ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மாமியார் மருமகள் உறவுமுறை பற்றி உங்கள் கருத்து என்ன?

Sathiyapriya

New member
மாமியாருக்கு அவங்க பையன் மேல் உரிமை இருப்பது போல், மருமகளுக்கும் அவங்க கணவன் மேல் உரிமை உண்டு இதை மறுப்பதற்கு இல்லை.

இதில் மருமகள் தன் மாமியாரை பற்றி தெரிய முயற்சிக்க வேண்டும். தன் கணவனை பெற்றதிலிருந்து திருமணம் முடிக்கும் வரை அவங்களோட வாழ்வில் தன் குழந்தைக்காக அவள் பல தியாகங்கள் செய்திருப்பார். திடீர் என்று அவர்கள் உறவுக்குள் வெளி நபர் நுழையும் சமயம் அவளுக்கு தெரியும் தன் பையனை மருமகள் சந்தோஷமாக பார்த்து கொள்வாள் இருந்தாலும் அவங்களோட உரிமை அந்த இடத்தில் மறைய படும் பொழுது அவங்களோட possessiveness மற்றும் ஒரு பயம் வருகிறது இதனால் அவர்களுக்கு பொறாமை ஏற்பட்டு அதனால் அவங்க பெரியவர்கள் மற்றும் மாமியார் என்ற உரிமையை நிலைநாட்ட அதிகாரம் பண்றாங்க. அதனால் அவர்கள் மகன் மட்டுமே மிகவும் பாதிக்கப்படுகிறான்.

மருமகள், நான் வந்துட்டேன் என் கணவனுக்கு எல்லாமே நான் தான் செய்வேன் என்று நினைக்கிறால் இது இயல்பான ஒன்று. அதை ஏனோ மாமியார் யோசிக்க மறுக்கிறார்கள். மருமகளும் அவங்களோட அம்மாக்கு தான் அதிக உரிமை இருக்கு என்பதை ஒத்துக்க மறுக்கிறார். எந்த ஒரு குழந்தைக்கும் அவங்க அம்மாதான் முதல் பிறகு தான் மற்றவர். குழந்தைக்கு ஒன்று என்றால் அம்மாவிற்கு சொல்ல வேண்டாம் அவள் உணர்வே உணர்த்தி பதறி துடிப்பாள் அதே போலவே குழந்தையும் இது இயற்கை. இதை ஏன் மருமகள் புரிந்து கொள்வதில்லை
இவளோட குழந்தையை மத்தவங்க உரிமை கொண்டாடும் போது இவளால் விட்டுக் கொடுக்க முடியுமா?

மருமகளை பற்றி மாமியார் தான் யோசிக்கணும். அவர்கள் அன்பு உடன் மரியாதை தந்தார் என்றால் மருமகள் மகளாகிவிடுவாள். புது உறவினர் அவளுக்கு மதிப்பளித்து ஒதுங்கி விடுவார்கள். இல்லை சிறிய பிரச்சனை ரொம்ப பூதாகரமாகி விடும்.

சிலதை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் மாமியார் தள்ளப்படும் நிலையில் அதை புரிஞ்சுகிட்டு அதுக்கு தகுந்த மாதிரி நடக்க, மருமகளும் அம்மாவுக்கு மகனுக்கு இடையில் செல்லாமல் இருக்க, மகனே அதிர்ஷ்டமானவன்.

மாமியார் மருமகள் இடையில் மகன் நுழையாமல் இருக்க வேண்டும் or else have to balance it. Otherwise problem never ends.

எந்த உறவுகள் இடையிலும் பிரச்சனை வந்தால் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் பிரச்சனை தீராது. உறவுகள் இடையில் புரிதல் மிகவும் அவசியம் இல்லை என்றால் கையில் கொடுக்கப்பட்ட பூமாலை மணக்காமல் கசந்து போகும்.
 
Hanza

Well-known member
என்னோட personal opinion..
மாமியார் மருமகளை (மறு)மகளாகவும் மருமகள் மாமியாரை இன்னொரு தாயாகவும் பார்த்தால் பிரச்சனை வராது.

என் மாமியாரில் நான் என்னை பார்க்கிறேன். என்னோட older versionதான் என் அத்தை. இருவரது wave lengthஉம் ஒரே மாதிரி.
நானும் அத்தையும் சேர்ந்தே என் நாத்தனாரை கிண்டல் பண்ணுவோம். என் Sis in law கு என்ன வாங்குறாங்களோ அதே மாதிரி எனக்கும் வாங்கி வைப்பார்கள். என்னோட சின்ன அத்தைகளும் (அத்தையின் தங்கைகள்) ஒவ்வொரு festivals கும் எனக்கு gifts வாங்கி வைப்பார்கள். அங்கே போகும் போது மூட்டை கட்டி தருவார்கள்.

என்னுடைய கணவரை கூட என்னை ஒரு சொல் சொல்ல விடுவதில்லை.?

அதனால் தான் மாமியார் மருமகள் fight jokes கூட படிக்க எனக்கு விருப்பமில்லை.
 
pommu

Administrator
Staff member
மாமியாருக்கு அவங்க பையன் மேல் உரிமை இருப்பது போல், மருமகளுக்கும் அவங்க கணவன் மேல் உரிமை உண்டு இதை மறுப்பதற்கு இல்லை.

இதில் மருமகள் தன் மாமியாரை பற்றி தெரிய முயற்சிக்க வேண்டும். தன் கணவனை பெற்றதிலிருந்து திருமணம் முடிக்கும் வரை அவங்களோட வாழ்வில் தன் குழந்தைக்காக அவள் பல தியாகங்கள் செய்திருப்பார். திடீர் என்று அவர்கள் உறவுக்குள் வெளி நபர் நுழையும் சமயம் அவளுக்கு தெரியும் தன் பையனை மருமகள் சந்தோஷமாக பார்த்து கொள்வாள் இருந்தாலும் அவங்களோட உரிமை அந்த இடத்தில் மறைய படும் பொழுது அவங்களோட possessiveness மற்றும் ஒரு பயம் வருகிறது இதனால் அவர்களுக்கு பொறாமை ஏற்பட்டு அதனால் அவங்க பெரியவர்கள் மற்றும் மாமியார் என்ற உரிமையை நிலைநாட்ட அதிகாரம் பண்றாங்க. அதனால் அவர்கள் மகன் மட்டுமே மிகவும் பாதிக்கப்படுகிறான்.

மருமகள், நான் வந்துட்டேன் என் கணவனுக்கு எல்லாமே நான் தான் செய்வேன் என்று நினைக்கிறால் இது இயல்பான ஒன்று. அதை ஏனோ மாமியார் யோசிக்க மறுக்கிறார்கள். மருமகளும் அவங்களோட அம்மாக்கு தான் அதிக உரிமை இருக்கு என்பதை ஒத்துக்க மறுக்கிறார். எந்த ஒரு குழந்தைக்கும் அவங்க அம்மாதான் முதல் பிறகு தான் மற்றவர். குழந்தைக்கு ஒன்று என்றால் அம்மாவிற்கு சொல்ல வேண்டாம் அவள் உணர்வே உணர்த்தி பதறி துடிப்பாள் அதே போலவே குழந்தையும் இது இயற்கை. இதை ஏன் மருமகள் புரிந்து கொள்வதில்லை
இவளோட குழந்தையை மத்தவங்க உரிமை கொண்டாடும் போது இவளால் விட்டுக் கொடுக்க முடியுமா?

மருமகளை பற்றி மாமியார் தான் யோசிக்கணும். அவர்கள் அன்பு உடன் மரியாதை தந்தார் என்றால் மருமகள் மகளாகிவிடுவாள். புது உறவினர் அவளுக்கு மதிப்பளித்து ஒதுங்கி விடுவார்கள். இல்லை சிறிய பிரச்சனை ரொம்ப பூதாகரமாகி விடும்.

சிலதை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் மாமியார் தள்ளப்படும் நிலையில் அதை புரிஞ்சுகிட்டு அதுக்கு தகுந்த மாதிரி நடக்க, மருமகளும் அம்மாவுக்கு மகனுக்கு இடையில் செல்லாமல் இருக்க, மகனே அதிர்ஷ்டமானவன்.

மாமியார் மருமகள் இடையில் மகன் நுழையாமல் இருக்க வேண்டும் or else have to balance it. Otherwise problem never ends.

எந்த உறவுகள் இடையிலும் பிரச்சனை வந்தால் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் பிரச்சனை தீராது. உறவுகள் இடையில் புரிதல் மிகவும் அவசியம் இல்லை என்றால் கையில் கொடுக்கப்பட்ட பூமாலை மணக்காமல் கசந்து போகும்.
Wow wow wow.. arumaiya soliteenga... rendu pakkamum space kodithu vitu koduthale problem solved...
 
Top