரும் அவர்கள் தலையில் கவிழ்ந்திருந்தது......

தங்கள் தலை தண்ணீர் விழுகவே தான் இருவரும் சுயனினைவடைந்தனர்.......

" அய்யோ மழை மழை..... " என்று இருவரும் பதறி எழுந்தனர்......

" ஆமா வீட்டுக்குள்ள மழை பேய்து.... அம்மா குடையா எடும்மா...... " என்று கேலியாக கூற......

அப்போது தான் உணர்ந்தனர் தாங்கள் இருவரும் வீட்டினுள் இருப்பதை.......

இருவரும் சாரதா அம்மா மற்றும் சரவணனை பார்த்து "ஈஈஈஈ.... " என இளித்து வைக்க.....

அவர்களை கேவளமாக ஒரு பார்வை பார்த்தனர் சரவணனும் சாரதா அம்மாவும்.......

" ஆமா ஏன்டி இரண்டு பேரும் வந்ததுல இருந்து பேய் அறைச்ச மாதிரி உக்கார்ந்து இருந்திங்க..... " என்று சாரதா அம்மா கேட்க......

ரேஷ்மாவுக்கும் ருத்ராவிற்கும் மீண்டும் யாதேஷ்யிடம் பேசியது நினைவு வந்தது.......

ருத்ராவோ தலையில் கைவைத்து மீண்டும் அமர்ந்து விட......

ரேஷ்மாவோ தீடிர் என்று சிரிக்க ஆரம்பித்து விட்டாள்........

அவர்கள் இருவரையும் சரவணன் மற்றும் சாரதா அம்மா விசித்திரமாக பார்க்க.....

ரேஷ்மாவோ சிரிப்பை நிறுத்துவாதாக இல்லை....

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சரவணன் " ஏய் சீ சிரிக்குறத நிறுத்து..... பைத்தியம் கீத்தியம் புடிச்சிருச்சா...... " என்று கடுப்பாக கேட்க........

" இப்போ நான் மட்டும் என்ன நடந்துச்சினு சொன்னேனு வையே......நீ என்னை விட அதிகமா சிரிப்ப ஆமா......." என்றாள் கேலியாக......

" அப்டி என்ன டி நடந்தது....." என்று சாராதா அம்மா ஆர்வமாக கேட்க......

" அதுவாஆ..." என்றவள் சொல்ல வாய் திறக்க இவ்ளோ நேரம் அமைதியாக இருந்த ருத்ரா பாய்ந்து வந்து பொற்றினாள் ரேஷ்மாவின் வாயை........

"அதுலாம் ஒன்னுல்ல சும்மா..... இது லூசு உளருது....... " என்றாள் பதட்டமாக......

ரேஷ்மாவோ அவள் பிடியில் இருந்து விழக போராடிக் கொண்டே "ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்...... " எதோ சொல்ல அது தெரிவாக கேட்கவில்லை........

ருத்ராவின் பிடி அப்படி.....

இதை பார்த்த சரவணனுக்கு ஏதோ தவறாக பட......

"ஏய் அவள விடு....." என்றவன் ருத்ராவை பிடித்திழுத்து அவள் கைகள் இரண்டையும் அவன் கைக்குள் அடக்கிக் கொண்டவன்......

"ம்ம்ம் இப்போ சொல்லு..... என்ன நடந்துச்சி..... " என்றான் நிதானமாக......

ருத்ராவோ கைகளை உறுவ முயற்சி செய்துக் கொண்டே " அண்ணா அண்ணா நான் உன் செல்ல தங்கச்சிலான ப்ளீஸ்ணா விடேன்...... "எனறாள் கெஞ்சலாக.......

அவனோ "நீ சும்மா சொல்லி இருந்தாலே நான் விட்டு இருப்பேன் ஆனா நீ அண்ணானு சொன்னா பார்த்தியா அங்க மாட்டிட..... எதோ தில்லாலங்கடி வேலை பன்னி இருக்க அப்டி தானே..... சொல்லு என்ன பன்ன...... " என்றான் கொஞ்சம் அதட்டும் தொனியில்......

" நான் ஒன்னும பன்னல....." என்றாள் விடுபட போராடிக் கொண்டே போலிஸ் புடி அல்லவா அவளால் சிறிதும் தன் கையை அசைக்க முடியவில்லை.......

" ச்சு.... நீ ஒன்னும் சொல்ல தேவல..... ரேஷ்மா நீ சொல்லு என்ன நடந்துச்சி...... " என்று கேட்க.....

ரேஷ்மாவும் "இதோ இப்பவே சொல்லுறேன்....." என்றாள் அவசர பதிலாக......

அவளிற்கு பயம எங்கே ருத்ரா இப்டி லூசு தனமாக செய்து ஏதேனும் பிரச்சினையில் மாட்டி விடுவாள் என்று.....

தான் கண்டிச்சால் தான் கேட்க மாட்டிகுறாள் தன் அண்ணன் கண்டிச்சாலாவது கேட்கின்றாள என்று பார்க்கவே அதை சொல்லும் முடிவில் இருந்தாள்.......

இனி இதுபோல் எந்த பிரச்சினையிலையும் மாட்டிவிட கூடாது என்று வேண்டிக் கொண்டவள் இருவரிடமும் கூற ஆரம்பித்தாள்.......

தாங்கள் அவனை சிக்னலில் பார்த்து முதல் கடற்கரையில் அவனிடம் அவள் காதல் கூறியது வரை அனைத்தையும் கூறினாள்......

இதை கேட்ட சாரதா அம்மாகோ பக் என ஆனதென்றால் சரவணனிற்கோ கோவம் கோவமாக வந்தது.......

" ஏய் நீ என்ன லூசாடி...... எவனோ ஒருத்தானுக்கு லவ் சொல்லி இருக்க.... அதை வச்சி அவன் அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டானாகும்..... லூசு...... " என்று கோபமாக திட்டினான்......

சாராதா அம்மாவும் ஏதோ சொல்ல வர.....

அதற்கிடையில் ரேஷ்மாவே இடைமுகுந்து பேச ஆரம்பித்தாள்.....

" இருங்க இருங்க..... இது வெறும் ட்ரைலர் தான் மேயின் பிச்சர் இதுக்கு அப்றம் தான் அத கேட்டு இரண்டு பேரும் அவளை திட்டுங்க......ஶ" என்று அதற்கு பிறகு நடந்ததையும் கூற ஆரம்பித்தாள்.......

ருத்ராவோ அந்த நினைவில் சோகமாக அமர்ந்து இருந்தாள்......

ரேஷ்மாவோ அதை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டவள் கூற ஆரம்பித்து விட்டாள்......

????????????????????

யாதேஷ் சிரிப்பைக் கட்டுப்படுத்தியவன் ருத்ராவை பார்த்து.....

" Actually மிஸ்.ருத்ர.... ருத்ரவிஷா.... சரி தானே..... "என்றதும் ருத்ராவும் தலையை ஆட்ட......

" ஆஹ் ருத்ரவிஷா நீங்க சொன்னத கேட்டு நான் சிரிச்சதுக்கு ரியலி சாரி...... நீங்க விளையாட்டுக்கு சொல்லல உண்மையாதான் சொன்னிங்கனு உங்க கண் ஆ பார்த்து தெரிச்சிக்கிட்டேன்..... ஐயம் ஆ சைக்காலஜிஸ்ட்...... சோ உங்க மனச எனக்கு கொஞ்சம் புரிஞ்சிக்க முடிஞ்சிது...... பட் உங்க ப்ரோபோஸ்சல் ஆ என்னல ஏதுக்க முடியாது..... " என்று அவன் மேலும் பேச வர அதற்கிடையில் குறுக்கிட்டாள் ருத்ரா.......

" புரிது சார் யாரு எவனு தெரியாத பொண்ணு திடீர்னு லவ் சொன்ன ஏதுக்குறது கஷ்டம் தான் ஐ னோ....... நீங்க உடனயே பதில் சொல்லனு அப்டினு அவசியம் இல்ல....... நல்லா யோசிச்சி மெதுவா பதில் சொல்லுங்க......."என்று அவள் முந்திக்கொண்டு கூறினாள்......

அதைக் கேட்டு யாதேஷ்ற்கு தான் மீணடும் சிரிப்பு பீரிட்டது இருந்து கட்டுப்டுத்திக் கொண்டவன் ருத்ராவை பார்த்து "ஐயோ அது இல்லங்க நான் என்ன சொல்ல வர னா...... " என்று அவன் என்ன கூறி இருப்பானோ அதற்கிடையில் அவர்களுக்கு பக்கத்தில் இருந்த யாதேஷ் இன் கார் திறக்கப்பட்டது.......

அதில் சத்தம் வந்த திசையில் மூவரும் திரும்பி பார்க்க கார் கதவை திறந்துக் கொண்டு இறங்கினாள் 6 ஏ வயதாதன யஷ்வந்தி தேவிகா.......

இறங்கியவளோ நேராக "அப்பாஆ ஆ..... "என கத்திக் கொண்டே யாதேஷ் இன் கால்களைக் கட்டிக் கொண்டாள்.......

அவனோ "ஹேய் யச்சு மா கார்லயே இருக்க சொன்னேன் ல.... ஏன் கார் விட்டு இறங்குனிங்க...... " என்று செல்ல அதட்டலுடன் அவளை தன் கைகளில் தூக்கிக் கொண்டான்......

யஷ்வந்தியிற்கு பின்னாடியே ஒரு பெண்னும் அந்த காரில் இருந்து இறங்கியவள் அவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்........

இவ்வளவு நேரமாக இங்கு நடந்தவற்றை திகைத்து பார்த்துக் கொண்டிருந்த ருத்ராவும் ரேஷ்மாவும் யாதேஷ் இன் அழைப்பில் தான் சுயநினைவடைந்தனர்......

யாதேஷ் இன் அழைத்ததைக் கேட்டு தான் அந்த பெண்ணும் யாஷ்வந்தியும் கூட அப்போது தான் அவர்கள் இருவரையும் கவனித்தனர்.......

" மிஸ்.ருத்ரவிஷா இப்போ புரிஞ்சி இருக்கும் னு நினைக்கிறேன்...... இது என் பொண்ணு யஷ்வந்தி தேவிகா அது என் வைப்......" என்றான் அறிமுகம் படுத்தும் விதமாக.......

அந்த பெண்ணோ யாதேஷ் ஐ கேள்வியாக நோக்கியவள் "யாரு யாது இவங்க.... " என கேட்க அதற்கு யாதேஷ் ஏதோ கூற வர அதற்க்கிடையில் முந்திக்கொண்டு ருத்ரா "அது இவர்க்கிட்ட அபோய்ன்மேட் வாங்க வந்து இருக்கோம் ரொம்ப நாளா கிடைக்க ல இன்னைக்கு நேர்ல பார்த்தோம் அது தான் உடனே அவர்க்கிட்ட வந்து பேசினோம்...... "என்று வாய்க்கு வந்ததை உளரியவள் முழித்துக் கொண்டு நின்றாள்......

யாதேஷ் ஓ ஒரு கணம் அவளை திகைத்து பாரத்தவன் மறு கணம் அவள் அப்படி கூறியதற்கான காரணத்தையும் கண்டு கொண்டான் சைக்காலஜிஸ்ட் அல்லவா உடனே யூகித்து விட்டன்.......

சிறு புன்னகையை உதிர்த்தவன் மறுத்து ஒரு வார்த்தை பேசவில்லை.......

அந்த பெண்னும் அதை கேட்டு புன்னகையுடன் கடந்து விட்டாள்......

யஷ்வந்தியோ சிறிது நேரம் ரேஷ்மாவை உறுத்து விழித்தவள் " ரேஷ்ஷூ மிஸ்..... "என்றாள் மழழைக் கொஞ்சும் மொழியில் அதுவரை இங்கு நடந்தவற்றை வாயடைத்து பார்த்துக் கொண்டிருந்தவள் அவளின் அழைப்பில் நிமிர்ந்தவளோ அப்போது தான் ஒழுங்காக யஷ்வந்தியை பார்த்தாள்......

அவளை பார்த்த ரேஷ்மாவின் கண்களிளோ மின்னலின் பிரகாசம் "ஏ யஷ்ஷு...... "என்றாள் ஆனந்த குரலில்.....

மற்ற மூவரும் இவர்களின் சாபஷனைகளை புரியாமலீ பார்த்துக் கொண்டிருக்க யஷ்வந்தியோ "ப்பா நான் சொல்லுவேன் ல ரேஷ்ஷூ மிஸ் அது இவங்க தான்......" யாதேஷோ "ஓஓ... "என்று ஒரு கணம் அவளை பார்த்தவன் பார்வையை மாற்றிக் கொண்டான்........

ருத்ரா புரியாமல் ரேஷ்மாவை பார்க்க " அது நான் சொல்லுவேன் ல யஷ்சு னு ஒரு குட்டி பொண்ணு இருப்பா சிரியான வாலுனு அது இவ தான்...... "என்று விளக்கமாக கூறினாள் ரேஷ்மா.....

ருத்ராவோ "ஓஓஓ அது இந்த பொண்ணு தான..... ஹாய் யஷ்ஷூ......"என்றாள் ருத்ரா புன்னகையுடன் அதை பார்த்து யஷ்வந்தியும் "ஹாய் அக்கா...... " என்றாள் முத்துப்பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே.......

ருத்ராவோ அதின் அழகில் மயங்கிவள் அவளின் கன்னத்தை கிள்ளி சிறு முத்தம் ஒன்று பதித்தாள்......

யாதேஷோ யஷ்வந்தியை பார்த்து " என்ன யஷ்ஷு நீ ஸ்கூல் ல சேட்ட பன்னுறதா உன் மிஸ் உன்ன வாலு னு சொல்லுறாங்க....... "என்று கேட்க.......

அதற்கு யஷ்வந்தி ஏதோ கூற வர அதற்கிடையில் இடைமறித்த ரேஷ்மா "அய்யோ சார் அப்டிலாம் இல்ல அவ ரொம்ப நல்ல பொண்னு நான் செல்லமா அவள அப்டி சொல்லுவேன் அவ்ளோ தான்....... " என்றாள் அவசரமாக......

யஷ்வந்தும் சரி என தலையாட்டிக் கொண்டவன் அவர்கள் இருவரிடமும் சொல்லிவிட்டு தன் குடும்பத்துடன் புறப்பட்டு இருந்தான்........

அவர்கள் சென்றும் கூட அவர்கள் இருவராலும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.......

அதற்கு பிறகே மீதி நடந்தவை அனைத்தும்........

????????????????????

அனைத்தையும் கூறி முடித்த ரேஷ்மாவோ வந்த சிரிப்பை அடக்க பாடதபாடு பட்டுக் கொண்டு இருக்க......

சரவணனோ வாய்விட்டு நகைக ஆரம்பித்து விட்டான்......

அதற்கு மேல் பொறுக்க முடியாத சாரதா அம்மாவும் ரேஷ்மாவும் கூட அவனுடன் இணைந்துக் கொண்டார்கள்.......

ருத்ராவோ அனல் தெரிக்க அனைவரையும் பார்த்தவள் கோபமாக இருக்கையில் இருந்த எழுந்துக் கொண்டாள்.....

சாரதா அம்மாவோ சிரிப்பை நிறுத்தி விட மற்ற இருவரும் நிறுத்துவதாக இல்லை........

"ஏய் இரண்டுப் பேரும் சும்மா இருக்கிங்களா......." என்று சாரதா அம்மா அதட்டி பார்த்தும் பயன் இல்லை.......

அவர்கள் இருவரையும் முறைத்தவள் "நான் கோவமா கெளம்புற டார்லிங்....... "என்றவள் சாப்பாட்டு மேசையை நோக்கி செல்ல......

அதை பார்த்த சரவணன் "ஏய் அது வாசல் இல்ல வாசல் இந்த பக்கம்....." என்று வாசல் பக்கம் கை காட்ட......

அவளோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவள் அவனை பார்த்து "எங்களுக்கு தெரியும் நீங்க மூடுங்க..... " எனறவள் அங்கு அவளுக்கா சாரதா அம்மா பெட்டியில் போட்டு வைத்திருந்த உணவை எடுத்துக் கொண்டு வாசல் பக்கம் சென்றாள்.......

அதற்கு ரேஷ்மா "ஹேலோ கோபமா இருந்த அதையும் எடுக்க கூடாது..... " என்று கின்டல் பன்ன அவளோ அவளை பார்த்து உதட்டை சுழித்தவள் சாரதா அம்மாவிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு இருந்தாள்......

மீண்டும் அதை நினைத்து அவர்கள் நால்வரின் முகத்திலும் ஒரு புன்னகை அரும்பியது.......

தன் இருப்பிடத்திற்கு சென்று கொண்டிருந்த ருத்ராவையும் சேர்த்து.......

?? தொடரும்...... ??
 

Shalu storys

Member
Wonderland writer
?? லவ் பன்னலாம பேபி........ ??

Episode :- 04

தன் வண்டியை நிறுத்திவிட்டு 3வது மாடியில் இருக்கும் தன் ப்ளாட்டிற்குள் நுளைந்தவள் வீட்டில் இருக்கும் அனைத்து விளக்குகளையும் எறிய விட்டாள்.......

எப்போது அவளை வெறுமையாக வரவேற்கும் வீடு இன்று மட்டும் என்ன சொந்தபந்தங்களுடனா வரவேற்கும் அதே வெறுமையான வரவேற்பு தான்........

அதை பார்த்து அவளின் இதழ்களில் விரக்தியான புன்னகை.......

என்ன தான் அவள் வெளியில் துறுதுறு என குறுப்பாக சுற்றி திரிந்தாலும் அவளின் மனவேதனை அவள் மட்டுமே அறிவாள்.....

தனக்கெனா யாரும் இல்லை என அவள் வருந்தாத நாட்கள் இல்லை.....

அவளின் இந்த வருத்தம் ரேஷ்மாவிற்கு கூட தெரியாது காரணம் அவள் எப்போது தன் வேதனை முகத்தை மறைத்து வைத்துக் கொண்டு வெளியில் சந்தோஷமாக சுற்றி திரிவது.......

அவளின் இந்த முகத்தை இந்த வீட்டை தவிர வேற எவரும் அறிந்தது இல்லை.......

ஆம் ருத்ராவிஷா ஒரு அனாதை.......

சிறு வயதிலயே அவளின் பெற்றோர்கள் அவளை தூக்கி குப்பைத் தொண்டியில் வீசிவிட்டு செல்ல அவள் வளர்ந்தது என்னவோ ஆசிரமத்தில் தான்.......

ஏனோ என்றும் அவள் பெற்றோர்களை நினைத்து வருந்தியது இல்லை தன்னை வேண்டாம் என சென்றவர்கள் தனக்கும் வேண்டாம் என்ற வைராக்கியம்......

ஆனாலும் தனக்கென ஒருவர் கூட இல்லை என அவளின் மனதில் ஒரு ஓரத்தில் ஒரு வருத்தம் இருக்க தான் செய்தது........

அதனாலயே தான் காதலித்தே திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாள்......

யோசித்துக் கொண்டே இருந்தவள் நேரம் ஆகுவதை உணர்ந்து ப்ரஷ் ஆகி வந்தவள் சாரதா அம்மா தந்த உணவை உண்ண ஆரம்பித்தாள்.......

அவள் 10 ஆம் வகுப்பு ஸ்காலர்சிப்ல் படித்துக் கொண்டு இருந்த நேரமே அவளுக்கு ரேஷ்மா அறிமுகமனாள்........

பள்ளி மாற்றத்தில் அங்கு வந்த ரேஷ்மாவை ஏனோ ருத்ராவிற்கு பிடித்து விட்டது......

தான் உண்டு தன் வேலை உண்டு என தன்னை போல் இல்லாமல் அமைதியா இருப்பவளை பிடித்து விட்டது......

இதை தான் சொல்லுவார்கள் போல எதிர் எதிர்துருவம் ஈர்க்கபடும் என......

யாருடனும் அவ்வளவாக ஒன்றி பழகாதவள் ரேஷ்மாவிடம் தானே சென்று பேசினாள்.......

அப்போது ஆரம்பித்த நட்பு தான் இப்போது காதலாக தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.......

ஆம் காதல் தான் காதல் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் வருவது காதல் இல்லை.......

தன் தாய்,தந்தை கூட பிறந்தவர்கள் மேல் அளவுக்கு அதிகமாக வரும் பாசத்திற்கு பெயரும் காதல் தான் ருத்ராவிற்கு ரேஷ்மாவின் மேல் அந்த காதல் தான் உள்ளது.......

அவளால் தானே இன்று ருத்ராவிற்கு அண்ணான் தாய் என உறவுகள் கிடைத்து உள்ளது......

என்ன தான் அவளை அவர்கள் வீட்டுபிள்ளை போல் பார்த்தாலும் ருத்ராவிடம் ஒரு ஒதுக்கம் இருக்கவே செய்தது......

அது ஏன் என்று அவளிற்கே தெரியாது.......

அனைத்தையும் யோசித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தவள்.......

கையை கழுவி விட்டு வந்து படுக்கையில் சரிந்தாள்.......

இப்போது அவளின் என்னவோட்டம் யாதேஷ் ஐ பற்றியது......

தூரத்தில் இருந்து அவனை பார்த்த போது தோன்றிய பிடித்தமுணர்வு அவனை நெருக்கி அதை சொல்லும் போனா நேரம் தோன்றவில்லை.......

அப்போதே புரிந்துவிட்டது அது வெறும் ஈர்ப்பு என்று........

அதை நினைத்தும் தான் பல்பு வாங்கியதையும் நினைத்து சிரித்தவள் அப்படி நித்திராதேவி அணைத்துக் கொண்டது........

இங்கு ரேஷ்மாவோ அவளின் அறையில் இருந்து அந்த பௌர்னமி நிலவையே வெறித்துக் கொண்டிருந்தாள் தன் வாழ்வின் கருப்பு பக்கங்களை புரட்டிய படி........

இப்படியே ஒவ்வறுவரின் சிந்தனைக்ளுடன் அந்த நாள் முடிவடைய இனிதே புலர்ந்தது அந்த காலை பொழுத்து.........

காலையில் கண்விழித்த ருத்ராவிற்கோ நேற்று இருந்த மனவேதனைகள் எதுவுமே இல்லை அன்று மலர்ந்த மல்லிகை பூவாக புத்துணர்வுடன் அமைதியாக காணப்பட்டது.......

அது தான் ருத்ரா என்ன வேணா நடக்கடும் நான் சந்தோஷமாக இருப்பேன் என்ற வாக்கியதை பின் பற்றுபவள்.......

எழுந்து ப்ரஷ் ஆகி வந்தவள் சமயலறைக்கு சென்று ஒரு காபியை தயாரித்தவள் அவளின் பெல்கனியில் வந்து வெளியே தெரியும் இயற்கை காட்சிகளை ரசித்தவாறே காபியை ருசித்துக் குடித்தாள்......

சிறிது நேரத்தில் குளித்து முடித்தவள் ஆபிஸ்ற்கு செல்ல தயாராகி வந்தவள்.......

தன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பிட்டாள் தன் தோழி வீட்டிற்கு.......

அங்கு சென்று மூவரிடமும் ஒரு அடன்னஸ் போட்டவள் காலை உணவையும் முடித்துக் கொண்டு சாரதா அம்மா மற்றும் சரவணனிடம் விடை பெற்றவள்........

ரேஷ்மாவையும் ஏற்றிக் கொண்டு அவள் படிப்பித்துக் கொடுக்கும் பாலர்பள்ளியில் அவளை இறக்கி விட்டவள் தன் ஆபிஸ் ஐ நோக்கி வண்டியை பறக்கவிட்டிருந்தாள்.......

20 நிமிட பயணத்தை 10தே நிமிடத்தில் கடந்து அவளின் ஆபிஸ் பாக்கிங்கில் வண்டியை நிறுத்தியவள் தன் வண்டியின் சாவியை பையில் வைத்தாள்.......

நீல நிற டாப்பும் வெள்ளை நிற லேகின்ஸ்வும் அணிந்து இருந்தவள் தன் ஐடி காட்டை அணிந்துக் கொண்டு கொஞ்சம் திமிறான நிமிர்வுடன் ஆபிஸ்ற்குள் நுளைந்தாள்.......

அவள் தான் அங்கே HR அவளை கடந்து செல்பவர்கள் என அனைவரும் அவளுக்கு காலை வணக்கம் சொல்ல அவளும் பதிலுக்கு சொல்லியவள் தன் கேபினிற்குள் நுளைந்துக் கொண்டாள்......

மதியம் வரை நிமிர முடியாத வேலையாக இருக்க இருந்தும் சலிப்பு தட்டாமல் அனைத்தையும் செய்தாள்........

அவள் செய்யும் வேலையில் அவளுக்கு இருக்கும் பற்று அது.......

மதிய இடைவேளை வர ஆபிஸ் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே முடித்தவள்......

தன் கேபினில் இருந்து வேலை பார்க்க சிறிது நேரத்தில் அவளிடம் அனுமதி கேட்டு நுளைந்தார் அங்கு வேலை பார்க்கும் ஆபிஸ் பாய் மணி.........

அவரை பார்த்த ருத்ரா "சொல்லுங்க அண்ணா என்ன விஷயம்...... "என்று கேட்க......

"ருத்ராம்மா உங்கள பார்க்க யாரோ வந்து இருக்காங்க...... வெளிய ரிஷப்ஷன் ல உக்கார வச்சி இருக்கேன்....ஶ உள்ள கூப்டாவா இல்ல வெளில வந்து நீங்களே பாக்குறிங்களாம்மா...." என்று மூச்சி விடாமல் பேசி முடிச்சி அவளை கேள்வியோடு நோக்க.....ஶ

அவள் அவரை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவள் "மெதுவா மெதுவா என்னணா அவள்ளோ அவசரம்...... " சிறு கண்புடன் கூறியவள் அவரை பார்த்து "எத்துன வாட்டி சொல்லி இருக்கேன் என்ன அம்மானு கூப்ட கூடாதுனு...... "என்று பொய் கோபத்துடன் கேட்க.......

அவரோ " பின்ன மேடம்னும் கூப்ட வேணாம் னு சொல்லுறிங்க...... அம்மானும் கூப்ட வேணாம் னா வேற எப்டி கூப்றது..... "என்றார் வெள்ளந்தியாக.....

அதை பார்த்து புன்னகைத்தவள் "சும்மா ருத்ரா னு கூப்டுங்க....."
என சாதாரணமாக கூற.....

அதை மறுத்தவர் "நீங்க எவ்ளோ பெரிய வேலை ல இருக்கிங்க..... உங்கள மரியாதை இல்லாம கூப்டலாம...... "என்று கேட்க.....

"எவ்ளோ பெரிய வேலை ல இருந்தா என்ன..... உங்கள விட வயசுல நான் சின்னவதானே....... "என்று கேட்க......

" அது உங்க மனசும்மா..... உங்க பதவிக்கு நான் மரியாதை தரனும்ல...... அத தடுக்காதிங்க....... நான் இப்டியே உங்கள கூப்டுறேன்ம்மா..... "என்று கெஞ்சலாக கேட்க......

அதற்கு மேல் அவரை வற்புருத்த விரும்பாதவள்
" சரிண்ணா அப்றம் உங்க இஷ்டம்...... "என்றாள் அவரின் பேச்சிற்கு மரியாதை அளித்து.......

அவரும் அவளை பார்த்து புன்னகைத்தவர் வெளியில் செல்ல அவருக்கு பின்னாடியே அவளும் வெளியேரி இருந்தாள் தன்னை காண வந்தது யாரு என அறியும் பொருட்டு......

வெளிய வந்து பார்த்தவளுக்கோ அதிர்ச்சி அவளை பார்க்க வந்திருந்தது வேறு யாரும் அல்ல யாதேஷ் தேவனே........

அவனை பார்த்து புருவம் நெரித்தவள் நன்றாக பார்க்க வந்திருந்தது அவனே தான்........

அவனிடம் சென்றவள்
" வட் ஆ சப்ரைஸ் யாதேஷ் சார் இங்க என்ன பன்னுறிங்க..... என்னை பார்க்க தான் வந்திங்களா....... என்ன விஷயம்..... " என்று அவனுக்கு பேச இடைவெளி இல்லாமல் அவளே பேச அதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே எழுந்தவன் "நீங்க எப்பவும் இப்டி தான மத்தவங்க பேச டைம் கொடுக்க மாட்டிங்களா......" என்று கேலியாக கேட்க.......

அதை கேட்டு நாக்கை கட்டித்து ஒற்றை கண்னை மூடி அவனை பார்க்க......

அதை பார்த்து சொக்கி தான் போனான் யாதேஷ் தேவன்.......

அவளையே ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தவன் "அது உங்கள தான் பார்க்க வந்தேன்..... கொஞ்சம் பெர்ஸ்னலா பேசனும் நீங்க ப்ரீயா......ஶ"என்று கேட்க......

அவன் ரசனை பார்வையை கவனிக்க தவறியவள் "ஆஹ் நான் இப்போ ப்ரீ தான்...... பக்கத்துல ஒரு பார்க் இருக்கு அங்க போய் பேசலாம...... " என்று கேட்க அவனும் தலையாட்டி பொம்மையாக தலையாட்டினான்........

ருத்ரா அந்த பூங்காவை ரசித்துக் கொண்டிருக்க அவளுக்கு எதிரே மரத்தில் சாய்ந்து நின்று அவளை தான் ரசித்துக் கொண்டிருந்தான் யாதேஷ்........

அவளோ இப்போது அவனை திரும்பி பார்த்தவள் " சொல்லுங்க யாதேஷ் சார்..... ஏதோ பேசனும் னு சொன்னிங்க என்ன விஷயம்....... " என்று கேட்க......

அவனோ அவளின் கண்களை நேருக்கு நேராக பார்த்தவன் " ருத்ரா....." என்று அழைக்க அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.....

அவனோ " நானும் உங்கள போல தான் எதுவா இருந்தாலும் சுத்தி வலைக்காம நேரடியா சொல்லிருவன்...... "என்க அவளும் அவனை புரியாத பாவத்துடன் பார்த்துக் கொண்டிருக்க " நீங்க நேத்து சொன்னத வீட்டுல போய் யோசிச்சி பார்த்த சோ அத வெச்சி ஒரு முடிவு எடுத்து இருக்கேன் அது என்ன னா உன் லவ்க்கு ஓகே சொல்லலாம் னு....... " என்று நிறுத்த அவளோ அவனை தான் திகைத்து கண் முழியலாம் வெளியே வந்து விடும் அளவுக்கு பார்த்துக் கொண்டிருந்தாள்.......

" என்ன நான் சொன்னது புரிஞ்சிதா இல்லையா...... " என்று ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்க அவளோ தலையை நாலாபுறமும் ஆட்டினாள்........

அவனோ நமட்டுசிரிப்பு சிரித்தவன் " ஓகே இப்போ உனக்கு புரிர போல சொல்லுறேன் நல்லா கேட்டுக....... நீ நேத்து எனக்கு லவ் ப்ரோபோஸ் பன்னதுக்கு நான் இப்போ ஓகே சொல்லுறேன்...... இப்போ சொல்லு லவ் பன்னலமா பேபி......" என்று கேள்வியோடு அவன் நிறுத்த அவளோ கண்கள் சிவக்க அவனை கண்களால் எரித்துக் கொண்டிருந்தாள் அவனை.........

" என்ன விளையாடுறிங்களா சார்...... என்னை பார்த்தா பைத்தியம் போல இருக்கா...... நேத்து பார்த்தேன் புடிச்சி இருந்துச்சி மனசுல பட்டத சொன்னேன்..... நீங்க கல்யாணம் ஆனவர் னு தெரிஞ்சி இருக்க உங்க ஏர்எடுத்துக் கூட பார்த்து இருக்க மாட்டேன்...... " என்று அவனை பார்த்து பொரிந்து தள்ள.......

"ஸ்ஸ்ஸ் ..... " என்று காதை சுண்டுவிரல் கொண்டு குடைந்தவன்
" ஏன் இவ்ளோ டென்ஷன் பேபி...... இப்பவும் சொல்லுறன்.... ஐம் இன் லவ் வித் யூ...... " என்று அவளை பார்த்து கூற......

அவளுக்கு தான் பத்திக் கொண்டு வந்தது.....

பிறகு அவளுக்கு என்ன தோன்றியதோ சுற்றும் முற்றும் எதை தேடினாள்.....

அதை பார்த்து அவனும் அவள் திரும்பிய திசை அனைத்தும் திரும்பியவன் " என்ன தேடுற பேபி..... " என்று கேட்க.....

அவளோ " இங்க பாருங்க இந்த பேபி கிபினு சொன்னிங்க அப்றம் நடக்குறதே வேற...... " ஆள் காட்டி விரலை நீட்டி மிரட்டியவள் சற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே " இல்ல இங்க எதாச்சும் கெமரா இருக்கானு பாக்குறேன்......"என்றாள் தேடிக் கொண்டே......

அவனோ அவளை நெற்றி சுழித்து பார்க்க அதற்கு அவள் "அது ஒன்னு இல்ல சார் நீங்க எதாச்சும் ப்ராங் சூட் நடத்துறிங்களா னு பார்த்தேன்...... " என்றாள் அப்போதும் நம்ப மறுத்தவளாக......

அதை கேட்டு முத்துப்பற்கள் தெரிய வாய் விட்டு சிரித்தவனோ
" இங்க பாரு பேபி நான் பொய் சொல்ல..... உண்மையா தான் கேட்குறேன் லவ் பன்னலமா...... "என்று கேட்க அவளுக்கு தான் தலை சுற்றலே வந்து விட்டது.......

" பைத்தியமா சார் நீங்க.... இப்டி நீங்க என்க்கிட்ட கேக்குறது மட்டும் உங்க வைப்க்கு தெரிஞ்சா என்ன ஆகும் கொஞ்ச யோசிச்சி பாருங்க...... " என்று கரராக திட்ட......

அவனோ " இங்க பாரு உனக்கு அந்த கவலைலாம் தேவல..... என் வைப்கிட்ட நான் பேசிக்கிறேன்..... நீ ஓகே ஆ இல்லயானு மட்டும் சொல்லு..... " என்று சாதாரணமாக கூற......

அவளோ அவனை முகம் சுழித்து பார்த்தவள் " சீ வெக்கமா இல்ல உங்கள இப்டிலாம் பேச...... நான் ஒன்னும் உங்கள மாதிரி காதலிக்கிறது இல்ல என்னை பொருத்தவரை காதலிச்சா கல்யாணம் பன்னிகனும்...... " என்று ஆவேசமாக பேச........

அவனோ அவளை தீர்க்கமாக பார்த்தவன்
" நானும் உன்ன கல்யாணம் பன்ன நினைச்சி தான் லவ்க்கு ஓகே சொன்னேன்..... ம்ம் ஓகே....... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கௌம்புறேன் நல்ல முடிவா சொல்லு..... என்ன பேபி லவ் பன்னலாம் னு சொல்லனும் ஓகே...... " என்று கொஞ்சல் போல் மிரட்டலாக கூறியவன் அவளின் கன்னதை கிள்ளி விட்டு தன் கூளர்ஸ் ஐ ஸ்டைலாக கண்களில் போட்டவன் அங்கு இருந்து சென்றான் வேக எட்டுகளுடன்.........

அவளோ வாய்யடைத்துப் போய் மூச்சி முட்ட அவனை தான் பேர்ரதிர்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்........

?? தொடரும்...... ??
 
Status
Not open for further replies.
Top