மழை 2
இதே சமயம் வி & வி காஸ்மெட்டிக் கம்பெனி வளாகத்துக்குள் நுழைந்தான் நரேன்...
அவன் விழிகளோ பெரிய கட்டிடத்தில் அழுத்தமாக படிந்து இருக்க, அதனை பார்த்துக் கொண்டே காரில் இருந்து இறங்கியவனை தான் சுற்றி இருந்த அனைவரும் பார்த்தார்கள்...
ஷார்ட்ஸ், டீ ஷேர்ட் என்று அங்கே யாரும் நுழைந்தது இல்லை நரேனை தவிர...
அவனோ அதனை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் வேக நடை போட்டு உள்ளே நுழைந்தான்...
செக்கியூரிட்டியும் சரி, ரிசெப்ஷனிஸ்ட்டும் சரி யாரும் தடுக்கவே இல்லை...
சற்று தூரம் சென்று விட்டு சட்டென திரும்பி ரிசெப்ஷனிஸ்ட்டை பார்த்தவன், "பியூட்டிஃபுல் லிப்ஸ்டிக் கலர்" என்று சொல்ல, அவளோ சட்டென புன்னகைத்து விட்டாள்.
அவனும் கண்களை சிமிட்டிக் கொண்டே உள்ளே வந்தவன் நேரே அந்த கம்பெனியின் எம்.டி யான வசுந்தராவின் அறைக்குள் நுழைந்தான்...
வசுந்தரா, பெயருக்கு ஏற்ற போல, நிமிர்வும், அழுத்தமும் உடையவள்...
சிரிப்புக்கும் அவளுக்கும் காத தூரம் தான்...
தப்பு செய்தால் அவளால் சகித்துக் கொள்ளவே முடியாது...
தான் மட்டும் அல்ல, தன்னை சுற்றி இருப்பவர்களும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவளின் கீழ் வேலை செய்து நின்று பிடிப்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல...
அவள் அறைக்குள் ஏற்கனவே ஒரு ஊழியன் நின்று இருக்க, அவளோ அவனுக்கு, "கெட் லாஸ்ட்" என்று திட்டிக் கொண்டு இருந்த சமயம் தான் உள்ளே நரேன் நுழைந்தான்...
உள்ளே நுழைந்தவனை எரித்து விடுவது போல அவள் பார்க்க, அவனோ அதனை எல்லாம் சட்டை செய்யாமல் அங்கிருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்...
அந்த ஊழியன் வெளியே செல்லும் வரை பார்த்துக் கொண்டு இருந்தவளோ, "ஹெலோ மிஸ்டர் நரேன்... உள்ளே வரும் போது கதவை தட்டிட்டு வரணும்னு தெரியாதா?" என்று கேட்க, அவனோ, "ஓஹ் அப்படியா? இப்போ மறுபடி நான் போய் தட்டிட்டு வரட்டுமா?" என்று கேட்டபடி எழ, "மை காட்" என்று சொல்லிக் கொண்டே நெற்றியை நீவியவள்,
"சிட்" என்றாள் கடுப்பாக...
சாவகாசமாக விசிலடித்துக் கொண்டு அமர்ந்தவனை மேலிருந்து கீழ் பார்த்தவள், "ஒரு ஆஃபீஷியல் மீட்டிங்குக்கு இப்படி தான் வர்றதா?" என்று அவனை எரிச்சலாக பார்த்துக் கொண்டே கேட்க, "ஹெலோ மேடம், மை லைஃப் மை சாய்சஸ், யூ பெட்டர் மைண்ட் யோர் ஓன் பிசினஸ்" என்றான் அழுத்தமாக...
அவளோ, 'எல்லாம் என் நேரம்' என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே, "நேரே விஷயத்துக்கு வரேன்... நீங்க சப்ளை செய்த இன்க்ரீடியன்ட் எல்லாம் குவாலிட்டில பெயில் ஆயிடுச்சு... சோ ரிட்டர்ன் எடுத்துக்கணும்" என்றாள்.
"வாய்ப்பே இல்லை" என்றான் அவளை பார்த்துக் கொண்டே.
"விளையாடாதீங்க மிஸ்டர் நரேன்" என்றாள் கோபமாக...
அவனோ, "இங்க பாருங்க வசுந்தரா, குவாலிட்டி பேப்பர் ல உங்க குவாலிட்டி மானேஜர் சைன் பண்ணி தான் எல்லாமே டேக் ஓவர் பண்ணிகிட்டாங்க... இப்போ குவாலிட்டி சரி இல்ல, அது சரி இல்லன்னா நான் எப்படி நம்புறது? அது உங்க கிட்ட இருந்த ஏதும் பழைய ஸ்டாக் ஆஹ் கூட இருக்கலாம்" என்றான்...
நியாயமாக தான் பேசுகிறான்...
ஆனால் அதனை ஏற்றுக் கொண்டால் பல லட்சங்கள் நஷ்டமாகி விடும்...
வசுந்தராவுக்கும் வேறு வழி இல்லை...
அவனை இறுக பிடிக்கவும் முடியாது...
இறுக பற்றினால் வழுக்கிக் கொண்டு சென்று விடுபவன்...
அவனை பார்த்துக் கொண்டே பெல்லை அழுத்த, உள்ளே எட்டிப் பார்த்தான் பியோன்...
"குவாலிட்டி மானேஜரை வரச் சொல்லுங்க" என்று சொல்லிக் கொண்டே, ஆழ்ந்த மூச்சை எடுத்து விட, "ஆபீசுக்கு வந்தவங்களுக்கு காஃபி கொடுக்கிற பழக்கம் இல்லையா?" என்று கேட்டான்...
"சாருக்கு தான் காஃபி பிடிக்காதே" என்று அவள் சொல்ல, அவனோ, "காஃபி தான் பிடிக்காது... ஜூஸ், மில்க்ன்னு எது வேணும்னாலும் கொடுக்கலாம்" என்றான்...
அவளும் மீண்டும் மணியை அழுத்தி, "ஒரு ஜூஸ் ப்ளீஸ்" என்று சொல்ல, சிற்றூழியனும் அவனுக்காக ஜூஸ் தயாரிக்கச் சென்று விட்டான்.
இடைப்பட்ட நேரத்தில் குவாலிட்டி மானேஜர் அறைக்குள் நுழைய, "ஹாய் ரீட்டா" என்றான் நரேன்...
அவளும், "ஹாய் சார்" என்று கையை உயர்த்த போனவள் வசுந்தராவின் முறைப்பைக் கண்டு கையை கீழே இறக்க, "ரெண்டும் ஜொள்ளு" என்று வாய்க்குள் திட்டிக் கொண்டாள் வசுந்தரா...
"ரீட்டா, உங்க கெயர்லெஸ் காரணமா இப்போ எத்தனை பெரிய லாஸ்ன்னு பாருங்க... இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?" என்று கடுமையான குரலில் அவளை பார்த்து கேட்க, அவளோ, "சாரி மேடம், அன்னைக்கு குவாலிட்டி எல்லாம் சரியா தான் இருந்திச்சு" எனறாள் தன்னை காப்பாற்றும் பொருட்டு...
"அப்புறம் மேஜிக் போல மாறிடுச்சா? ஸ்டாப் பிஹேவ் லைக் திஸ்..." என்று திட்ட, நரேனோ, "எதுக்கு மேடம் திட்டுறீங்க? உண்மையாவே குவாலிட்டி எல்லாம் சரியா தான் இருந்திச்சு" என்றான் நமட்டு சிரிப்புடன்...
"நரேன், ஐ க்னோ அபவுட் யூ... நான் என் ஸ்டாஃப் கூட பேசிட்டு இருக்கேன்... சோ மைண்ட் யோர் டங்" என்றவளோ ரீட்டாவை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "உங்களுக்கு வன் மன்த் நோட்டீஸ் கொடுக்க சொல்றேன்... அடுத்த மாசம் உங்கள டெர்மினேட் பண்ணுறேன்" என்றாள் கோபம் கலந்த குரலில்...
"மேடம்" என்று அந்த பெண் அலறியே விட்டாள்.
இப்படி வேலையை பறிப்பாள் வசுந்தரா என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை...
வசுந்தராவோ, "ஐ காண்ட் ஹெல்ப் யூ" என்று அழுத்தமாக சொல்ல, அவளோ, "என்னோட அப்பாவுக்கு உடம்பு முடியல மேடம்" என்றாள்.
"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? ஜஸ்ட் கெட் அவுட்" என்று சொல்லிக் கொண்டே, நரேனைப் பார்க்க, அவனோ பாக்கெட்டில் இருந்து பர்சை எடுத்துக் கொண்டு இருந்தவன் எந்த உணர்வும் காட்டவே இல்லை...
ரீட்டாவும், "மேடம் இன்னொரு தடவை" என்று ஆரம்பிக்க, "கெட் அவுட்" என்று சற்று கோபமாகவே கத்தி இருந்தாள் வசுந்தரா...
அவளும் கலங்கிய கண்களுடன் அங்கே இருந்து நகர முற்பட, சொடக்கிட்டான் நரேன்...
ரீட்டாவும் நின்று திரும்பி பார்க்க, அவளிடம் தனது விசிட்டிங் கார்டை நீட்டியவன், "இந்த கம்பெனிக்கு போங்க... இங்க இருக்கிற செலரியை விட டபிள் கொடுக்கிறேன்" என்று வசுந்தராவை பார்த்துக் கொண்டே சொல்ல, இப்போது வசுந்தராவின் புருவம் இடுங்கி போனது...
கோபம் எல்லாம் அவள் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு தான் கட்டுப்பாடாக அமர்ந்து இருந்தாள்.
நரேனின் இதழ்களில் நமட்டு சிரிப்பு மட்டும் அப்பட்டமாக தெரிய, ரீட்டாவோ, "தேங்க் யூ சார்" என்று சொன்னபடி கார்டை வாங்கிக் கொண்டு வசுந்தராவை பார்த்தவள், "மேடம், இன்னைக்கே நான் கிளம்பிடவா?" என்று கேட்டாள்.
இப்போது நரேன் அடக்க முடியாமலே சிரித்து விட்டான்...
"கெட் லாஸ்ட்" என்று மீண்டும் வசுந்தரா கத்தி இருக்க, அவளோ அங்கிருந்து ஓடியே விட்டாள்.
இதே சமயம், நரேனுக்கு ஜூசும் வந்து சேர, அதனை குடித்தபடியே வசுந்தராவை பார்த்தவன், "நெக்ஸ்ட் வாட்?" என்று கேட்டான்...
"மிஸ்டர் நரேன், இது எங்களோட தப்பு தான்... பட் இதனால பல லட்சம் எங்களுக்கு லாஸ் ஆகும்... சோ ரிட்டர்ன் எடுத்துக்கோங்க" என்று கேட்க, அவனோ பதில் சொல்லாமல் ஜூஸை குடித்துக் கொண்டே அவளை மேலிருந்து கீழ் அளந்துக் கொண்டு இருந்தான்...
அவளும், "இடியட்" என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே அவன் ஜூஸை குடித்து முடிக்கும் வரை பார்த்துக் கொண்டு இருக்க, அவன் விழிகள் அவளை விட்டு அகலவே இல்லை...
நேர்த்தியாக கொண்டை போட்டு இருந்தாள்...
கண்ணுக்கு மை தீட்டி, இதழ்களில் மெல்லிய நிற லிப்ஸ்டிக் போட்டு இருந்தாள்.
முகம் பளபளத்துக் கொண்டு இருந்தது...
கையில்லாத ஜாக்கெட்டும் காட்டன் புடவையும் தான் அணிந்து இருந்தாள்.
கழுத்தில் முத்து மாலையுடன் சேர்த்து தாலியும் தொங்கிக் கொண்டு இருந்தது...
சட்டென்று அவன் பார்வை நெற்றியை ஆராய்ந்தது...
கருப்பு பொட்டு வைத்து இருந்தாலும், நெற்றி வகிட்டில் குங்குமம் இருந்தது...
கழுத்தின் மேல் மட்டும் அல்ல, கழுத்தின் கீழும் அவன் கண்கள் படிய, சட்டென்று மேசையில் இருந்த பைலை பிரிப்பது போல பிரித்து தன்னை மறைத்துக் கொண்டாள்.
அவனோ ஜூஸை இப்போது சிரித்தபடியே குடித்தவன், அதனை மேசையில் வைத்து விட்டு, "என்ன கேட்டிங்க மிஸிஸ் வசுந்தரா" என்று கேட்டான்.
"ரிட்டர்ன் எடுத்துக்கணும்" என்றாள் மொட்டையாக...
"ம்ம், எடுத்துக்கலாம், ஆனா ஒரு கண்டிஷன்" என்றவனது கண்கள் அவள் இதழில் படிய, அவளோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "என்ன கண்டிஷன்" என்று கேட்டாள்.
கையினை நீட்டி, மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை சுழட்டியபடியே, "நான் பார்க்கிறதுலயே புரிஞ்சு இருக்கும்னு நினச்சேன்... வாயாலேயே சொல்லணுமா?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டான்...
அவளுக்கு புரிந்தது... ஆனாலும் சம்மதிக்க தோன்றவில்லை...
"புரிஞ்சுது... பட் ஐ காண்ட் நரேன்" என்று சொன்னாள்.
"ஓகே பைன் ஐ ஆம் லீவிங்" என்று சொல்லிக் கொண்டே எழ, "நரேன்" என்றாள் அழுத்தமாக...
அவனோ, "இங்க வேணாம், அங்க ஒரு ரூம் இருக்குல்ல, தட்ஸ் பைன் போர் மீ" என்று கையை அங்கிருந்த அறையை நோக்கி காட்ட, அவளுக்கோ கோபம் ஒரு பக்கம் இயலாமை மறுபக்கம் என்கின்ற உணர்வு தான்...
அவனிடம் இருந்து மறைக்க அவளிடம் எதுவும் இல்லை...
கலவியும் கட்டிலும் அவளுக்கு புதிதும் இல்லை...
ஆனாலும் காதலுடன் நடக்க வேண்டியது, காரியத்துக்காக நடப்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...
அருவருப்பாக இருந்தது... ஆனாலும் மறுக்க முடியவில்லை...
அவள் சம்மதிக்க காரியம் மட்டும் காரணம் அல்ல என்று அவள் ஆழ் மனதுக்கு தெரியும்... ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தாள்.
விசிலடித்துக் கொண்டே வெளியேற போனவனை, "நரேன்" என்று மீண்டும் அழைத்தாள்.
திரும்பி பார்த்தவனிடம், "கண்டிப்பா ரிட்டர்ன் எடுத்துடுவீங்கல்ல?" என்று கேட்க, அவன் இதழ்களில் அடக்கப்பட்ட புன்னகை தோன்ற, "கண்டிப்பா" என்றான் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே...
சிறிது நேரத்தில் அவள் அலுவலகத்தில் இருந்த அறைக்குள் இருந்து டீ ஷேர்ட்டை அணிந்துக் கொண்டே விசிலடித்தபடி வெளியே வந்த நரேன், அவள் இருக்கையின் முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டான். அப்படியே திரும்பி அங்கிருந்த கண்ணாடியில் தன்னை பார்க்க, அவள் நெற்றியில் இருந்த கருப்பு பொட்டு அவன் கழுத்தில் இருந்தது...
மென் புன்னகையுடன் அதனை எடுத்து அவள் மேசையில் ஒட்டி விட்டான்...
இதே நேரம், அறைக்குள் இருந்த கண்ணாடியின் முன்னே தான் நின்று இருந்தாள் வசுந்தரா...
தலை விண் விண்ணென்று வலித்தது...
தலையை உலுக்கி சமன் செய்துக் கொண்டே, கலைந்து இருந்த முடியை வாரி கொண்டை போட்டுக் கொண்டாள்.
கழுத்தில் கட்டி இருந்த தாலி அவளைப் பார்த்து சிரித்தது...
வாழ்க்கையில் அடுத்து என்ன முடிவு எடுப்பது என்று தெரியாத நிலையில் இப்போது இருக்கிறாள்...
தனக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே தெரியவில்லை...
மனதை திடமாக்கிக் கொண்டு எடுத்த முடிவுகள் கூட ஆட்டம் காணுவதை போல உணர்ந்தாள்.
வேகமாக ஆயத்தமாகி வெளியே வந்தவளோ தனது இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
அவளுக்கு முன்னால் தான் நரேன் அமர்ந்து இருந்தான்...
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்...
அவளால் தான் அவனை பார்க்கவே முடியவில்லை...
எட்டி போனை எடுத்தவள், "மெட்டிரியல் ரிட்டர்ன் க்கு ஏற்பாடு பண்ணுங்க" என்று தகவலை சொல்லி விட்டு, தனக்கு முன்னே இருந்த பைலை புரட்டிக் கொண்டே, "இப்போ டாகுமெண்ட்ஸ் ரெடி ஆய்டும்" என்றாள்.
"பொட்டு" என்றான் அவன்...
சட்டென அவனை பார்த்தவள், "வாட்?" என்று புரியாமல் கேட்க, எட்டி மேசையில் இருந்த பொட்டை எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட, அவள் விழிகளோ அவனையே பார்த்துக் கொண்டு இருந்தன...
"அழகா இருக்க" என்றான்...
மௌனித்து போனாள்.
"பேபி" என்றான்.
"டோன்ட் கால் மீ லைக் தட்" என்றாள் விழிகளை தாழ்த்திக் கொண்டே...
"கொஞ்ச நேரம் முன்னாடி கூட கூப்பிட்டேனே... அப்போ எதுவும் சொல்லலையே" என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன்...
பேசும் நிலையிலா அவள் இருந்தாள்?
பேசும் நிலையில் தான் அவன் வைத்து இருந்தானா?
"அது அப்போ, இது இப்போ" என்றாள் தட்டுத்தடுமாறி...
அவனை பார்க்க முடியவில்லை அவளால்... பைலை பார்த்துக் கொண்டு தான் பேசினாள்.
"எனக்கு எப்போவும் ஒன்று தான்" என்று நரேன் சொன்ன கணம், அவன் சைன் பண்ண வேண்டிய டாக்குமெண்டும் அலுவலக அறைக்குள் வந்தது...
கொண்டு வந்த பெண்ணை பார்த்த நரேனோ, "புது ஸ்டாஃப் ஆஹ்?" என்று கேட்க, "நீ மாறவே மாட்டியா?" என்பது போல இருந்தது வசுந்தராவின் பார்வை...
"சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன்" என்று அவளிடம் சொல்லி விட்டு அந்த பெண் கொடுத்த டாக்குமெண்டுகளை படிக்கலானான்...
இறுதியில், அவன் சைன் பண்ண வேண்டிய இடத்தில் மிஸ்டர் நரேன் செல்லத்துரை என்று இருக்க, அதற்கு சரி நேர்ப் பக்கத்தில், மிஸிஸ் வசுந்தரா நரேன் என்று இருந்தது...
அவனை அறியாமல் இதழில் மெல்லிய புன்னகை....
"இன்னும் பேர் மாத்த தோணலை போல" என்று சொல்லிக் கொண்டே கையெழுத்தை இட்டான்.
"டைவர்ஸ் ஆனதும் ஆட்டோமேட்டிக் ஆஹ் மாறிடும்" என்று சொல்லிக் கொண்டே அவன் கையெழுத்து இட்ட பத்திரத்தை வாங்கிக் கொண்டாள்.
"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை..." என்று சொன்னவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு, அங்கே நின்ற பெண்ணை கண்களால் வெளியேற சொன்னாள்.
அந்த பெண் சென்றதுமே, "ஏன் சார் வாய்ப்பில்லை?" என்று கடுப்பாக கேட்டுக் கொண்டே கையெழுத்து வைக்க, அவளை பார்த்துக் கொண்டே எழுந்தவன், "கொஞ்ச நேரம் முன்னாடி தோணிச்சு" என்றான்...
அவன் எதனை சொல்கின்றான் என்று அவளுக்கும் தெரியும்...
"அது வேற இது வேற" என்றாள்.
"எனக்கு எல்லாமே ஒன்னு தான்... ஆயிரம் பொண்ணுங்கள பார்ப்பேன், கடலை போடுவேன், சைட் கூட அடிப்பேன்... ஆனா என் மொத்தமும் உனக்கு மட்டும் தான்" என்றான்...
சட்டென தலையை குனிந்துக் கொண்டாள் பெண்ணவள்...
அவளை பார்த்துக் கொண்டே வாசல் வரை சென்றவன் சட்டென்று திரும்பி, "பேபி அவ்ளோ தானா?" என்று கேட்டான்... அவன் பேபி என்கின்ற அழைப்பு அவள் உயிர் வரை ஊடுருவ, உணர்வுகளை அடக்கிக் கொண்டே அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "அவ்ளோ தான்" என்று சொல்ல, அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே வெளியேறி இருந்தான் நரேன்...