ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 12

மழை 12

இப்படியே நாட்கள் நகர்ந்து இருக்கும்... எண்ட் செமெஸ்டருக்கான ஸ்டடி லீவில் வீட்டில் நின்று இருந்தாள் பாரதி...

வசிஷ்டன் மட்டும் அடிக்கடி வெளியேச் சென்று வந்துக் கொண்டு இருந்தான்...

சந்தேகம் இருந்தால் வசிஷ்டனிடம் கேட்டுக் கொள்வாள் அல்லது லேப்டாப்பை திறந்து கூகிளில் பார்த்துக் கொள்வாள்...

படித்து படித்து களைத்து விட்டவளுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது...

கொரியன் ட்ராமா பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது...

ஆனால் பார்க்க வசிஷ்டன் விட்டால் தானே...

வசிஷ்டன் தூங்கிய பிறகும் சில நேரங்களில் உட்கார்ந்து படிப்பவள் தான் பாரதி...

இப்படியான ஒரு நாளில்,

'கொரியன் ட்ராமா பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு... இன்னைக்கு பார்த்திடுவோம்... ஹிட்லர் தான் தூங்கிடுச்சே' என்று நினைத்துக் கொண்டே லேப்டாப்பையும் ஹெட் செட்டையும் எடுத்தவள் அங்கிருந்த மேசையில் படிக்கும் தோரணையுடன் லேப்டாப்பின் முன்னே அமர்ந்தாள்...

கொரியன் டிராமாவை போட்டவள் அதிலேயே மூழ்கி போனாள்...

தன்னை நாயகியாக கற்பனை செய்துக் கொண்டு அவள் அழும் போது அழுதாள்... அவள் சிரிக்கும் போது சிரித்தாள்... சத்தம் வராமல் தான் எல்லாம் பண்ணினாள்.

பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு அந்த இருட்டில் வசிஷ்டன் எழுந்ததும் தெரியவில்லை. நடந்து வந்து மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டே அவள் பின்னால் நின்றதும் தெரியவில்லை... அவளோ படத்தில் மூழ்கி இருக்க அந்நேரம் பார்த்து முத்த காட்சி போனது...

அவளோ இதழ்களை ஈரமாக்கிக் கொண்டாள்...

'என்னம்மா கிஸ் அடிக்கிறான் ??' என்று அவள் மனதுக்குள் மெச்சிய கணம் அவள் தோளில் பேனையால் தட்டினான் வசிஷ்டன்...

கையால் பேனையை தட்டி விட்டவள் மனமோ, 'இந்த நேரத்துல என்ன டிஸ்டெர்பன்ஸ்?' என்று நினைக்க மீண்டும் தட்டினான்...

சட்டென திரும்பி பார்த்தவளுக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது...

வசிஷ்டனோ எட்டி லைட்டை போட்டவன், "பிட்டு படம் பார்க்கிறியா?" என்றான்.

அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...

"இது கொரியன் ட்ராமா" என்றாள் அவசரமாக...

"வாட் எவர்? படிக்கிற நேரத்துல உனக்கு கிஸ் கேக்குதா?" என்று கடுப்பாக கேட்டுக் கொண்டே, "கெட்டப்" என்றான்... அவளும் பயத்துடன் எழுந்து நிற்க, அவள் இருந்த இருக்கையில் அமர்ந்து அவள் லேப்டாப்பை அலசினான்...

நிறைய படங்களும் கொரியன் ட்ராமாக்களும் இருக்க, அனைத்தையும் அவள் கண் முன்னாலேயே அழித்தான்...

அவளுக்கு கஷ்டமாக இருந்தாலும் பேச முடியாத நிலை... அப்படியே பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

அத்தோடு நின்று விடாமல் அவள் இன்டர்நெட் பார்க்க முடியாத போல வைஃபை கனெக்ஷனுக்கு பாஸ்வேர்டையும் மாற்றினான்...

அவளுக்கோ ஒரு மாதிரி போய் விட்டது...

இருந்த கொஞ்ச சுதந்திரமும் பறிக்கப்பட்ட உணர்வு...

"எதுக்கு இப்படி பண்ணுறீங்க?" என்று அடக்க முடியாமல் கேட்டு விட்டாள்.

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே எழுந்தவன் அவளை ஆழ்ந்து பார்த்தபடி, "உனக்கு என்ன தேவைன்னு எனக்கு தெரியும்... அத மட்டும் தான் நீ பொல்லோவ் பண்ணனும்... அன்டர்ஸ்டான்ட்" என்றான்...

அடக்குமுறையாக தோன்றியது...

ஒன்றும் பேசவில்லை...

அவனை முறைத்து விட்டு நடந்துச் சென்று கட்டிலில் படுத்துக் கொள்ள, அவனும் லைட்டை ஆப் செய்து விட்டு படுத்து விட்டான்.

இப்படியே இரு நாட்கள் கடந்த நிலையில், அன்று இரவு வசிஷ்டன் கோர்ட் ஷூட் சகிதம் வெளியே செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான்...

படித்துக் கொண்டு இருந்த பாரதியோ, "எங்க போறீங்க?" என்று கேட்க, அவனோ, கையில் வாட்சை கட்டிக் கொண்டே, "எங்க பேட்ச் கெட் டு கெதர்" என்று பதிலை சொல்லி விட்டு புறப்பட்டு இருந்தான்...

இதே சமயம் வசுந்தராவையும் அவர்கள் கெட் டு கெதர் நடக்கும் இடத்துக்கு விட்டுச் சென்று இருந்தான் நரேன்...

அவளும் பழைய நண்பிகளுடனும் நண்பர்களுடனும் பேசிக் கொண்டு இருக்க, வசிஷ்டனும் உள்ளே வந்து அவர்களுடன் ஐக்கியமாகி இருந்தான்...

அவன் அருகே வந்த வசுந்தராவோ, "எப்படி இருக்க? அம்மா அப்பா எப்படி இருக்காங்க? பாரதி எப்படி இருக்கா?" என்று அடுக்கடுக்காக கேட்க, அவனோ, "குட், நீ எப்படி இருக்க?" என்று கேட்டான்...

"நல்லா இருக்கேன்" என்று மென் சிரிப்புடன் சொன்னவளோ மேலும், "வீட்டுக்கு வரணும்னு நினச்சேன்... டைம் கிடைக்கவே இல்லை... ப்ரீயா இருக்கிற நேரம் வரேன்" என்றாள்.

"ஓகே" என்றபடி முடித்துக் கொண்டான்...

அவனை போலவே எண்ணி பேசுபவள் இன்று அதிகமாக பேசுவது போல உணர்ந்தான் வசிஷ்டன்... அவள் சிரிப்பில் அவள் சந்தோஷமாக இருக்கின்றாள் என்று தோன்றியது...

நரேனுடன் சேர்ந்தால் பேசாமல் இருக்க முடியுமா என்ன?

இப்படியே அவர்கள் பார்ட்டியும் முடிந்து இருக்க, "எதுல வந்த?" என்று வசிஷ்டன் கேட்க, "நரேன் கூட" என்றாள்.

"வீட்ல ட்ராப் பண்ணவா?" என்று கேட்டவனிடம், "இல்ல வசி, நரேன் வந்திடுவான்... யூ கெர்ரி ஆன்" என்று சொல்ல, அவனும், "ஓகே ஐ ஆம் லீவிங்" என்றபடி கிளம்பி விட்டான்...

ஹோட்டல் வாசலில் வந்து நின்றவள் நேரத்தைப் பார்த்தால் நரேனிடம் சொன்னதில் இருந்து அரை மணி நேரம் கடந்து இருந்தது...

"இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருக்கான் இடியட்... யார் கூடவாவது பேசிட்டே இருப்பான்... சொன்ன நேரத்துக்கு வர தெரியாது" என்று அவனை வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்து விட்டாள்.

அவர்களிடையே இப்படி சின்ன சின்ன சண்டைகள் வருவது சகஜம் தான்...

அந்த ஹோட்டலின் வாசலில் சிடுசிடுவென நின்று இருந்தாள் வசுந்தரா...

அவள் அருகே வந்த அவள் நண்பியோ, "என்ன வசு சிடு சிடுன்னு இருக்க?? உன் ஆள் நரேன் எங்க??" என்று கேட்க, "யார்கிட்ட ஜொள்ளு விட்டுட்டு நிக்குதோ தெரில... மெண்டல்" என்று திட்டினாள்..

"என்னடி இப்படி திட்டுற??" என்று அவள் கேட்க, "திட்டாம என்ன பண்ண சொல்ற?? சரியான லூசு குடும்பம் கிட்ட மாட்டிகிட்டேன்... அத்தைன்னு ஒருத்தங்க... யூத்ன்னு நினைப்பு... அவங்க போட்டோவையும் தளபதி விஜய் போட்டோவையும் சேர்த்து போன்ல டிபி வச்சு இருக்காங்க..." என்று சொல்ல வாயில் கையை வைத்த அவள் நண்பியோ, "இத உன் மாமனார் கேட்க மாட்டாரா??" என்று கேட்க, "க்கும் அவர் மட்டும் என்ன திறமா ?? சிம்ரன் படம் டி.வி ல போனா டி. வி யை போய் கிஸ் அடிக்கிறார்..." என்று சொல்ல, "ஐயையே" என்று வாயில் கையை வைத்தாள் அவள் நண்பி...

"கேட்கவே நாராசமா இருக்குல்ல... அப்போ என்ன யோசிச்சு பாரு... எனக்கு சவுண்டு சினிமா பாட்டெல்லாம் ஆகாதுன்னு தெரியும்ல... அந்த வீட்ல எப்போவுமே சினிமா பாட்டு தான்... யாராவது ஒருத்தர் ஆடிட்டே இருப்பாங்க... சரியான லூசு குடும்பம்... அவங்கள விட்டு நரேனை பார்த்தா... அவனுக்கு சீரியஸ்னஸ் கொஞ்சமும் இல்லை... தலைல இடி விழ போகுதுன்னா கூடா ஜாலியா டி. வி பார்த்துட்டு பொண்ணுங்க கூட கடலை வறுத்துட்டு இருப்பான்.... எல்லாம் என் விதி" என்று அவன் தாமதமாகும் கோபத்தில் அவனுக்கு திட்டிக் கொண்டே, நெற்றியில் அடித்துக் கொண்ட சமயம் அங்கே வந்து நின்றது நரேனின் கார்...

காரில் இருந்து ஸ்டைலாக இறங்கிய நரேனை பார்த்ததுமே, "ஐயோ" என்று கண்களை மூடிக் கொண்டாள் வசுந்தராவின் நண்பி...

அவனைக் கண்டதுமே வசுந்தரவுக்கு தூக்கி வாரிப் போட வேகமாக அவனை நோக்கி வந்தவள், "பேண்ட் எங்க??" என்று கோபத்துடன் கேட்டாள்...

அவனோ, "ஹேய் இங்க பாரு" என்று டீஷேர்ட்டை உயர்த்தி காட்ட அங்கே டி ஷேர்ட்டை விட குட்டியாக டெனிம் ஷார்ட்ஸ் இருந்தது...

"போடுறது தான் போடுற... இந்த ஷார்ட்ஸ கொஞ்சம் நீளமா போட வேண்டியது தானே" என்றாள் எரிச்சலாக...

"மை லைஃப் மை ரூல்ஸ்.. மைண்ட் யோர் பிசினஸ் பேபி" என்றவன் எட்டி அவள் பின்னே இருந்த அவள் நண்பியிடம், "ஹேய் நீ ரேகா தானே" என்றான்.

அவளும், "ம்ம்" என்க, "எனக்கு காலேஜ் பெர்ஸ்ட் இயர் ல லவ் லெட்டர் கொடுத்த தானே.." என்று கேட்டதுமே சட்டென்று திரும்பி வசுந்தரா அவளை முறைக்க, அவளோ, "அது ஏதோ அறியா வயசுடி" என்று ஓட்டம் எடுக்க , நரேனோ, "ஹேய் நில்லு என் போன் நம்பர் நோட் பண்ணிக்கோ" என்றான்.

"என் புருஷன் செருப்பாலேயே அடிப்பான்" என்று அவள் சத்தமாக சொல்லிக் கொண்டாள் அவள்...

அவனை முறைத்துக் கொண்டே வசுந்தரா காரில் ஏற, அவனோ அதனை எல்லாம் சட்டை செய்யாமல் கூலாக காரில் ஏறி காரை கிளப்பினான்.

வீட்டிற்கு வந்து அறையை மூடியதுமே, கையில் இருந்த கைப்பையை தூக்கி கட்டிலில் போட்டவள், "நரேன், கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா? இப்படியா ட்ரெஸ் பண்ணுவ? என் மானமே போச்சு" என்று காச்சு மூச்சு என்று கத்த ஆரம்பிக்க, கார் கீயை மேசையில் வைத்து விட்டு அவளை நோக்கி வந்தவன், அவள் முகத்தை தாங்கி இதழில் இதழ் பதிக்க, திமிர ஆரம்பித்தவள் ஒரு கட்டத்தில் அவன் இதழ் அணைப்புக்கு அடங்கி தான் போனாள். இப்படி சண்டை வரும் போதெல்லாம் முத்தமிட்டே சமாளித்து விடுவான் நரேன்... அவர்கள் வாழ்க்கை சின்ன சின்ன சண்டைகளும் சீண்டல்களும் என அழகாக தான் நகர்ந்தது...

இப்படியே இரு நாட்கள் கடந்து இருக்கும், பாரதியின் பரீட்சை நாளும் வந்து இருந்தது...

இப்படி எல்லாம் அவள் மும்முரமாக படித்ததே இல்லை...

இப்போது படித்தாள்...

வசிஷ்டன் படிக்க வைத்தான் என்றும் கூறலாம்...

படித்தபடி தூங்கினால், அவள் கைக்குள் பேனாவை வைத்து நசுக்கி விடுவான்.

அவளோ வலியில் கதறிக் கொண்டே எழுந்தால், "படி" என்று சொல்லி விட்டு கடந்து விடுவான்... அவளும் கையை வருடிக் கொண்டே அவனுக்கு வாய்க்குள் திட்டிக் கொண்டே படிப்பாள்...

அன்று இறுதி எக்ஸாமை எழுதி முடித்தவளுக்கு தலையில் இருந்த கல்லை தூக்கி இறக்கி வைத்த உணர்வு...

திருமணம் செய்ததில் இருந்தே நண்பர்களுடன் அவளால் மனம் விட்டு பேச முடியவில்லை...

பேச நேரமும் அழுத்தமும் இடம் கொடுக்கவும் இல்லை...

இன்று பேசலாம் என்று நினைத்துக் கொண்டே அவர்களை தேடிச் சென்றாள்.

எக்ஸாம் ஹாலில் இருந்து வெளியே வந்த பாரதி, நேரே காலேஜின் பின்பக்கம் தனியான இடத்தில் இருக்கும் நண்பர்களை தேடி வந்தாள்...

"டேய் இங்க பாருடா மிஸிஸ் வசி" என்று ஒருவன் கலாய்க்க, "வாய மூடுடா" என்று சொல்லிக் கொண்டே கையில் இருந்த புத்தகப்பையை அவனை நோக்கி எறிந்தவள் அவன் அருகே இருந்த கட்டில் ஏறி அமர்ந்தாள்...

அவள் அருகே இருந்தவனோ புகைத்துக் கொண்டு இருக்க, "எப்போ பார்த்தாலும் சிகரெட்" என்று திட்டி அதனை வாங்கியவள், "இத எப்படிடா குடிக்கிற தினேஷ்?" என்று கேட்டாள்...

"அத விடுடி... எக்ஸாம் எப்படி எழுதுன??" என்று அவள் நண்பி ரியா கேட்க, தினேஷோ, "அவ எழுதலன்னாலும் பிரச்சனை இல்ல... அதான் மிஸ்டர் வசிஷ்டன் இருக்காரே... எப்படியும் பாஸ் பண்ண வச்சிடுவார்" என்றான்.

"மண்ணாங்கட்டி" என்று திட்டினாள் பாரதி..


ரியாவோ, "எக்ஸாமை விடு... மீதியை சொல்லு" என்று ஒரு மார்க்கமாக கேட்க, "என்ன சொல்லணும்??" என்று அவளை மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
Intresting sis
 
Top