அத்தியாயம் 19
தன் எண்ணிற்கு வந்த அழைப்பை புருவ முடிச்சுகளோடு பார்த்தவாறு ஏற்று காதில் வைத்தாள் வைஷ்ணவி.
மறுமுனையில் கேட்ட குரலில் அதிர்ந்து விழித்தவள் வீட்டிலிருந்து வெளியேறி வாசலை நோக்கிச் செல்ல, அதை மற்ற அறையிலிருந்த லலிதாவும் ஆராதியாவும் காணாமல் போனது அவர்களின் துரதிஷ்டவசமாகிப் போனது.
"தியா, எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா. என்னாச்சுன்னு எனக்கு எதுவும் சொல்லவும் மாட்டேங்குற, ஹர்ஷா தம்பி வேற ஏதேதோ சொல்றாரு. என்னதான் நடக்குது இங்க, இரண்டு பேரும் என்ன தப்பு பண்ணி தொலைச்சீங்கன்னு மொதல்ல சொல்லுங்க" என்று லலிதா மூக்கை உறிஞ்சியவாறு மகளிடம் கேட்க, சலிப்பாக விழிகளை உருட்டினாள் ஆராதியா.
"அய்யோ அம்மா! நாங்க எந்த தப்பும் பண்ணல, எங்க நேரம். சீக்கிரமா எல்லாமே சரியாகிடும். நீ சும்மா யோசிச்சிட்டு இருக்காத புரியுதா?" என்று அவள் சமாளிக்க, அப்போதும் லலிதாவின் முகம் தெளிந்தபாடில்லை.
"என்னென்னவோ சொல்லுற, நான்தான் இரண்டு பொம்பள புள்ளைங்கள பெத்துட்டு வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு" என்று அவர் அப்போதும் சிணுங்கலை தொடர, 'இவங்கள திருத்த முடியாது' என்று இரு பக்கமும் சலிப்பாக தலையாட்டியவாறு அறையிலிருந்து வெளியேறியவள் வைஷ்ணவியைத் தேடிச் சென்றாள்.
"வைஷு, ரொம்ப நேரமாகிருச்சு. இன்னும் சாப்பிடாம என்ன பண்ற?" என்று ஆராதியா கேட்டவாறு அவளுடைய அறைக்குள் நுழைய, அங்கு அவளுடைய சகோதரி இருந்தால்தானே!
சிறு பயம் மனதில் தொற்றிக்கொள்ள, வேகமாக வீடு முழுக்க தேட ஆரம்பித்தாள் அவள்.
"வைஷு... வைஷு... அம்மா வைஷ்ணவிய பார்த்தீங்களா, வீட்டுல எங்கேயும் இல்லை. எங்க போனா?" என்று அவள் பதற்றமாகக் கேட்டுக்கொண்டே சுற்றி முற்றி பார்க்க அப்போதுதான் அவளுடைய விழிகளில் வீட்டின் வாசற்கதவு திறந்து வைக்கப்பட்டிருப்பது தென்பட்டது.
"அம்மா, வைஷ்ணவி வெளியில போனாளா என்ன?" என்று கேட்டுக்கொண்டே இதயத்தின் ஓசை காதில் விழ ஒவ்வொரு அடியாக வைத்து வெளியே சென்றுப் பார்த்தாள் ஆராதியா.
அவள் நினைத்தது சரியே!
வைஷ்ணவியின் அலைப்பேசி அனாதையாக வீட்டு வாசலில் கிடக்க, அதை கையிலெடுத்தவளின் விழிகளிலிருந்து விழிநீர் அருவியாக ஓடியது.
"அம்மா..." என்று அவள் பெருங்குரலெடுத்துக் கத்த, லலிதாவோ ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டார்.
அதேநேரம்,
வீட்டு சோஃபாவில் முட்டியில் இரு கைகளைக் கோர்த்து அமர்ந்திருந்தான் ஹர்ஷா. அவனுடைய பார்வை மாடியிலிருந்த அந்த ஒரு அறையை அடிக்கடி நோட்டமிட்ட வண்ணம் இருக்க, சடாரென எழுந்தவன் மாடிப்படிகளில் தாவி குதித்து அந்த அறைக்குள் நுழைந்தான்.
"இல்லை... இருக்காது... இருக்கக் கூடாது..." என்று மட்டுமே மீண்டும் மீண்டும் அவன் மனம் சொல்லிக்கொண்டிருக்க, உடனே அந்த அறையை அலச ஆரம்பித்தவனின் கரங்களில் சிக்கியது அந்த புகைப்படம்.
புகைப்படம் இருக்கலாம் என எதிர்பார்த்தானே தவிர அந்த முகத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்வது போல் சரியாக ப்ரணவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்றதுமே "ஹர்ஷா... ஹர்ஷா வூ இஸ் ஹீ?" என்ற ப்ரணவின் குரல் பதற்றமாக ஒலிக்க, "டீஎன்ஏ டெஸ்ட் என்னாச்சு ப்ரணவ்?" என்று மூச்சை இழுத்துப் பிடித்து கடைசி நம்பிக்கையாகக் கேட்டான் ஹர்ஷத்.
"அனிதாவோட உடம்புலயிருந்து எடுத்த டீஎன்ஏ சேம்ப்பிளும் நீங்க கொடுத்த ஹெயார்லயிருந்து எடுத்த டீஎன்ஏ சேம்பிளும் மேட்ச் ஆகியிருக்கு. அவன்... அவன்தான் அந்த கொலைகாரன். இதுக்கு மேல தாமதப்படுத்த வேணாம். யாருன்னு சொல்லுங்க ஹர்ஷா"
என்று ப்ரணவ் அழுத்தமாகக் கேட்க, மற்றவனுக்கோ வார்த்தைகள் தொண்டையை அடைத்தன. அபியின் அறையிலிருந்து எடுத்த மீராவின் புகைப்படம் கையிலிருக்க, ஒருகணம் அவனுக்கு தலையே சுற்றிவிட்டது.
சில சம்பவங்களும் அவனுடைய மனக்கண் முன் வந்து சென்றன.
அன்று க்ரிஷ் இருக்கும் இடத்தைப் பற்றி அபிமன்யுவிடம்தான் சொல்லியிருந்தான் ஹர்ஷா. கூடவே, 'கடைசியா அந்த டூர்லதான் நாங்க ஹேப்பியா இருந்தோம்' என்ற அபியின் வார்த்தைகளும் அவனின் சந்தேகத்தை மேலும் தூண்டின.
தன் சகோதரனாக இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டே ஒரு சந்தேகத்தின் அடிப்படையில்தான் அபிமன்யுவின் சீப்பிலிருந்த அவனின் முடியை டிஎன்ஏ பரிசோதனைக்காக ப்ரணவிடம் அவன் கொடுத்தது.
ஆனால், உச்சகட்ட சந்தேகத்தில் அபிமன்யுவின் அறையை அலசவும் அவனே எதிர்பார்க்காமல் மீராவின் புகைப்படம் கிடைத்திருக்க, அத்தோடு சேர்த்து ப்ரணவின் அழைப்பும் போதுமானது.
அவன் நினைத்தது சரியே!
"அது... அது வந்து ப்ரணவ்... அது அபிமன்யு" என்று ஹர்ஷா வார்த்தைகள் தடுமாற சொல்ல, "அபிமன்யு..." என்று யோசனையோடு இழுத்த மற்றவனுக்கு அந்த பெயர் சுத்தமாக ஞாபகத்தில் இல்லை.
"யார் அது?" என்று ப்ரணவ் புரியாமல் கேட்க, "என்னோட தம்பி அபிமன்யு" என்று ஹர்ஷா சொன்னதும்தான் தாமதம், ஒருகணம் ப்ரணவிற்கே தூக்கி வாரிப்போட்டது.
"என்ன சொல்றீங்க ஹர்ஷா, என்.. என்னால நம்பவே முடியல. அது.. அது எப்படி?" என்று அந்த அதிகாரியே இந்த எதிர்பாராத திருப்பத்தில் தடுமாறிப் போக, சரியாக இரண்டாவது அழைப்பு வருவதற்கான ஒலி ஹர்ஷாவின் அலைப்பேசியில் எழுந்தது.
திரையைப் பார்த்தவன், "வெயிட் ப்ரணவ்!" என்றுவிட்டு தன்னவளின் இரண்டாவது அழைப்பை ஏற்க, மறுமுனையில் ஆராதியாவின் விம்மலுடன் கூடிய அழுகை அவனை ஒருகணம் பதற வைத்துவிட்டது.
"ஆரு, என்னாச்சு... என்னன்னு சொல்லு!" என்று அவன் பதறியபடிக் கேட்க, "வைஷு... வைஷுவ காணோம்டா, வீட்டுல எங்கேயும் இல்லை. வெளியில அவளோட ஃபோன் கிடந்திச்சு. எனக்.. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ஹர்ஷா. ப்ளீஸ் வைஷுவ எப்படியாச்சும் அழைச்சுட்டு வா ப்ளீஸ்!" என்று அழுகையோடு கெஞ்ச ஆரம்பித்தாள் அவள்.
ஆடவனுக்கோ அடிக்கு மேல் அடி விழுந்தது போலிருந்தது. அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியாமல் அப்படியே நின்றிருந்தவனுக்கு இப்போது தன் சகோதரனை எங்கு சென்று தேடுவது என்று கூடத் தெரியவில்லை.
"என் தம்பியா இருந்தாலும் தப்பு தப்புதான்" என்று அழுத்தமாக சொன்ன ஹர்ஷா, ஒரு முடிவெடுத்தவனாக வீட்டிலிருந்து வெளியேறி தன் புல்லட்டை உயிர்ப்பித்தான்.
போகும் வழியிலேயே ப்ரணவிற்கு அழைத்தவன், வைஷ்ணவி கடத்தப்பட்டதைப் பற்றி சொல்ல, அந்த நொடி ப்ரணவிற்கு மொத்த உலகமும் செயலிழந்து போலாகியது.
கால்கள் தளர அப்படியே அவன் அமர்ந்து விட, அவனின் மனதிற்குள் வைஷ்ணவியின் முகம்தான் விம்பங்களாக தோன்றி மறைந்தன.
"வைஷ்ணவி..." என்று அவனுடைய இதழ்கள் முணுமுணுக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவன் வேகமாக ஆராதியாவின் வீட்டிற்குச் சென்றான்.
அதேநேரம் இங்கு தன்னவளின் வீட்டின் முன் புல்லட்டை நிறுத்தினான் ஹர்ஷா.
"ஆரு..." என்றழைத்த வண்ணம் இவன் புயல் போல் நுழைய, தன்னவனைக் கண்டதும் தாயைக் கண்ட குஞ்சு போல் வேகமாக வந்து அணைத்துக் கொண்ட ஆராதியா விம்மலோடு அவனைப் பார்த்தாள்.
"வை.. வைஷுவ காணோம் ஹர்ஷா, அவ ஃபோன் வீட்டு வாசல்ல கெடந்திச்சு. எனக்.. எனக்கு பயமா இருக்கு, அவளுக்கு ஏதாச்சும்..." என்று இதயம் படபடக்க அவள் சொல்ல வரும் போதே அதைக் குறிக்கிட்டு, "எதுவும் ஆகாது, ட்ரஸ்ட் மீ!" என்றான் அவன் அழுத்தமாக.
லலிதாவோ விழிகளிலிருந்து விழிநீர் ஓட மகளை இழந்துவிட்ட சோகத்தில் சுவற்றில் சாய்ந்தவாறு தரையில் அமர்ந்திருக்க, சரியாக வாசலில் தன் வண்டி விழுந்ததை கூட பொருட்படுத்தாமல் தடாலடியாக நுழைந்தான் ப்ரணவ்.
"அபிமன்யு இப்போ எங்க இருக்கான் ஹர்ஷா?" என்றவனின் கேள்வி அந்த இடத்தையே அதிர வைக்க, "தெரியல, ஆனா கண்டுபிடிச்சிருவேன்" என்று அழுத்தமாக சொன்னான் மற்றவன்.
அதேநேரம், ஆராதியாவின் வீட்டிலிருந்து வெறும் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மானவ்வின் கெஸ்ட் ஹவுஸின் பேஸ்மென்ட்டில் கைக் கால்கள் கட்டப்பட்டு தரையில் பயத்தோடு அமர்ந்திருந்தாள் வைஷ்ணவி.
"அபி... நா.. நான் என்ன பண்ணேன், சத்தியமா என.. எனக்கு எதுவுமே தெரியாது ப்ளீஸ், என்னை விட்டுரு!" என்று வார்த்தைகளைக் கோர்த்து அவள் கெஞ்ச, அவளெதிரே முட்டியில் கைக் கோர்த்து அமர்ந்திருந்த அபிமன்யுவின் இதழ்களோ விஷமமாகப் புன்னகைத்தன.
"ஆஹான், அப்போ.. நீ எதுவுமே பண்ணல்லையா வைஷ்ணவி? இது தெரியாம உன்னை போய் நான் கடத்தி... ச்சே! தப்பு பண்ணிட்டேனே!" என்று போலியாக அவன் நெற்றியில் அடித்துக்கொண்டு ஒரு நாடகத்தை நிகழ்த்த, அவளோ எச்சிலை விழுங்கியவாறு அவனையே பார்த்திருந்தாள்.
முயன்று தைரியத்தை வரவழைத்து மீண்டும் பேச்சை தொடங்கினாள் வைஷ்ணவி.
"அபி அது..." என்று அவள் ஏதோ சொல்ல வர, "ஷட் அப்!" என்று கத்திக்கொண்டு மின்னல் வேகத்தில் அவளை நெருங்கியவன் அவளின் தாடையைப் பற்றி, "என்னை பார்த்தா உனக்கென்ன முட்டாள் மாதிரி தெரியுதா? சொல்லுடீ, அவளுக்கு நடந்தது உனக்கு தெரியாதா என்ன! அதையெல்லாம் விட அவள அந்த டூருக்கு அழைச்சுட்டு வந்ததே நீதான். உன்னாலதான் எல்லாமே..." என்று சிவந்த விழிகளோடு ஆக்ரோஷமாகக் கத்தினான்.
ஒருகணம் அவளுக்கு அவனின் ஆக்ரோஷத்தைப் பார்த்து கைக்கால்கள் உதறிவிட்டன. ஆனால், அபிமன்யுவின் மனக்கண் முன் மீராவை முதல் முதலாக பார்த்த தருணம்தான் விம்பங்களாக ஓடின.
அன்று டூரிற்காக மொத்தப் பேரும் கல்லூரியின் முன்னே பஸ்ஸிற்காக காத்திருக்க, அப்போதுதான் வைஷ்ணவியோடு நின்றிருந்த மீராவைப் பார்த்தான் அபிமன்யு.
பார்த்ததும் அவள் மேல் சிறு ஈர்ப்பு அவனுக்குள். கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் கைகளை பதற்றமாக பிசைந்துக்கொண்டு நின்றிருந்த மீராவின் முகத்தை அவனால் மறக்கவே முடியாது.
ஆனால் அவனே எதிர்பார்க்காத ஒன்று மீராவும் அவனைக் காதலித்தது. இரண்டு நாள் சுற்றுலாவிலேயே அவளுக்கு அபிமன்யுவை பிடித்துப் போய் விட, யாருக்கும் தெரியாமல் தங்களின் எண்களைக் கூட பரிமாற்றிக்கொண்டனர்.
இதை அவள் வைஷ்ணவியிடம் கூட சொல்லவில்லை. ஆனால், அன்றிரவு நடந்ததை அபிமன்யு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
"நான் இப்போவே உன்னை பார்த்து பேசணும், யாருக்கும் தெரியாம ஸ்விம்மிங் பூலுக்கு வா ப்ளீஸ் மீரா!" என்ற அபிமன்யுவின் கெஞ்சலிலேயே அவள் அறையிலிருந்து வெளியே வந்து அவனைத் தேடிச் செல்ல, அப்போதுதான் அவளை தங்களுடைய அறைக்கு மீரா மறுத்தும் அழைத்துச் சென்றாள் ப்ரீத்தி.
அதன் பிறகு நடந்த சம்பவங்கள் யாருமே எதிர்பார்க்காதது.
இது எதுவுமே அறியாமல் அவள் வரவில்லை என்ற கோபத்தில் அபி சிறு கோபத்தோடு இருக்க, வீட்டிற்கு வந்த மீராவுக்கு தனக்கு நேர்ந்த அநீதியை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவளுடைய பலவீனமான மனம் அப்போது அவளிருந்த மனநிலைக்கு தற்கொலைக்கு உந்த, சரியாக அபிமன்யுவின் ஞாபகமும் அவளுக்கு வந்தது.
அலைப்பேசியை எடுத்தவள் நடந்தது மொத்தத்தையும் சொல்லி முடித்து, "இதையெல்லாம் தாங்கிக்குற அளவுக்கு எனக்கு ஷக்தி இல்லை, ஒவ்வொரு நிமிஷமும் அன்னைக்கு நடந்ததே ஞாபகத்துக்கு வந்துட்டே இருக்கு. என்னால இந்த ப்ரெஷர தாங்க முடியல. அவங்ககிட்ட அந்த வீடியோ கூட இருக்கு, என.. எனக்கு பயமா இருக்கு அபி. இந்த நாலு நாளாதான் எனக்கு உங்கள தெரியும், யூ ஆர் மை ஃபர்ஸ்ட் என்ட் லாஸ்ட் லவ். இந்த புது ஃபீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, தேங்க் யூ ஃபாம் மேக்கிங் மை லாஸ்ட் டேய்ஸ் ஹேப்பி என்ட் ஐ.. ஐ லவ் யூ!"
என்ற இறுதி வார்த்தைகளோடு வாய்ஸ் ரெக்கார்ட்டை அனுப்பி வைத்தாள்.
சரியாக நந்தினியும் கதவை தட்ட ஆரம்பிக்க, இதயத்தை குத்திக் கிழிக்கும் அந்த வலியை சுமந்துக்கொண்டு தன் இறுதி முடிவை தானே தேடிக்கொண்டாள் மீரா.
அதன் பிறகுதான் இந்த வேட்டைக்கான பலி ஆரம்பமானது.
மீரா இறந்து மூன்று நாட்கள் கழித்து நந்தினியின் வீட்டிற்குள் நுழைந்தான் அபிமன்யு.
"யார் நீங்க?" உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு அவனை பார்த்த நந்தினிக்கு அவன் யாரென்று சுத்தமாகத் தெரியவில்லை.
"என் பேரு அபிமன்யு, மீராவ பத்தி உங்ககிட்ட பேசணும்" என்று அவன் சொல்லி அவளின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்துக்கொள்ள, அவனெதிரே குழப்பத்தோடு அமர்ந்துக்கொண்டாள் நந்தினி.
"மீராவ பத்தி பேச எதுவுமே இல்லை, நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது. தயவு செஞ்சு வெளியில போங்க, அனுதாபமான வார்த்தைகள் எதுவும் எனக்கு வேணாம்" என்று நந்தினி அழுகையை அடக்கிய குரலில் சொல்ல, "அனுதாபம் வேணாம் நந்தினி, ஆனா மீராவோட சாவுக்கு காரணமானவங்கள பலி எடுக்கணும்ல" என்றவனின் வார்த்தைகளில் அத்தனை வெறி.
இவனின் வார்த்தைகளுக்கான அர்த்தம் புரியாமல் அவள் புருவ முடிச்சுகளோடு நோக்க, மீரா அவனுக்கு கடைசியாக அனுப்பி வைத்த அந்த வாய்ஸ் ரெக்கார்டை போட்டுக் காண்பித்தான் அபிமன்யு.
அதைக் கேட்க ஆரம்பித்தவளுக்கு போகப் போக அதிர்ச்சியில் விழிகள் விரிய, விழிகளிலிருந்து விழிநீர் ஓடின.
"மீரா... மீரா ஏன்டீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல?" என்று நந்தினி கதறியழ ஆரம்பிக்க, தரையை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு கோபத்தில் நெற்றி நரம்புகள் புடைத்தன.
நந்தினி மெல்ல தன் அழுகையை நிறுத்த, இப்போது தன் பேச்சை ஆரம்பித்தான் அபிமன்யு.
"எவ்வளவு அழணுமோ அவ்வளவு அழுதுக்கோங்க! இதுக்கப்பறம் பலி எடுக்க போறோம், கண்ணுல கண்ணீரோ பயமோ இருக்கக் கூடாது. வாட் டூ யூ சே நந்தினி" என்று அவன் அவளின் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்க, சில கணங்கள்தான் யோசித்திருப்பாள் அவள்.
இரத்த நாளங்கள் துடிக்க, தங்கையின் மரணத்திற்கு பலி தீர்க்க சம்மதித்தாள் அவள். அதன் பின் அவர்களின் திட்டமும் கொலைகளும், மொத்த ஊரையும் போலீஸ் துறையையும் கதிகலங்க வைத்துவிட்டது.
நடந்ததை நினைத்துப் பார்த்த அபிமன்யுவின் விழிகள் தீப்பிழம்பைக் கக்கின. ஆனால், வைஷ்ணவியின் நிலையோ பரிதாபம்!
"அவளோட இழப்பு உன்னை மட்டுமில்ல அபி, என்னையும் பாதிச்சது. அவளோட வீடியோ அவங்ககிட்ட இருந்தது, எங்க அதை ஸ்ப்ரெட் பண்ணிடுவாங்களோன்னு பயத்துல நான் இதை பத்தி வெளியில சொல்ல விடல, ஆனா... ஆனா நான் அப்படி பண்ணியிருக்க கூடாது. எனக்கு புரியுது அபி. நா.. நான் தப்பு பண்ணிட்டேன்"
என்று அவள் இத்தனை நாட்களாக மனதை அரித்த குற்றவுணர்ச்சியில் வெடித்து அழ, அதை இதழ்களில் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தான் அபிமன்யு.
"ஓ மை டியர் வைஷு! யூ நோ வாட், நீ ரொம்ப ரொம்ப லக்கி. உனக்காகவே நான் சில க்ளிப்ஸ் வச்சிருக்கேன். மொதல்ல அதை பார்க்கலாம், அப்பறம்..." என்று பேய் போல் அந்த இடமே அதிர சிரித்துக்கொண்டு அவன் அவளுக்கு முன்னே இருந்த டீவியை ஆன் செய்தான்.
அதை விழிகளை சுருக்கி பார்த்தவளின் விழிகள் பிதுங்கி விடுமளவிற்கு விரிய, "நோ! ப்ளீஸ் அபி..." என்று பயத்தில் அடித்தொண்டையிலிருந்து கத்தினாள் வைஷ்ணவி.
*********
மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க ஃப்ரென்ட்ஸ்...