ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 18

மழை 18

அன்று வீட்டுக்கு வந்ததுமே அவள் போன் அலறியது...

எடுத்தது வேறு யாருமல்ல நரேன் தான்...

போனை எடுத்துக் கொண்டே பால்கனி பக்கம் சென்றாள்.

போனை காதில் வைத்தவள், "ஹெலோ" என்க, மறுமுனையில் இருந்த நரேனோ, "இன்னைக்கு தள்ளு வண்டி கடைல பார்த்தேன்... உன் ஆள் அங்கே எல்லாம் அழைச்சு போவானா?" என்று கேட்டான்...

சிரித்தவளோ, "நான் மிரட்டி தான் கூட்டி போனேன்" என்று சொல்ல, "அதானே பார்த்தேன்... அதுவும் மீன் பக்கத்துல அவ அண்ணாவை பார்த்து வசுந்தராவுக்கு அப்படி ஒரு ஷாக்" என்றான்.

"என்ன பார்த்திட்டு தானே போன... நின்னு பேசி இருக்கலாமே" என்று கேட்க, அவனும், "இல்ல பாரு... அன்னைக்கு தான் உன் டி.பி பார்த்தேன், இன்னைக்கு தள்ளுவண்டி பக்கத்துல ஜோடியா பார்த்தேன்... சோ நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்குன்னு தோணிச்சு... இடைல நான் வந்து அத டிஸ்டெர்ப் பண்ணுற போல ஆகிட கூடாதுல" என்றான்...

"நீ வந்தாலும் அப்படி ஒண்ணும் ஆகாது... அத விடு, அண்ணி எப்படி இருக்காங்க" என்று கேட்க, "அவ சூப்பரா தான் இருக்கா... வழக்கம் போல என்னை தான் திட்டி திட்டி டார்ச்சர் பண்ணுவா..." என்று சொல்லி முடிக்க முதல் அவன் இடுப்பில் கிள்ளி விட்டாள் அருகே இருந்த வசுந்தரா...

"ஆஹ்" என்று அவன் அலற, "பக்கத்துல இருக்காங்களா?" என்று சிரித்தபடி கேட்டாள் பாரதி...

"ஹா ஹா ஆமா" என்று சொன்னவன் அவளுடன் பேசி விட்டு வைத்த பின்னரே மனம் நிறைவாக இருந்தது...

அவளை நினைத்து பயந்து பயந்து அல்லவா இருந்தான் அவன்...

இப்போது சற்று நிம்மதியாக இருந்தது...

போனை வைத்து விட்டு வசுந்தராவை பார்த்த நரேனோ, "உன் அண்ணா ரொம்ப மாற்றம் போல" என்க, அவளோ சிரித்துக் கொண்டே, "நல்லது தானே" என்றாள்.

இதே சமயம் பாரதியோ பால்கனியில் இருந்து அறைக்குள் நுழைய, லேப்டாப்பை பார்த்துக் கொண்டு இருந்த வசிஷ்டன் அவளை ஒரு தடவை கடைக்கண்ணால் பார்த்து விட்டு மீண்டும் லேப்டாப்பை பார்த்தான்...

"யார் கூட பேசுனேன்னு கேட்க மாட்டீங்களா?" என்று கேட்க, அவனோ, "நீ யார் கூட பேசுனா எனக்கென்ன? கேட்டதுமே சந்தேகப்படுறீங்களான்னு கேட்ப... இது எனக்கு தேவையா?" என்றான் கடுப்பாக...

அவளோ அவனை நமட்டு சிரிப்புடன் பார்த்தவள், "கேட்கலைன்னாலும் சொல்லுறேன்... அண்ணா எடுத்தான்... நம்மள தள்ளுவண்டி கடை கிட்ட பார்த்தானாம்" என்க, அவனிடம் பதில் இல்லை... மௌனமாக லேப்டாப்பில் வேலை செய்துக் கொண்டு இருந்தான்.

அவள் அவனை நோக்கி வர, நாற்காலியில் இருந்தபடியே கையை நீட்டி அவள் வயிற்றில் வைத்து அவளை மேலும் நகர விடாமல் தடுத்தவள், "தயவு செய்து ப்ரஷ் பண்ணிட்டு வா" என்றான்...

அவளோ, "மாட்டேன்" என்று சொல்ல, அவளை ஏறிட்டு பார்த்தவன், "எதுக்குடி என்ன படுத்துற?" என்று பற்களை கடித்துக் கொண்டே கேட்க, "ஜாலியா இருக்குல்ல" என்றாள்.

"நான் சும்மா இருக்கிறேன்னு நீ ஓவரா தான் போற... ஒரு நாளைக்கு உனக்கு சேர்த்து வச்சு செய்யுறேன்" என்றான் மிரட்டலும் கடுப்புமாக...

"ஐ அம் வெயிட்டிங்" என்று சொல்லிக் கொண்டே சட்டென குனிந்தவள், அவன் எதிர்பாராத நேரத்தில் இதழில் இதழ் பதிக்க, அவள் தோளில் கையை வைத்து தள்ளிக் கொண்டே எழுந்த வசிஷ்டனோ, "ப்ரஷ் பண்ணிட்டு வான்னு சொன்னேன் ல" என்றபடி, இதழ்களை கையால் அழுத்தமாக துடைத்தான்...

அவளோ அப்படியே அவன் கோபத்தை ரசித்தபடி நின்று இருக்க, அவளை முறைத்தவன், "வா, நானே பண்ணி விடுறேன்... இல்லன்னா எனக்கு தான் சேதாரம் அதிகம்" என்று சொல்லி அவளை இழுத்துச் சென்றான்.

அவளுக்கு அவன் செயல் சிரிப்பாக இருந்தது...

ஆனால் சிரித்தால் திட்டுவான் என்று அடக்கிக் கொண்டு நின்றாள்.

அவளது ப்ரஷை எடுத்து பேஸ்டை பூசியவன், அவள் தாடையை ஒற்றைக் கையால் பிடித்து அவளது பற்களை விலக்க ஆரம்பித்து விட்டான்...

அவளுக்கோ அடக்க முடியாத சிரிப்பு...

ஒரு முத்தம் அவனை எப்படி எல்லாம் மாற்றி விட்டது என்று நினைக்க நினைக்க சிரிப்பாக இருந்தது...

ஒரு கட்டத்தில் வாயை திறந்தபடியே சிரித்து விட்டாள். சிரித்ததில் வாய்க்குள் இருந்த பேஸ்ட் அவன் முகத்தில் தெறிக்க, "ஏய்" என்று உறுமல் அவனிடம் இருந்து...

வாய்க்குள் இருந்ததை அவசரமாக சிங்கினுள் துப்பியவள், "சாரி சாரி சாரி" என்றபடி அவனிடம் இருந்த ப்ரஷை வாங்கிக் கொண்டே, கையால் அவன் கன்னத்தில் இருந்த பேஸ்ட்டை துடைத்தாள்.

அவளை முறைத்துக் கொண்டே தண்ணியால் முகத்தை அடித்து கழுவியவன், வெளியேறி விட, அவளோ, "உங்கள யாரு ப்ரஷ் பண்ணி விட சொன்னது" என்று கேட்டுக் கொண்டே வாயை கழுவினாள்.

"நீ பண்ணி இருந்தா நான் எதுக்கு பண்ணி விட போறேன்" என்று கடுப்பாக கேட்டு விட்டு வெளியேறி விட்டான் வசிஷ்டன்.

வாயை கழுவி விட்டு வெளியே வந்தவளோ அவனை மேலும் தொந்தரவு செய்ய விரும்பாமல் தூங்கி விட்டாள்.

இப்படியே அவளது சீண்டலும், அவன் மௌனமுமாக நாட்கள் நகர்ந்தன...

அவனுக்கு தான் கோபத்தை அடக்கி அடக்கி அது பழகியே போய் விட்டது...

அடுத்த நாள் காலையில் அவனுக்கு முக்கியமான கான்பெரென்ஸ் ஒன்று இருந்தது... அவளுக்கோ அடுத்த நாள் விடுமுறை தினம்...

குளித்து விட்டு வந்தவள் வழமை போல போனுடன் சோபாவினுள் அமர்ந்து விட்டாள்.

அவனோ லேப்டாப்பில் மும்முரமாக ப்ரேசெண்டேஷனுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்...

"அது தான் நாளைக்கு லீவ்ல" என்றாள் அவள்...

"உனக்கு தான் லீவு... எனக்கு ரிசெர்ச் சம்பந்தமா ஒரு கான்பெரென்ஸ் இருக்கு" என்றான்...

"எப்போ பார்த்தாலும் ரிசர்ச் ரிசர்ச் தான்" என்று அவள் முணுமுணுத்தவள் ஹெட் செட்டில் பாட்டு கேட்டுக் கொண்டே அப்படியே சோபாவிலேயே தூங்கி விட்டாள்.

லேப்டாப்பிலேயே இருந்தவன் கண்கள் அடிக்கடி அவளில் படிந்து மீண்டது...

முதல் தடவை அவளை தீண்டிய பின்னர் அவளை மீண்டும் தீண்டவே இல்லை அவன்...

அதிகபட்சமாக கிடைக்கும் முத்தம் தவிர, எதுவும் அவனுக்கு கிடைப்பதும் இல்லை...

உணர்வுகளை அடக்கி அடக்கியே களைத்து விட்டான்...

ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே மீண்டும் லேப்டாப்பில் கண்களை செலுத்தினான்...

மனமோ தறி கெட்டு ஓட ஆரம்பித்தது...

மணி ரெண்டை தாண்டியும் அவனால் வேலையை முடிக்க முடியவில்லை...

மனம் நிதானமாக இருந்தால் தானே வேலையில் கவனம் செலுத்த முடியும்...

அவன் கவனம் தானே சிதறிக் கொண்டு இருந்தது...

அடுத்த நாள் காலையில் ஏழு மணிக்கெல்லாம் கான்பெரன்ஸ் போக வேண்டும்...

தட்டு தடுமாறி வேலையை அவன் முடிக்கவே நேரம் மூன்றை கடந்து இருந்தது.

செய்த ப்ரேசெண்டேஷனை பென்ட்ரைவில் போட்டவன், லேப்டாப்பை மூடி வைத்தபடி எழுந்துக் கொண்டான்...

பாரதியோ சோஃபாவில் தூங்கிக் கொண்டு இருக்க, அவளை அப்படியே விட்டு படுக்கவும் அவனுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை...

'அவளே எந்திரிச்சு வந்து படுத்தான்னு சொல்லுவோம்' என்று நினைத்துக் கொண்டே அவள் அருகேச் செல்ல, அவன் கண்களை அவனால் கட்டுப்படுத்த முடியவே இல்லை...

"இவ்ளோ நாள் நல்லா தானே இருந்தேன், வர வர இப்படி ஆயிட்டேன்... ச்ச" என்று தனக்கு தானே திட்டிக் கொண்டே, அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்...

அவளோ தூக்க கலக்கத்தில் முனக, சற்று தூக்கி வாரிப் போட்டாலும் ஓரளவு சுதாரித்துக் கொண்டே அவளை கட்டிலில் படுக்க வைத்தான்...

அவள் அணிந்து இருந்த ஷேர்ட்டின் பட்டன்கள் வேறு திறந்து அவனுக்கு "என் அழகை பார்" என்று காட்சியளிக்க, எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டான்...

உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டே படுத்தான்... ஒரு கட்டத்துக்கு மேல் முடியவே இல்லை... அவள் பக்கம் திரும்பி அவளை இழுத்து அணைத்தவன், இதழில் இதழை பொருத்திக் கொண்டான்...

தூக்கத்தில் இருந்தவள் மெல்லிய முனகலுடன் விழித்து பார்த்தாள். அவள் மேனியும் அவள் இதழ்களும் அவனுக்கு இரையாகி கொண்டு இருந்தது...

அவளும் தடுக்கவில்லை...

அனுமதித்து விட்டாள்...

அவளை கொள்ளையிட்டு விட்டு தூங்கியவன் காலை ஒன்பது மணியை தாண்டியும் தூக்கத்தில் இருந்து எழவில்லை...

முதல் நாள் தொந்தரவாக இருக்கின்றது என்று சைலென்டில் போட்ட போன் அடித்து அடித்து ஓய்ந்து போய் இருந்தது...

கான்பெரன்ஸை ஏற்பாடு செய்தவர்கள் முதல் அனைவரும் போன் எடுத்தே ஓய்ந்து போய் விட்டார்கள்...

அவன் எப்போதுமே நேரம் தவறுவது இல்லை...

யாரையும் காக்க வைப்பதும் இல்லை...

கவலையீனத்தினால் தவறு நடந்தேறி விட்டது... அவன் எலார்ம் வைத்து இருந்தால் கூட இதனை தவிர்த்து இருக்கலாம்...

அவன் கண் விழித்த போது பாரதி அவன் மார்பில் தூங்கிக் கொண்டு இருந்தாள்.

இன்னுமே தூக்கம் போகவில்லை என்று தோன்றியது... ஒற்றைக் கையால் கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவனுக்கு சூரிய வெளிச்சம் அறைக்குள் பரவி இருந்தது தவறாக பட்டது... சட்டென்று திரும்பி பார்க்க மணி ஒன்பதை கடிகாரம் காட்ட, அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது...

"ஷீட்" என்று திட்டிக் கொண்டே கட்டிலில் இருந்து பாய்ந்து எழுந்தவன், வேகமாக மேசையில் இருந்த போனை எடுக்க, அதில் எண்ணில் அடங்காத அழைப்புகள்...

"ச்ச" என்று நெற்றியை நீவிக் கொண்டே அவன் மீண்டும் அழைத்தான்...

கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர் போனை எடுத்ததுமே, "ரியலி சாரி மிஸ்டர் மோகன்" என்று ஆரம்பிக்க, "ரொம்ப டிஸ்அப்பாய்ண்ட் பண்ணிட்டீங்க சார், டாக்டர் வசிஷ்டன் போல நேர்த்தியா யாரும் இல்லன்னு ஸ்டுடென்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்கோம்... பட்" என்று அவரது ஏக்க பெருமூச்சு அவனுக்கு சங்கடத்தை கொடுத்தது...

என்ன பதில் சொல்ல முடியும் அவனால்?

"இட்ஸ் மை மிஸ்டேக் ஐ அட்மிட் இட், இனி இது போல நடக்காது" என்றான்...

இதுவரை இப்படி அவன் யாரிடமும் மன்னிப்பு கேட்டதே இல்லை...

மன்னிப்பு கேட்கும் அளவுக்கும் அவன் நடந்துக் கொண்டதும் இல்லை...

இன்று இப்படி ஒரு நிலைக்கு வந்து விட்டதை நினைத்து, தன் மேல் கோபமாக இருந்தது..

"ஓகே சார், பார்க்கலாம்" என்று சலிப்பாக சொல்லி விட்டு மோகனும் வைத்து விட்டான்.

வசிஷ்டனுக்கோ நடந்ததை நினைக்க நினைக்க அவமானமாக இருந்தது...

ஏதும் முக்கிய காரணத்துக்காக நேரம் தவறி இருந்தால் கூட பரவாயில்லை...

ஒரு பெண்ணுடலுக்கு ஆசைப்பட்டு நேரம் தவறி விட்ட கோபம் தன் மீதே தோன்ற, "ஷீட்" என்று திட்டியபடி போனை தூக்கி கட்டிலில் எறிந்தான்.

இரு கைகளாலும் தலையை கோதிக் கொண்டான்...

சத்தம் கேட்டு விழித்த பாரதியோ, அவனை புருவம் சுருக்கி பார்த்து விட்டு நேரத்தைப் பார்த்தாள்.

ஒன்பது மணியை கடந்து இருந்தது...

'இன்னைக்கு கான்பெரன்ஸ்னு சொன்னாரே' என்று யோசித்துக் கொண்டே, "கான்பெரன்ஸ்க்கு போகலையா நீங்க?" என்று கேட்டு முடிக்க முதலே, "ஷட் அப்" என்று சீறல் வந்தது.

அதிர்ந்தே விட்டாள்...

"என்னாச்சு?" என்று மறுபடி கேட்டாள்.

"இன்னும் என்ன ஆகணும்? எல்லாம் உன்னால தான்" என்றான்...

தனது மோக உணர்வுகளால் இப்படி ஆகி விட்டது என்ற விடயத்தை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை...

பழியை தூக்கி அவள் மேல் போட்டான்.

"நான் இப்போ என்ன பண்ணுனேன்?" என்று இயலாமையுடன் கேட்க, "என்ன பண்ணல? உன்னை கல்யாணம் பண்ணிக்க முதல் நிம்மதியா தான் இருந்தேன்... இப்போ நிம்மதியே போச்சு... உன்னை யாரு திரும்பி வர சொன்னா? அப்படியே போய் இருக்க வேண்டியது தானே" என்று ஆத்திரத்தின் உச்சத்தில் கோபத்தை அவள் மீது கொட்டினான்.

அதிர்ந்து விட்டாள்.

"வந்ததுமே அப்போ துரத்தி இருக்க வேண்டியது தானே... எதுக்கு கிஸ் பண்ணுனீங்க?" என்று கேட்டு விட, அவனிடம் பதில் இல்லை...

"எதுவும் கிடைக்கலன்னு தானே விட்டு போன, அதுக்காக தான்" என்றான் சம்பந்தம் இல்லாமலே...

"ஓகே நான் விட்டு போக அதுவே காரணமா இருக்கட்டும்... ஆனா நீங்க கிஸ் பண்ணி இருக்கீங்கன்னா கூட வச்சு இருக்க தானே ஆசைப்பட்டு இருக்கீங்கன்னு அர்த்தம்" என்று அவன் பலவீனத்தை வெளிப்படையாக பேசி விட, அவனால் அதனை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை...

"நான் ஒண்ணும் ஆசைப்பட்டு உன்னை கூட வச்சுக்க நினைக்கல... வசுந்தரா வாழ்க்கைக்காக தான்" என்றான்...

அவளுக்கு கண்கள் சட்டென்று கலங்கி விட்டது...

ஆனால் அழவில்லை...

"ஓஹோ, அப்போ எதுக்கு சார் நேற்று தூங்கிக் கொண்டு இருந்த என்னை" என்று ஆரம்பித்தவளுக்கு மீதியை கேட்க வரவில்லை...

ஆனால் அவன் புரிந்துக் கொண்டான்...

"அப்படி நான் பண்ணனும்னு தானே பட்டனை திறந்துட்டு படுத்த... அதனால தான் இன்னைக்கு டைமுக்கு என்னால போக முடியல... எல்லாத்துக்கும் நீ தான் டி காரணம்" என்றான் ஆக்ரோஷமாக...

நான் மயங்கியது தவறல்ல, நீ மயக்கியது தான் தவறு என்ற தோரணையில் பேச, அவளுக்கோ பொறுமை போய் விட்டது...

உடையை அணிந்துக் கொண்டே வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தவள் அவனை நோக்கி வந்து, "நான் அங்கே தூங்கிட்டு இருந்தேன்." என்று சோஃபாவை காட்டியவள், "கட்டில்ல கொண்டு வந்து படுக்க வச்சது நீங்க தானே, உங்கள படுக்க வைக்க சொல்லி நான் கேட்டேனா?" என்று கேட்டாள்.

பதில் இல்லை அவனிடம்...

ஆனால் தவறை ஏற்றுக் கொள்ளும் மனநிலையும் அவனிடம் இருக்கவில்லை...

"பாவம்னு பண்ணுனா இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ" என்று எகிறினான்.

அவளோ, "பாவமா? அப்போ படுக்க வச்சதோட போயிருக்க வேண்டியது தானே... மேல யாரு பாய சொன்னா? பாவம்னு விட்டா எவ்ளோ பேச்சு வாங்க வேண்டி இருக்கு" என்று கடுப்பாக கேட்க, "ஒஹ் நீ எனக்கு பாவம் பார்த்தியா? பிடிக்கலைன்னா தள்ளி விட்டு இருக்க வேண்டியது தானே" என்று திட்டினான்.

எங்கோ ஆரம்பித்து எங்கோ திசை மாறிச் சென்று கொண்டு இருந்தது அவர்கள் வாக்குவாதம்...

"நான் பிடிக்கலன்னு எங்க சொன்னேன்? எனக்கு பிடிச்சு தான் இருந்திச்சு... ஆனா உங்களுக்கு பிடிச்சுதா இல்லையான்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்" என்றாள்.

"எனக்கு பிடிக்கல" என்றான் வெடுக்கென்று...

"பொய் சொல்றது தான் சொல்றீங்க... நம்புற போல சொல்ல வேண்டியது தானே... பிடிக்காம தான் எல்லாம் பண்ணுனீங்களா?" என்று கேட்க, அவனோ நிதானத்தை இழந்தே விட்டான்...

அவனுக்கு யாரும் எதிர்த்து பேசினாலே பிடிக்காது...

ஆனால் பாரதியோ அவன் மறைக்கும் உண்மைகளை எல்லாம் சாட்டையால் விலாச, பொறுமை எங்கோ போய் விட்டது...

"ப்ராஸ்டிடியூட் கிட்ட போறவன்லாம் பிடிச்சாடி போறான்? பெருசா பேச வந்துட்டா" என்று வார்த்தைகளை விட்டு விட்டான்...

பாரதூரமான வார்த்தைகள்...

அப்படியே விக்கித்து நின்று விட்டாள் பெண்ணவள்...

மாறி பேச வார்த்தைகள் வர மறுத்தன...

கருத்துக்கு எதிர் கருத்தை முன் வைக்க முடியாத ஆண்கள் கையாளும் அதே யுக்தி...

பெண்ணின் நடத்தையை இழிவாக விமர்சிப்பது...

சட்டென கண்கள் கலங்கி விட்டன அவளுக்கு...

அழக் கூடாது என்று இறுக்கமாக நின்றாள்.

அவள் அதிர்ச்சியை பார்த்த பின்னர் தான் அவனுக்கு பேசிய வார்த்தைகளின் வீரியம் புரிந்தது...

சட்டென்று நிதானித்துக் கொண்டவனோ நெற்றியை நீவிக் கொண்டே, "பாரதி, நான்" என்று ஆரம்பிக்க, ஒற்றைக் கையால் பேச வேண்டாம் என்று தடுத்தவள், ஒரு வார்த்தை மேலே பேசவில்லை...

அவன் செய்த அனைத்தையும் தாங்கிக் கொண்டாள்... ஆனால் இந்த வார்த்தைகளை தாங்க முடியவில்லை...


அவனை முறைத்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தவள் கதவை அடித்து சாத்தி இருந்தாள்..
 
மழையாக நீ..! மழலையாக நான்..!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 18)


ப்ரபொஸருக்கு கொஞ்சம் கூட கன்ட்ரோல் என்கிறதே இல்லை.
அது பேச்சுலேயும் சரி, செயல்லயும் சரி. எல்லாத்தையும் இவன் பண்ணிட்டு அவ மேல அநாவசியமா பழி போடறதோட
வாயையும் விட்டுட்டான். அது என்ன எப்பப் பார்த்தாலும் பொம்பிளைங்களை ப்ராஸிட்டியூட் கூடத்தான் கம்ப்பேர் பண்ணி பேசணுமா..?
வாய்க் கொழுப்பு ரொம்பவே அதிகமாயிடுச்சு வசிக்கு.
இதே வார்த்தையை வசுந்தரா கிட்ட நரேன் யூஸ் பண்ணியிருந்தா சும்மா இருப்பானா....? இல்லை சும்மாத்தான் விடுவானா...?
ப்ரபொஸருக்கு யாராயிருந்தாலும் நா காக்க என்கிறது மறந்து போச்சு போலயிருக்கு. ஒரு காலேஜ் ப்ரபொஸர் வாயில இருந்து வர வேண்டிய வார்த்தையா இது ?
கட்டுப்பாடு, கட்டுப்பாடுன்னு சொல்லி சொல்லியே இவருக்கு எதுலயும் கட்டுப்பாடு இல்லாம போயிடுச்சே.


😀😀😀
CRVS (or) CRVS 2797
Varthaiya vittutta
 
Top