ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மவுனமாய் ஓர் மரணம் (1)

T 24

Well-known member
Staff member
Wonderland writer
மவுனமாய் ஓர் மரணம்... (பகுதி_1)

மங்கிய விளக்கொலியில் அமர்ந்து அழுது கொண்டிருந்த விநோதினியை கவனிக்க கூட நேரமில்லாமல் சுழன்று கொண்டிருந்தனர் அவர்கள் பெற்றோர்!

"ஏன்டா கணேசா வாழ மரத்துக்கு சொல்ல சொன்னேனே சொன்னியா இலைலையா...

நாளைக்கு பந்தக்கால் நடணும் ஒத்தையா பந்தக்கால் மட்டும் நட்டா நல்லாவா இருக்கும் சொல்லு... " விநோதினியின் தந்தை முனுசாமியின் குரல் விநோதினிக்கு சன்னமாய் கேட்டது!

" சொல்லிட்டேன் மாமா... சாயங்காலமே வூட்டாண்ட போய் சொல்லிட்டு வந்தேன் அவன் இன்னும் வந்து வாழமரம் கட்டல... குடிகாரன் எங்க குடிச்சிட்டு படுத்துக் கிடக்கான்னு தெரியல... "

" ஏலே... நீ ஒரு எட்டு போய் பார்த்துட்டு வா லே... "

" சரி மாமா... "என்று சொல்லி தன் வண்டியின் இக்னீசியனில் விநோத் சாவியை சொருகி திருப்ப அது உறுமிக்கொண்டு புறப்பட்டது!

" விநோ.... "

கண்களை துடைத்துக் கொண்டு எழுந்த விநோதினி

" என்னப்பா... " என்றாள்!

" இங்க வாம்மா... "

அறையை விட்டு வெளியே வந்தாள் விநோதினி!

" என்னப்பா... "

" என்னடா அப்பன் திரும்ப திரும்ப கேட்குறானேனு நினைக்காதே விநோ...

உனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா???

உனக்கு இந்த கல்யாணத்துல முழு விருப்பம்தானே விநோ...

இல்லைனா சொல்லிடுடா இப்பவே அப்பா இந்தக் கல்யாணத்தை நிறுத்தி பூடுறேன்... "

" இ... இல்ல... எனக்கு... சம்மதம்தான்பா.... "

" அப்புறம் ஏம்மா ஒரு மாதிரி இருக்கே...

நான் மத்த அப்பன் போல நான் சொல்ற பையனைதான் நீ கட்டிக்கணும்னு சொல்ல மாட்டேன்மா... உன் மனசுல யாராவது இருந்தாலும் சொல்லு அப்பா உனக்கு அவனையே கட்டி வைக்கிறேன்... "

" இ... அ.... அப்படி யாரும்... இல்லப்பா " விநோதினி கண்களில் கண்ணீர் வழிந்தோடியது!

"ஏம்மா அழறே... என்னாச்சிமா உன் மனசுல என்ன இருக்குனு சொன்னாதானே மா தெரியும்..."

"அப்பா....நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்!... "

" சொல்லும்மா என்ன விசயம்.... "

" அப்பா நான்.... " விநோதினி வார்த்தையை முழுதாய் முடிப்பதற்குள் எங்கோ மறைவில் பிஸ்டலில் இருந்து வெளிப்பட்ட தோட்டா பாய்ந்து வந்து விநோதியின் மார்புக்கூட்டை துளைத்து இதயம் வரை எட்டிப் பார்த்து அதன் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தியது!

" விநோ......... "

முனுசாமி கத்தியது விநோதினிக்கு கேட்டிருக்க வாய்ப்பேயில்லை!

***********************************************************************************

" ஏய் மகா நிச்சயம் உங்க அப்பாவை இன்னைக்கு பார்த்தே ஆகணுமா??? " மகாவின் விரல்களை பிடித்து நீவியவாறே கேட்டான் மகேஷ்!

" கண்டிப்பா மகேஷ்...

அவர் ஊருல இருந்து வந்திருக்கறதே இப்போ உன்னை பார்க்கத்தான்...

எனக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்னு சொல்லி என்னை ஊருக்கு கிளம்பி வர சொன்னார்... நான்தான் நம்ம விசயத்தை பத்தி சொன்னேன்...

அவர் உன்னை பார்த்து பேசணும்னு சொன்னார்...

நீ என்ன பண்ற ஈவ்னிங் அஞ்சி மணிக்கு "கேட்வாக்" ரெஸ்டாரன்ட் வந்துடு...

வரும்போது மறக்காம க்ளீன் சேவ் பண்ணிட்டு வா... இப்படி பைத்தியக்காரன் போல வராதே???"

"பைத்தியக்காரன்னு தெரியாமத்தான் என்னை லவ் பண்ணியா??? " போலியாய் கோபித்துக் கொண்டான் மகேஷ்!

" இந்த கோவத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... பைத்தியக் காரன் தான்டா நீ... என் செல்ல பைத்தியம்... "என்று மகேசை அணைத்தவாறே கூறினாள் மகா!

மகாவின் அணைப்பில் இருந்து விடுபட மனமில்லாத மகேஷ் அவளை மேலும் இறுக்க அணைத்துக் கொண்டதில் அவன் போலி கோபமும் காணாமல் போயிருந்தது!

மாலை ஐந்து மணி ஏழு நிமிடம் என்பதை 'கேட்வாக்' ரெஸ்டாரண்டின் கடிகார முட்கள் உணர்த்தியது!

மகாவும், அவள் தந்தை மோகனும் முன்கூட்டியே அங்கு வந்து ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தனர்!

"மகேஷ்..... " சற்றே சத்தமாகவே மகேசை பார்த்து மகா குரல் கொடுத்தாள் என்பதை அங்கிருந்த அனைவரும் ஐந்து நொடிகள் மகேசாய் மாறி அவளை திரும்பி பார்த்தது உணர்த்தியது!

மகேஷ் மகாவிற்கு கை காட்டியபடியே அவர்கள் இருக்கையின் எதிரே போய் அமர்ந்தான்!

மகா சொல்லியது போலவே தாடியை முழுவதும் வழித்திருந்தான்!

"ஏன்டா லேட்???"

"விடுமா... மாப்பிள்ளைனா அந்த கெத்து இருக்கத்தான் செய்யும்... " மகா கேள்விக்கு மோகன் பதிலளித்தார்!

" என்ன மகேஷ் எதுவும் பேச மாட்றீங்க??? "

" அது... வந்து.... "

" பயப்படாதீங்க மகேஷ்... நான் பூதம் இல்ல... என் பொண்ணு உங்க மேல ஆசைப்பட்டுட்டா... இந்த மீட்டிங்லாம் ஜஸ்ட் பார்மாலிட்டிக்கு தான்...

அப்புறம் 'மகா அண்ட் கோ' க்கு ஓனர் ஆகப் போறீங்க வாழ்த்துக்கள்... "

மகேஷ் புரியாமல் அவர் முகத்தை பார்க்க...

" என்ன அப்படி பார்க்குறீங்க... நீங்கெல்லாம் என்னைக்காவது ஒண்ணும் இல்லாத பொண்ணா பார்த்து லவ் பண்ணியிருக்கீங்களாடா.... அதெப்படி உங்களுக்கெல்லாம் பணக்காரன் வீட்டு பொண்ணுங்க மேலதான் லவ் வருதுனு சத்தியமா எனக்கு தெரியலடா... "

" ஹலோ சார் மைன்ட் யுவர் வேர்ட்ஸ்... "

" உண்மை பல சமயங்கள்ல கசக்கத்தான் செய்யும் மிஸ்டர் மகேஷ்... "

" இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்கனா மரியாதை இருக்காது உங்களுக்கு...

பணத்துக்காக நாக்க தொங்கப்போட்டுகிட்டு அலையற ஆள் நானில்லை....

உங்க பொண்ணைதான் நான் விரும்பினேன் உங்கிட்ட இருக்க பணத்தை இல்லை...

பெரிய மயி....... "

" மகேஷ்.... "மகா கத்தியை விட்டாள்!

" ஏன்டி கத்தற... உங்கப்பன் பேசிகிட்டே இருப்பான் நான் கேட்டுகிட்டே இருப்பேனா... இன்னும் அசிங்கமா கேட்பேன்... "

" மகேஷ் அப்பாகிட்ட மரியாதையா பேசு... "

" எனக்கு மரியாதை இல்லாத இடத்துல எனக்கென்ன வேலையிருக்கு.... இஷ்டம் இருந்தா என்கூட வா இல்ல உங்கப்பன் பார்க்குற பணம் இருக்க பிணத்துக் கூட போடி... "

சொல்லிவிட்டு கோவம் எழுந்த நடந்த மகேசை மோகனின் குரல் தடுத்தது!

" நில்லுங்க மாப்ளே... என் பொண்ணு செலக்ஷன் எப்படினு ஒரு டெஸ்ட் வச்சேன் அவ்ளோதான்...

தன்மானம் விட்டுக்கொடுக்காத சிங்கத்தை தான் என் பொண்ணு பிடிச்சிருக்கா.... "

'நானும் நடிச்சேன்டா அவளை கட்டிக்க இல்லை... அவளை மொத்தமா அனுபவிக்க.... கூடிய சீக்கிரம் அவளை அனுபவிச்சுட்டு குப்பையில வீசுறேன் வந்து பொறுக்கிகிட்டு போ... ' மகேஷ் மனதில் சொன்னது யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லாததால் மகா அவனை நோக்கி வந்து அணைத்துக் கொண்டாள்!

(தொடரும்)

_சத்யா ஸ்ரீராம்
 
Top