அத்தியாயம் 1:
"சீக்கிரம் கிளம்புன்னு சொன்னா கேட்டாத்தானே, இப்போ பாரு லேட் ஆகிருச்சு" என்று மனைவியை திட்டிக்கொண்டே வந்தார் Dr.பிரகாஷ்.
"ஆமா அவ பெரிய ரதி பாருங்க, அவ கல்யாணத்துக்கு லேட் ஆஹ் போனா ஒன்னும் கொறஞ்சு போயிராது. என் வாய புடுங்காம வாங்க. அவ மூஞ்சியும் அவ நடையும்" என்று தன் கணவனை கரித்து கொட்டிக்கொண்டே வந்தார் அவர் மனைவி சுமதி.
இவர்கள் சண்டைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல காதில் இயர் பட்ஸ் ஐ போட்டு தன் ஐபேடில் பார்த்துக்கொண்டு வந்தான் அவர்கள் தவ புதல்வன் நவீன்.
இன்று அவர் சிகிச்சை அளித்த பெண் அபியின் திருமணம், அவர் ஒரு பிரபல நியூரோ டாக்டர் அவரிடம் நிறைய பேசன்ட்ஸ் வந்தாலும் அபி அவருக்கு நினைவில் இருக்கக்கூடிய பேசன்ட் அதுவும் 13 வருடம் ஆகியும்.
அவளது திருமணத்திற்க்கு அவள் நேரில் வந்து பத்திரிக்கை வைத்து பேமிலி ஓட வாங்க டாக்டர் அங்கிள் என்று சொல்லவும் அதை தட்டாமல் இன்று சென்றுகொண்டு இருக்கிறார் நாமக்கல் நோக்கி.
இதோ வந்தாச்சு மண்டபத்துக்கு, மனைவி மகன் உடன் உள்ளே சென்றார். வாசலில் வரவேற்ப்பில் நின்ற அபியின் அம்மா மற்றும் உறவினர்கள் கை கூப்பி வரவேற்க ஒரு சிறு புன்னகையுடன் உள்ளே சென்றார்.
இவர் கண்ணில் பட்டது அபியின் குடும்பமாக இருக்க அவரின் மனைவி மகன் கண்ணில் பட்டது என்னவோ அங்கு வைக்கப்பட்டு இருந்த பேனர் தான்.
அபி வெட்ஸ் குப்புசாமி என்று இருக்க அதன் கீழ் அவர்கள் புகைப்படமும் இருந்தது அதை பார்த்து ஷாக் ஆன நவீன் முன் பின் பார்த்திராத அபிக்காக பரிதாபப்பட்டான். சுமதியோ அது தானே பார்த்தேன் இவளுக்கு எல்லாம் எப்படி நல்ல வாழ்கை அமையும் என்று நினைத்துக்கொண்டார்.
ஏனோ அவருக்கு அபியை பிடிக்கவில்லை.
உள்ளே சென்றவரை வந்து வரவேற்று தன் மாமாவிடம் பேசிக்கொண்டு இருக்குமாறு சொல்லிவிட்டு மற்றவர்களை வரவேற்க சென்று விட்டார் அபியின் தந்தை.
இவர்களை வரவேற்று தன்னுடன் அமர்த்தி கொண்டார் ஷங்கர் (அபியின் அத்தை வீட்டுக்காரர்). அவர் அருகில் அபியின் அத்தை மற்றும் அவர் மகள் மகன் என அனைவரும் இருந்தனர்.
அபியுடன் ஹாஸ்பிடல் வந்து இருப்பதால் இவரை தெரிந்து இருந்தது பிரகாஷ்க்கு. அவர்கள் குடும்பத்தினருடன் அறிமுக படுத்தினர். அப்போது தான் கவனித்தார் அவர்களின் அருகில் இருந்த கார்த்திகாவை, இவள் அபியின் அத்தை மகள் மட்டும் அல்ல அபிக்கு ஒரு நல்ல தோழி. அனால் இவள் ஏன் இங்கு இருக்கிறாள் அபி கூட இல்லாமல் என்று யோசித்தவர் அதை கேட்டும் விட்டார்.
இது ஒரு கல்யாணம் இதுக்கு இது ஒன்னு தான் குறைச்சல் என்று முனகிக்கொண்டே "சும்மா தான் அங்கிள் " என்றாள்.
அப்பொழுது தான் கவனித்தார் அவர்கள் யார் முகத்திலும் துளியும் சந்தோசம் இல்லை.
ஏதோ ஒன்று சரியில்லை என்று புரிந்து கொண்டார். நிறைய மனிதர்களை அவர்கள் முகத்தை பார்த்து நோயை கண்டறியும் டாக்டர் அல்லவா?.
யாரிடம் கேட்பது என்ன செய்வது என்றும் புரியவில்லை அவருக்கு.
இதுவரை யோசித்து கொண்டு இருந்தவர் அப்போது வரை அங்கு ஸ்டேஜ்ல் இருந்த அபியை கவனிக்கவில்லை முக்கியமாக அவள் கட்டிக்க போகும் மாப்பிளையை .
இப்போது ஸ்டேஜ்ல் பார்க்க அங்கு யாரும் இல்லை, அவர்கள் எங்கே என்று ஷங்கரிடம் கேட்டதற்கு வெளியில் ஏதோ சாங்கியம் செய்துட்டு இருகாங்க என்றார்.
சுமதியோ "வாங்க கிளம்பலாம் இங்க எல்லாம் இவளோ நேரம் இருந்தே பெரிசு " என்றார்.
இதற்கு மேல் விட்டால் சுமதி சாமி ஆடி விடுவார் என்று தெரிந்த டாக்டரும், "சரி வா.. அபியை போய் பார்த்து கிப்ட் கொடுத்து விஷ் பண்ணிட்டு வரலாம் " என்றார்.
"என்னால எல்லாம் வர முடியாது நீங்க வேணும்னா போயிட்டு வாங்க" என்று பர்மிசன் கொடுத்தார் அவர் வீட்டுக்காரி.
"அப்பா நானும் வரேன் இங்க ஒரே போர்" என்று எழுந்தான் நவீன்.
கார்த்திகாவை துணைக்கு கூட்டிக்கொண்டு அபியை தேடி சென்றார். வெளியில் சாங்கியம் முடிந்ததால் உள்ளே புடவை மாத்த சென்று இருப்பதாக கூற, அவர்களை வெளியில் வெயிட் பண்ணுங்க என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் கார்த்திகா.
அபியிடம் கூற அவர்களை உள்ளே அழைத்தாள்.
அபிக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்தார் பியூட்டி பார்லர் பெண். அவரை கண்டதும் "வாங்க அங்கிள் எப்படி இருக்கீங்க, ஆண்ட்டி எங்க? கூட்டிட்டு வரலையா?" என்று கேட்டாள்.
அவள் முகத்தில் துளியும் சந்தோசம் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது அனாலும் பெண்ணவள் அதை மறைத்து சிரித்து பேசினாள்.
என்னமோ சரி இல்லை என்று நினைத்தவர், "அபி நான் ஒன்னு கேட்கவா " என்றார் யோசனையாக.
"உங்களுக்கு இல்லாத உரிமையை? கேளுங்க அங்கிள் " என்றாள்.
"நிஜமாவே உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா?" எங்க, தன் பெற்றோர் கூட கேட்காத கேள்வியை இவர் கேட்டதில் அபிக்குத்தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண்கள் கலங்கினாலும் அதை மறைத்துவிட்டு "வீட்டுல எல்லாருக்கும் விருப்பம், அதனால எனக்கும்" என்று ஒருவாறு சமாளித்தாள்.
அப்போது தான் உள்ளே வந்த நவீன் அபியை பார்த்து சொக்கி தான் போனான். 'பேனர் ல இருந்ததை விட அழகா இருக்கா, எல்லாம் மேக்கப் தான் காரணம் போல' என்று எண்ணிக்கொண்டே வந்தவன் அவள் கண் கலங்குவதை கவனிக்க தவறவில்லை. "சம்திங் ராங்" என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டான்.
"சம்திங் எல்லாம் இல்லை, எவரிதிங் ராங் " என்றாள் கார்த்திகா.
"ஏண்டி இன்னும் ரெடி ஆகலையா?" என்று திட்டி கொண்டே வந்தார் ஒரு வயசான பெண். மாப்பிள்ளையின் அம்மா என்று சொல்லி கொண்டனர்.
"எங்கடி உன் அப்பன்" என்றவர் சுற்றும் முற்றும் இருந்தவர்களை அப்பொழுதான் கவனித்தார்.
"நீ ஏன் என் வாய பார்த்துட்டு இருக்க சீக்கிரம் மேக்கப் போடு" என்றார் அருகில் இருந்த பெண்ணிடம்.
கார்த்திகாவிடம் திரும்பி "யாருடி இவங்க " என்று டாக்டர் ஐ சுட்டி காட்ட "ஹான், என் சொந்தக்காரங்க " என்றாள் வேண்ட வெறுப்பாக. அவர் பேசும் விதம் சுத்தமாக பிடிக்கவில்லை யாருக்கும்.
அதற்குள் அபியின் தந்தையும் வந்துவிட மாப்பிள்ளையும் வந்து சேர்ந்தான்.
40 ஐ தொடடப்போகிறேன் என்று சொல்லாமல் சொல்லியது அவன் முகமும் சொட்டை தலையும் தொப்பையும் தொந்தியும்.
"இது தான் அபியை கட்டிக்கப்போறவன் " என்றாள் கார்த்திகா.
டாக்டர்க்கு தூக்கி வாரி போட்டது, என்னது இவானா? பார்க்க இவளோ வயசு அதிகமா இருக்கு. அபிக்கு இப்போ தான் 25 , இதனால தான் யாரு முகத்துலயும் சந்தோசம் இல்லையா என்று நினைத்துக்கொண்டார்.
ஏற்க்கனவே பேனரில் பார்த்து இருந்ததால் நவீனிற்கு அவளோ ஷாக் இல்லை ஆனால் அபியின் வாழ்கை பாவம் என்று தோணியது.
ஆனால் அது தன்னால் தான் கெட போகிறது என்று தெரியவில்லை அப்போது நவீனிற்கு.
"நீங்க எல்லாம் கொஞ்சம் வெளிய போங்க நான் கொஞ்சம் இவன் கிட்ட தனியா பேசணும் " என்றார் அந்த அரக்கி (கார்த்திகா வைத்த பெயர்).
வேறு வலியில்லாமல் இவர்களும் வெளியே வந்தார்கள் அபியின் கண்களில் அத்தனை சோகம், அதை பார்த்தவர்களால் தங்க முடியவில்லை.
அவர்கள் பேச ஆரம்பித்ததும் கதவின் மேல் தலையை வெய்த்து கேட்க ஆரம்பித்தாள் கார்த்திகா.
அவள் செய்வது சரி இல்லை என்றாலும் அபியை காக்கத்தான் இப்படி செய்கிறாள் என்று புரிந்து கொண்ட டாக்டரும் அமைதியாக கவனிக்கலானார்.
"என்ன சின்னா சொன்ன அமௌன்ட் இன்னும் கைக்கு வந்து சேரலயே" என்றவரிடம் "ஏற்படு பண்ண சொல்லி இருக்கேன் கா, சீக்கிரம் கொண்டு வந்துருவாங்க "என்றார் பணிவுடன்.
வேறு வழி இல்லையே. பெண்ணை கட்டி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது அவருக்கு.
"பொண்ணு பாக்க நல்லா தான் இருக்கா, ஆனா அவளுக்கு குறை இருக்குல்ல அதுக்கு தனியா நீ கொடுத்து தான் ஆகணும்" என்றவர் "உனக்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் டைம், நீ மட்டும் கேட்டதை கொடுக்கல அப்புறம் இந்த கல்யாணம் நடக்காது பார்த்துக்கோ" என்று சொல்லிவிட்டு சென்றவர் திரும்பி வந்து "உன் முகத்துக்காக தான் இவளோ டைம் தரேன் " என்று கூறி விட்டு சென்றார்.
"வரட்டும் ஆஹ் செல்லம், என்று அந்த மாப்பிள்ளையும் சென்றான்".
அவர்கள் வரும் சத்தம் கேட்டு ஒட்டு கேட்டு கொண்டிருந்தவர்கள் அவர்கள் மனைவி இருந்த இடம் சென்றனர்.
இவர்களால் தான் என்ன செய்ய முடியும்.
வெளியில் சென்றதும் உள்ளே நடந்ததை கார்த்திகா அனைவரிடமும் ஒப்பிக்க "இவன் எல்லாம் திருந்தவே மாட்டான், வா போலாம் வீட்டுக்கு என்றார் ஷங்கர் தன் மனைவியிடம் அபியின் அப்பாவை திட்டிக்கொண்டே"
டாக்டருக்கும் அங்கு இருப்பது பிடிக்காமல் போக "கிளம்பலாம்" என்றார் மனைவியிடம்.
அவரும் "அப்பாடா வாங்க போலாம் " என்றார்.
"அப்பா வெயிட் கல்யாணம் முடியட்டும் போலாம்" என்றான் நவீன்.
"ஏன்டா சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி நீ கொடுக்க மாட்ற" என்றார் சுமதி.
"அங்க போய் என்ன பண்ண போற, போன் ல கேம் தான் விளையாட போற, இங்கயே விளையாடு மா" என்றவனின் பேச்சில் பேசாமல் அமர்ந்து விட்டார் சுமதி.
இவர்கள் அமர்வதை பார்த்து கார்த்திகா பாமிலியும் அமர்ந்து விட்டனர்.
"ஏதும் ஐடியா சொல்லேன் ப்ளீஸ் இந்த கல்யாணத்தை ஸ்டாப் பண்ண" என்று கேட்ட கார்த்திகாவை ஒரு மார்கமாக பார்த்தான் நவீன் . "எல்லார்ட்டையும் கேட்டுட்டேன் நோ ஐடியா அதன் உன்ன கேட்டேன், ஐடியா இருந்த சொல்லு இல்லனா விடு அதுக்கு ஏன் மொறைக்கிற " என்று விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தாள் கார்த்திகா.
"கடவுளே இந்த கல்யாணம் மட்டும் நடக்க கூடாது அபி பாவம் ஏதாவது பண்ணுங்க" என்று புலம்பியது யாருக்கு கேட்டதோ இல்லையோ பின்னாடி இருந்த ஒருவனுக்கு கேட்டது.
மேடையில் அய்யர் மந்திரம் சொல்ல மாப்பிள்ளையும் அதை சொல்லி கொண்டு இருக்க "பெண்ணை அழைத்து வாங்கோ " என்றார் அய்யர்.
அழகிய பதுமை போல அபியும் வந்து அமர, மாப்பிள்ளையின் காதில் ஏதோ ஓதினாள் அவன் அம்மா.
உடனே கழுத்தில் இருந்த மாலையை கழட்டி போட்டவன் "இந்த கல்யாணம் நடக்காது " என்றான்.
படித்துவிட்டு நிறை குறைகளை சொல்லுங்கள் மக்களே...
https://pommutamilnovels.com/index.php?threads/பூவே-உன்னை-நேசித்தே-பே-ன்-கருத்து-திரி.705/