மழை 16
அப்படியே இருந்துக் கொண்டே அருகே கிடந்த உடைகளை தேடி எடுத்தாள்... சுடிதார் கிழிந்து இருந்தது...
"இத வேற கிழிச்சு வச்சு இருக்கார்" என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே எழுந்தவளோ உடைப்பெட்டியை திறந்து உடைகளை எடுத்தாள்.
அவனும் அவளை பார்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தான்...
அவள் அவனை பார்க்கவில்லை...
பார்க்க பிடிக்கவே இல்லை...
அவசர அவசரமாக உடைகளை அணிபவளை புருவம் சுருக்கி பார்த்தவனோ, "எங்க போக போற?" என்று கேட்டான்...
போனை எடுத்துக் கொண்டே, "வீட்டுக்கு" என்றாள்.
இப்போதும் அவனை பார்க்கவில்லை...
"வாட்?" என்று அதிர்ந்தே விட்டான்...
சட்டென்று எழுந்து அவள் அருகே வந்தவன், அவளிடம் இருந்து போனை கண நேரத்தில் பறிக்க, "போனை கொடுங்க" என்று அவனை பார்த்து சீறினாள்.
அவளோ போனை பறிக்க வர, தலைக்கு மேலே உயர்த்தி பிடித்தவன், "எதுக்கு போக போற?" என்று கேட்டான்...
"எதுக்கா? நீங்க நாக்குல நரம்பே இல்லாம பேசுவீங்க... இதெல்லாம் கேட்டுட்டு இங்க இருக்கணுமா?" என்று கேட்டாள்.
"நான் ஒண்ணும் தப்பா சொல்லலையே" என்றான்...
இப்போதும் அதே திமிர் அவன் பேச்சில்...
"தப்பா சொல்லலையா? நான் என்ன இதுக்குன்னு அலைஞ்ச போலவா இருக்கு?" என்று கேட்க, அவனோ, "கண்டிப்பா" என்றான்...
"வாட்?" என்று அதிரும் முறை அவளுடையது ஆனது...
"பெர்ஸ்ட் நைட் ல இருந்து பார்த்துட்டே இருக்கேன்... ஒரு கிஸ் சீனை கூட அப்படி வெறிச்சு வெறிச்சு பார்க்கிற" என்று சொல்ல, அவளுக்கோ கோபம்...
அவனை முறைத்து பார்த்தவள், "ஆமா எதிர்பார்த்தேன் தான்... ஆனா அது மட்டும் எதிர்பார்க்கல போதுமா? லவ்வை எதிர்பார்த்தேன்... அன்பா நாலு வார்த்தை பேசுவீங்கன்னு எதிர்பார்த்தேன்... என்னை கொடுக்கு போல கொட்ட கூடாதுன்னு எதிர்பார்த்தேன்" என்றவளுக்கு கண்ணீர் வழிய கண்களை துடைத்துக் கொண்டாள்.
"இப்போ கூட நான் கோபப்படலையே" என்றான்...
"உங்க முகம் நிதானமா தான் இருக்கு... ஆனா வார்த்தை எல்லாம் அப்படி இல்லையே" என்றாள்.
"சோ மறுபடி போகணும்னு முடிவு பண்ணிட்டே ரைட்" என்று சொல்ல, "ஆமா, போக தான் போறேன்" என்றாள்.
"அதுக்கப்புறம் ரொம்ப கஷ்டப்படுவ" என்றான்...
அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள், "ஒரு தடவை விட்டு போனதுக்கு தானே சேர்த்து வச்சு இன்னைக்கு பேசிட்டீங்க... இதுக்கு மேல என்ன பேசிட முடியும்?" என்றாள்.
இப்போது அவனுக்கு பொறுமை பறந்து போக, "ஹேய், உண்மையை தானேடி சொன்னேன்... ரொம்ப பில்ட் அப் பண்ணாதே, லவ் மண்ணாங்கட்டின்னு பேசிட்டு இருக்காதே... உனக்கு தேவை இந்த பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் தானே" என்றான்...
அவளுக்கோ ஆத்திரம் தலைக்கு மேல் வந்தது...
"நான் பில்ட் அப் பண்ணுறேனா? அப்போ இந்த லவ் என்கிற விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரியாதா?" என்று கேட்டாள்.
"அதெல்லாம் உன் அண்ணனை போல முட்டாளுங்க பேசுற விஷயம்... வேலை வெட்டி இல்லாம அதெல்லாம் பேச எனக்கு தெரியாது, நீ இதுக்கு தான் அலையுற" என்றான் அழுத்தமாக...
"மனுஷனா நீங்க?" என்றாள்.
"பார்க்க எப்படி தெரியுது?" என்று கேட்டான்...
"மிருகம் போல தான் தெரியுது... காய்ஞ்ச மாடு கம்புல பாயுற போல பாஞ்சுட்டு, நான் அலையுறேனா?" என்று கேட்டாள் அவனை உறுத்து விழித்து...
"அப்படியே நீ என்னை தள்ளி விட்ட பாரு... கூட தானே இருந்த... எனக்கொன்னும் இதெல்லாம் அவசியம் இல்லை... உனக்காக தான்" என்றான்...
"எனக்காக வா?" என்று சொல்லிக் கொண்டே கிழிந்த சுடிதாரை தூக்கி காட்டியவள், "இத கிழிக்கிற அளவுக்கு இருக்கீங்க... ஆனா உங்களுக்கு என்கிட்ட எதுவும் தேவைப்படலன்னு சொல்றீங்க... இத நான் நம்பணுமா?" என்று கேட்டாள்.
"சுடிதார் மெடீரியல் சரி இல்ல" என்றான்...
அவன் தலையை பிடித்து சுவரில் அடித்தால் என்ன என்று அவளுக்கு தோன்றியது...
வெறுத்து விட்டது அவளுக்கு...
"இதுக்கு மேல உங்க கூட பேசவே முடியாது... உங்களுக்கு முழுக்க முழுக்க ஈகோ... எந்த தப்பையும் அக்செப்ட் பண்ணி பழக்கமே இல்லை... ரோபோடிக் எஞ்சினியர் இல்ல நீங்க... உண்மையாவே ரோபோ தான்... எனக்கு இந்த பேச்சு எல்லாம் கேட்டுட்டு இங்க இருக்கவும் முடியாது... நான் கிளம்புறேன்" என்றாள் இறுதியாக...
அவனோ, "நான் ஒண்ணுமே தப்பா பேசல... சரியா தான் பேசி இருக்கேன்" என்றான்...
அவளுக்கு இருந்த கொஞ்சமான பொறுமையும் பறந்து போனது...
"தப்பா பேசலையா? ஓகே பைன், நடந்த எல்லாத்தையும் எல்லார் கிட்டயும் சொல்லி நியாயம் கேப்போம்" என்றாள்.
"வாட்?" என்று அவனிடம் மீண்டும் அதிர்ச்சி...
ஏற்கனவே சிகரெட் சூடு வைத்ததை ஊரெல்லாம் சொல்லி இருக்கின்றாள் என்கின்ற கோபம் வேறு இருந்தது...
அவனது மரியாதையை குறைத்து விட்டாள் அல்லவா?
இதையும் சொன்னால் அவன் கட்டி காத்துக் கொண்டு இருக்கும் கொஞ்ச மரியாதையும் சென்று விடும் என்று அவனுக்கே தெரியும்...
ஆனால் அதற்காக எல்லாம் தனது பிழையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவனுக்கு இல்லை...
"ஆமா வீட்ல பிரெண்ட்ஸ் கிட்டன்னு எல்லார் கிட்டயும் சொல்லி நியாயம் கேப்போம்... என் சுடிதாரை கிழிச்சு வச்சு இருக்கீங்க... குரங்கு போல என் கழுத்துல எல்லாம் கடிச்சு வச்சு இருக்கீங்க..." என்று சொல்லிக் கொண்டே கண்ணாடியில் தனது கழுத்தை ஆராய அவனும் அவள் கழுத்தை தான் பார்த்து இருந்தான்...
அவனை நோக்கி திரும்பியவள், "நியாயம் கேட்போமா?" என்று கேட்க, "லூசா நீ? அது நம்ம பிரைவசி... அத ஊரெல்லாம் சொல்ல போறியா?" என்று கேட்க, அவளோ, "ஆமா சொல்லுவேன்... நியாயம் வேணும்னா சொல்றது ஒண்ணும் தப்பில்ல" என்றாள்.
"உளராதே பாரதி" என்றான் கடுப்பாக...
அவளோ, "உங்க கூட பேசிட்டு இருக்க முடியாது... போனை கொடுங்க, நான் அண்ணாவுக்கு கால் பண்ணிட்டு கிளம்புறேன்" என்று சொன்னாள்.
"இதுக்கப்புறமும் போக போறியா?" என்று கேட்டான்...
"ஓஹ் இப்படி எல்லாம் பண்ணினா போக மாட்டேன்னு நினைப்பா?" என்றாள் எரிச்சலாக...
அவனோ நெற்றியை நீவிக் கொண்டான்...
அவனுடைய பலவீனம், அவனது ஈகோ, அவனது ப்ரெஸிடீஜ் மற்றும் தோல்வியின் மீதான பயம்...
இப்போது அவள் போய் விட்டாள் என்றால் அவனது ப்ரெஸிடீஜும் போய் விடும்...
வாழ்க்கையில் தோற்றும் விடுவான்...
இதனை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் ஈகோவை அவன் விட்டுக் கொடுக்க வேண்டும்...
இரு கைகளாலும் கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டவன், முதல் முறை தான் பேசியதை நினைத்து தன்னை தானே கடிந்துக் கொண்டான்...
ஆனால் அது தவறு என்று அவனால் அவளிடம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...
"எதுவா இருந்தாலும் நாமளே பேசி தீர்த்துக்கலாம்" என்றான்...
"அது தான் எல்லாமே பேசிட்டீங்களே" என்று எகிறியவளை நோக்கி இரு கைகளையும் விரித்தவன், "தெரியாம பேசிட்டேன்டி, போதுமா?" என்று கேட்டான்...
இறங்கி விட்டான், முதல் முறை தனது இடத்தில் இருந்து இறங்கி விட்டான்.
அவளுக்கோ அவன் செயல் ஆச்சரியமாக தான் இருந்தது...
ஆராய்ச்சியாக பார்த்தாள்...
அவன் இப்படி இறங்கி பேசுபவனும் அல்ல, தடுமாறுபவனும் அல்ல, அனைத்தையும் செய்து விட்டு, நான் அப்படி தான் என்று திமிராக இருப்பவன்...
'இந்த எலி ஏன் அம்மணமா ஓடுது?' என்று யோசித்தாள், வசுந்தரா சொன்னது நினைவுக்கு வந்தது...
வசிஷ்டனின் பலவீனங்களை யோசித்தவன், 'ஓஹோ கதை இப்படி போகுதா?' என்று யோசித்துக் கொண்டவளோ, "நான் வீட்டுக்கு போக கூடாதுன்னா எனக்கும் கண்டிஷன் இருக்கு" என்றாள்.
"கண்டிஷனா?" என்று அவன் அதிர, அவளோ, "ம்ம், கண்டிஷன் தான்... அதுக்கெல்லாம் ஓகே சொன்னா இங்க இருப்பேன்... இல்லன்னா வீட்டுக்கு போய் இந்த பிரச்சனையை பஞ்சாயத்து பண்ணுவேன்... முக்கியமா காலேஜ் ல என் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் சொல்லுவேன்" என்று சொன்னதுமே அவளை முறைத்துப் பார்த்தவன், "உனக்குன்னு ஒரு பிரைவசி இல்லையா?" என்று கேட்டான்.
"இல்ல" என்றாள் வெடுக்கென்று...
"ஷப்பா" என்று தலையை கோதிக் கொண்டே கட்டிலில் அமர்ந்தவனோ, அவளை ஏறிட்டு பார்த்தான்...
"கண்டிஷன் சொல்லவா?" என்று கேட்க, அவனோ, கையை அசைத்து சொல்லும் படி சொன்னான் சலிப்பாக...
"பெர்ஸ்ட் கண்டிஷன், நான் என் விருப்பம் போல தான் இருப்பேன்... உங்க சேர்க்கில் உள்ளே நான் வர மாட்டேன்... என் வீட்ல எப்படி இருந்தேனோ அப்படி இருப்பேன்" என்று சொன்னாள்.
மௌனமாக இருந்தான் எதுவும் பேசவில்லை...
"அஞ்சு மணிக்கு எல்லாம் எந்திரிக்க முடியாது... எட்டு மணி வரைக்கும் படுக்காம அவெரேஜ் ஆஹ் ஆறரைக்கு எந்திரிப்பேன்" என்றாள்.
"ம்ம், ரொம்ப தான்" என்றான்...
அவளோ, வலுக்கட்டாயமாக சிரித்தபடி, "இன்னும் இருக்கு" என்றாள்.
"சொல்லுடி" என்றான் எரிச்சலாக.
"உங்க கைல இருக்கிறது என் அண்ணா வாங்கி தந்த போன்... நான் அதுல பாட்டு கேட்பேன், நீங்க படிக்கும் போதெல்லாம் ஹெட் செட்ல போட்டு கேப்பேன்... ஏன்னா எனக்கு மனசாட்சி இருக்கு... உங்கள போல கல்லு மனசு இல்ல" என்றாள்.
"இப்போ என்னை பத்தி கமெண்ட் சொல்ல சொல்லி கேட்டேனா?" என்றான்...
"உண்மையை உரக்க சொல்லணும்ல" என்றாள்.
சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டிக் கொண்டான்.
"நீங்க வெட்டியா இருக்கும் போது சத்தமா போட்டு கேப்பேன்... பாட்டு பிடிக்கலைன்னா காதுல பஞ்சு வச்சுக்கோங்க" என்றாள்.
ஒரு முறைப்பை மட்டும் பதிலாக கொடுத்தான்...
"டெய்லி எனக்கு பிடிச்ச கொரியன் சீரீஸ் பார்ப்பேன்... எப்படியும் உங்களுக்கு டிஸ்டெர்பன்ஸ் இல்லாம தான் பார்ப்பேன், அதுலயும் தலையிட கூடாது... கிஸ் சீன் கூட வெறிக்க வெறிக்க பார்ப்பேன்... அது என் இஷ்டம்" என்றாள். அவனோ நாடியை நீவிக் கொண்டே அவள் இதழ்களை பார்த்தான்...
அவன் பார்வையை கண்டு கொண்டவளோ, "ஹெலோ, அங்கே என்ன பார்வை?" என்று கேட்க, அவனோ, "எங்க?" என்றான் பார்வையை இடம் மாற்றிக் கொண்டே...
"இப்போ என் லிப்ஸ் ஐ வெறிச்சு வெறிச்சு பார்த்ததை நானும் பார்த்தேன்..." என்றாள்.
"நான் பார்க்கலடி" என்றான் எரிச்சலாக...
"ஆஹ் நம்பிட்டேன்... இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க, அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை... பக்கத்துல வந்தா வீட்டை விட்டு போய்டுவேன்... நான் தானே அலையுற கேஸுன்னு சொன்னீங்க... சோ எனக்கு எப்போ தோணுதோ அப்போ பக்கத்தில நானே வருவேன்... நீங்க ரொம்ப கண்ணியமானவர் ஆச்சே... அதனால உங்க இஷ்டப்படி இதுக்கெல்லாம் இடமே இல்லை... என் இஷ்டம் தான் இங்க... புரியுதா?" என்று கேட்டாள்.
ஒற்றைக் கையால் கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டே அவளை பார்த்தவன், எந்த உணர்வுகளையும் காட்டவில்லை...
"ஏதும் கேட்கணுமா?" என்று கேட்டாள்.
"ஆஹ் நீ பக்கத்துல வரும் போது எனக்கு மூட் இல்லன்னா என்ன பண்ணுறது?" என்று கேட்டான்.
"தட்ஸ் ஓகே... போர்ஸ் எல்லாம் பண்ண மாட்டேன்... நான் என்ன வசிஷ்டனா காஞ்ச மாடு போல பாயுறதுக்கு?" என்று கேட்க, அவளை முறைத்தவன், "என்னடி பேர் சொல்றியா?" என்று கேட்டான்...
"ஹெலோ சார், அது தானே உங்க பேர்...'' என்றாள்.
பதில் சொல்ல முடியவில்லை...
"எல்லாம் என் நேரம்" என்று புலம்ப மட்டும் தான் முடிந்தது அவனுக்கு...
அவளோ அவன் அருகே வந்து கையை நீட்டியவள், "போனை கொடுங்க" என்றாள்.
அவள் போனை நீட்டியவன், "இன்னும் ஏதும் இருக்கா?" என்று கேட்டான்...
அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவள், "நான் இப்படி தான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்... நீங்க எனக்காக உங்கள மாத்திக்கணும்னு இல்லை... அப்படி நான் மாத்த யோசிச்சா உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம்னு ஒண்ணு இல்லாம போய்டும்... உங்கள போல கோடு போட்டு வாழுறது ரொம்ப கஷ்டம்... அதுக்காகவே எனக்கு உங்கள பிடிச்சு இருக்கு... உங்கள ரசிக்க முடியும்... ஆனா என்னால உங்கள போல வாழ முடியாது, என்னோட ரெக்கையை வெட்ட நினைக்காதீங்க... என்னோட உயிர்ப்பே போய்டும்" என்றவளது கண்கள் கலங்கி போக, அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் எந்த பதிலும் சொல்லவே இல்லை...
ஆழ்ந்த மூச்சை எடுத்தவள் டவலை எடுத்துக் கொண்டே குளிக்கச் சென்றாள்.
அவள் முதுகை வெறித்துப் பார்த்தவனும் ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டான்... அவள் இப்படி அவனை வலைக்குள் சிக்க வைப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை... வெளியே வர முடியாமல் அகப்பட்டுக் கொண்டான்.
இப்போது அவள் மிரட்டலுக்கு அவன் அடங்கி இருந்தான் தவிர திருந்தி விடவில்லை...
இன்னுமே அவன் திமிர் பிடித்த வசிஷ்டன் தான்.