ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மௌனம் வேண்டாம் கண்மணியே_ கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
மௌனம் 5

அவன் கூறிய வார்த்தைகளில் இருந்து இப்போதும் அவளால் வெளிவர முடியவில்லை. 'ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும் நீயும் ஏன் பிறரை போலவே என் ஒழுக்கத்தை விமர்சிக்கிறாய்?' என்ற கேள்வியை தேக்கியிருந்தது அவளது விழிகள்.

அவளது வழிகளை கண்டவனுக்கு அவளது வேதனை புரிந்திருக்க வேண்டும்! ஆனால் புரியவில்லை? தன் போக்கில் வாகனத்தை செலுத்தினான்.

பதில் இல்லாத இடத்தில் கேள்விக்கு வேலை இல்லை, புரிதல் இல்லாத இடத்தில் கண்ணீருக்கு பயன் இல்லை.

விழி வழி நிறைந்த கண்ணீரை மறைத்துக் கொண்டவள், அவனிடம் எதுவும் பேசவில்லை... உணர்வற்று சிலை போல இருக்கையில் சாய்ந்து அமர்ந்து வெளியே பார்வையை பதித்தாள்.

"என்ன எதுவும் பேச மாட்டிங்குற?" அவளது மௌனம் அவனது மனதை நெருடியது.

"என்ன பேசணும்னு எதிர்பார்க்குறீங்க?" கடக்கும் சாலையை வெறித்து பார்த்தபடி குரல் கொடுத்தாள்.

கண்ணாடி வழியே அவளது முகத்தை பார்த்தவன் "என்கிட்ட பேச எதுவும் இல்லையா?" என்று கேட்டான்.

விரக்தியாக சிரித்துக் கொண்டவள் "எதுவும் இல்லன்னா தான் நினைக்கிறேன்" என்று பொங்கி வந்த கண்ணீரை உதடு கடித்து உள்ளிழுத்துக் கொண்டாள்.

அதன் பிறகு அவன் பேசவில்லை... பயணத்தில் மௌனமே பிரத்தனமாகி போனது.

இருள் சூழ்ந்த நிலையில் இருபக்கமும் ஜன நடமாட்டம் அதிகமா இருந்தது... வெகு தூரம் வாகனம் சென்றது, 'எங்கு செல்கிறோம்? ஏன் இவ்வளவு தூரம் செல்கிறோம்?' என எதையும் அவனிடம் அவள் கேட்கவில்லை.

ஒரு இடத்தில் சட்டென்று வாகனம் நிறுத்தப்படவும் தான் நிதானத்துக்கு வந்தாள் மகிழ்.

சுற்றும் முற்றும் பார்த்தாள். ஏதோ பெரிய ஹோட்டல் போல இருந்தது. உடனே அவனை அதிர்ந்து பார்த்தாள். எந்த வித சலனமும் இன்றி காரில் இருந்து கீழே இறங்கியவன், அவளுக்கு கதவை திறந்து விட்டான்.

"இறங்கு" என்றவனை புரியாமல் பார்த்தவள் "எதுக்கு?" என்று கேட்டாள்.

"வா" என்றவன் முன்னே செல்ல... காரில் இருந்து இறங்கிவர முயற்சித்தவள் புடவை தடுக்கி கீழே விழ பார்க்க... நிலன் அவளது கரத்தை பிடித்துக் கொண்டான்.

"பார்த்து" என்று கண்டிப்புடன் சொன்னவன் அவளது கரத்தை இறுக்கி பிடிக்கவும் "விடுங்க" என்றவள் தீ சுட்டார் போல அவனது கரத்தில் இருந்து தனது கரத்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள்.

அவளது விருப்பமின்மையை உணர்ந்தவன் "சாரி" என்று கூறிவிட்டு முன்னே சென்றான். பின்னால் அவளது வருகை இல்லை என்றவுடன் திரும்பிப் பார்த்தவன் "மகிழ் உன்னை தான் வர சொன்னேன்... வா" என்றான்.

"இல்லை எனக்கு வேலை இருக்கு... நான் போகணும்"

"எங்க போக போற? அப்படி என்ன வேலை?" என்றவன் அவளை நோக்கி வந்தான்.

"நான் போகணும் புரிஞ்சுக்கோங்க" என்றவள் நடக்க தொடங்கவும்... சட்டென அவளது கரத்தை பற்றியவன் அவளை உள்ளே அழைத்து சென்றான்.

"என்ன பண்ணுறீங்க கையை விடுங்க" என்றவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தன் கரத்தை அவனிடம் இருந்து விலக்க பார்க்க "கொஞ்சம் அமைதியா வா, யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க... இங்கயே நில்லு வரேன்" என்றவன் அவளை ஒரு இடத்தில் நிற்க வைத்தான். பின்னர் ரிஷப்சனில் சென்று பேசியவன் திரும்பி வரவும் அந்நேரம் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த மகிழ் அவன் அருகில் வரவும் வேறு பக்கம் பார்வையை திருப்பினாள்.

"போகலாமா?"

"எங்க? நான் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருக்கேன்" என்றவள் தன் போக்கில் எதையோ பேச... அவளை கூர்ந்து பார்த்தவன் "என்னை பத்தி என்ன நினைச்ச?" என்று கேட்டான்.

"புரியல"

"உன்னை எதுக்காக இங்க அழைச்சுட்டு வந்தேன்னு நினைக்கிறன்னு கேட்டேன்?"

"அது"

"போதும், என்னை தப்பா தான் நினைச்சி இருக்கன்னு உன் யோசனையிலே தெரியுது"

"நீங்க தானே அப்படி சொன்னீங்க?"

"ஓ அப்போ நீ அதுக்காக தான் அங்க போனியா?" என்று காரணமாக கேட்டான். அவளிடம் பதில் இல்லை... சிரம் தாழ்த்திக் கொண்டாள்.

"கண்டிப்பா இதுக்கு பதில் சொல்ல மாட்ட... பரவாயில்லை" என்றவன் அவளை உள்ளே அழைத்து சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டான். இருவர் மட்டும் தனியே அமர்ந்து உணவருந்துவது போல அமைக்கப் பட்டிருந்தது அந்த இடம்.

சிறிது நேரத்தில் அவன் ஆடர் செய்த உணவுகளை எடுத்து வந்து கொடுத்து சென்றனர். "சாப்பிடு" என்றவன், உணவை எடுத்து அவளுக்கும் பரிமாறினான்.

"இல்லை எனக்கு வேண்டாம், எனக்கு பசிக்கல" என்று அவள் மறுக்க...

"ஆனால் எனக்கு பசிக்குது... சாப்பிடு"

"அப்போ நீங்க சாப்பிடுங்க.. எனக்கு வேண்டாம்" என்று மீண்டும் அவள் அதையே சொல்ல... பெரு மூச்சு விட்டவன், "இன்னிக்கு என்னோட பர்த் டே சோ இதை என்னோட ட்ரீட்டா எடுத்துக்கோ" என்று அவன் கூறியதும் உடனே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"ஓ வாழ்த்துக்கள்" என்றவள் அவளது உணவில் கை வைத்தாள்.

பயங்கர பசி போல, சிறிது நேரத்திலே தட்டில் உள்ள உணவு காலியானது... அவள் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தவன் சிறு முறுவலுடன் தனக்கான உணவை உண்ண தொடங்கினான்.

"உனக்கு என்ன பிரச்சனை? எதுக்காக அங்க போன? போலீஸ் கிட்ட" என்று அவன் அதை பற்றி கேட்கவும், பதில் சொல்ல மறுத்தவள், அப்படியே பேச்சை மாற்றினாள்.

"அர்ஜுன் கிட்ட பேசுனீங்களா?" என்று உணவு உண்டபடியே அவள் கேட்க, நிலனின் கரம் அப்படியே நின்றது. அவன் கேட்டுக்கொண்டிருந்த கேள்வியை மறந்து விட்டான்.

அவளது கேள்விக்கு "இல்லை" என்று தலையை மட்டும் மெதுவாக ஆட்டினான் நிலன்..

"ஏன்? அவருக்கும் இன்னிக்கு தானே பிறந்தநாள்... நீங்க அவருக்கு விஷ் பண்ணலையா?" என்று கேட்டாள்.

"உனக்கு எப்படி தெரியும்?"

"அது... இல்லை... நீங்க ஒரு முறை சொல்லியிருக்கீங்க உங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் தன் பர்த் டே வரும்ன்னு அதான் கேட்டேன்" என்றவள் அவனது முகத்தை பார்க்காமல் உணவினை உண்டாள்.

"ம்ம்ம்... அவன் விஷ் பண்ணான்... ஆனால் என்னால விஷ் பண்ண முடியல... ஒரு சின்ன ஆதங்கம்..."

"எப்போவும் நீங்க சேர்ந்தே இருப்பீங்கன்னு நெனச்சேன். ஆனால் ஒரு சின்ன பிரச்சனை எல்லாத்தையும் மாத்திடுச்சு அவ்ளோ தான் உங்க நட்பா" அவள் சாதாரணமாக கேட்டது போல இருந்தாலும் ஒவ்வொரு வார்த்தையும் ஊசியாக நிலனின் இதயத்தை குத்தி கிழித்தது.

"என்ன சார் பதிலே காணோம்"

"ஒரு நிமிஷம்" என்றவனால் அதற்கு மேலும் உணவினை உண்ண முடியவில்லை. வெளியே வாஷ் ரூமுக்கு வந்தவன் தன் அலைபேசியை உயிர்பித்தான்... அது அர்ஜுனின் எண்ணற்ற மிஸ்டுகால்களை திரையில் காட்டியது.

பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதை போல ஒரு குறுசெய்தியை அனுப்புவதற்கு டைப் செய்தான். ஆனால் அதனை அனுப்ப முடியவில்லை. அவன் செய்த துரோகம் மீண்டும் கண் முன்னே வந்து போனது.

அவனை வெறுக்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான் நிலன்.

அந்நேரம் அர்ஜுனிடமிருந்து நிலனுக்கு அழைப்பு வர... கரம் சற்று உதறியது. ஆனாலும் அழைப்பை ஏற்கவில்லை. மனம் அதற்கு இடமளிக்கவில்லை. மீண்டும் அலைபேசியை அணைத்து வைத்தவன் மகிழிடம் வந்தான்.

"சாப்பிட்டியா வா போகலாம்" என்றவன் பில் அமோண்டை அனுப்பி விட்டு அங்கிருந்து வெளியே வந்தான்.

"அர்ஜுன் கிட்ட பேசுனீங்களா?" என்று காரில் வந்தபடி மகிழ் கேட்க...

"இல்லை" என்றான்.

"உங்க இத்தனை வருஷ நட்பை ஒரு பொண்ணுக்காக விட்டுக் கொடுத்துட்டீங்களே? காதல்னு வரும் போது நட்பு பாசமெல்லாம் காணாமல் போயிடுதுல்ல"

ஏனோ அவளது வார்த்தைகள் நிலனை துளைத்து எடுத்தது... இதயத்தின் ஓரத்தில் சுள்ளென ஒரு வலி...

"இதை பத்தி இதுக்கு மேல பேசாத"

"ஏன்? ஒரு சின்ன பிரச்னைக்காக" என்று மகிழ் பேச வர.. "இனாப்" என்று ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தினான்.

"இது சின்ன பிரச்சினை இல்லை... நீ சொல்லுற மாதிரி இது ஒன்னும் பொண்ணுக்காக வந்த கோவமும் இல்லை. என் வருத்தம் ஏல்லாம் என்னோட அர்ஜுன் ஏன் இப்படி பண்ணாங்குற ஆதங்கம் மட்டும் தான். அவன் ஏன் என்கிட்ட பொய் சொல்லணும்? எதுக்காக இப்படி எல்லாம் பண்ணனும்? என் வலி யாருக்கும் புரியாது" என்று ஆக்ரோஷமாக பேசிய நிலனின் விழி விளிம்பில் கண்ணீர் துளிர்த்தது.

அவனது இந்த கோப நிலையில் இருந்து வெளி வர அரை மணி நேரம் ஆனது. அந்த அரைமணி நேரமும் மகிழ் எதையும் பேசவில்லை.

தன்னிலை விளங்காத கோவத்தில் இருப்பவனிடம், நாம் ஆறுதலாக பேசினாலும் கூட அது அவனது கோவத்தை மேலும் அதிகரிக்கும்.

"எங்க போறீங்க?" மௌனம் கலைத்து கேட்டாள்.

"எங்க போகணும்"

"இங்கயே நிறுத்துங்க"

"இங்கயா? நேரம் ஆகிடுச்சு... நீ எங்கே தங்கியிருக்கன்னு சொல்லு கொண்டு போயி விடுறேன்"

"இல்லை வேண்டாம் பக்கத்துல தான் இருக்கு... நானே போயிக்கிறேன்" என்று அவள் அழுத்தமாக கூறவும் வண்டியை நிறுத்தினான்.

"சரி நான் கிளம்புறேன்" என்றவள் செல்ல போக... "ஒரு நிமிஷம்" என்று தடுத்தான்.

"என்ன?"

"உனக்கு பணம் ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு... தயவு செய்து மறுபடியும் அந்த தொழில் வேண்டாம்" என்று சொன்னவன் பணத்தை எடுத்து அவளிடம் நீட்ட... அவனையும் அந்த பணத்தையும் மாறி மாறி பார்த்தவள் "உங்க உதவிக்கு ரொம்ப நன்றி... ஆனால் எனக்கு இது வேணாம், இப்போ இதை நான் வாங்கிட்டா நீங்க சொன்னது உண்மை ஆகிடும்" என்றாள்.

"நான் உன்னை தப்பா நினைச்சு இதை கொடுக்கல... ஒரு உதவியாக தான்"

"இப்போ எனக்கு யாரு உதவியும் வேண்டாம்... தேவைப்பட்டா நானே கேக்கிறேன்" என்றவளின் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது, அதனை அவன் அறியாத வண்ணம் மறைத்துக் கொண்டவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

"மகிழ்" நிலன் குரல்... கண்களை துடைத்து விட்டு திரும்பி பார்த்தாள்.

"என் மேல கோவமா?"

"இல்லை" என்று சிரித்தபடியே தலையாட்டியவளின் கண்களில் நிரம்பி இருந்த கண்ணீர் அவனது பார்வைக்கு புலப்படவில்லை. அதனால் மென்மையாக புன்னகைத்துக் கொண்டான்.

எதிரில் வந்த ஒரு ஆட்டோவில் ஏறி மகிழ் சென்ற பின்பு, அங்கிருந்து கிளம்பினான் நிலன்.


*****

வாசுகி யாரோ ஒருவருடன் அமர்ந்து காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருந்ததை அழகாக புகைப்படம் எடுத்து அர்ஜுனின் எண்ணிற்கு அனுப்பினான் அவனது அசிஸ்டண்ட். வாசுகியின் எதிரில் அமர்ந்திருந்தவனது முகம் சரிவர அடையாளம் தெரியவில்லை.

கண்ணாடி அணிந்திருந்ததாலும் தாடி வைத்திருந்ததாலும் முகம் தெளிவாக அடையாளம் காணும் படி இல்லாமல் போனது.

"இவன் யாருடா எருமை மாதிரி இருக்கான்? இவன் கிட்ட இவளுக்கு என்ன பேச்சு" என்று யோசித்தவன், அந்த போட்டோவை நன்றாக ஜூம் செய்து பார்த்தான்... 'இதற்கு முன்பாக எங்கேயோ பார்த்த முகம் போல இருந்தது'... வெகு நேரம் யோசித்தவனுக்கு சட்டென ஒருவனின் முகம் நினைவு வந்தது "இவனா?" என்றவனின் கண்கள் நிறம் மாற, வாசுகியின் வருகைக்காக காத்திருந்தான்.

இரவு ஒன்பது மணி ஆன போதும் அவள் வீட்டுக்கு வரவில்லை.

*****

அப்போது தான் அழுத குழந்தையை தட்டி கொடுத்து, தன் நெஞ்சோடு அணைத்து தூங்க வைத்தாள் மகிழ் வதனி. கண்கள் மெல்ல மெல்ல தூக்கத்தை தழுவிய சமயம் 'டம்... டம்' என்ற ஓசையில் பட்டென்று கண்களை திறந்தாள்.

கதவுகள் உடைபடுவது போல சத்தம் கேட்டது.

"ஏய் கதவை திறடி" என்று வெளியே ஒருவனது குரல்! அந்த குரல் யாருடையது என்று அறிந்து கொண்டவள் சலிப்புடன் சத்தம் கொடுக்காமல் மீண்டும் கண்களை மூடித் தூங்க முயற்சித்தாள்.

"அடியே *** கதவை திறடி"
என்று தொடர்ச்சியாக அவன் கதவை தட்டி கத்தினான். அவள் திறக்கவில்லை என்றவுடன் மது போதையில் தடுமாறியவன் போனை எடுத்து அவளது எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

அந்த சத்தத்தில் குழந்தை வேறு புரண்டு படுக்க.. குழந்தையின் முதுகை மெதுவாக தட்டி கொடுத்து அருகில் படுக்க வைத்தவள்.

அலைபேசியை அணைத்து வைத்து விட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.

அவள் போனை எடுக்கவில்லை என்றவுடன் கதவை ஓங்கி மிதித்தவன், "**** கதவை திறக்க மாட்டியா? இருடி வரேன்" என்று கருவிக் கொண்டவனின் சத்தம் சில நொடி இல்லாமல் இருக்க... 'போய் விட்டான் போல' என்று சற்று ஆசுவாசமானவள், தன் அருகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்து விட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

திடீரென "கண்ணம்மா" என்ற குரல் சன்னல் அருகே கேட்க, சட்டென கண்களை திறந்தவளின் கண்கள் கண்ட காட்சியில் துடித்து போனாள் மகிழ்.

தனி ஒரு அறையில் உணர்வற்று கட்டிலில் கிடந்த ஒருவளின் தலையனை மீது அவன் கொளுத்தி போட்ட நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

 

Mythili MP

Well-known member
Wonderland writer
மௌனம் 6

வீட்டுக்குள் நுழைந்த வாசுகியை சாவகாசமாக பார்த்த அர்ஜுன் "போன வேலை முடிஞ்சுதா?" என்று கேட்டான்.

அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் பேசாமல் பின்னலிட்ட தனது கூந்தலை கலைத்து விட்டு கண்ணாடி முன்பு நின்று மீண்டும் தலையை வாரினாள்.

"உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்" என்று சற்று காட்டமாக பேசியவனுக்கு, கண்ணாடியை பார்த்தவாறே பதில் சொன்னாள்.

"ம்ம்ம் தெரியுது, சொல்லுங்க"

"எங்க போயிட்டு வந்த?" என்று கேட்டான்.

"ஏன் உங்களுக்கு தெறியாதா? அது தான் வேவு பார்க்க ஆள் அனுப்பியிருப்பீங்களே? அது கூட தெரியாத அளவுக்கு என்னை முட்டாள்னு நெனச்சீங்கன்னா! சாரி உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க, நான் அவ்ளோ முட்டாள் இல்லை" என்று சொன்னவளின் இதழ்கள் கேலியாக வளைந்தது.

"ப்ச் என்னை ஏமாத்திட்டியேடி" என்று சட்டென சொன்னவனை புரியாத பார்வை பார்த்தபடி நின்றவளை நொடியில் நெருங்கியவன் சட்டென அவளை கண்ணாடியில் சாய்த்தான்.

அவனது திடீர் செயலில் பயந்து தடுமாறியவள் படபடத்த விழியுடன் மொழியிழந்து நின்றாள்.

"உன்னை அப்பாவின்னு நெனச்சேன். நிலன் கூட அப்படி தான் சொன்னான். அதை நம்பி பெரிய தப்பு பண்ணிட்டேன். உன்னை உருகி உருகி காதலிச்ச என்னை இப்படி ஏமாதிட்டியேடி" என்று பொய்யான வருத்தத்துடன் சொன்னவனை எரிச்சலாக பார்த்தவள் "இப்படி எல்லாம் பேசி எதை நிரூபிக்க பார்க்குறீங்க? தள்ளி போங்க" என்றவள் அவனை பிடித்து தள்ளி விட பார்க்க... அவனை அசைக்க கூட முடியவில்லை. உடனே ட்ரெஸிங் டேபிளில் இருந்த ஹேர் பின்னை எடுத்து அவனது கரத்தில் குத்தினாள்.

வலியில் உடனே அவளை விட்டு விலகியவன் "ஏய்" என்று சீறினான்.
அதனை கண்டு கொள்ளாதவள் அங்கிருந்து செல்ல பார்க்க... அவளது கரத்தை பற்றி தன் பக்கம் இழுத்தான்.

"என்னை விடுங்க" என்று திமிறியவளை அணைத்து பிடித்தவன் தன் அலைபேசியில் இருந்த போட்டோவை காட்டி "இவனை எதுக்காக பார்க்க போன? நயிட் ஒன்பது மணி வரை வெளியே உனக்கு என்ன வேலை?" என்று கேட்டான்.

"உங்களுக்கு அப்போ இவரை தெரியுமா? எப்படி?" என்று எதிர் கேள்வி கேட்டவளை, உறுத்து விழித்தவன்... "கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு? என்னை எதிர் கேள்வி கேட்குற உரிமையை நான் உனக்கு கொடுக்கல"

"அப்போ உங்க கேள்விக்கு பதில் சொல்லணும்ங்குற அவசியமும் எனக்கில்லை" அவனுக்கு சற்றும் குறையாத திமிருடன் பதில் சொன்னவளை சினம் பொங்க பார்த்தவன் தனது பிடியில் அழுத்தம் கொடுக்க, வலியில் முகம் சுருக்கினாள்.

"என் பொறுமையை சோதிக்காத? அவனுக்கும் உனக்கும் எப்படி பழக்கம்?"

"இவ்ளோ விஷயத்தை தெரிஞ்சுகிட்ட நீங்க, இதையும் கண்டு பிடிங்க... ஷீட்டிங் ஸ்டார்ட் ஆக இன்னும் பத்து நாள் இருக்குல்ல அது வரை உங்களுக்கு ஒரு பொழுது போக்கா இருக்கும்" என்று நக்கல் குரலும் பதில் சொன்னவளின் நாடியை வலிக்க பற்றியவன். "ரொம்ப திமிருடி உனக்கு?" என்று அழுத்தமாக உரைத்தான்.

"தேங்க்ஸ்" என்றவள் அதே திமிருடன் அவனை பார்த்தாள்.

"நீ நினைக்கிற எதுவும் நடக்காது வாசுகி... என்னை ரொம்ப சீண்டி பார்க்காத? உன் எதிர்பார்ப்புக்கு எல்லாம் அப்பாற்ப்பட்டவன் நான்... தேவையில்லாமல் என் வழியில் வந்து சிதைந்து போயிடாத"

"ம்ம்ம் பார்க்கலாம் மிஸ்டர் அர்ஜுன், அப்புறம் நேத்து ஒன்னு சொன்னீங்களே நீங்க என்னை தொட்டதுக்காக நான் வருத்தப்படலைன்னு ஆமா நான் வருத்தப்படால, எதுக்கு வருத்தப்படணும்? என் அனுமதி இல்லாமல் என் வாழ்கையில் நடந்த அந்த விஷயத்துக்காக நான் ஏன் வருத்தப்படணும்? தாலி கட்டிட்டேன்ங்குற திமிருல நாலு சுவத்துகுள்ள வச்சு என் வாழ்க்கை அழிச்சிட்டதா நீங்க நெனச்சா அதுக்காக நீங்க தான் வருத்தப்படணும் நான் இல்லை. உடம்பில தான் கற்பு இருக்குன்னு நீங்க சொன்னீங்கன்னா? அதுல எனக்கு உடன்பாடில்லை... மிஞ்சி மிஞ்சி போனா உங்களால் என்னை அப்படி சொல்லி மட்டும் தான் கஷ்டபடுத்த முடியும்? ஒரு பொண்ணோட வாழ்க்கையில் ஆணோட ஆதிக்கம் அங்கயிருந்து தானே தொடங்குது... நீங்களும் சராசரி ஆண்களை போல தான்னு நேத்தே எனக்கு புரிஞ்சிடுச்சு" என்று சொன்னவளை மெச்சுதல் பார்வை பார்த்தவன்...

"நல்லா பேசுறடி... நோட் பண்ணிக்கிறேன் அடுத்த படத்துக்கு யூஸ் ஆகும்" என்று கூறி கண்ணடித்தான். அவனது செயல்கள் அவளுக்கு அலுப்பாக இருந்தது.

"ஓகே போனது போகட்டும் இன்னொரு முறை நீ இந்த வீட்டு வாசல் படியே தாண்டினால் என்னை வேற மாதிரி பார்க்க வேண்டியது வரும்... பொறுமையா சொல்லும் போதே கேட்டுகிட்டா உனக்கு நல்லது... புரியுதா?" என்று கேட்டவன் அவளது கன்னத்தில் மெதுவாக தட்டினான்.

"நான் எங்க வேணா போவேன் என்ன வேணா பண்ணுவேன் அதை கேட்க உங்களுக்கு உரிமை இல்லை" என்று கரம் நீட்டி பேசியவளின் விரலை பிடித்து முறுகியவன் அதனை உடைந்து விட்டு தான் ஓய்ந்தான். அவ்வளவு கோவம்...

வலியில் துடித்த வாசுகி என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் "உங்க அம்மாவை உங்க அப்பா இப்படி அடக்கி வச்சியிருந்தா அவங்க ஓடி போயிருக்க மாட்டாங்கல்ல" என்று கண்களில் வடிந்த கண்ணீருடன் சொல்ல, பொறுமை இழந்தவன் "வேண்டாம் இதுக்கு மேல பேசாத" என்று அறை எதிரொலிக்க கத்தினான்.

"ஏன் பேச கூடாது... உண்மையை சொன்னா வலிக்குதா... உன் அம்மா ஒரு ஒழுக்கம்" என்று சொன்னவளின் தலையை பிடித்து நொடியில் சுவரில் மோத போனவன் ஒரு இன்ச் இடைவெளியில் நிறுத்தினான்.

பயத்தில் மிரண்டு முழித்த வாசுகிக்கு உயிர் வரை பயம் பிடித்துக் கொண்டது. மரண வாசலை தொட்டு மீண்டு வந்தது போல இருந்தது.

"பயந்துட்டியா? சும்மா" என்று சொன்னவன் அவளை பார்த்து மென்மையாக சிரிக்க... அவளது உடல் நடுங்கி போனது... இருந்தும் அவனது அமைதியில் சற்று நிம்மதியானவள், அவனை நிதானமாக பார்த்தாள், உடனே தனது பார்வையை மாற்றி குரூரமாக சிரித்தவனை அச்சம் கொண்டு நோக்கியவள் என்ன என்று யோசிக்கும் முன்னே அவளது தலையை பிடித்து சுவரில் மோத செய்தான்.

நெற்றி வெடித்து ரத்தம் வழிந்த வண்ணம் அவன் கைப்பிடியில் நின்றவளின் கண்கள் மெல்ல மெல்ல மயக்கத்தை தழுவியது அப்படியே அவன் மீது மயங்கி சரிந்தாள்.

ரத்தம் வடிய தன் மீது விழுந்தவளை சோபாவில் அமரவைத்தவன், அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து அவளையே பார்த்தவாறு சிகரெட்டை எடுத்து புகைக்க தொடங்கியிருந்தான்.

அவளது காயம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை... மாறாக அவளது நெற்றியில் வடிந்த ரத்தத்தை தொட்டு பார்த்து இதழ் பிதுக்கியவன், நன்றாக சாய்ந்து அமர்ந்து புகைக்க ஆரம்பித்தான்.

****

திடீரென "கண்ணம்மா" என்ற குரல் சன்னல் அருகே கேட்க, சட்டென கண்களை திறந்தவளின் கண்கள் கண்ட காட்சியில் துடித்து போனாள் மகிழ்.

தனி ஒரு அறையில் உணர்வற்று கட்டிலில் கிடந்த ஒருவளின் தலையனை மீது அவன் கொளுத்தி போட்ட நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

"ஐயோ" என்று பதறி துடித்த மகிழ், எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைக்க போராடினாள்.

நெருப்பை கண்டு குழந்தை வேறு பயத்தில் 'வீல்' என்று அலறியது. குழந்தையின் சத்ததில் வெடுக்கென திரும்பி பார்த்தவள் "அம்மு ஒண்ணும் இல்லடா" என்று பரிதவிப்போடு குழந்தையை அமைதிப்படுத்த முயற்சித்தாள்.

நெருப்பை அணைக்கவா? இல்லை பயத்தில் மிரண்டு அழுது கொண்டிருக்கும் குழந்தையை அள்ளி நெஞ்சோடு அணைத்து ஆறுதல் படுத்தவா? என்று புரியாமல் திகைத்து முழித்தாள்.

"ம்மா" என்று அழுதபடியே குழந்தை அவளை நோக்கி வர, பயந்து போனாள்
"அம்மு... அம்மா பக்கத்துல வராதீங்க தள்ளி போங்க" என்று கத்தியவள் இங்கு நெருப்பை அணைக்க போராடினாள்.

"ம்மா" என்று பயம் கொண்டு அழுத குழந்தை, மகிழ் வதனியின் காலடி நோக்கி வரவும் "அம்மு பயப்படாத ஒண்ணுமில்லடா ஒண்ணுமில்லை" என்றபடி அருகில் இருந்த ஒரு துணியை எடுத்து எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைக்க போராடினாள். அவளது அவஸ்தையை கண்டு வெளியே நின்றவன் சிரித்துக் கொண்டிருந்தான்.

வன்மம் கொண்டவனின் வதனத்தில் அப்படி ஒரு ஆனந்த சிரிப்பு!!! அதனை கண்டவள் "நீயெல்லாம் மனுசனா ச்சே" என்று அலுத்துக் கொண்டாள். அவளது கண்கள் கலங்கி போனது 'எப்படி சில மனிதர்களால் பிறர் துன்பத்தை கண்டு எளிதாக எள்ளி நகையாட முடிகிறது?' என்ற ஆதங்கத்தில் வெளிப்பட்ட கண்ணீர் அது.

ஒருவழியாக போராடி எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைத்தவள். பெரும் மூச்சினை எடுத்து, அந்த கட்டிலின் அருகே முழங்காலிட்டு அமர்ந்தாள். இத்தனை போராட்டத்தின் மத்தியிலும் உணர்வில்லாமல் கட்டிலில் படுத்துக் கிடந்த அந்த பெண்மணியின் தலையை ஆதரவாக கோதி விட்ட மகிழுக்கு நடந்த அந்த நிகழ்வுகள் வேதனையை கொடுத்தது.

தீயினை அணைக்க போராடியதன் விளைவாக வதனியின் கரத்தில் தீ
காயம் ஏற்பட்டது. ஆனால் உணர்வற்று கட்டிலில் கிடந்த அந்த பெண்ணுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை அதனை எண்ணி சற்று நிம்மதி அடைந்தவளுக்கு இப்போது தான் மெல்ல மெல்ல தனக்கு ஏற்பட்ட காயம் எரிச்சலை கொடுத்தது. இதழ் கடித்து வலியினை பொறுத்துக் கொண்டவள், தன் முந்தானை சேலையை பிடித்து வைத்து அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். கண்ணீர் ஓய்வில்லாத கண்ணீர் இன்னும் அவளது விழிகளில் ஆளுமை செய்தது.

கத்தி அழ வேண்டும் போன்று இருந்தது... 'எங்களுக்கு ஏன் இப்படி ஒரு சாபமான வாழ்க்கை? அப்படி என்ன பெரும் பாவம் இழைத்து விட்டோம் உனக்கு?' என்று சன்னல் வழியே நின்று கொண்டிருந்தவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

அவன் ஜெயக்குமார்
இதோ கட்டிலில் உணர்வற்று கிடக்கிறாளே அவளது கணவன்! அப்போது படுக்கையில் கிடப்பவளுக்கும் மகிழுக்கு என்ன உறவு?

*****

மகிழ் பிறந்த நேரம் மஞ்சுளாவின் தாய் இறந்து விட்டார். அவளது தந்தை தான் மஞ்சுளாவையும், மகிழயும் அரவணைத்து வளர்த்து வந்தார்.

மஞ்சுளாவுக்கும், மகிழுக்கும் இடையே கிட்ட தட்ட 12 வயது வித்தியாசம் இருக்கும். அதனால் மஞ்சுளா ஒரு அன்னையை போல வதனியை பார்த்துக் கொண்டாள்.

பிறந்ததில் இருந்து தாய் முகம் காணாத வதனிக்கு மஞ்சுளா தான் அன்னை.

மஞ்சுளாவுக்கு பத்தொன்பது வயது இருக்கும் பொழுது அவளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தார். அவளது தந்தை ரங்கன். அவர் ஒரு கட்டிட தொழிலாளி.

அனைத்தும் நல்லபடியாக சென்று கொண்டிருந்த சமயம், இன்னும் பத்து நாட்களில் மஞ்சுளாவுக்கு கல்யாணம் என்று இருந்தபோது ஒருநாள் வேலை செய்து கொண்டிருந்த நேரம் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ரங்கனுக்கு முதுகெலும்பு உடைந்தது.

மஞ்சுளாவின் திருமணத்துக்காக ரங்கன் சேர்த்து வைத்திருந்த பணம் முழுவதும் அவரது மருத்துவ செலவுக்கே சரியாக இருந்தது. ஆகையால் மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியாமல் மஞ்சுளாவின் திருமணமும் நின்றது.

குன்று போல பணம் இருந்தாலும் ஒரு நோய்க்கு வைத்தியம் பார்க்க அது போதாது என்பார்கள்... வாழ்க்கைக்கு பணம் மிக முக்கியம் எப்போது தெரியுமா? நாம் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது ஆடம்பரத்துக்காக பணம் தேவை. ஆனால் ஆரோக்கியம் இல்லையேல் மலை அளவு பணம் இருந்தும் அது மண்ணுக்கு சமம்... செல்வத்தை எண்ணி பார்த்து நிம்மதி கொள்ள உடலிலும், மனதிலும் வலு இருக்காது.


என்ன தான் வைத்தியம் பார்த்த போதும் பயனில்லை. ரங்கனால் எழுந்து நடக்க முடியவில்லை. அவர் வேலைக்கு செல்ல முடியாமல் இருக்க குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. அந்த வறுமையை போக்க மஞ்சுளா வேலைக்கு சென்றாள்.

அவள் வேலைக்கு செல்ல, மகிழ் பள்ளிக்கு சென்றாள். இப்படியே வருடங்கள் கடந்தது. குடும்பம் குடும்பம் என்று தனது சுய விருப்பு வெறுப்பை விடுத்த மஞ்சுளா ஒரு கட்டத்தில் ஜடம் போல வேலை குடும்ப பொறுப்பு என்று சிரிப்பை தொலைத்தாள்.

இத்தனை வருடத்தில் பல நபர் மஞ்சுளாவை பெண் கேட்டு வீட்டிற்கு வந்து இருப்பார்கள். ஆனால் அனைத்தையும் ரங்கன் நிராகரித்து விட்டார்.

எங்கு அவள் திருமணம் செய்து கொண்டு தங்களை விட்டு சென்று விடுவாளோ? ஒருவேளை உணவுக்காக பிறர் கையை எதிர்பார்க்கும் நிலைமை தனக்கு வந்து விடுமோ? என்று அச்சம் கொண்டார். அதனால் தங்களை பார்த்துக்கொள்ள வேண்டி வாழ வேண்டிய வயதில் இருந்தவளது வாழ்க்கையை தன்னலம் கருதி பலி கொடுக்க துணிந்தார்.

அது எல்லாம் மகிழுக்கு தெரியாது அதனை புரிந்து கொள்ளும் வயதும் அப்போது அவளுக்கு இல்லை.

வருடங்கள் சென்றது மஞ்சுளாவுக்கு இப்போது முப்பது வயது. கன்னி பெண்ணாக இருந்தவள் முதிர் கன்னியானாள்.

தனது வயது ஒத்த பெண்கள் எல்லாம் குடும்பமும் குழந்தையாக இருப்பதை பார்த்து எத்தனை நாட்களோ ஏங்கி இருக்கிறாள். யாரும் அறியாத வண்ணம் கண்ணீர் விட்டும் கதறியிருக்கிறாள். 'நீ உயிரோடு இருந்திருந்தால் இந்த குடும்ப பாரம் என் கழுத்தை நெரித்து இருக்காதே... ஏன் அம்மா என்னை விட்டுவிட்டு சென்றாய்?' சொல்லி அழ ஆள் இல்லாமல் ஊமையாக துடித்து இருக்கிறாள். பத்தொன்பது வயதில் இருந்து குடும்ப பொறுப்பை சுமந்து வாழ்ந்தவளுக்கு மூச்சு முட்டியது. ஒருநாளவது என்னை தனியாக விடுங்களேன்? நான் நானாக ஒரு நொடியாவது வாழ்ந்து கொள்கிறேன். என்று அவளது மனம் அலறியது.

அவள் ஒன்றும் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு தன் இஷ்டத்துக்கு வாழ ஆசைப்படுபவள் இல்லை... இருந்தாலும் அவளுக்கும் தனிப்பட்ட விருப்பம் என்ற ஒன்று இருக்கும் அல்லவா? அது ஒன்றும் பேராசை இல்லையே... அனைத்து பெண்களுக்கும் உள்ள சாதாரண எதிர்பார்ப்பு தானே!

மஞ்சுளா கொஞ்சம் நல்ல ஆடையுடுத்தி வேலைக்கு சென்றாலே ரங்கனுக்கு பயம் பிடித்துக் கொள்ளும். 'மீண்டும் திருமணம் என்று யாராவது பெண் கேட்டு வந்து விடுவார்களோ' என்று நினைத்து அச்சம் கொள்வார். அதனாலே அவள் ஒப்பனை செய்தாலோ, நேர்த்தியாக ஆடை அணிந்தாலோ "இந்த வயசுல உனக்கு எதுக்கு இதெல்லாம்? வேலைக்கு தானே போற இல்லை வேற எங்கேயாவதும் போறியா?" என்று வேண்டுமென்றே வார்த்தையால் அவளது மனதை குத்தி கிழிப்பார். உடனே சாதாரணமாக ஒரு ஆடையை அணிந்து கொண்டு முகத்தை கழுவி விட்டு வேலைக்கு சென்று விடுவாள்.

படுத்த படுக்கையாக கிடக்கும் தந்தைக்கு, தாயாக மாறி பணிவிடை செய்து, பார்த்துக் கொண்ட பெண்ணவளுக்கு இறுதியில் மிஞ்சியது அவப்பெயர் மட்டுமே...

குடும்பத்துக்காக அனைத்தையும் இழந்தவள் தன் சுயம் தொலைத்து நடமாடும் சிதையாக வாழ்ந்து வந்தாள். அவளது வலி அங்கு யாருக்கும் புரியவில்லை, அவள் கொண்டு வரும் பணம் மட்டுமே பெரிசாக தெரிந்தது. ரங்கன் கண்ணுக்கு மஞ்சுளா என்பவள் வெறும் பணம் காய்க்கும் மரமாக தான் தெரிந்தாள் போல...

இந்நிலையில் தான் மஞ்சுளா வேலை செய்யும் கார்மென்ட்சுக்கு வேலைக்கு வந்தான் ஜெயக்குமார். அவளை விட மூன்று வயது சிறியவன்.... அங்கு தடம் மாறியது மஞ்சுளாவின் வாழ்க்கை.... அவள் செய்த பிழை மகிழ் வதனியின் வாழ்க்கையையும் காவு வாங்கியது தான் வேதனை.
 
Status
Not open for further replies.
Top