மழை 9
போகும் போது பாரதியை பார்த்து கண்களை சிமிட்டி விட்டு சென்று இருக்க, அந்த ஒரு பார்வை அவளுக்கு ஜிவ்வென்று இருந்தது...
"ஐயோ ஐயோ ஐயோ" என்று வெட்கத்துடன் அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்தவளுக்கு இன்னுமே நிதர்சனத்துக்கு வர முடியவே இல்லை...
அந்த வயதில் இருக்கும் பெண்களின் சாதாரண உணர்வுகளை தான் அவள் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தாள்.
நீண்ட நேரம் கழித்து பாரதியின் அறையை தட்டினான் நரேன்...
அவளும் கதவை திறக்க, "பாரு உன் கிட்ட பேசணும்" என்றான்... அவளும், "சொல்லுடா" என்று சொல்ல, குரலை செருமியவனோ, "வசி உனக்கு வேண்டாம்... இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லு" என்றான்...
அவளோ, "எதுக்கு வேணாம்னு சொல்லணும்? ரீசன் சரியா சொல்லு நான் வேணாம்னு சொல்றேன்" என்று சொல்ல, "உனக்கு அவனை பத்தி தெரியாதுடி... அவன் ஒண்ணும் உன் மேல காதல் கொட்டி கல்யாணம் பண்ண கேட்கல... என்னை பழி வாங்க தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க கேக்கிறான்" என்றான்...
"உன்னை எதுக்கு பழி வாங்கணும்?" என்று அவள் கேட்க, "அவ தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தான்" என்றான் அவன்...
அவளோ, "என்ன உளர்ற? அத பத்தி அவர் ஒரு வார்த்தை கூட பேசலையே" என்று சொல்ல, நரேனோ, "அவன் பேச மாட்டான்... ஆனா பண்ணி காட்டுவான்... நான் காலேஜ் ட்ராப் அவுட் ஆக காரணமே அவன் தான்" என்று சொல்ல, "ஓஹோ, இப்போ தான் எனக்கு புரியுது" என்றாள் ஒரு மார்க்கமான குரலில்...
அவனோ, "என்ன புரியுது?" என்று கேட்க, அவளோ, "பழி வாங்க யோசிக்கிறது அவர் இல்ல நீ தான்னு புரியுது... காலேஜ் ல ட்ராப் அவுட் ஆக அவர் காரணம் என்கிறதுக்காக இப்போ நீ அவரை பழி வாங்க போறியா?" என்று கேட்க, அவனுக்கோ அவள் பேச்சு தூக்கி வாரிப் போட்டது...
"பாரு" என்று அழுத்தமாக அழைத்தான்...
அவளோ, "பின்ன என்னடா? அவர் வேணாம்னு நான் சொல்லணும்னா ஒழுங்கான காரணம் சொல்லு... காலேஜ் ல தப்பு பண்ணுனது நீ... அப்போ ட்ராப் அவுட் பண்ண நினைச்சது சரி தானே" என்று அவன் பக்கம் பேச, நரேனுக்கு மொத்தமாக நொறுங்கி போன உணர்வு...
"இப்போ தானேடி பார்த்த.. அதுக்குள்ள அவன் மேல அவ்ளோ நம்பிக்கையா உனக்கு?" என்று அவன் ஆதங்கமாக கேட்க, அவளோ, "நம்புறதுல என்ன தப்பு? நீ ஆதாரம் இல்லாம சும்மா உளறிட்டு இருக்க" என்றாள்.
அவனுக்கு கடுப்பானது...
"அப்போ நான் சொல்றத நீ கேட்கவே மாட்டே... அப்படி தானே" என்று கேட்க, "ம்ம், கேட்க மாட்டேன்... என் லைஃப்ல நீ தலையிடாதே... உன் லைஃப்ல நான் தலையிட்டேனா? வார்த்தைக்கு வார்த்தை மை லைஃப் மை சாய்சஸ் என்று சொல்லிட்டு இருப்பியே... இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, இது என்னோட லைஃப் என்னோட சாய்ஸ்... புரியுதா?" என்று கேட்டு விட்டாள்.
இப்படி ஒரு பதிலை அவன் அவளிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை...
உண்மை தெரிந்தும் நிரூபிக்க முடியாத இயலாமை வேறு... கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டவனுக்கு அவள் பேச பேச கோபம் வந்தாலும் கட்டுபடுத்திக் கொண்டான் அவள் வாழ்க்கைக்காக...
ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தியபடி, "இங்க பாருடி, அவன் உனக்கு" என்று ஆரம்பிக்க, "நான் அவரை தான் கட்டிப்பேன்" என்றாள்.
"அப்போ இனி என் கூட பேசாதே" என்று அவன் சொல்ல, "ரொம்ப சந்தோசம்" என்ற பதில் அவனுக்கு வலிக்க செய்தது...
"போடி... அவனையே கல்யாணம் பண்ணி நாசமா போ.... திரும்ப என் கிட்ட வந்த... செருப்பாலேயே அடிப்பேன்" என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளியேற, "நான் ஏன் உன் கிட்ட வர போறேன்? நீ தான் என் கிட்ட மருமகனை தூக்கி விளையாட வருவ" என்றாள் சிரிப்புடன் அவன் கோபம் புரியாமல்...
வேகமாக வந்து கதவை சாத்திக் கொண்டவனுக்கு நிலை கொள்ளவே முடியவில்லை....
அடுத்த நாள் இருந்து வசிஷ்டன் மற்றும் பாரதி திருமண வேலைகளும் சேர்த்து நடந்தன... இந்த திருமணத்தை மறுக்க யாருக்கும் எந்த காரணமும் இருக்கவே இல்லை...
காலேஜுக்குள் அனைவர்க்கும் சொல்லி ட்ரீட் வைத்தாள் பாரதி...
"நீ ரொம்ப லக்கிடி" என்று நண்பிகள் பொறாமை பட, அவளுக்கோ இன்னும் கர்வமாக தான் இருந்தது...
அப்படியே காலேஜுக்கு லீவ் போட்டு விட்டு கல்யாண வேலைகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டாள்.
அவள் மனதில் ஆயிரத்தெட்டு கனவுகள்...
இதில் எதிலும் நரேன் கலந்து கொள்ளவில்லை...
வசுந்தரா கேட்ட போதெல்லாம், "வேலை இருக்கு" என்று சமாளித்து விடுவான்...
பேசாமல் தனது திருமணத்தை நிறுத்தி பாரதியை காப்பாற்றலாமா ? என்றெல்லாம் யோசித்தான்...
வசுந்தராவின் முகம் நினைவுக்கு வந்து அவன் முடிவுகளுக்கு தடையாக இருக்க, திருமணத்துக்கு முதல் நாளும் வந்தது...
மனம் கேட்கவே இல்லை அவனுக்கு... பாரதியின் அறைக்குள் செல்ல, அவளோ அடுத்த நாள் அணிய இருக்கும் நகைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"பாரதி" என்றான்...
பல நாட்கள் கழித்து பேசுகின்றான்...
"சொல்லு அண்ணா" என்றாள் அவனை பார்க்காமல்...
"வசி ரொம்ப மோசமானவன்டி, இப்போ கூட நோ சொல்லு, இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன்" என்றான்... அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது... வேகமாக அவனை நோக்கி வந்தவள், "இங்க பாரு, இது என் லைஃப்... சீரழிஞ்சா கூட நான் பார்த்துக்கிறேன்... நீ ஒண்ணும் எனக்கு அட்வைஸ் பண்ண வேணாம்... உன்னை திரும்ப தேடி எப்போவும் வரவே மாட்டேன்... அப்படி வந்தா செருப்பை கழட்டி அடி போதுமா?" என்று ஆக்ரோஷமாக சொல்லிக் கொண்டே மீண்டும் போய் அமர்ந்தவள், "வந்துட்டான் அட்வைஸ் பண்ணுறதுக்கு" என்று அவனுக்கு வாய்க்குள் திட்டியபடி இருக்க, அவளை வெறித்துப் பார்த்தவன், "இதுக்கு மேல உன் கிட்ட பேசி பயன் இல்லை... பட்டு தான் திருந்தணும்னு நினைக்கிற... ஓகே பைன்... நீ ஒண்ணும் சகிச்சிக்கிட்டு வாழணும்னு இல்ல... கஷ்டம்னா வந்திடு" என்றான்...
கோபமாக திரும்பி பார்த்தவள், "வாழ்க்கை ஆரம்பிக்க முதலே விட்டு வர்றத பத்தி பேசுறியே... உனக்கு கொஞ்சம் கூட சென்ஸ் இல்லையா? உன்னை நல்லவன்னு நினச்சேன்... ஆனா நீ இவ்ளோ வன்மம் புடிச்சவன்னு இப்போ தான் தெரியும்... தயவு செய்து என் கிட்ட இனி பேசாதே" என்று ஆக்ரோஷமாக சீற, அவனும் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு வெளியேறி இருந்தான்...
அடுத்த நாள் காலையில் திருமணம்...
மணமேடையில் இருந்த நரேனுக்கு சிரிக்க முடியவில்லை...
வலுக்கட்டாயமாக சிரித்துக் கொண்டான்...
அவனுக்கு அடுத்த மணமேடையில் அமர்ந்து இருந்த வசிஷ்டனின் விழிகள் நரேனின் மீது ஒரு வித நக்கலுடன் படிந்து மீண்டது...
அடுத்த சில நிமிடங்களில் மணமக்களும் வந்து அமர, வசிஷ்டனும், நரேனும் தத்தமது இணைகளின் கழுத்தில் மங்கள நாணை அணிவித்து தமது சரிபாதி ஆக்கிக் கொண்டார்கள்...
வசுந்தராவின் கழுத்தில் மூன்று முடிச்சை இட்ட நரேனின் விழிகள் பாரதியில் படிந்தது... தலையை குனிந்து புன் சிரிப்புடன் தாலியை வாங்கிக் கொண்டு இருந்தாள்.
கண்களை மூடி திறந்துக் கொண்டான் நரேன்...
சம்பிரதாயங்கள் முடிந்த போதிலும் பாரதியும்,நரேனும் பேசிக் கொள்ளவே இல்லை...
வசுந்தராவை அழைத்துக் கொண்டே நரேன் அவன் வீட்டுக்கு புறப்பட, பாரதியை அழைத்துக் கொண்டே வசிஷ்டன் அவன் வீட்டுக்கு புறப்பட்டான்...