மழை 10
ஜன்னல் அருகே நின்று இருந்தான் நரேன்... அவனால் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை...
அவ்வளவு சொல்லியும் கேட்காத பாரதி மேல் கோபமாக வந்தது... ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்த முயன்ற நேரம், கதவை திறந்துக் கொண்டே உள்ளே வந்த வசுந்தராவோ கதவை தாழிட்டாள்...
திரும்பி பார்த்தான்...
தேவதை போல இருந்தாள்.
மிதமான மேக்கப், அழகான புடவை என்று அனைத்துமே அவளுக்கு அம்சமாக இருந்தது...
வசிஷ்டன் மேல இருந்த கோபத்தை அவன் வசுந்தராவில் காட்ட விரும்பவே இல்லை...
அப்படி காட்டினால் வசிஷ்டனுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று யோசித்துக் கொண்டே, தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன், "செம அழகா இருக்க பேபி" என்றான்...
அவனை முறைத்துக் கொண்டே, கண்ணாடி முன்னே போய் நின்று கையில் இருந்த காப்புக்களை கழட்ட, "இப்போ எதுக்கு கழட்டுற?" என்று அவளை நோக்கி நடந்து வந்த படி கேட்டான் நரேன்...
"ரெண்டு வாரமா என் கிட்ட பேசவே இல்லை... இப்போ தான் கண்ணுக்கு தெரியுறேனா?" என்று கேட்டாள் அவனை பார்க்காமல்...
"ஒரு சின்ன டென்ஷன்" என்று சொல்லிக் கொண்டே இருந்தவன் அவளை நெருங்கி பின்னால் நின்றபடி இருவரின் விம்பங்களையும் கண்ணாடியில் பார்த்தான்...
அவளோ கண்ணாடியில் அவனை பார்த்துக் கொண்டே, "இன்னைக்கும் டென்ஷனா இருப்ப, சோ நாம தூங்கலாம்" என்றாள்.
அவனோ, "பார்க்க அப்படியா தெரியுது?" என்று கேட்டான். சட்டென அவனை நோக்கி திரும்பியவள், "வசியோட கல்யாணம் உனக்கு பிடிக்கலையா?" என்று நேரடியாகவே கேட்டு விட்டாள்.
அவனிடம் மௌனம் மட்டுமே...
"சொல்லு நரேன்... உனக்கு பிடிக்கலையா?" என்று கேட்க, அவனோ, "பாரதி இன்னும் படிச்சு முடிக்கல, அது தான்" என்றான் இழுவையாக...
அவள் அண்ணனை பற்றி சொன்னால் அவள் நம்பவே மாட்டாள்... அதனால் இருவருக்கும் தான் பிரச்சனை வரும் என்று உண்மையை அவளிடம் மறைத்தான்...
"நீ அவாய்ட் பண்ணும் போதே தோணிச்சு... பீல் பண்ணாதே... வசி நல்லா பார்த்துப்பான்" என்று சொல்ல, பதில் சொல்லவில்லை அவளையே பார்த்து இருந்தான்...
அதற்கு என்ன பதில் தான் சொல்லி விட முடியும் அவனால்??
"ஏதாவது பேசுடா" என்றாள் வசுந்தரா...
அவனோ, "பேசி டைம் வேஸ்ட் பண்ணனுமா?" என்று கேட்டான்...
"நான் என்ன பேசிட்டு இருக்கேன், நீ என்ன பேசிட்டு இருக்க?" என்று கேட்டு முடிக்க முதல், அவள் இடையை இரு கைகளாலும் பிடித்து தன்னுடன் நெருக்கிக் கொள்ள, அவளோ அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக் கொண்டாள்.
அவன் இதழ்கள் அவள் முகத்தை நெருங்க, சட்டென்று கன்னத்தை பக்கவாட்டாக திருப்ப, அவன் இதழோ அவள் கன்னத்தில் அழுந்த பதிந்தது...
அவன் தாடி மீசை குறுகுறுத்தது... கண்களை மூடிக் கொண்டே இதழ்களை மெலிதாக திறந்து உஷ்ண மூச்சை வெளியேற்றினாள்.
அவன் இதழ்களோ அவள் செவி மடலை நெருங்க, அவன் இதழ்களின் உரசலை கூட அவளால் தாங்க முடியவே இல்லை...
அவள் காதில் அவள் இதழ்கள் உரச, "செம்ம அழகா இருக்க பேபி" என்றான் ரகசிய குரலில்...
அவள் கரமோ அவன் டீ ஷேர்ட்டை பற்றிக் கொண்டது உணர்வுகளை அடக்க முடியாமல்...
அவன் கரமோ அவள் வெற்றிடையில் அழுந்த பதிந்து இருந்தது...
சிறிது நேரம் அப்படியே நின்று இருக்க, "திரும்புடி" என்றான்...
மெலிதாக தலையை அவன் பக்கம் திருப்பினாள்...
அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை...
இருவரின் விழிகளும் ஒன்றோடொன்று கலந்து கொள்ள, அவன் கண்கள் அவள் கண்களில் இருந்து நாசி வழியே பயணித்து இதழ்களில் நிலைத்தது...
அவள் இதழ்களை பார்த்துக் கொண்டே, "ஆரம்பிக்கலாமா?" என்று கேட்டான்...
"இல்லன்னு சொன்னா போல விட்ருவீங்களா?" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டாள்.
அவள் இதழ்களை நெருங்க, அவளோ கண்களை மூடியபடி முதல் முத்தத்துக்கு பயந்து தலையை பின்னால் சரித்தாள்...
"பச், என்னடி பண்ணுற?" என்று கேட்டான்...
"எனக்கு பழக்கம் இல்ல" என்க, "அப்போ நான் மட்டும் பழகிட்டா வந்து இருக்கேன்? உன் கிட்ட தான் எல்லாமே பழக போறேன்." என்று சொல்ல, அவன் பேச்சில் அவள் கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க, விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.
ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி இதழ்களை நெருங்க, அவளோ மீண்டும் முகத்தை பக்கவாட்டாக திருப்பி இருந்தாள்.
அவனுக்கு பொறுமையே போய் விட்டது...
"இது சரி வராது" என்று சொல்லிக் கொண்டே இரு கைகளாலும் அவள் முகத்தை தாங்கியவன், அவள் இதழ்களில் தன்னிதழ்களை அழுத்தமாக பொருத்திக் கொண்டான்...
இருவரின் கண்களும் ஒரே நேரத்தில் மூடிக் கொள்ள, இதழ் யுத்தம் ஆரம்பமானது...
இதழில் கதை எழுத ஆரம்பித்தவன், மஞ்சத்தில் சரித்தது மட்டும் தான் இருவருக்கும் நினைவில் இருந்தது...
முதல் தடவை இருக்கும் தடுமாற்றம்... முதல் தடவை இருக்கும் வேகம் என்று அவர்கள் அனைத்தையும் கடந்து தாம்பத்தியத்தில் வெற்றியும் பெற்று இருந்தார்கள்...
வியாபார காந்தம் அல்லவா நரேன்... கொடுத்ததற்கு நிகராக வாங்கியும் கொண்டான்...
இறுதியில் அவள் இதழில் முத்தமிட்டு விலகியவனை இறுக்கி அணைத்துக் கொண்டே தூங்கிப் போனாள் பெண்ணவள்...
வசுந்தரா என்னும் நதி, நரேன் என்னும் சாகரத்தில் கலந்து இருக்க, பாரதி என்னும் நதியோ, கானல் நீராக வசிஷ்டன் என்னும் கடலை தேடி ஓட ஆயத்தமாகிக் கொண்டு இருந்தது...
கண்ணாடியில் தனது அலங்காரங்களை பூரிப்பாக பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள் பாரதி...
மிதமான மேக்கப்... லிப்ஸ்டிக் அடிக்கவில்லை... முத்தமிடும் போது லிப்ஸ்டிக் அழிந்து விடும் என்று நினைத்து அடிப்பதை தவிர்த்து இருந்தாள்.
'தாலி மட்டும் போதும்... இந்த செயின் அவருக்கு குத்தும்' என்று நினைத்துக் கொண்டே செயினைக் கழட்டி வைத்தாள்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் முதலிரவு அறைக்குள் நுழைந்து விடுவாள்...
காலேஜில் அவனை ரசித்து இருக்கின்றாள்...
அவன் ஆளுமை, அவன் பேச்சு, அவன் பாடம் எடுக்கும் நேர்த்தி, என்று அணுவணுவாக ரசித்து இருக்கின்றாள்...
இன்று அவனே அவள் கணவனாக அமைந்து இருக்க, கழுத்தில் கிடந்த அவன் கட்டிய தாலியை புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டே எழுந்தாள்.
அப்போது கதவை திறந்த கோமளாவோ, "ரைட்ல பெர்ஸ்ட் ரூம்" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்...
'இவங்க சிரிக்கவே மாட்டாங்களா?' என்று யோசித்துக் கொண்டே, அவன் ரூமை நோக்கி நடந்தவளுக்கு கொரியன் சீரியலில் அவள் பார்த்த முத்த காட்சிகள் தான் நினைவுக்கு வந்து போயின...
தனக்குள் வெட்கப்பட்டுக் கொண்டே கதவை தட்ட, "கம் இன்" என்று அவன் ஆளுமையான குரல் உள்ளே இருந்து கேட்டது...
கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்...
இன்னும் சற்று நேரத்தில் அவன் உடமையாக போவதை நினைத்து கன்னங்கள் சிவப்பேறி போயின..
மேசையில் அமர்ந்து லேப்டாப் பார்த்துக் கொண்டு இருந்தான் வசிஷ்டன்...
உள்ளே வந்து தாழிட்டவளிடம், "தூங்கு, எனக்கு வேலை இருக்கு" என்றான் அவளை பார்க்காமலே...
அவளது கனவு கோட்டை எல்லாம் சுக்கு நூறாக நொறுங்கியது...
"இல்ல நான் வெய்ட் பண்ணுறேன்" என்றாள்.
"எதுக்கு?" என்றான்.
அவளும் எப்படி பதில் சொல்வாள்?
"நல்ல நேரம் மிஸ் பண்ண கூடாதுன்னு அம்மா சொன்னாங்க" என்று அவள் அம்மா மேல் பழி போட்டாள்.
"வாட் ரப்பிஷ் இஸ் திஸ்? இதுக்கப்புறம் நல்ல நேரமே வராதா?" என்று அவன் சீற, அவளுக்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது...
அவன் குரலும் கணீர் என்று இருக்க, மௌனமாக அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
திரும்பிப் பார்த்தவனோ, "ஹியர் லுக் பாரதி... படிச்சு கோல்ட் மெடல் எடு... அதுக்கப்புறம் இந்த சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் பார்த்துக்கலாம்" என்றான் நேரடியாக...
'படிச்சு முடிக்கணுமா? அதுக்கு இன்னும் சில வருஷம் இருக்கே... ஒரு கிஸ் கூட இல்லையா?' என்று மனதுக்குள் நினைத்தாலும் கேட்க முடியவில்லை...
கேட்டால், 'அலைஞ்சான் கேஸ்' என்று நினைத்து விடுவானோ என்கின்ற பயம் வேறு...
சிரிப்பு வரவில்லை...
ஆனாலும் சிரித்துக் கொண்டே, "இத தான் நானும் சொல்ல வந்தேன்" என்றாள் மழுப்பலாக...
அவளை மேலிருந்து கீழ் பார்த்தான் தவிர பதில் சொல்லவில்லை... மீண்டும் கம்பியூட்டரில் மூழ்கி விட்டான்...
அவளோ பெருமூச்சுடன் படுத்துக் கொண்டாள்...
தூக்கம் வரவில்லை..
அணைப்பான் முத்தமிடுவான் அத்துமீறுவான் என்று எதிர்பார்த்தால் அவனோ லேப்டாப்பை டொக்கு டொக்கு என்று தட்டிக் கொண்டு அல்லவா இருந்தான்.
அவனை பார்த்துக் கொண்டே படுத்தவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை...
அடுத்த நாள் காலையில் யாரோ கையில் சுரண்டுவது போல இருந்தது. கண்களை திறந்து பார்த்தாள்.
கையால் கூட அவளை தொடவில்லை... ஒரு தடியால் சுரண்டிக் கொண்டு நின்று இருந்தான் வசிஷ்டன்.
டிராக் ஷூட் அணிந்து இருந்தவனை பார்த்து பதறி எழுந்து அமர, "லேட்டாயிடுச்சு ஜிம்முக்கு வா" என்றான்.
'ஜிம்மா?? அதுக்குள்ள எட்டு மணி ஆயிடுச்சா??' என்று நினைத்தபடி கடிகாரத்தை பார்க்க, அதிகாலை ஐந்து மணியை அது காட்டிக் கொண்டு இருந்தது...
அவளுக்கெல்லாம் அது நள்ளிரவு ஆயிற்றே...
"எனக்கு தூக்கம் வருது" என்றாள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டே...
"எக்ஸ்கியூஸ் சொல்லாம சீக்கிரம் வா" என்றான் அதட்டலாக...
அவன் மிரட்டியது கொஞ்சம் பயமாக தான் இருந்தது...
சிணுங்கலாக குளியலறைக்குள் நுழைந்தவள் தூங்கி தூங்கியே முகம் கழுவிக் கொண்டே வெளியே வந்தாள்...
"ட்ரெஸ் சேன்ஜ் பண்ணுற ரூம் அங்கே இருக்கு, உனக்கு வீட்ல இருந்து கொடுத்து விட்ட ட்ரெஸ் எல்லாம் அங்கே தான் இருக்கு" என்று அறையுடன் சேர்ந்த போல இருந்த அறையை காட்டினான்...
உள்ளே நுழைந்தவளோ, "ஹாஸ்டலை விட மோசமா இருக்குடா சாமி" என்று புலம்பிக் கொண்டே உடையை மாற்றியபடி வெளியே வந்தாள்.
"சீக்கிரம் வா" என்று சொல்லிக் கொண்டே அவளை அவர்கள் வீட்டில் இருக்கும் ஜிம் அறைக்குள் அழைத்துச் சென்றான்...
பிரம்மாண்டமாக இருந்தது...
ஆனால் அவளால் எதனையும் ரசிக்க முடியவே இல்லை...
கார்டியோவில் ஏறி வலிக்காத வேகத்தில் நடந்தாள்.
அவனோ அருகே சைக்கிளிங் செய்துக் கொண்டு இருந்தான்...
கண்ணாடியில் அவனை பார்த்துக் கொண்டவளோ, 'இது தான் இவர் ஃபிட் ஆஹ் இருக்க ரீசன் போல' என்று நினைத்துக் கொண்டாள்.
அவனோ சட்டென சைக்கிளில் இருந்து இறங்கியவன் அவளை நோக்கி வர, 'இப்போ எதுக்கு நம்ம கிட்ட வர்றார்?' என்று நினைக்க, "பார்த்து பார்த்து ரொம்ப வேகமா ஓடாதே" என்று நக்கலாக சொன்னவன் கார்டியோவின் வேகத்தை சட்டென கூட்ட, அவளுக்கோ ஓட வேண்டிய கட்டாயம்...
"ஐயோ முடியல, என்னால முடியல" என்று புலம்பிக் கொண்டே வேகமாக ஓடினாள்.
பக்கத்திலேயே நின்று இருந்தான்... அவளால் நிறுத்தவும் முடியவே இல்லை...
ஐந்து நிமிடங்கள் கடந்த பின்னர் அவனே வேகத்தை குறைத்தான்...
அவளோ, "ஐயோ முடியலையே" என்று களைத்துக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் முன்னே வந்து கைகளை கட்டிக் கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்தவன், "டெய்லி இது தான் ரூட்டின், காலைல அஞ்சு மணிக்கு ஜிம் வரணும்... அரை மணி நேரம் ஜிம், அப்புறம் அரை மணி நேரம் யோகா..." என்று சொல்ல, அவனை ஏறிட்டு பார்த்தவள், "அப்புறம்" என்றாள் மூச்சு வாங்கியபடி...
"சொல்லி கொடுக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவனும் கார்டியோவில் ஏறி ஓட ஆரம்பித்து விட, அவளோ சைக்கிளில் ஏறிக் கொண்டாள்.
அத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை...
யோகாசனம் செய்ய அங்கே இருந்த வேற்று இடத்துக்கு அழைத்துச் சென்றான்...
"முதல்ல சூரிய நமஸ்காரம்" என்று சொல்லிக் கொண்டே அவன் செய்ய, அவளோ அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
"பார்த்துட்டு இருக்காம என் கூட சேர்ந்து ட்ரை பண்ணு" என்று சொன்னதும் அவளும் முயன்றாள்....
சாப்பிட்டு விட்டு தூங்குபவளால் வளைய முடியவே இல்லை...
"நல்லா வளை" என்று அதட்டினான்...
அவளோ, "முடியல சார்" என்றாள்.
அருகே இருந்த குச்சியை கையில் எடுத்து விட்டான்...
அவளோ, "இது என்ன கொடுமையா இருக்கு" என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே வளைய முயன்றாள்.
யோகாவில் அரை மணி நேரம் கடந்ததுமே அறைக்குள் அழைத்துச் சென்றான்...
"இங்க சரியா ஏழு அரைக்கு பிரேக் பாஸ்ட்... டைமுக்கு வந்திடணும், இப்போ படி" என்று சொல்லிக் கொண்டே அவனும் லேப்டாப்புடன் அமர்ந்து விட, "எக்ஸாமுக்கே படிக்க மாட்டேன்... சும்மா வேற படிக்கணுமா?" என்று புலம்பிக் கொண்டே, "எனக்கு தூக்கமா வருது" என்றாள்.
"நைட் தூங்கிக்கலாம் இப்போ படி" என்றான் மிரட்டலாக...
அவன் மிரட்டலுக்கு பயந்து புத்தகத்துடன் அவன் இருந்த அதே மேசையில் அமர்ந்தாள்...
படிப்பு ஏறினால் தானே...
"கொரியன் ட்ராமா எல்லாம் பார்த்து நான் என்னவோ எல்லாம் கற்பனை பண்ணினேன்... ஆனா" என்று மனதுக்குள் புலம்பிக் கொள்ள, அவனோ சிறிது நேரத்தில் குளித்து ஆயத்தமாகிக் கொண்டான்...
"காலேஜ் போக போறீங்களா?" என்று அவள் கேட்க, அவனோ, "போறீங்களா இல்லை போறோம்" என்றான்... அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
"எனக்கு டயர்ட் ஆஹ் இருக்கு" என்று சொல்லி பார்த்தாள் அவனிடம் எடுபடவில்லை...
"டயர்ட் ஆகுற அளவுக்கு ஒண்ணுமே நடக்கலையே" என்றான்...
வேறு வழி இல்லாமல், அவளும் குளித்து ஆயத்தமாகி வர, அவளை உணவு மேசைக்கு அழைத்து வந்தான்...
அங்கே ஏற்கனவே ராஜசேகரனும், கோமளாவும் அமர்ந்து இருந்தார்கள்...
அவனோ அவளை அமர சொல்லிக் கொண்டே, "நீ இவ்ளோ நாள் எப்படி இருந்து இருப்பேன்னு தெரியல... இங்க டைமுக்கு சாப்பிடணும், ஹெல்தியா சாப்பிடணும்... டைம் டேபிள் இருக்கு... அந்த ஃபூட் தான் ப்ரிபெயர் பண்ணுவாங்க... நீ காலேஜுக்கு இங்க சமைச்ச சாப்பாடு தான் கொண்டு போகணும், புரியுதா?" என்று கேட்டான்...
'ஹாஸ்டலே தான்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள், "நல்லாவே புரியுது" என்றாள்.
உணவை திறந்தாள், அவித்த தானியங்கள் இருந்தன...
'இட்லி தோசை எல்லாம் இருக்காது போல' என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே சாப்பிட்டாள்.
அவனோ சாப்பிட்டு முடிய அவளை அழைத்துக் கொண்டே காலேஜுக்கு கிளம்பியவன், போகும் வழியில், "இனி உன் கிளாசுக்கு நான் கிளாஸ் எடுக்க முடியாது... வேற லெக்சரர் வருவார்... ஒழுங்கா படி" என்றான்...
'அப்பாடா க்ளாஸ் எடுக்க மாட்டாரா? சந்தோசம்' என்று நினைத்துக் கொண்டாள். எப்படி இருந்தவள் ஒரே நாளில் தலைகீழாக மாறி இருந்தாள்...
'நரேன் சொன்னதை கேட்டு இருக்கலாமோ!' என்கின்ற எண்ணம் முதல் நாளே வந்து இருந்தது அவளுக்கு...
காலேஜில் நண்பர்கள் அவளை கலாய்த்தனர்...
'நானே நொந்து நூடில்ஸ் ஆஹ் இருக்கேன். இவளுங்க வேற' என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே அவர்களை சிரிப்புடன் கடந்து போனாள்.
அவள் கையை பிடித்த ரியாவோ, "கன்னம் எல்லாம் சிவந்து இருக்கு... என்னடி ஆச்சு? நேத்து தூங்கலையா?" என்று கேட்க, அவளோ, "மனசாட்சியை தொட்டு சொல்லு, என் கன்னம் சிவந்தா இருக்கு?" என்று கடுப்பாக கேட்டாள்.
அவளோ, "ம்ம், வெட்கத்துல சிவந்து இருக்கு, லிப்ஸ் எல்லாம் காயமா இருக்கு, எக்ஸ்பீரியன்ஸ் ஷெயார் பண்ணுடி... நாங்களும் கத்துக்கணும்ல" என்றாள்.
'இவ வேற கொல்றாளே' என்று நினைத்தவள், "போடி பைத்தியக்காரி" என்று திட்டியவள் வேகமாக செல்ல, 'எதுக்கு இவ்ளோ டென்க்ஷன் ஆகுறா?? சார் நைட் ரொம்ப படுத்திட்டார் போல' என்று ரியா வெட்கத்துடன் நினைத்துக் கொண்டாள்.