ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 7

pommu

Administrator
Staff member
மழை 7

வசுந்தராவோ சிரித்துக் கொண்டே, "அது வரைக்கும் லவ் பண்ணலாம்" என்று சொல்ல, அவனும் கண்களை சிமிட்டிக் கொண்டான்...

அன்றில் இருந்து அவர்கள் காதல் அசுர வேகம் தான், தினமும் பேசிக் கொள்வது, அடிக்கடி பார்த்துக் கொள்வது என்று இருப்பார்கள்...

யாருக்குமே தெரியாமல் ஐந்து மாதங்களை கடத்தி இருந்தவர்கள், ஆறாம் மாதத்தில் காலடி வைத்த சமயம் தான் அவர்கள் காதல் வீட்டினருக்கு வெட்ட வெளிச்சம் ஆனது...

அன்று அவசர மீட்டிங் ஒன்றுக்கு சென்ற நரேனின் கண்ணில் பட்டாள் வசுந்தரா... சிவப்பு நிற சேலையில் தேவதையாக இருந்தவளை பார்க்க பார்க்க அவனுக்கு தெகிட்டவே இல்லை...

அவனால் பார்க்க மட்டும் தான் முடியும்... அதற்கு மேல் அத்து மீற வசுந்தரா அனுமதிக்க மாட்டாள்...

சைவ காதல் தான் அவர்களுடையது....

மீட்டிங்கை கவனித்தானோ இல்லையோ அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்...

உடனே போனை எடுத்து, "பேபி, ரெட் சாரீல செமயா இருக்க... இப்போவே கல்யாணம் பண்ணி கிஸ் பண்ணனும் போல இருக்கு" என்று அவளை பார்த்துக் கொண்டே மெசேஜ் போட்டது என்னவோ அவர்களது பேமிலி க்ரூப்புக்கு தான்...

அதில் இருந்தவர்கள் வேறு யாருமல்ல, செல்லதுரை, லக்ஷ்மி மற்றும் பாரதி தான்...

அவன் யாருக்கு அனுப்பினோம் என்று பார்க்க கூட விடாமல், "நரேன் எனி ஐடியா?" என்று பேசிக் கொண்டு இருந்தவர் கேட்க, அவனும் போனை பாக்கெட்டில் வைத்து விட்டு மீட்டிங்கில் கவனம் செலுத்தி பேச ஆரம்பித்து விட்டான்...

விளைவு மூவருமே அவனது மெசேஜை பார்த்து விட்டார்கள்...

"கிஸ் பண்ணனுமா? யார் அந்த பேபி" என்று க்ளாசில் இருந்து பாரதி ஆராய்ச்சி செய்ய, செல்லதுரையும், லக்ஷ்மியும் வீட்டில் இருந்து ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்க, இதனை எல்லாம் அறியாதவனோ, வசுந்தராவிடம் காதல் கரைபுரண்டோட பேசி விட்டு வீட்டுக்கு வந்து இருந்தான்...

வீட்டில் இருந்த மூவருக்கும் விடயம் தெரிந்தாலும் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடவே இல்லை...

வீட்டுக்குள் நுழைந்த நரேனோ, "இன்னைக்கு என்ன டின்னர்? பசிக்குதும்மா" என்றான்...

லக்ஷ்மியோ, "என்னோட ரெட் கலர் மேக்சி நல்லா இருக்கா" என்று கேட்டார்... அவனோ அவரை புருவம் சுருக்கி பார்த்து விட்டு, "ம்ம்" என்று சொல்ல, "என்னோட ரெட் கலர் சுடிதார்" என்றாள் பாரதி...

"நல்லா இருக்கு," என்று அவன் சொல்லி முடிக்க முதல், "என்னோட ரெட் டீ ஷேர்ட் எப்படி இருக்கு?" என்று செல்லதுரை கேட்டார்...

அப்போது தான் பார்த்தான் எல்லாரும் சிவப்பு நிறத்தில் அணிந்து இருந்தார்கள்...

"நல்லா தான் இருக்கு... இப்போ எதுக்கு ஆளாளுக்கு ரெட் ரெட்ன்னு பேசிட்டு இருக்கீங்க?" என்று கேட்டவன் அப்போதும் உணரவில்லை...

அறைக்குள் சென்று குளித்து விட்டு சாப்பிட வந்து உட்கார்ந்தான்...

"பேபி சாப்பிடு" என்றார் லக்ஷ்மி... அவனுக்கு புரியவே இல்லை...

"பேபியா?" என்று கேட்க, "ஏன் உன்னை பேபின்னு கூப்பிட கூடாதா? நீ மட்டும் தான் கூப்பிடணுமா?" என்று பாரதி கேட்டதும் தான் அவனுக்கு ஏதோ புரிவது போல இருந்தது... கண்களை அகல விரித்தவன் மூவரையும் பார்க்க, அவர்களும் அவனை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்...

அவனுக்கு வெட்கம் ஒரு பக்கம், சங்கடம் மறுபக்கம்...

"தெரிஞ்சிடுச்சா?" என்று நேரடியாகவே கேட்டு விட்டான்...

அவர்களும் கண்களை மூடி திறக்க, "யார் சொன்னா?" என்று அவன் கேட்க, பாரதியோ, "அடேய் அண்ணா நீ தான் சொன்ன" என்றாள்.

"நானா?" என்று அவன் அதிர, போனை தூக்கி அவன் அனுப்பிய மெசேஜை காட்டியதும் அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது...

"ஓஹ் ஷீட், க்ரூப்புக்கா அனுப்பி இருக்கேன்?" என்று கேட்டவனுக்கு அவர்களை பார்க்க சங்கடமாக இருக்க, நெற்றியை அழுந்த தேய்த்துக் கொண்டான்...

சத்தமாக சிரித்த செல்லதுரையோ, "யாருடா அந்த பேபி?" என்று கேட்க, அவனும் வசுந்தராவின் ஜாதகத்தை அடியில் இருந்து நுனி வரை கூறினான்...

"ராஜசேகரன் பொண்ணா? எனக்கு நல்லா தெரியும்... ஆனா அவர் பெருசா சிரிக்கவே மாட்டாரே" என்று மனதில் பட்டதை செல்லதுரை சொல்லி விட்டார்...

நரேனோ, "ம்ம்... ஆனா எனக்கு அவளை தானே பிடிச்சு இருக்கு" என்க, "அப்போ சீக்கிரமே நிச்சயம் பண்ணலாம்" என்றார் லக்ஷ்மி...

"ஆனா அவ அண்ணா வரணும்னு சொல்லிட்டு இருக்கா" என்று நரேன் சொல்ல, "அவர் வர்ற நேரம் வரட்டும்... பேசி வச்சுக்கலாமே" என்றாள் பாரதி... அவனுக்கும் அது சரியாக தான் பட்டது...

வசிஷ்டன் வந்தால் என்ன செய்வான் என்று தெரியாது... பேசி வைப்பது உசிதமாக தோன்ற அன்று இரவே வசுந்தராவுக்கு அழைத்தான்...

விடயத்தை அவளிடம் சொல்ல, "ஐயோ நரேன்... என்னை பத்தி என்ன நினச்சு இருப்பாங்க" என்று அவள் கூச்சத்தில் நெளிய, "அத விடு, உங்க வீட்ல பேசணும்னு அப்பா சொன்னார்... நீ என்ன சொல்ற?" என்று கேட்டான்...

அவளும் பெருமூச்சுடன், "எங்க வீட்ல ஓகே தான்... இவ்ளோ நாள் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தேன்... அப்பா அன்னைக்கு கடுப்பாகி பிடிச்ச பையனை கூட்டி வா, கட்டி வைக்கிறேன்னு சொல்லி இருக்கார்... சோ பிரச்சனை இல்லை." என்றாள்.

இரு நாட்கள் கழித்து, விடுமுறை அன்று அவர்கள் வீட்டுக்கு குடும்பமாக வந்தான் நரேன்...

"உங்கள பார்க்க ஒருத்தங்க வர்றாங்க" என்று மட்டுமே வசுந்தரா வீட்டில் சொல்லி வைத்தாள். வேற எதுவும் சொல்லவில்லை... எப்படிச் சொல்வது என்று அவளுக்கும் தெரியவே இல்லை... அவர்கள் வந்ததுமே, "வாங்க" என்று வரவேற்றார் ராஜசேகரன்...

அவருக்கு செல்லதுரையை தொழில் முறையில் தெரியும் என்பதால் இருவரும் பேசிக் கொள்ள தடை இருக்கவே இல்லை...

குடும்பமாக வந்தவர்களைப் பார்த்ததுமே கோமளாவுக்கு ஒரு வித சந்தேகம் தோன்றினாலும் கேட்காமல் இருந்தார்...

அங்கிருந்த ஓரத்தில் வசுந்தரா அமர்ந்து இருந்தாள்... லக்ஷ்மி அவளை பார்த்து விட்டு, பாரதியிடம், "செம்ம அழகா இருக்கா" என்று சொல்ல, அவளும், "ம்ம்... பார்பி டோல் போல இருக்காங்க" என்று சொல்லிக் கொண்டாள்.

"என்ன விஷயமா வந்து இருக்கீங்க?" என்று ராஜசேகரன் கேட்க, செல்லதுரையோ, "என் பையன் நரேன்... அவன் தான் இப்போ பிசினஸ் ரன் பண்ணிட்டு இருக்கான்... உங்க பொண்ண பிடிச்சு இருக்குன்னு சொன்னான்... அது தான் பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தேன்" என்று சொன்னார்...

ராஜசேகரன் திரும்பி வசுந்தராவை பார்க்க, அவளோ, "எனக்கு சம்மதம்பா" என்றாள். "அப்போ கல்யாணம் பண்ணாம இருந்ததுக்கு இது தான் காரணமா?" என்று கேட்க அவளோ சங்கடமாக தலையை குனிந்துக் கொண்டாள்.

நரேன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்து இருக்க, அவனை பார்த்த ராஜசேகரன், "என்ன படிச்சு இருக்கீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்டார்...

"காலேஜ் ட்ராப் அவுட் சார்" என்று சொல்ல, ராஜசேகரனும், கோமளாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...

குரலை செருமிக் கொண்டே மேலும் தொடர்ந்தவன், "தண்ணி, தம் பழக்கம் எல்லாம் இருந்திச்சு... இப்போ விட்டுட்டேன்..." என்று சொன்னான்...

"இது தான் நான்" என்று சொல்பவனை பார்த்து அவர்களால் பிரமிக்காமல் இருக்க முடியவே இல்லை...

வசுந்தரா தனக்குள் சிரித்துக் கொள்ள, செல்லதுரையோ, "பெரிய அரிச்சந்திரன்... எல்லாமே உளறி கொட்டுறான்" என்று மகனுக்கு மனதுக்குள் திட்டிக் கொண்டார்...

இதனை எல்லாம் கேட்டு பெண் கொடுக்காமல் விட்டு விடுவார்களோ என்கின்ற கவலை அவருக்கு...

ராஜசேகரனோ, "என்ன சாதிச்சு இருக்கீங்க?" என்று நேரடியாவே கேட்டு விட்டார்...

அவனோ மென் புன்னகையுடன், "பிசினஸ் ல நிறைய சாதிச்சு இருக்கேன்... எங்க அப்பாவோட கம்பெனி தான்... ஆனா அதோட வேலியூ வை நான்கு மடங்கா உயர்த்தி இருக்கேன்... நீங்களே எங்க வெப்சைட் ல கிராஃப் பார்க்கலாம்" என்று சொல்ல, ராஜசேகரன் உடனே போனை எடுத்து அவன் சொன்ன விடயத்தை சரி பார்த்தார்...

ஆம் அவன் அவர்களின் கம்பெனியின் தரத்தை உயர்த்தி தான் இருந்தான்...

மெலிதான புன்னகை அவர் இதழ்களில்...

ஒரு கணம் கோமளாவை பார்த்து விட்டு, "இதுல எதிர்ப்பு சொல்ற அளவுக்கு பெரிய காரணம் ஒண்ணும் இல்லை... வசுந்தராவுக்கும் பிடிச்சு இருக்கு... படிப்புல கோட்டை விட்டாலும் ஏதோ ஒன்னுல சாதிச்சு இருக்கீங்க... வசிஷ்டன் என் மூத்த பையன்... அவன் படிச்சு முடிச்சு இன்னும் ஒரு மாசத்துல வந்திடுவான்... அதுக்கப்புறம் கல்யாண தேதி வச்சுக்கலாம்" என்று சொன்னவரோ அங்கே வேலைக்கார பெண் கொண்டு வந்த காஃபியைக் காட்டி, "எடுத்துக்கோங்க" என்று சொன்னார்.

நரேனோ, "நான் காஃபி குடிக்கிறது இல்ல சார்" என்று சொல்ல, சட்டென எழுந்த வசுந்தராவோ, "நான் ஜூஸ் போட்டுக் கொண்டு வரேன்" என்றாள். அனைவரும் திரும்பி அவளை பார்க்க, அவளுக்கோ கொஞ்சம் அதிகமாக பண்ணி விட்டோமோ என்று தான் தோன்றியது...

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே, "ம்ம்" என்றான் நரேன்...

அவளும் அவனுக்கான ஜூஸை போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.

இந்த நேரத்தில் பாரதியின் விழிகளோ அவர்களின் குடும்ப புகைப்படத்தில் படிந்தது...

யாருமே சிரிக்கவில்லை...

'போட்டோ க்கு கூட சிரிக்க மாட்டாங்க போல' என்று நினைத்துக் கொண்டவளோ வசிஷ்டனை ஆழ்ந்து பார்த்தாள்.

'ப்பா செம்ம ஹாண்ட்சம் ஆஹ் இருக்கார்... அப்போ கல்யாண நேரம் நமக்கு சைட் அடிக்க ஒருத்தர் கிடைச்சு இருக்கு' என்று மனதுக்குள் அவளுக்கு குதூகலம் வேறு...

நரேனின் குடும்பத்தினர் பேசி விட்டுச் சென்று விட்ட போதிலும் வசிஷ்டனிடம் அன்று யாரும் இந்த விடயத்தை சொல்லவில்லை... அவனோ இறுதி வைவாவை நெருங்கிக் கொண்டு இருக்க, போன் எடுத்தாலும் எடுத்து பேச மாட்டான்...

'வைவா முடிய சொல்லலாம்' என்று நினைத்துக் கொண்டார் ராஜசேகரன்...

இந்த இடைப்பட்ட நாட்களில் திருமண நாளும் குறிக்கப்பட்டது...

மண்டபமும் புக் செய்யப்பட்டு திருமண ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன...

அனைத்தையும் முன்னே நின்று ஆரம்பித்தது என்னவோ நரேன் தான்...

வசிஷ்டனுக்கு சொன்னால் அவன் எப்படி எதிர்வினை ஆற்றுவான் என்று தெரியாது அல்லவா? கல்யாணத்தை நிறுத்தி விடுவானோ என்கின்ற பயம் வேறு... அதற்காகவே திருமண அழைப்பிதழும் அச்சடித்து கொடுக்க ஆரம்பித்து விட்டான்...

அவனை வெல்ல அவனை போலவே தந்திரமாக யோசிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு...

அன்று வசிஷ்டனுக்கு இறுதி வைவா, வெற்றிகரமாக தன்னுடைய பி.எச். டி வைவாவை முடித்து இருக்க, "அமேஸிங்" என்று பாராட்டும் அவனுக்கு கிடைத்தது...

ஒரு தலையசைப்புடன் வெளியே வந்தவன், தனது போனை எடுத்து அழைத்து இருந்தான் ராஜசேகரனுக்கு...

அவரும் போனை எடுத்தவர், "என்ன வசி வைவா முடிஞ்சிடுச்சா?" என்று கேட்க, "ம்ம், இன்னும் வன் வீக் ல கிளம்பிடுவேன்... டிக்கெட்டும் போட்டாச்சு" என்றான்...

அவரோ குரலை செருமிக் கொண்டே, "வசுந்தராவுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கோம்... நீ வைவால பிசியா இருப்பேன்னு சொல்லாம விட்டேன்" என்றார்...

அவனுக்கோ சட்டென்று தன்னை அறியாமல் ஏனோ நரேனின் முகம் தான் வந்து போனது...

"மாப்பிள்ளை யாரு?" என்று கேட்டான்...

அவன் விரும்பவில்லை என்றாலும் கேட்க வேண்டிய கட்டாயம் நரேனின் பெயரை...

முகம் சட்டென்று இறுகி போனது...

"அவன் காலேஜ் ட்ராப் அவுட்" என்றான் உடனே...

அவரோ, "ம்ம், ஐ க்னோ... எல்லாமே சொன்னான்... தண்ணி தம் பழக்கம் கூட விட்டேன்னு சொன்னான்... எல்லாத்துக்கும் மேல வசுந்தரா லவ் பண்ணுறா. இத்தனை வருஷமா கல்யாணம் வேணாம்னு இருந்தவ அவ... இதுல நோ சொல்ல காரணமே இல்லையே" என்று சொல்ல, அவனுக்கும் என்ன சொல்லி வாதாடுவது என்று தெரியவே இல்லை...

"நான் நேர்ல பேசுறேன்... கல்யாண ஏற்பாட்டை ஹோல்ட் பண்ணி வைங்க" என்றான்...

"ஹோல்ட் பண்ணி வைக்கிறதா? மண்டபம் புக் பண்ணி, பத்திரிக்கை எல்லாம் அடிச்சு கொடுத்தாச்சு... இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்... நரேனோட குவாலிபிகேஷனை தவிர வேற ரீசன் இருந்தா சொல்லு கல்யாணத்தை நிறுத்துறத பத்தி யோசிக்கிறேன்" என்றார் ராஜசேகரன்...

வைவாவில் ஜெயித்த சந்தோஷம் அப்படியே வடிந்து விட்ட உணர்வு வசிஷ்டனுக்கு...

நரேனிடம் தோற்று விட்டேனா? என்று தன்னை தானே கேட்டுக் கொண்டான்...

தோல்வியை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை...

"நத்திங் கோ எகெட்" என்று சொல்லிக் கொண்டே போனை வைத்தவனோ, அப்படியே பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டே ஜன்னலின் ஊடாக வெறித்துப் பார்த்தான்...

எது எல்லாம் நடக்க கூடாது என்று நினைத்து இருந்தானோ அது நடக்க இருக்கின்றதே...

காதலிக்கின்றார்கள் விட்டு விடலாம் என்று அவனால் கடந்து விட முடியவில்லை...

தன்னையே தோற்கடித்து திருமண ஏற்பாட்டை செய்கின்றான் என்கின்ற கோபம் அவனுக்குள் வன்மமாக மாறியது...

நினைக்க நினைக்க நரேன் மீது வெறியேறியது... தலையை உலுக்கிக் கொண்டான்...

அவன் மௌனமாக நின்று இருந்தாலும் அவன் கூர்மையான மூளை சுற்றி சுழன்றுக் கொண்டு தான் இருந்தது...

அடுத்த ஒரு வாரத்தில் வீட்டுக்கு கிளம்பி இருந்தான் அவன்...

வீட்டிலும் பெரிதாக அவன் எந்த உணர்வையும் வெளிப்படுத்தவில்லை... வசுந்தரா பயந்து பயந்து இருந்தாள்.

அவன் எதுவும் சொல்லவில்லை...

அவன் மௌனம் இன்னும் பயமாக தான் இருந்தது அவளுக்கு...

சாப்பிடும் போது கூட, "நாளைக்கே காலேஜ்ல ஜாயின் பண்ண சொல்றாங்க... நாளைக்கே போறேன்" என்றான்... ராஜசேகரனோ, "கல்யாணம் பத்தி ஒண்ணுமே சொல்லலையே" என்றார்...

"சொல்ல என்ன இருக்கு? டிசைட் பண்ணிட்டீங்க, நடக்கட்டும்" என்று முடித்துக் கொண்டான்.

அதன் பிறகே வசுந்தராவுக்கு மூச்சு வந்தது...

நரேனிடம் சொன்னாள்.

அவனோ மனதுக்குள், 'அவ்ளோ சீக்கிரம் அடங்க மாட்டானே அவன்' என்று யோசித்தாலும் அவளிடம் சொல்லவில்லை...

வசிஷ்டனோ சகஜமாக அடுத்த நாளே தான் படித்த காலேஜுக்கு விரிவுரையாளராக இணைந்து இருந்தான்...

அவன் முதலில் விரிவுரை செய்ய போனது என்னவோ பாரதியின் வகுப்புக்கு தான்...

அவன் வர முதலே, "இன்னைக்கு புது லெக்சரர் வர்றார்டி" என்றாள் ரியா...

பாரதியோ, "அங்கிள் ஆஹ்? ஐட்டம் ஆஹ்?" என்று கேட்க, சத்தமாக சிரித்த அவள் நண்பன் தினேஷ், "சைட் அடிக்கிறதுலயே இரு" என்றான்.

பாரதியும், "அதுல என்ன தப்பு இருக்கு... சைட் அடிக்கிறது நம்ம உரிமை" என்று சொல்லிக் கொண்டே இருக்க,

அவள் அடுத்த நண்பி நிஷாவோ, "வாவ்" என்றாள்.

அந்த அறையே நிசப்தமாக உள்ளே நுழைந்தான் வசிஷ்டன்...

அவனைக் கண்டதுமே பாரதியின் கண்கள் விரிந்துக் கொண்டன...

'இது அண்ணியோட அண்ணா ஆச்சே!' என்று நினைத்துக் கொண்டவளுக்கு தன்னை அறியாமல் ஒரு வித பூரிப்பு...

ரியாவோ, "செமயா இருக்கார்ல" என்று பாரதியிடம் சொல்ல, அவளோ, "ம்ம், கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கார்" என்று சொல்லிக் கொண்டாள்.

அவனும், "குட் மார்னிங் ஸ்டுடென்ட்ஸ், ஐ ஆம் டாக்டர் வசிஷ்டன்... உங்களுக்கு புதுசா பாடம் எடுக்க வந்து இருக்கேன்..." என்று சொன்னவன் முகம் இறுக்கமாக இருக்க, 'சிரிக்கவே மாட்டார் போல' என்று நினைத்துக் கொண்டாள்.

ஜீன்ஸ் ஷேர்ட் அணிந்து, டிப் டாப்பாக இருந்தவனின் ஆளுமையான தெளிவான பேச்சு, கண்டிப்பு, என்று அனைத்தையும் அவள் ரசித்தாள்...

அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவனுக்கும் புரிந்தது அவன் மீது பெண்களின் பார்வை படிந்து இருக்கின்றது என்று...

வயது கோளாறு என்று கடந்து விட்டான்.

அவன் க்ளாஸ் முடிந்ததுமே, "ஹேய் அவர் யார் தெரியுமா?" என்று பாரதி பெருமை பேச ஆரம்பித்து விட்டாள்.

நிஷாவோ, "யாருடி?" என்று கேட்க, "என் அண்ணா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணோட அண்ணன்" என்றாள்.

"உன்னை தெரிஞ்ச போலவே காட்டிக்கலையே" என்றாள் ரியா...

"என்னை தெரியாதுன்னு தான் நினைக்கிறன்" என்று சொல்ல, "அப்போ போய் இன்ட்ரோ ஆக வேண்டியது தானே" என்றான் தினேஷ்...

"டேய் எப்படிடா?" என்று அவள் கேட்க, அவனோ, "எப்படியும் ரிலேஷன்ஸ் ஆக போறீங்க... சோ இன்ட்ரோ ஆகுறது தப்பில்ல... கான்டீன்ல இருப்பார்... ஜஸ்ட் போய் பேசு..." என்றான்...

அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு அவளும், "நாளைக்கு பேசுறேன்" என்று சொன்னவள் வீட்டுக்கு வந்ததுமே வசிஷ்டன் வகுப்பெடுத்த விடயத்தை நரேனிடம் சொன்னாள். அவன், "ம்ம்" என்று சொல்லி விட்டு கடந்து விட்டான்...

அவனை பற்றி பேசவும் நரேன் விரும்பவில்லை...

அடுத்த நாள் நண்பர்களின் உந்துதல் தாங்க முடியாமல் கான்டீனில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டு இருந்த வசிஷ்டனை நோக்கிச் சென்றாள்.

அவனோ காஃபியை குடித்துக் கொண்டே அவளை ஏறிட்டுப் பார்த்தவன், "எஸ்" என்றான்...

"சார், என் பெயர் பாரதி" என்று தயங்கி தயங்கி சொல்ல, "ம்ம், செகண்ட் இயர் கிளாஸ் ல பார்த்து இருக்கேன்... ஏதும் டவுட்ஸ் கேட்கணுமா?" என்று கேட்டான்...

அவளோ வலுக்கட்டாயமாக சிரித்துக் கொண்டே, 'படிச்சா தானே டவுட்ஸ் வரும்' என்று மனதுக்குள் நினைத்து விட்டு, "என்னை தெரியலையா சார்?" என்று திரும்ப கேட்டாள்.

"இவ்ளோ பெரிய உருவம் உன்னை தெரியாம இருக்குமா?" என்று கேட்க, அவளுக்கு சிரிப்பு வந்தது அடக்கிக் கொண்டே, "உங்க ரிலேஷன் தான் சார்" என்றாள்.

அவள் நின்று இருக்க, அவன் அமர்ந்து இருந்தான்... அவளை அமர சொல்லவும் இல்லை அவன்...

'ரிலேஷனா?' என்று யோசிக்க, அவளோ, "என் அண்ணா தான் நரேன்... வசுந்தரா அண்ணியை கல்யாணம் பண்ணிக்க போறவர்" என்று சொல்ல, "ஓஹ்" என்று ஒரு மார்க்கமாக வந்தது அவன் குரல்...

அவளும், "அதான் இன்ட்ரோ ஆகலாம்னு" என்று இழுக்க, "ஓஹ் குட், சொந்த அண்ணாவா?" என்று கேட்டான்.

"ம்ம், சொந்த அண்ணா" என்று சொல்ல, அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "ஓகே பாரதி நைஸ் டு மீட் யூ, கீப் இன் டச்" என்று வலுக்கட்டாயமாக சிரித்தபடி சொன்னான்...

சிரிப்பதே அபூர்வம் அவனுக்கு...

ஆனால் அவளுக்காக சிரித்தான்...

அவள் மனமோ, 'சிரிக்கும் போது இன்னும் அழகா இருக்காரே' என்று நினைத்துக் கொண்டது...

அவளும், "அப்போ வரேன் சார்" என்று புறப்பட்டு விட, அவள் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்தான்...

அவன் கண்கள் இப்போது பளபளத்தது...

'நரேனோட தங்கச்சி, ம்ம் இன்ட்ரெஸ்ட்டிங்' என்று நினைத்துக் கொண்டவனது இதழ்களில் ஒரு வன்ம புன்னகை...
 

CRVS2797

Member
மழையாக நீ... மழலையாக நான்..!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 7)


வசி... ஒரு ப்ளான் போட்டு நரேனுக்கு செக் வைக்க நினைச்சான்.. பட்.. நரேன் அதை வேற மாதிரி பண்ணி ட்ராப் அவுட்டாகி காலேஜ்ஜை விட்டே வந்துட்டான். இப்ப வசி இல்லாத நேரமா பார்த்து இவன் வசு கிட்ட தன் லவ்வை சொன்னதோட, கல்யாணத்துக்கும் நாள் குறிச்சிட்டான்.


போச்சு போ.... ! இந்த பாரதி சிம்மாவே இருக்க மாட்டாளோ...? அவனே நரேனை கவுக்க வாய்ப்பு எப்ப கிடைக்கும்ன்னு எதிர்பார்த்திட்டிருக்கான். ஆனா, இந்த பாரதி என்னடான்னா வாலண்ட்ரியா போய் வான்டட் ஆகிட்டு வந்துட்டா. இப்ப வசி உறுமீன் வரும் முன் காத்திருக்குமாம் கொக்கு என்கிற கான்சப்ட்டுக்கு ஏத்த மாதிரி, தன்னோட மாஸ்டர் ப்ளானை அழகா போட்டிருப்பானே. அதாவது பாரதி தான் அவனோட அடுத்த டார்கெட் கரெக்ட்டா ?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top