soniyaravi
Member
Nice

Super sisமழை 19
அவனோ குளியலறைக் கதவை வெறித்துப் பார்த்துக் கொண்டே கட்டிலில் தலையை பிடித்துக் கொண்டே அமர்ந்து விட்டான்...
தான் பேசியது தவறு என்று அவனுக்கும் தெரியும்...
அந்த வார்த்தை அவளை எப்படியெல்லாம் காயப்படுத்தும் என்றும் புரியும்...
மனதில் தோன்றாத வார்த்தைகள் என்றாலும் அதனை பேசியது தவறு என்று அவனுக்கு புரிந்தது...
"வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா வசி?" என்று தனக்கு தானே திட்டிக் கொண்டான்.
இதே சமயம் குளியலறைக்குள் கண்ணாடியை வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள் பாரதி...
கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது...
மனதை வாள் கொண்டு அறுக்கும் அவன் வார்த்தைகளை அவளால் இலகுவாக கடந்து விட முடியவில்லை...
கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் வழிந்தது...
ஆனால் அவன் முன்னே அழக் கூடாது என்று நினைத்தவள் முகத்தை அடித்துக் கழுவினாள்.
கண்ணீர் நிற்கும் வரை குளியலறைக்குள்ளேயே நின்றவள் கண்ணீரை துடைத்துக் கொண்டே வெளியே வந்தாள்.
அவனை பார்க்க கூட இல்லை...
அலுமாரியை திறந்து குளிப்பதற்காக உடைகளை எடுத்தாள்.
ஆனால் அவன் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்...
"பாரதி" என்று கூப்பிட்டான்...
திரும்பியும் பார்க்கவில்லை...
மறுபடியும் அழைத்தான்...
பதில் இல்லை...
இடைவெளி கொடுக்க நினைத்து அவனும் மௌமாகி விட்டான்...
அவளை அதற்கு மேல் தொந்தரவு செய்யவே இல்லை...
குளித்து விட்டு வந்தவளோ, போனுடன் வழக்கம் போல சோபாவினுள் ஒடுங்கிக் கொண்டாள்.
அவனுக்கும் அங்கே இருப்பது என்னவோ போல இருந்தது...
குளித்து விட்டு வெளியே கிளம்பி இருந்தான்...
அவன் திரும்பி வந்த சமயம் அவளோ மதியம் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டு இருந்தாள்.
கல கலவென பேசிக் கொண்டு இருப்பவளின் மௌனம் அவனுக்கு என்னவோ செய்தது...
யாரும் அவனிடம் பேசாமல் இருந்தால் அவன் அதனை கண்டு கொள்வதே இல்லை...
நீ பேசாமல் இருந்தால் எனக்கென்ன என்று நினைத்தபடி கடந்து விடுவான்...
ஆனால் பாரதி விஷயத்தில் அவனுக்கு அப்படி கடக்க நினைத்தாலும் கடக்க முடியவே இல்லை...
அவள் மௌனம் அவனுக்கு உறுத்தியது...
அவள் பேசினால் நிம்மதியாக இருக்கும் என்றும் தோன்றும் அளவுக்கு உறுத்தியது...
இப்படியான உள்ளுணர்வுகளை அவன் வெறுத்தான்...
ஆனாலும் தவிர்க்க முடியவில்லை...
அதற்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அளவுக்கு அவன் மனநிலையும் இல்லை...
அவன் ஈகோவும்,திமிரும் அதற்கு அவனை அனுமதிக்கவும் இல்லை...
அன்று மாலை அவள் எழுந்த போதிலும் தனது வேலையை பார்த்தாள் தவிர அவன் பக்கம் திரும்பவே இல்லை பாரதி...
இப்படியே சனி, ஞாயிறு கடந்து திங்கட்கிழமையும் வந்து சேர்ந்தது...
காலையில் வழக்கம் போல ஆயத்தமாகி காரை எடுக்க வசிஷ்டன் கிளம்ப, பாரதியோ காரில் ஏறாமல் விறு விறுவென வாசலை நோக்கிச் சென்றாள்.
'இவ எங்க போறா?' என்று நினைத்துக் கொண்டே காரில் இருந்து இறங்கியவன் அவளை நோக்கி வேகமாகச் சென்று மறித்தபடி நின்றான்... அவள் அப்போதும் அவனை பார்க்கவே இல்லை... எங்கோ பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள்.
"கார்ல ஏறாம எங்க போற?" என்று கேட்க, பதில் இல்லை அவளிடம்... பேசவும் இல்லை...
சிலை போல நின்று இருந்தாள்.
"ஏதாவது பேசுடி" என்றான்...
ஒரு வார்த்தை சொல்ல கூட வாயை திறக்கவில்லை...
முடிந்தால் என் வாயில் இருந்து வார்த்தைகளை பிடுங்கி பார் என்பது போல இருந்தது அவள் தோரணை...
"இப்போ சொல்ல போறியா இல்லையா?" என்று மிரட்டி பார்த்தான்...
பதில் இல்லை... அவனுக்கே எரிச்சல் வந்தது...
கையில் இருந்த வாட்சில் நேரத்தை பார்த்தான். நேரம் ஓடிக் கொண்டு இருந்தது... அவனுக்கு வேற முதலாவது லெக்ஷர்ஸ் இருந்தது...
"என்னவோ பண்ணி தொலடி" என்று திட்டி விட்டு காரை மின்னல் வேகத்தில் கிளப்பினான்.
அவளோ நடந்துச் சென்று அருகே பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். காலேஜில் கூட அவனுக்கு வேலை இருந்ததால் அவளை சந்திக்க முடியவே இல்லை... அவளும் விரைவாக கிளம்பி விட்டாள்.
இப்படியே அவள் மௌனமாகி விட்டாள்... அவன் தவிக்க ஆரம்பித்து விட்டான்...
அவள் துடினம், பேச்சு எல்லாம் கூட அவனை தவிக்க வைக்கவில்லை...
அவள் மௌனம் தவிக்க வைத்தது...
எப்போதுமே பேசிக் கொண்டு இருப்பவர்கள் பேச்சை நிறுத்தும் போது தான் அந்த பேச்சின் அருமை நமக்கு புரியும்...
அதே நிலைமை தான் இப்போது வசிஷ்டனுக்கும்...
அவள் குரலை கேட்க ஏங்கினான்... அவள் சிரிப்பின் ஒலியை கேட்க ஏங்கினான்...
ஆனால் அவளோ இறுக்கமாகவும் மௌனமாகவும் தான் இருந்தாள். இப்படியே நாட்கள் நகர, ஒரு நாள் காலேஜுக்கு ஆயத்தமானவளை பார்த்துக் கொண்டே இருந்தான் வசிஷ்டன்.
"பாரதி" என்று அழுத்தமாக அழைத்தான். எந்த எதிர்வினையும் இல்லை அவளிடம்...
மேசையில் இருந்த புத்தகங்களை பையினுள் அடுக்கிக் கொண்டு இருந்தாள்...
அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்" என்றான். அப்போதும் அவள் அவனை ஏறிட்டு பார்க்கவில்லை...
பையை திறந்து விட்டு வெளியே கிளம்ப ஆயத்தமானாள்.
பொறுமை இழந்தவனோ அவள் கையை பிடித்து இழுத்து சுவரில் அவளை சாய வைத்தவன் தனது இரு கைகளையும் சுவரின் இரு பக்கமும் அழுத்தமாக பதித்துக் கொள்ள, அவன் கைகளின் நடுவே அவள் சிறைபட்டுக் கொண்டாள்...
தலையை குனியவில்லை... அதே சமயம் அவனையும் பார்க்கவில்லை.
எங்கோ பார்த்தபடி நின்றாள்.
"பேசுனா ரெஸ்பான்ஸ் பண்ணு" என்றான்.
அதற்கும் பதில் இல்லை... சலித்து விட்டான்.
"ஏதாவது பேசுடி" என்றான்... பதில் இல்லை...
"நீ பேசணும்னா நான் என்ன பண்ணனும்??" முதல் முறை அவனாகவே இறங்கி வந்தான்.
இப்போது அவனை ஏறிட்டு பார்த்து விட்டு அவன் கைகளை பார்த்தாள்.
பெருமூச்சுடன் அவன் கைகளை அகற்ற வேகமாக கண்ணாடி அருகே சென்றவள் அங்கே இருந்த தனது லிப்ஸ்டிக்கை எடுத்து, "வாட்ச் சொல்லாமலே படம்" என்று கண்ணாடியில் எழுதினாள்...
"என்னது ?? படம் பார்க்கணுமா? அதெல்லாம் பழக்கமே இல்ல" என்றான்.
ஒரு முறைப்பை பதிலாக கொடுத்தபடி புறப்பட ஆயத்தமானாள்...
"ஓகே பைன் அத பார்த்து நான் என்ன பண்ணுறது??" என்று கேட்டான்...
"டூ லைக் லிவிங்ஸ்டன்" என்று மீண்டும் எழுதினாள்...
அவனோ, "அது யாரு?? அவன் என்ன பண்ணினான்??" என்று கேட்க, அவளோ கையால் தனது நெற்றியில் அடித்துக் கொண்டே வெளியேற போனாள்...
அவனோ, "அப்போ அவனை போல பண்ணினா பேசுவியா?" என்று கேட்டான்.
அவளோ, 'அப்புறம் நான் மட்டும் தான் பேசுவேன்' என்று நினைத்துக் கொண்டே வெளியேறி விட்டாள்...
படமே பார்க்காதவன் இருந்து படம் பார்க்க நினைத்தான் அவளுக்காக.
அன்று மாலை அவனுக்கு லெக்ஷர்ஸ் இருக்கவில்லை...
நேரத்துக்கே வீட்டுக்கு வந்து அவள் சொன்ன படத்தை தேடி எடுத்தான்...
படம் பார்ப்பது அவனுக்கு என்னவோ போல இருந்தது... ஆங்கில படங்கள் பார்த்து இருக்கின்றான் அதுவும் விஞ்ஞான ரீதியான படங்கள் மட்டும்...
இது அவனுக்கு விசித்திரமாக இருந்தது... அதுவும் காதல் படம்...
லாஜிக் பிழைகள் அவன் கண்களுக்கு துல்லியமாக தெரிந்தன...
அதனை தவிர்த்து விட்டு பார்க்கும் மனநிலையும் அவனுக்கு இருக்கவில்லை...
"என்ன இப்படி எடுத்து வச்சு இருக்கான்" என்று இயக்குனருக்கு திட்டிக் கொண்டே வேறு வழி இல்லாமல் பார்த்தான்...
இறுதி காட்சியை பார்த்தவனோ, "அடிப்பாவி நாக்கை கட் பண்ண சொல்றா" என்று அவளுக்கு மானசீகமாக திட்டி விட்டு லேப்டாப்பை மூடி வைத்தான்...
அவள் வரும் வரை காத்துக் கொண்டு இருந்தான்...
அவள் கல்லூரி முடிந்து வீட்டுக்குள் வந்து சேர்ந்ததும் தான் தாமதம், "எனக்கு மூலதனமே இந்த வாய் தான், உனக்காக நான் நாக்கை வெட்டிக்கணுமா? அதுக்கப்புறம் நீ பேசுனா என்ன பேசலைன்னா என்ன?" என்று கேட்டான்...
பதில் சொல்லாமல் பையை வைத்து விட்டு டவலை எடுத்துக் கொண்டே குளிக்கச் சென்றாள்.
"உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் பாரதி" என்றான்...
திரும்பிக் கூட பார்க்கவில்லை அவள்...
குளியலறை கதவை அடைத்து விட்டு உள்ளேச் சென்று விட்டாள்.
அவனுக்கு எரிச்சலாக இருந்தது...
ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.
கட்டுப்படுத்த முடியவில்லை...
கோபமாக சென்று கதவை தட்டினான்...
அவள் திறக்கவில்லை...
"நிம்மதியா குளிக்க கூட முடியல" என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே சோப் போட்டாள்...
அவன் வேகமாக தட்டியதில் கதவு சட்டென்று திறந்துக் கொண்டது...
அதனை அவனும் எதிர்பார்க்கவில்லை, அவளும் எதிர்பார்க்கவில்லை...
அவன் விழிகளோ எதிர்பாரா நிகழ்வில் விரிய, அவளோ வேகமாக வந்து கதவை சாத்தும் போது இதழ்களுக்குள், "பொறுக்கி" என்று திட்டினாள்...
அவனும் கண்டு கொண்டான்...
"யாருடி பொறுக்கி?" என்று எகிறினான்...
அவள் முறைப்பை மட்டும் பதிலாக கொடுத்தாள்.
கடுப்பாக இருந்தது அவனுக்கு...
"பேசலைன்னா போடி எனக்கென்ன?" என்று திட்டிக் கொண்டே கட்டிலில் படுத்துக் கொண்டான்...
அவனுக்கே அவன் நடவடிக்கை புதிராக தோன்றியது...
உணர்வுகளை எல்லாம் இப்படி வெளிக்காட்டுபவன் அல்ல...
அவள் விலகி போன நேரமும் அவனுக்கு கஷ்டமாக இருந்தது...
அடக்கிக் கொண்டு தான் இருந்தான்...
அப்படி அவனால் இப்போது இருக்க முடியவே இல்லை...
அவள் பேசவில்லை என்றால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது...
பேசமாட்டாளா? என்கின்ற ஏக்கம்...
குளித்து விட்டு வந்தவளோ, அவனை முறைத்துக் கொண்டே படுத்து விட்டாள்...
சட்டென திரும்பி படுத்தப்படி நேரத்தைப் பார்த்தான்...
எட்டு மணியை நெருங்கி இருந்தது...
"சாப்பிட வா" என்றான்...
அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.
அவள் சற்று முன்னர் திட்டிய கோபம் கூட எங்கே போனது என்று தெரியவில்லை...
அவள் பேசவில்லை என்கின்ற ஆதங்கம் மட்டும் எஞ்சி இருந்தது...
அவள் இடையில் கையை வைத்து தன்னை நோக்கி வேகமாக திருப்பியவன் இறுக அணைத்துக் கொண்டான்...
அவள் திமிறினாள்...
அவன் மார்பில் கையை வைத்து தள்ளி விட முயன்றாள்...
அவனை அசைக்க முடியவில்லை...
பொறுமை இழந்தவள் அவன் கன்னத்தில் ஊன்றி கடித்து விட்டாள்.
"ஆஹ்" என்று அலறியபடி அவளை விட்டவன், "ராட்சசி" என்று திட்ட, ஒரு முறைப்புடன் போர்வையை எடுத்துக் கொண்டே சோபாவில் சென்று படுத்தாள்.
அவனுக்கு அவள் இன்னும் தள்ளி போன உணர்வு...
"நான் எதுவும் பண்ண மாட்டேன்... வா" என்று அவன் அழைக்க, அவள் எதுவும் சொல்லாமல் கண் மூடி படுத்துக் கொண்டாள்.
அவள் சாப்பிடாமல் படுத்ததும் அவனுக்கு உறுத்தியது...
அவளை வெறித்துப் பார்த்து விட்டு, உடையை மாற்றிக் கொண்டே வெளியேறி இருந்தான்...
அவளும் அலட்டிக் கொள்ளாமல் தூங்கி விட, அவளை யாரோ எழுப்புவது போல இருந்தது...
மெதுவாக கண்களை விரித்துப் பார்க்க, "உனக்கு பிடிச்ச சாப்பாடு வாங்கி வந்து இருக்கேன்... சாப்பிடு" என்று அவளிடம் பிஷ் ப்ரையை நீட்டினான்...
முகத்தில் இப்போதும் மாஸ்க் போட்டு இருந்தான்...
அவளோ அவனை முறைத்து விட்டு மீண்டும் கண்களை மூடிக் கொள்ள, அவனுக்கு சலித்து தான் போனது...
'அவ பேசலைன்னா எனக்கென்ன' என்று அவன் நினைத்து அவளை கடக்க முற்பட்டாலும் முடியவில்லை...
அவளை என்ன செய்து பேச வைப்பது என்றும் தெரியவே இல்லை...
"டாச்சர் பண்ணுறா" என்று முணு முணுத்தவன் மீனை கோபத்தில் பால்கனியால் தூக்கி வெளியே போட்டு விட்டு படுத்து விட்டான்...
அவனும் சாப்பிடவில்லை...
அவள் கண் விழித்த போது கட்டிலில் படுத்து இருந்தாள்.
அவன் தான் அள்ளி அணைத்து படுக்க வைத்து இருந்தான்...
சட்டென போர்த்தி இருந்த போர்வையினூடு தன்னை பார்த்தாள்.
கண்ணாடியின் முன்னே நின்று தலையை வாரிக் கொண்டு இருந்தவனோ, "நான் நைட் ஒண்ணும் பண்ணல" என்றான்.
அவளும் இதழ் குவித்து ஊதிக் கொண்டே எழுந்தவள் வழக்கம் போல நாட்களை கடத்த ஆரம்பித்து விட்டாள்.
நாட்கள் மாதங்களானது...
அவள் பேசவே இல்லை...
அவன் தனியாக பேசி பேசி களைத்து போனான்.
கல்லூரியில் கூட அவளை அவன் சந்திப்பது இல்லை...
தனியாக தான் காலேஜுக்கு போய் வந்தார்கள்...
இப்படியான ஒரு நாளில் டிராஃபிக் சிக்னலில் நின்று இருந்தான் வசிஷ்டன்...
நாடியை நீவிக் கொண்டே பக்கவாட்டாக திரும்பி பார்த்தவன் விழிகளோ படிந்தது என்னவோ ஹாஸ்பிடல் வளாகத்தில் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே நுழைந்த பாரதி மீது தான்...
கண்களை மூடி திறந்துக் கொண்டே அழுந்த பார்த்தான்...
ஆம் அவளே தான்...
'இப்போ ஏன் ஹாஸ்பிடல் போறா?' என்று யோசித்துக் கொண்டே காரை வைத்தியசாலை வளாகத்தினுள் விட்டான்...
அவளோ சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே ரிசெப்ஷனிஸ்ட்டுடன் பேசியவள் லிப்டில் ஏறி மேல் தளத்துக்குச் சென்றாள்.
அவனும் அவள் கண்டு கொள்ளாத தூரத்தில் பின் தொடர்ந்தான்.
அவளை தொடர்ந்து சென்றவனின் விழிகள் சுருங்கிக் கொண்டன...
அவள் நுழைந்துக் கொண்டு இருந்தது என்னவோ மகப்பேற்று மருத்துவர் அறைக்குள் தான்...
'இவ எதுக்கு இங்க வர்றா? வசுந்தரா வந்து இருப்பாளோ? இல்லை அவளே' என்று யோசித்தவனுக்கு விழிகள் விரிய, அப்படியே அமர்ந்து விட்டான்...
அவள் இன்னும் படித்துக் கூட முடிக்கவில்லை...
இறுதி செமஸ்டர் மீதம் இருந்தது...
வயிற்றை தள்ளிக் கொண்டு போய் காலேஜில் நிற்க வேண்டும்...
இந்த நிலையில் மாணவர்கள் என்ன பேசுவார்கள் என்று அவனுக்கு நன்கு தெரியும்...
அதற்கு மேல் அவள் தன்னிடம் எதுவுமே சொல்லாத கோபம் வேறு இருந்தது...
அவள் கர்ப்பமாக இருக்கின்றாள் என்கின்ற சந்தோசம் ஒரு பக்கம், கர்ப்பமாக இருப்பதை சொல்லவில்லை என்கின்ற கோபம் மறுபக்கம்... கல்லூரியில் தனது மானம் மொத்தமாக் போய் விடும் என்கின்ற சங்கடம் இன்னொரு பக்கம்...
கால் மேல் கால் போட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவனோ சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்துக் கொண்டான்...
இதே சமயம் டாக்டர் முன்னால் இருந்த பாரதியோ, "இப்போவே லைட்டா வயிறு தெரியுது" என்றாள்.
"நாலரை மாசம் ஆரம்பிச்சுடுச்சு... இனி தெரியலனா தான் அதிசயம்" என்றார் அவர்...
"பாப்பா எப்படி இருக்கு டாக்டர்?" என்று கேட்க, அவரோ, "நீயே பாப்பா மாதிரி தான் இருக்க... உனக்கு ஒரு பாப்பாவா?" என்று சிரிக்க, அவளும் சிரித்தாள் மெலிதாக...
"குழந்தை ரொம்ப ஆரோக்கியமா இருக்கு... வளர்ச்சி ஒழுங்கா இருக்கு... ஹெல்த்தை பார்த்துக்கோ... ஆமா உன் புருஷன் மிஸ்டர் வசிஷ்டன் இத்தனை நாள் ல ஒரு நாள் கூட செக்கப் வரலையே" என்றார்...
மெல்லிய சிரிப்புடன் எழுந்தாள்.
"நான் வரேன் டாக்டர்" என்று அவள் கையில் இருந்த மெடிக்கல் பைலை பையில் வைத்தவள் வெளியேற போக, "புருஷன் பத்தி கேட்டா மட்டும் பதில் இல்ல" என்று வைத்தியர் சொல்லிக் கொண்டார்...
அவளோ சிரித்தபடி கதவை திறந்து வெளியே வந்தவளுக்கு அப்படியே சிரிப்பு வடிந்து போனது...
நாடியை நீவிக் கொண்டே கால் மேல் கால் போட்டபடி அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தான் வசிஷ்டன்...