ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மௌன யுத்தம் (fan fiction) - கதை திரி

Status
Not open for further replies.

sana sana

Member
Wonderland writer
மௌன யுத்தம் fanfiction - 1


1987 ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம். நான்காம் நாள். அன்று வெள்ளிக்கிழமை. வெள்ளி என்றாலே அந்த அரண்மனையில் பொதுவாய் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.

அரண்மனையின் முதலாளி அருணாச்சலத்தின் மனைவி சந்தனலட்சுமி காலை பூஜையுடன் தான் வேலையை ஆரம்பிப்பார்.

இன்று புதிதாக அவரது பிறந்தநாளும் சேர்ந்து கொள்ள வீடு விழாக்கோலம் தான். அவரது பிறந்தநாளுக்கு ஊர் மக்களுக்கு விருந்து வைப்பது வழக்கம். அந்த குடும்பத்தில் எல்லோரின் பிறந்த நாளுக்குமே அது தான் முறை.

இன்றும் ஊர் மக்களுக்கு விருந்து தயாராகிக் கொண்டிருக்க அதை வெறித்துப்பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஒருவன்.

"என்ன மாப்பிள்ள இங்க நிக்கிறீங்க?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் நந்தகோபாலன்.

"இங்க பாரு மச்சான்.. எவன் வீட்டு சொத்த எவன் எவனோ திண்ணுறான். வயிறு எரியுது மச்சான்"

"விடு மச்சான். என்னைக்கா இருந்தாலும் இந்த சொத்து நமக்கு தான். இருக்க வரை அனுபவிச்சுட்டு போகட்டும்."

"இதுங்க எப்ப செத்து? எப்ப நம்ம கைக்கு சொத்து வந்து?"

"அதுக்கு தான் நான் ஒரு வேலை பார்த்து வச்சுருக்கேன்"

தயாநிதி தன் மனைவி காமாட்சியின் அண்ணன் நந்தகோபாலனை ஆச்சரியமாக திரும்பி பார்த்தான்.

"என்ன மச்சான் சொல்லுற?"

"இங்க பேசி எவன் காதுலயாச்சும் விழுந்து வச்சுடும். அப்படி போய் பேசுவோம் வா" என்று கூறி இழுத்துக் கொண்டு சென்றார்.

"ராஜ்.. ஓடாதடா.. நில்லு.."

கத்திக் கொண்டே பின்னால் ஓடினான் கிரிதரன்.

கிரிதரன் நந்தகோபாலனின் மூத்த மகன்.

"என்னை பிடி பார்க்கலாம்" என்று விளையாட்டு காட்டிக் கொண்டு ஓடினான் திவ்யராஜ்.

கிரிதரனுக்கு ஆறு வயதே ஆகியிருக்க அதே வயது தான் திவ்யராஜுக்கும்.

கிரிதரன் துரத்துகிறானா? என்று திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடியவன் சமையல் செய்யும் இடத்திற்கு வந்து கல்தட்டி விழப்போக வேலை செய்பவன் பிடித்து விட்டான்.

"பார்த்து சின்ன முதலாளி விழுந்துடாதீங்க" என்று பக்குவமாய் கூறி தூக்கி நிறுத்தியவன் துரத்தி வந்த கிரிதரனை பார்த்து முறைத்தான்.

"இப்படித்தான் துரத்திட்டு வர்ரதா? அடி பட்டுருந்தா என்ன ஆகியிருக்கும்? அறிவில்லையா உனக்கு?" என்று கிரிதரனை திட்ட ஆரம்பிக்க "கிரிய திட்டாதீங்க" என்று திவ்யராஜ் கத்தினான்.

"இல்ல சின்ன முதலாளி.."

"நீங்க மோசம்.. கிரி வா நாம வேற பக்கம் போகலாம்" என்றவன் அவனை இழுத்துக் கொண்டு சென்று விட்டான்.

அறைக்குள் கதவை அடைத்துக் கொண்டு தன் திட்டத்தை விளக்கினான் நந்தகோபாலன்.

"மச்சான்.. பழிக்குமா?"

"நூறு சதவீதம் பழிக்கும். நம்ம பையன் வேலை அப்படி. ராத்திரியே வயர்ர அத்து விட சொல்லிட்டேன். இந்த தடவ அவன் பொழைக்க மாட்டான்."

"அவன் செத்தா மட்டும் பத்தாதது அவன் பெத்த புள்ளைங்களும் சாகனும்"

"குடும்பமா தான கிளம்புவாங்க? திரும்பி வரவே மாட்டாங்க. கவலையே படாத"

நந்தகோபாலன் வன்மமாக சிரிக்க தயாநிதி தானும் சிரித்துக் கொண்டான்.

விருந்து முடிந்ததும் பக்கத்து ஊரில் இருக்கும் சந்தனலட்சுமியின் பிறந்த ஊருக்கு குடும்பத்துடன் காரில் கிளம்பினார் அருணாச்சலம்.

"அப்பா கிரியும் வரட்டும்பா" என்று கேட்டு அடம்பிடித்தான் திவ்யராஜ்.

"அவன இன்னொரு நாள் கூட்டிட்டு போகலாம். இப்ப கார்ல இடமில்ல. வேணாம்பா" என்று தடுத்து விட்டான் நந்தகோபாலன்.

சாகப்போகும் போது மகனை உடன் அனுப்ப அவன் பைத்தியமா என்ன?

எப்போதும் கிரிதரனையும் உடனழைத்துச் செல்லும் அருணாச்சலம் கூட இன்று அவனை அழைக்கவில்லை. காரணம் நந்தகோபாலனின் மீது இருந்த கோபம்.

பணத்தை திருடியிருக்கிறான். மாட்டிக் கொண்டபோது எதுவுமே தெரியாது என்று அடித்துப் பேசினான். ஆனால் அருணாச்சலத்திற்கு சந்தேகம் தீரவில்லை. தீர விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்.

இன்று நல்ல நாள் என்பதால் வேண்டாத யோசனைகளை ஒதுக்கி வைத்து விட்டு தன் மூத்த மகன் திவ்யராஜுடன் அடுத்தடுத்து பிறந்த இரண்டு மகன்களுடன் மனைவியின் பிறந்த ஊருக்கு புறப்பட்டார்.

கிரி வராததால் திவ்யராஜ் முகத்தை தூக்கிக் கொண்டு ஓரமாக அமர்ந்து விட மற்ற மகன்களின் சேட்டையை ரசித்துக் கொண்டே சென்றனர்.

ஊர் எல்லையை தாண்டும் போதே முன்னால் வந்த பேருந்தில் மோதப்போனது கார். காரை ஓட்டியவன் பிரேக்கை அழுத்தப்பார்க்க முடியவில்லை. பதட்டத்தில் தாறுமாறாக ஓடிய கார் கடைசியில் சென்று பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

மொத்த குடும்பத்தின் அலறல் அந்த இடத்தை அதிர வைத்தது. ஆனால் எல்லாம் சில மணித்துளிகள் தான். அத்தனை பேரின் சத்தமும் அடங்கி விட திவ்யராஜின் அழுகுரல் மட்டும் ஈனஸ்வரத்தில் கேட்டுக் கொண்டிருந்தது.

கவிழ்ந்து கிடந்த காரும் உள்ளே இருந்து கேட்ட அழுகுரலும் பக்கத்தில் இருந்தவர்களை ஈர்க்க உடனே உதவிக்கு வந்தனர்.

உள்ளே இருந்தவர்களை வெளியே எடுத்து அரக்கப்பரக்க அருகே இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். சந்தானலட்சுமி மற்றும் மற்ற குழந்தைகளும் இறந்து போயிருக்க திவ்யாராஜும் அருணாச்சலமும் உயிரோடு தான் இருந்தனர்.

அவர்களை மட்டும் பெரிய மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு சென்றனர்.

அங்கு திவ்யராஜ் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட அருணாச்சலத்தை உயிரோடு கொண்டு வர முடியவில்லை.

சாகும் முன்பு கண்ணை திறந்து பார்த்த அருணாச்சலம் "என்.. புள்ளை...ங்கள.. காப்பாத்துங்க.. பணத்துக்காக.. கொன்னு.. கொன்னு..." என்றவர் முடிக்காமலே உயிரை விட்டு விட்டார்.

தூங்கிய இதயத்தை தட்டி எழுப்ப நினைத்து முடியாமல் போக வெள்ளை துணி கொண்டு அவரை மூடினார் மருத்துவர் சினேகன்.

"டாக்டர்.. இவங்க ஃபேமிலி வெளிய இருக்காங்க. என்ன சொல்லுறது?"

"தெரியல.. பாவம் இவரோட ரெண்டு பசங்க ஏற்கனவே இறந்து போயிட்டாங்கனு தெரியாமலே போயிட்டாரு. ப்ச்ச்.."

கண்ணாடியை கழட்டி கண்ணை அழுந்த துடைத்துக் கொண்ட சினேகன் "நான் போய் சொல்லுறேன்" என்று விட்டு வெளியே வந்தார்.

கதவை திறக்கும் போது நந்தகோபாலனும் தயாநிதியும் பேசுவது காதில் விழுந்தது.

"எங்க என்ன வச்சுருக்காங்கனு ஒரு எழவும் புரியல. அவன் செத்தானா இல்லையானும் தெரியல. அங்க கேட்டா இங்க பாருங்குறான். இங்க கேட்டா தெரியுங்குறான். செத்து ஒழியிறானுங்களா ச்சை"

"மச்சான்.. இன்னைக்கு மட்டும் அந்த ஆளு சாகலனா தலைகாணிய வச்சு அமுக்கி நானே கொண்ணுடுறேன்."

"ஏன் மாப்பிள்ளை? நீ ஜெயிலுக்கு போறதுக்கா உனக்கு என் தங்கச்சிய கட்டி வைச்சேன்?"

"பின்ன என்ன மச்சான்? செத்து தொலைய மாட்டேங்குறானே. இவன் செத்தா தான சொத்து நமக்கு வரும்?"

"அது வந்தா மட்டும் பத்தாது மச்சான். அத வச்சு வாழவும் செய்யனும். அதுக்கு தான அஞ்சு வருசமா அவன் வீட்டுல நாயா வேலை பார்த்துருக்கேன்.கொல்லுறதா இருந்தா என்னைக்கோ கொன்னுருக்க மாட்டேனா? சத்தமில்லாம பிரேக்க பிடுங்குனது நம்ம மேல சந்தேகம் வரக்கூடாதுனு தான்"

எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சினேகன் மீண்டும் கதவை அடைத்து விட்டு உள்ளே சென்றார்.

இப்போது என்ன செய்வது என்று யோசித்தார். காவல்துறையில் புகார் செய்வது நல்லவழியாக தோன்றியது.

அந்நேரம் நர்ஸ் அருணாச்சலத்தின் முகத்தை மூடியிருந்த துணியை விலக்கி விட்டு எதே செய்து கொண்டிருந்தார்.

சினேகன் அருணாச்சலத்தை பார்த்தார். அந்த முகத்தில் நிம்மதி இல்லை. சாகும் போதும் பிள்ளைக்காக வருத்தப்பட்டு இறந்து போயிருக்கிறார். இப்போது ஒரு மகன் உயிரோடிருப்பது தெரிந்தால் அவனையும் கொல்ல நினைப்பார்களோ?

தலையணையை வைத்து கொல்ல நினைப்பதும் கார் பிரேக்கில் விளையாடுவதும் அவர்களுக்கு சுலபமாக இருக்கிறதே.

தீவரமாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்து விட்டார் சினேகன்.

"சிஸ்டர்.... நான் சொல்லுறத போய் அவங்க கிட்ட சொல்லுங்க. அருணாச்சலமும் அவரோட மிச்சமிருந்த பையனும் செத்துட்டாங்கனு சொல்லுங்க"

"டாக்டர்.. அவன் உயிரோட தான் இருக்கான்"

"அது எனக்கும் தெரியும். சொன்னத செய்ங்க"

நர்ஸை அனுப்பி விட்டு உடனே மார்ச்சுவரிக்கு சென்றார் சினேகன். அங்கு இரண்டு நாளுக்கு முன் தீவிபத்தில் எறிந்து போன அனாதை பையன் இருக்க அவனது உடலை திவ்யராஜ் என்று கூறி கொடுத்து விட முடிவு செய்தார்.

மொத்த குடும்பத்தின் உடல்களையும் அள்ளிக் கொண்டு வந்து அரண்மனையில் போட்டு விட்டு நீலிக்கண்ணீர் விட்டனர் நந்தகோபாலனும் தயாநிதியும்.

மறுபக்கம் சினேகன் திவ்யராஜின் உடல் சரியானதும் அவனோடு வெளியூர் சென்று விட்டார்.

நந்தகோபாலனுக்கும் தயாநிதிக்கும் சத்தமே இல்லாமல் சொத்து கிடைத்தது.

இவ்வளவு பணமும் வைத்துக் கொண்டு ஒரே பொண்டாட்டியோடு வாழ்வது நந்தகோபாலனுக்கு அலுத்துப்போக ஊர்வசியை திருமணம் செய்து கொண்டான்.

லேகா பிறந்த நேரம் அவன் இதைச்செய்ய தேவி நொந்து விட்டார். பிள்ளைக்காக சில வருடங்கள் வாழ்ந்து விட்டு இறந்து போனார்.

கிரிதரனும் அவனுக்கடுத்ததாக பிறந்த இரட்டையர்கள் கார்த்திக் குமார் மற்றும் வரதனும் ஊர்வசியை வெறுக்கவே செய்தனர். கடைசி பையனான மதனும் லேகாவும் உலகை பற்றி முழுதாக அறியாமல் வளர ஆரம்பித்தனர்.

வீட்டுக்கு வந்த உடனேயே சாரதி என்றொரு அழகான பையனை பெற்றெடுத்தாள் ஊர்வசி.

அதற்கு மேல் பிள்ளை பெற அவருக்கு விருப்பமில்லை. இந்த பிள்ளையும் குடும்பத்தில் பற்று இருக்க வேண்டும் என்று தான் பெற்றார். மற்றபடி தன் அழகை கெடுத்துக் கொள்ள அவர் முட்டாள் அல்ல.

நந்தகோபாலன் இரண்டு மனைவியை தைரியமாக கட்டிக் கொண்டாலும் தயாநிதியால் அது முடியவில்லை. ஏனென்றால் தங்கையை அழ வைத்தால் நந்தகோபாலன் அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவானே.

அதனால் தன் லீலைகளை வீட்டுக்கு வெளியே சத்தமில்லாமல் வைத்துக் கொண்டான். அவனுக்கும் மனிஷா என்றொரு மகள் பிறந்திருக்க இருவரும் அடுத்தவர்களின் சொத்தில் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இனி அவர்களை வெல்ல யாருமில்லை என்ற மிதப்பில் வாழ்ந்து கொண்டிருக்க எங்கோ அவர்களை வேரறுக்க வளர்ந்து கொண்டிருந்தான் திவ்யராஜ்.

யுத்தம் தொடரும்.
 

sana sana

Member
Wonderland writer
மௌன யுத்தம் fanfiction 2

இருபத்தி இரண்டு வருடங்களுக்குப்பிறகு...

ஆய்வுக்கூடத்தில் நின்று கொண்டிருந்தான் திவ்யராஜ். திடகாத்திரமான உடலும் தீட்சண்யமான பார்வையும் அவனது அடையாளம்.

அவன் கண்ணில் மாட்டியிருந்த வெள்ளை நிற கண்ணாடியை ஒரு முறை சரி செய்து கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.

அங்கு பெரிய திரையில் எக்கச்சக்கமான எண்கள் ஓடிக் கொண்டிருந்தது. அவனைப்போலவே அந்த ஆய்வுக்கூடத்தில் வேலை செய்யும் எத்தனையோ பேர் நின்று இருந்தனர்.

எல்லோரும் எதோ ஒரு முடிவுக்காக காத்திருக்க அவர்களை அதிகம் காக்க வைக்காமல் முடிவும் வந்தது.

அத்தனை பேரும் சந்தோச கூச்சலிட திவ்யராஜ் புன்னகைத்துக் கொண்டான். எல்லோரும் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்த நேரம் "மிஸ்டர் திவ்யராஜ்" என்று அழைத்தாள் ஒரு பெண்.

அவன் திரும்பிப் பார்க்க வெளியே வருமாறு கையை காட்டினாள். அவனும் அவளை நோக்கி சென்றான்.

வெளியே வந்து கதவை அடைத்ததும் "உங்கள சீஃப் கூப்பிடுறாரு" என்றாள்.

தலையை மட்டும் ஆட்டி விட்டு அவன் சென்ற மேனரிசம் அவளை ஈர்க்க "உஃப்ப்.. சோ ஹாட்" என்று சொல்லிக் கொண்டாள்.

திவ்யராஜ் அவர்களின் சீஃப்பை சந்திக்க அவர் அவன் தலையில் கல்லைப்போட்டார்.

சினேகனுக்கு ஹார்ட் அட்டாக்காம். திவ்யராஜின் போன் ஸ்விட்ச் ஆஃப் என்பதால் விசயத்தை சீஃப் இடம் சொல்லி இருக்கின்றனர்.

விசயம் கேட்டு அதிர்ந்தவன் "எங்க இருக்காரு?" என்று விசாரித்துக் கொண்டு விறுவிறுவென வெளியேறினான்.

கை தானாக அணிந்திருந்த வெள்ளை கோட்டை கழட்டிக் கொண்டு போனை தேடி எடுத்தது.

சினேகன் வேலை செய்யும் மருத்துவமனைக்கு அழைத்துக் கேட்க விசயம் தீவிரம் என்றனர்.

ஓடிச் சென்று லாக்கரில் கோட்டை எறிந்து விட்டு தன் கார் சாவியை எடுத்துக் கொண்டவன் எதிரே வந்த யாரையும் கவனிக்காமல் வாசலை நோக்கி ஓடினான்.

கதவை திறந்து காரில் ஏறும் வரை தான் பொறுமை மிச்சமிருந்தது. அதன் பிறகு அந்த கார் மின்னலாய் பறந்து மறைந்தது.

புயலைப்போல மருத்துவமனையில் நுழைந்தவனை அங்கிருந்த ஒரு மருத்துவர் எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்.

ஐசியூ வில் பல வயர்களுக்கு நடுவே படுத்துக் கிடந்தார் சினேகன். திவ்யராஜ் கதவுக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கென இருக்கும் ஒரே உறவு அவரல்லவா? அவரை இழக்க அவனுக்கு விருப்பமில்லை. தவித்துக் கொண்டிருந்த இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டு "எப்படி இருக்காரு டாக்டர்?" என்று மீண்டும் கேட்டான்.

ஏற்கனவே பதில் சொல்லி விட்டாலும் "சரியாகிடுவாரு. ஹோப் அ விடாதீங்க" என்றார் அவர்.

அவருக்கு தலையாட்டி விட்டு தள்ளிச் சென்று அமர்ந்து கொண்டான். நேரம் கடந்து கொண்டே இருக்க அவனிடம் எந்த அசைவும் இல்லை.

திடீரென யாரோ வந்து அவனை உலுக்க நிமிர்ந்து பார்த்தான்.

"ஹீ இஸ் அவுட் ஆஃப் டேன்ஜர்" என்றதும் அவ்வளவு நேரம் இழுத்துப்பிடித்துக் கொண்டிருந்த மூச்சை எல்லாம் மொத்தமாக வெளிவிட்டவன் கண்கள் கூட கலங்கி விட்டது.

சட்டென எழுந்து "நான் பார்க்கலாமா டாக்டர்?" என்று கேட்டான்.

"நாளைக்கு பார்க்கலாம். இப்ப வீட்டுக்கு கிளம்புங்க"

"பரவாயில்ல டாக்டர். நான் இங்க இருக்கேன்" என்று கூறி விட்டு அங்கேயே அமர்ந்து கொண்டான்.

இரவு முழுவதம் அதே இடத்தில் கடந்து விட மறுநாள் சினேகனை பார்த்தான். அவனை பார்த்ததும் பாசமாய் புன்னகைத்தார் சினேகன்.

அவருக்கு திருமணத்தில் நாட்டமில்லை. மருத்துவ சேவை மட்டுமே அவரது வாழ்விற்கான அர்த்தம். அதனால் தான் சுலபமாக திவ்யராஜ்ஜை தூக்கி வந்து வளர்த்தார்.

இன்று உடல் தளர்ந்து படுத்திருந்தவருக்கு இதயம் பிசைவது போல் இருந்தது.

"எப்படி ப்பா இருக்கு? எதாவது வேணுமா?" என்று கேட்டான் திவ்யராஜ்.

என்ன தான் அவனை தன் மகன் என்று கூறி வளர்த்தாலும் திவ்யராஜுக்கு இவர் தன் தந்தை இல்லை என்பது நன்றாக தெரியும். இருவரும் ஒட்டி உறவாடவில்லை. திவ்யராஜ் அதிகமாக ஹாஸ்டலில் தான் வளர்ந்தான். சினேகன் எப்போதும் அவரது வேலையை தான் பார்த்தார். ஆனால் உலகில் அவர்களுக்கு அவர்கள் மட்டுமே உறவாக இருந்தனர்.

"எதுவும் வேணாம். உட்காரு" என்று சொல்லி நாற்காலியை காட்ட அவனும் அமர்ந்து விட்டான்.

"சாப்பிட்டியா? முகமே ஒரு மாதிரி இருக்கு"

"பசிக்கலபா.."

"போய் சாப்பிட்டு வர்ரியா?"

"அப்புறமா போறேன்"

தலையை மட்டும் ஆட்டியவர் அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு "உன் சின்ன வயசுல நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கா தீரா?" என்று கேட்டார்.

பெரிதாய் நினைவில்லை என்றாலும் மொத்தமாய் மறந்து விடவும் இல்லை.

"இருக்கு"

"உன் அப்பா அம்மா தம்பிங்க.."

"எல்லாரும் தான் செத்துட்டாங்களே"

"எப்படி?"

"எங்கயோ கார்ல போனோம். அப்போ ஆக்ஸிடென்ட் ஆகி..."

"உன் அம்மா பிறந்தநாளுக்காக கோவிலுக்கு போனீங்க"

"ஓஹோ.. அப்படியா?"

"ஏன் கார் ஆக்ஸிடென்ட் ஆச்சுனு தெரியுமா?"

இடவலமாக தலையசைத்தான்.

"டிரைவர் ஒழுங்கா ஓட்டிருக்க மாட்டான்"

"இல்ல.. கார் ப்ரேக்க புடுங்கி விட்டுட்டாங்க"

இது புது செய்தி என்பதால் அதிர்ந்து போனான் திவ்யராஜ். இது வரை சினேகன் சரியாக எதையும் சொன்னதில்லை. சிறு பிள்ளை மனதில் நஞ்சை விதைக்க வேண்டாம் என்று மறைத்திருந்தார். விபத்தில் மொத்த குடும்பமும் இறந்து போனதால் மனிதாபிமான அடிப்படையில் சினேகன் எடுத்து வளர்த்ததாக தான் அவனிடம் சொல்லி இருந்தார். அவனும் நம்பியிருந்தான்.

அப்போது அவனும் மிகப்பெரிய அதிர்ச்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்ததால் பெரிதாக எதையும் ஆராயாமல் விட்டு விட்டான். இப்போது தான் தெரிகிறது. அது விபத்தல்ல கொலை என்று.

"என்ன சொல்லுறீங்க?"

"ஆமா தீரா. உன் அப்பாவோட சொந்தகாரவங்க கார் பிரேக்க பிடுங்கி விட்டுருக்காங்க. அதுல தான் ஆக்ஸிடென்ட் ஆகி எல்லாருமா போனது."

அவனது முகம் திடீரென இறுகி பயங்கரமானது.

"யாருனு தெரியுமா?"

"எனக்கு தெரியாது. ஆனா உனக்கு மாமா முறை வரும்னு நினைக்கிறேன்"

மாமா என்றதுமே சட்டென உடன் விளையாடிய ஒரு சிறுவன் தான் நினைவு வந்தான். தலையை குலுக்கிக் கொண்டு சினேகனை கேள்வியாக பார்த்தான்.

"இத ஏன் இவ்வளவு நாளா என் கிட்ட சொல்லல?"

"உனக்குள்ள பழிவெறிய தூண்டி விட எனக்கு விருப்பமில்ல. மனுசங்கனா அன்பு செய்யப்பட வேண்டியவங்க. ஆனா இனி நான் சொல்லலனா உனக்கு தெரியாமலே போயிடும். உன்ன பெத்தவங்க எப்படி செத்தாங்கனு தெரிஞ்சுக்க உனக்கு உரிமை இருக்கு."

"இப்ப எதுக்கு சொல்லுறீங்க?"

"இப்படி படுத்துருக்கேனே.. அந்த பயம் தான். எனக்கு எதாவது ஆகிட்டா சொல்லாமலே செத்துட்டோமேனு வருத்தப்படுவேன். இனி வருத்தமில்ல"

திவ்யராஜ் தரையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். உள்ளே வெடித்த எரிமலையை அடக்கிக் கொண்டு.

"உனக்கு நிறைய சொத்திருக்கும்னு நினைக்கிறேன். அதுக்காக தான் உங்கப்பாவ கொன்னுருக்கனும். அவரே என் கிட்ட சொன்னாரு"

பட்டென நிமிர்ந்து "சொத்துக்காகவா?" என்று கேட்டான்.

அன்று நடந்ததை அப்படியே சினேகன் கூற முகம் இறுக கேட்டிருந்தவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

தங்களை கூண்டோடு அழித்த எவனும் உயிரோடு இருக்க கூடாது என்ற முடிவுக்கு வந்தாலும் அப்போது சினேகனிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

"தேங்க்ஸ் அப்பா.. என்ன வளர்த்து இவ்வளவு தூரம் படிக்க வச்சு பார்த்ததுக்கு" என்று கண்கலங்க குரல் அடைக்க நன்றி கூற சினேகன் புன்னகைத்தார்.

அவருக்கு மருந்து கொடுக்கும் நேரம் வந்து விட அதை உண்டு உறங்கி விட்டார்.

கண்ணை துடைத்துக் கொண்டு வெளியே வந்த திவ்யராஜின் முகத்தில் இருந்த இளக்கம் காணாமல் போக கண்ணில் கொலை வெறி தாண்டவமாடியது.

எல்லோரையும் இழந்து இரவு தூங்கினால் வரும் பயங்கர கனவுகளை அனுபவித்து ரத்தத்தை பார்த்தாலே பயந்து போய் வாழ்ந்து கொண்டிருக்கிறான் அவன்.

அவனது குடும்பத்தை கொன்று அவனை அனாதையாக்கி விட்டு சொத்தை சொந்தம் கொண்டாடுவார்களா? அவர்களை விட்டு விட்டு வேடிக்கை பார்க்க அவன் தான் பைத்தியமா?

முதல் வேலையாக அவர்கள் யார்? என்ன? என்ற விவரங்களை தேட ஆரம்பித்தான்.

சினேகன் வேறு மருத்துவமனையில் இருக்க அவரையும் கவனித்துக் கொண்டான். அவர் தேறி வரும் போது திவ்யராஜின் கையில் நந்தகோபாலனின் குடும்பத்தின் விவரம் இரு
ந்தது.

சினேகனை ஓய்வுக்காக வெளிநாடு அனுப்பியவன் நந்தகோபாலனின் மொத்த குடும்பத்தையும் அழிக்கும் முடிவோடு அங்கு சென்று சேர்ந்தான்.

யுத்தம் தொடரும்.
 

sana sana

Member
Wonderland writer
மௌன யுத்தம் fanfiction 3

திடீரென வேலை கேட்டு சென்றால் சந்தேகம் வந்து விடும் அல்லவா? முதல் வேலையாக அந்த வீட்டில் வேலை பார்க்கும் ஒருவனை பிடித்தான்.

அவன் மாரி. தோட்ட வேலை செய்பவன். அவனிடம் அறிமுகமாகியவன் எங்காவது வேலை இருந்தால் சொல்லும் படி கேட்டுக் கொண்டான்.

"என்ன வேலை எல்லாம் செய்வ?"

"வீட்டு வேலை எல்லாம் செய்வேன். சமைக்க தெரியும். காரோட்ட தெரியும்."

"அப்புறம் ஏன் இங்க வந்து வேலை கேட்குற?"

"ஊருல நிறைய கடன். அடைக்க முடியல"

"ஓடி வந்துட்டியா?"

தலையை மட்டும் பாவமாக ஆட்டி வைத்தான். அவனிடம் இருக்கும் லட்சங்களின் மதிப்பு கொண்ட கார் இதை பார்த்தால் கண்ணீரே விட்டிருக்கும்.

கடனுக்கு பயந்து ஊரை விட்டு ஓடி வந்தவனாக இருந்தாலும் திவ்யராஜின் அப்பாவித்தனமான நடிப்பில் மாரி ஏமாந்து போக அரண்மனையில் வேலையில் சேர்த்து விட்டான்.

திவ்யராஜ் அரண்மனைக்குள் வந்ததும் பழைய நினைவுகள் மங்கலாக வந்தன. ஆனால் ஒன்றும் தெளிவாக தெரியவில்லை. கண்ணால் எல்லா பக்கமும் ஸ்கேன் செய்து கொண்டிருக்க "மாரி.." என்று அதட்டிக் கொண்டே வந்தான் கிரிதரன்.

"ஐயா..." என்று மாரி பம்ம "கார துடைக்க சொன்னேன்ல? எங்க போன?" என்று கேட்டு எகிறினான்.

"இந்தா துடைச்சுடுறேன்" என்று பம்மிக் கொண்டு நகர்ந்தவனை "நில்லு" என்று நிறுத்தினான்.

"இது யாரு?"

திவ்யராஜை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே கேட்க திவ்யராஜ் கிரிதரனை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குள் மங்கலாக தெரிந்து கொண்டிருந்த சிறுவன் இவன் தான் என்று ஆழ்மனம் அடித்துச் சொல்லியது.

"இது செல்வம். தெரிஞ்ச பையன் வேலை தேடி வந்தான். அதான் பெரிய ஐயா கிட்ட சொல்லி வேலைக்கு சேர்த்துக்கிட்டேன்"

திவ்யராஜை மேலிருந்து கீழ் பார்த்தான். பரட்டை தலையும் பழைய உடையும் தான் அவன் அணிந்து இருந்தான். அவனது திடமான உடலை மறைக்கும் படி தொளதொளவென இருந்தது சட்டை.

"உன்னை மாதிரி தோட்டக்காரனா?"

"இல்லங்கய்யா.. கார் ஓட்டுவான். நாலு எழுத்து படிச்சுருக்கான்"

"அப்படியா? என்ன படிச்சுருக்க?" என்று நேரடியாக திவ்யராஜிடம் கேட்க "ஸ்கூல் முடிச்சுட்டேன்" என்றான்.

குரலில் கஷ்டப்பட்டு ஒரு பவ்யத்தை வரவைத்துக் கொண்டான்.

"கார் ஓட்டுவியா?"

"ம்ம்.."

"லைசன்ஸ் இருக்கா?"

பகீரென உள்ளே பயந்து போனவன் "அதெல்லாம் எடுக்கலங்க... ங்கய்யா" என்றான்.

தடுமாறிய குரலை கிரிதரன் பவ்யம் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் திவ்யராஜ் உண்மையில் திணறி விட்டான். லைசன்ஸ் திவ்யராஜ் பெயரில் அல்லவா இருக்கிறது. அதை காட்ட முடியுமா?

"லைசன்ஸ் இல்லாம கார் ஓட்டுவியா?"

"இல்லங்கயா.. ஊருக்குள்ள ஓட்டிக்குவேன். ஆனா வெளியில பெருசா போனது இல்ல" என்று எதையோ சொல்லி சமாளிக்க பார்த்தான்.

"கார் மெயின்டனனஸ் தெரியுமா?"

"தெரியும்ங்க"

"இப்போ போய் கார துடைச்சு வை போ" என்று கூற தலையை ஆட்டி விட்டு மாரியோடு நடந்தான்.

கிரிதரன் அவனை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

மாரி கிரிதரனின் காருக்கு செல்வத்தை அழைத்து வந்தான்.

"இத நல்லா துடைச்சு வை. அப்படியே பெரிய ஐயா காரையும் துடைச்சுடு" என்று இரண்டு காரையும் காட்டி விட்டு மாரி சென்று விட்டான்.

காரைப்பார்த்த செல்வத்துக்கு கோபத்தில் முகம் இறுகியது. கார் பிரேக்கை பிடுங்கி தானே அவர்களை கொன்றார்கள். அதே போல் நாமும் பிடுங்கி விட்டால் என்ன? என்று தான் தோன்றியது.

ஆனால் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே அதைச்செய்தால் அவன் மீது சந்தேகம் வந்து விடும். பிறகு இந்த குடும்பத்தை கூண்டோடு அழிக்க முடியாது.

அதனால் பொறுமை காக்க முடிவு செய்தான். தண்ணீரை ஊற்றி காரை துடைத்து முடித்தான்.

கிரிதரன் வரும் போது செல்வம் அங்கிருந்து சென்று மறைந்து நின்று கொண்டான். அவன் காரில் ஏறிச் செல்லும் வரை அவன் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருக்க பின்னால் வந்து நின்றான் மாரி.

"ஏய் என்ன பார்த்துட்டு இருக்க?" என்று அதட்ட செல்வம் திடுக்கிட்டாலும் காட்டிக் கொள்ளாமல் திரும்பினான்.

மாரி சந்தேகமாக முறைக்க "அந்த கார்ல போறாரே.. அவர் யாரு? ரொம்ப கோவக்காரரோ?" என்று அப்பாவியாய் கேட்டு வைத்தான்.

"அதுக்கு எதுக்கு இப்படி வந்து நிக்கிற?"

"நான் கார சரியா துடைக்கலனா முதல் நாளே வேலைய விட்டு தூக்கிடுவாருனு பயம். அதான் ஓடி வந்துட்டேன். அவர் யாரு? இந்த வீட்டு முதலாளியா?"

"அப்படி தான். ஆனா அவங்கப்பா இருக்க வரை இவரு சின்ன முதலாளி. காலையில பார்த்தோமே.. உனக்கு வேலை கொடுத்தாரே அவர் தான் இந்த அரண்மனைக்கு முதலாளி"

'யாரு அரண்மனைக்கு யாருடா முதலாளி?' என்று உள்ளம் குமுறினாலும் வெளியே "அப்படியா!" என்று ஆச்சரியமாக கேட்டான்.

"அவரோட மூத்த பையன் தான் கார்ல போறது. பேரு கிரிதரன்."

பெயரைக்கேட்டதும் அவனுக்கு சிறுவயதில் பழகிய சிறுவன் நினைவு வந்து மறைந்து போனான்.

"அவருக்கு கல்யாணமாகிடுச்சு. இப்ப தான்‌ ஒரு வருசம் ஆகுது"

"பாவம் அவங்க சம்சாரம். என்னமோ கோபமா பேசுறாரு"

"அவங்கள பத்தி நாம ஏன் கவலை படனும்? பேசாம வேலைய பாரு"

"மாரி மாரி.. வீட்டுல வேற யாருமே இல்லயா? இவங்க மட்டும் தானா?"

"அத ஏன் கேட்குற?"

"வேலை பார்க்குறேன்ல. யாருனு தெரியாம எதையாவது பேசிடுவேன்ல.."

அவன் கெஞ்ச மாரி கெத்தாய் முகத்தை வைத்துக் கொண்டு வீட்டின் விவரங்களை கூறினான்.

"கிரிதரன் ஐயா மூத்தவரு. கல்யாணமாகிடுச்சு. அவருக்கு ரெட்டை புள்ளைங்க தம்பிங்க இருக்காங்க. ஒருத்தரு கார்த்திக் ஒருத்தரு வரதன். அடுத்த தம்பி மதன். கடைசியா ஒரு தங்கச்சியும் இருக்கு. லேகா."

"பெரிய குடும்பம் தான் போலயே.."

"அதுக்கு தான் இவ்வளவு பெரிய அரண்மனையில வாழுறாங்க"

"அம்புட்டு தானா? பெரிய ஐயா சம்சாரம்?"

"இவங்கள பெத்த அம்மா செத்து போச்சு. ரெண்டாவது பொண்டாட்டி தான் இங்க இருக்கு. அதுக்கும் ஒரு பையன் இருக்கான். சாரதினு பேரு. ரொம்ப ஸ்டைலா இருப்பான்."

'ரெண்டு பொண்டாட்டி கட்டி வாழ்ந்துருக்கானா.. பார்த்துக்கிறேன்' என்று நினைத்துக் கொண்டவன் "வேற யாரெல்லாம் இருக்காங்க?" என்று கேட்டான்.

"பெரிய ஐயாவோட தங்கச்சி புருஷன் இருக்கார். தங்கச்சி போயி சேர்ந்துடுச்சு. அவரும் அவரோட பொண்ணும் மட்டும் இங்க இருக்காங்க. வரதனுக்கு அந்த பொண்ண கட்டி வைக்கிறதா பேச்சு கூட போயிட்டு இருக்கு"

கதையை எல்லாம் சொல்லி விட்டு வேலையும் வாங்க ஆரம்பித்தான். மனதில் அத்தனை பேரையும் கணக்கெடுத்து விட்டு செல்வம் வெளியே நல்ல பிள்ளையாக வேலை செய்தான்.

நாள் போகப்போக அந்த வீட்டின் ஒவ்வொருவரையும் பற்றி அறிந்து கொண்டான். அத்தனை பேரின் பழக்கவழக்கங்கள் வேலைகள் விவரங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டவனுக்குள் அடுத்த திட்டம் உருவாகியது.

இவர்களை ஒரே நாளில் மொத்தமாக அவன் பெற்றோரை போல கொல்வது சாத்தியமே இல்லை. தனித்தனியாக தான் கொல்ல வேண்டும். அதுவும் தடையங்கள் மிஞ்சாமல் தப்பிக்க வேண்டும்.

அப்படித்தப்பித்தால் தான் அடுத்த கொலையை செய்ய முடியும். ஒன்றை செய்யும் போது மாட்டிக் கொண்டால் அவன் தான் அழிந்து போவான்.

எப்படி செய்வது என்று யோசித்து யோசித்தே நாட்கள் கடந்து போனது. அவனும் நம்பிக்கையான வேலைக்காரனாக அந்த வீட்டில் மாறி விட்டான். அவ்வளவு நன்றாக நடித்தான்.

யாரை முதலில் கொல்வது என்ற யோசனையுடன் அவன் திட்டம் போட்டுக் கொண்டிருக்க தானாக வந்து சிக்கினான் கிரிதரன்.

அரண்மனையில் யாருமில்லா நேரமாக பார்த்து கிரிதரன் மது அருந்துவது வழக்கம். மற்ற நேரங்களில் அதைத் தொட மாட்டான். குடித்து விட்டால் வாய் அவனது கட்டுப்பாட்டில் இருக்காது. எதையாவது உளறி வைத்து விடுவோம்
என்று கட்டுப்படுத்திக் கொள்வான்.

ஆனால் அந்த நாளைத்தான் திவ்யராஜ் அவனது பழிவாங்கலுக்காக முதலில் தேர்வு செய்தான்.

யுத்தம் தொடரும்.
 

sana sana

Member
Wonderland writer
மௌன யுத்தம் fan fiction 4

செல்வம் அரண்மனைக்கு வந்து ஒரு வருடம் சென்றிருந்தது. குடும்பத்தில் இருந்த அத்தனை பேரின் விவரங்களையும் நுனி விரலில் வைத்திருந்தான். எடுபிடி வேலையில் இருந்து எந்த வேலை வேண்டுமானாலும் செய்தான். இரவு அந்த அரண்மனையை சுற்றி வந்தான்.

இங்கு தான் அவன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்திருக்க வேண்டும். அதை அழித்து விட்டு மற்றவர்கள் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

நினைத்தாலே நெஞ்சம் பற்றி எறிந்தது. ஆனால் உடனே எதையும் செய்ய முடியாமல் பொறுமை காத்தான். வீட்டில் யாரை முதலில் கொல்வது என்ற குழப்பத்திற்கான விடை சீக்கிரமே கிடைத்தது.

கிரிதரன். வீட்டின் மூத்த வாரிசு அவன். அவனை கொன்றால் மொத்த குடும்பமும் கதிகலங்கும் அல்லவா?

ஆனால் அவனை அடித்துக் கொல்லவோ குத்திக் கொல்லவோ முடியாது. திவ்யராஜ் இரத்தத்தை பார்த்தால் மூர்க்கமாகி விடுவான். அவனால் அடுத்து திடமாக யோசிக்கவே முடியாது.

மாட்டிக் கொல்லாமல் சத்தமில்லாமல் கதையை முடிக்க நினைத்தவன் கையில் கிடைத்தது தல்லியம். அதனை உடலில் செலுத்தி விட்டால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போவார்கள். பிரேதபரிசோதனையில் கூட அதை கண்டு பிடிக்க முடியாது என்பதால் அதை தனது ஆய்வுக்கூடத்திலிருந்து வரவழைத்தான்.

அன்று அரண்மனை மொத்தமும் காலியாக இருந்தது. கிரிதரன் மட்டும் அவனது அறைக்குள் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான்.

"இந்தா.. இத போய் கிரி ஐயா ரூம்ல கொடுத்துட்டு வா" என்று கூறி சில அசைவ உணவுகளை கொடுக்க செல்வத்துக்கு சந்தோசமாகி விட்டது.

சுலபமாக உள்ளே சென்று ஊசியை போட்டு விடலாம் அல்லவா?

ஊசியை மறைத்து எடுத்துக் கொண்டு கையில் தட்டோடு கிரிதரனை தேடிச் சென்றான்.

அங்கு கிரியோ நன்றாக மது அருந்திக் கொண்டிருந்தான்.

"ஐயா.." என்றவன் தட்டை நீட்ட தட்டோடு அவன் கையையும் பிடித்து இழுத்து அமர வைத்தான் கிரி.

செல்வம் திடுக்கிட்டாலும் கிரியை நன்றாக பார்த்தான். அவன் முழு போதையில் இருப்பது புரிய தட்டை வைத்து விட்டு "சாப்பிடுங்க" என்றான்.

"செல்வம்..." என்று அழைத்து கிரிதரன் தன் டம்ளரை நீட்ட அதை வாங்கி மதுவால் நிரப்பிக் கொடுத்தான்.

குடித்துக் கொண்டிருந்த கிரிதரன் திடீரென சிரிக்க ஆரம்பித்தான்.

"நீ ரொம்ப நல்லவன் செல்வம்" என்றதும் செல்வம் அவனை மேலும் கீழும் பார்த்தான்.

'நல்லா இருக்கும் போது என்னமா எகிறுவான். குடிச்சா இவ்வளவு கேவலமா இருக்கான்' என்று நினைத்துக் கொண்டான்.

"உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்ற கிரி அவனை பார்த்து சிரிக்க வேறு செய்ய 'இப்பவே ஊசிய போட்டு இவன கொண்ணுடலாமா?' என்று தான் அவன் யோசித்தான்.

"ஆனா நான் நல்லவன் இல்ல.. நல்லவனே இல்ல.. தெரியுமா?"

"தெரியும் தெரியும்"

"இல்ல உனக்கு தெரியாது. இந்த உலகத்துல யாருக்குமே தெரியாது... யாருக்குமே.. நான் சொல்லவே இல்ல.. ஆனா அவ... அவ ஊருக்கே சொல்லுவேன்னு சொல்லுறா... ****** ***** "

அவன் கெட்ட வார்த்தையால் திட்ட 'யார சொல்லுறான் இவன்? இவன் பொண்டாட்டியவா இருக்குமோ?' என்று யோசித்தான்.

"யாரு? உங்க சம்சாரமா?"

"அவ தான்.." என்றவன் மேலும் திட்ட செல்வம் சந்தேகமாக பார்த்தான்.

"எத ஊருக்கே சொல்லுவாங்களாம்?"

'ஒரு வேலை இந்த சொத்து விசயம் எதாவது தெரிந்திருக்குமோ?' என்று அவன் யோசிக்க கிரியோ புதிதாய் ஒரு விசயத்தை சொன்னான்.

அதுவும் முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்றை.

"நான் ஆம்பளை இல்லையாம்.. என்னை கல்யாணம் பண்ணி அவளோட வாழ்க்கையே போச்சாம்"

"புருஷன் பொண்டாட்டி சண்டையா?"

"ம்ப்ச்ச்.. உனக்கு புரியல செல்வம்" என்றவன் அவன் தோளில் அடித்து விட்டு அவனை ஒரு கையால் கழுத்தை வளைத்து அருகே இழுத்தான்.

"நான் ஒரு ........" என்று கூறி விட செல்வமே அதிர்ந்து போய் பார்த்தான்.

"என்ன சொன்ன? திரும்ப சொல்லு.."

"உஸ்ஸ்ஸ்.. சத்தமா சொல்ல கூடாது.. இது ரகசியம்" என்று கூறியவன் "இத மறைக்க எவ்வளவு பாடு பட்டுருக்கேன் தெரியுமா? நீயும் அவள மாதிரி ஊரெல்லாம் சொல்லுவ போல" என்றவன் செல்வத்தின் கழுத்தை நெரிக்க ஆரம்பிக்க பட்டென தட்டி விட்டான்.

"அடப்பாவி.. அப்புறம் ஏன் கல்யாணம் பண்ண?"

"எங்கப்பன் தான்.. வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல கேட்காம அவள என் தலையில கட்டி வச்சுட்டாரு.. அவ கூட வாழு வாழுனா என்னனு வாழுறது? என்னால முடியலயே"

"இந்த கூத்து வேற ஓடுதா வீட்டுல"

"உஸ்ஸ்.. உன்ன சத்தமா பேசாதனு சொன்னேன்ல?" என்றவன் செல்வத்தை கீழே தள்ளி மேலே விழுந்தான்.

"ஐயோ என் கற்பு போச்சு" என்று அலறிய செல்வம் கிரிதரனை தள்ளி விட்டு எழுந்தான்.

'பயபுள்ள உள்ள வேற எதயோ வச்சுருந்துருக்கான். வெளிய பொண்டாட்டி கூட என்னமா நடிக்கிறான்? இவன போட்டு தள்ளுனா தான் சரி வரும்' என்று முடிவு செய்து ஊசியில் கை வைக்க "ராஜ்" என்றான் கிரிதரன்.

பகீரென அதிர்ந்து போய் செல்வம் பார்க்க கிரிதரன் விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

"ராஜ்.. ராஜ்.. எங்கடா இருக்க? என்ன மட்டும் விட்டுட்டு ஏன்டா போனீங்க... ராஜ் நீ இங்க தான இருக்க? எனக்குத் தெரியும்.. என் கிட்ட வா"

விட்டத்தில் ஓடிய ஃபேனை பார்த்துக் கொண்டு கிரிதரன் பேசப்பேச செல்வத்துக்கு வியர்த்து விட்டது.

"என் முதல் காதல்.. ஃபர்ஸ்ட் லவ்.. ராஜ்.. ஏன்டா போன? நீ இல்லாம வாழ்க்கையே நல்லா இல்ல.. நானும் செத்து உன் கிட்ட வர்ரேன். என்ன கூட்டிட்டுப்போ.. எங்க இருக்க? உன் கிரி கிட்ட வா ராஜ்"

முதலில் வியர்த்துப்போன செல்வம் போகப்போக கலங்கி விட்டான். கிரிதரன் கண்ணிலிருந்து கண்ணீர் வேறு வழிந்து கொண்டிருந்தது.

அவன் நெஞ்சில் இருந்த டாட்டூ வேறு பளிச்சென செல்வத்தின் கண்ணில் விழுந்தது. ஆங்கில எழுத்தான ஜீ யும் ஆர் உம் பிண்ணி இருக்க குட்டியாய் ஐ போடப்பட்டிருந்தது.

சாதாரணமாக பார்த்தால் அது கிரி தான். இவனது புலம்பலை கேட்ட பிறகு பார்த்த போது தான் வித்தியாசமே தெரிந்தது.

கிரிதரன் இன்னும் செத்துப்போன திவ்யராஜை மறக்கவே இல்லை. அவனோடு காற்றில் பேசிக் கொண்டிருக்க அவனை கொல்ல வந்த திவ்யராஜின் கரங்கள் ஊசியிலிருந்து கையை எடுத்து விட்டது.

தன்னை நினைத்து உருகுபவனை எப்படிக் கொல்வது? அதுவும் அவன் செத்துப்போய் இத்தனை வருடங்கள் கடந்தும் மறக்காமல் நினைத்து அழுபவனை?

குடும்பத்தை வேரோடு அறுத்து எறியும் வெறி கூட ஆட்டம் கண்டு விட தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

கிரியோ ராஜை அழைத்து அழுது ஓய்ந்து தூங்க ஆரம்பித்து விட்டான். தூங்குபவனை பார்த்து பெருமூச்சு விட்டவன் நன்றாக படுக்க வைத்து விட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தி விட்டு வெளியே வந்தான். அவனோடு அவன் கொண்டு போன ஊசியும் தொடாமல் வெளியே வந்து விட்டது.

மறுநாள் செல்வம் எதுவும் நடக்காதது போல் முகத்தை வைத்துக் கொள்ள கிரிதரன் தான் அவனை பிடித்தான்.

"நேத்து எதுக்கு என் ரூம்க்கு வந்த?" என்று கேட்க "என்ன ஐயா?" என்று அப்பாவியாக கேட்டான்.

"ஏய் நடிக்காத.. குடிச்சுருந்தா நான் எல்லாத்தையும் மறந்துடுவேன்னு நினைச்சியா? நேத்து யார கேட்டு ரூம்க்கு வந்த?"

"உங்களுக்கு சைட் டிஷ் கொடுக்க"

"கொடுத்துட்டு போக வேண்டியது தான? எதுக்கு அவ்வளவு நேரம் கூட இருந்த? நான் உளறுறத பார்த்து சிரிக்கிறதுக்கா?"

"இல்லங்கய்யா"

"மூச்.. இதோ பார்.. நான் சொன்ன எந்த விசயமாச்சும் வெளிய போச்சு.. உன்னை கொன்னு புதைச்சுடுவேன்"

"எதையும் சொல்ல மாட்டேங்கய்யா"

"அப்படியே இரு" என்றவன் முறைத்துக் கொண்டே சென்று
விட்டான்.

அவன் சென்றதும் பல நாட்களுக்கு பிறகு செல்வத்தின் முகத்தில் சந்தோசம் வந்து ஒட்டிக் கொண்டது.

யுத்தம் தொடரும்.
 
Status
Not open for further replies.
Top