ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிழை திருத்தம்

Status
Not open for further replies.

Naga Novels

Active member
Wonderland writer
வணக்கம் நட்பூக்களே 🙏


பிழை திருத்தம்


நாம் படிக்கும் காலங்களில் பாடங்களில் நிறைய பிழை கண்டிருப்போம் ,அதை எளிதாக திருத்தியும் இருந்திருப்போம்.

அதேபோல் வாழ்க்கையிலும் பிழைகள் வருவதுண்டு,

வாழ்க்கையில் சில பிழைகள் திருத்திக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும், அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால், வசந்தமே.

திருத்திகொள்ள தவறியவர்கள் வாழ்க்கையே சிலநேரம் பிழையாகி போய்விடுகிறது.

நம் கதையிலும் அப்படி தான், நமது ஜோடிகளின் வாழ்க்கையில் பிழை ஏற்படுகிறது, அந்த பிழை திருத்தப்படுகிறதா?
இல்லை வாழ்க்கையே பிழையாகி விடுகிறதா? என்பது இவர்கள் வாழ்வதில் தான் இருக்கிறது.

அழகான எழில் கொஞ்சும் ஊர் தேனி தாங்க இவங்க ஊர் , இவங்க சாதாரண குடும்பம் இல்லைங்க ,தலைமுறை தலைமுறையா அந்த ஊர்ல பேர்பெற்று வாழ்ற பெரிய தலைகட்டு.
அண்ணன் ,தம்பி, மாமன் ,மச்சான் மதினி ,நாத்தனார், கொண்டவா, கொடுத்தவான்னு எக்கச்சக்க வலசல்கள் இருக்கிற குடும்பம்.

படிச்சவகன்னு பார்த்தா , அந்த குடும்பத்துல,இப்போ உள்ள தலைமுறை மட்டும் தான் படிச்சு இருக்கு, அதுக்கா குடும்பமே படிக்காத தர்குறி மனுசங்க இல்லை, படிச்சவங்க தோத்து போற அளவுக்கு வாழ்ந்துட்டு இருக்குற பண்புள்ளவங்க.

குடும்ப தொழில் ரைஸ்மில் வச்சுருக்காங்க அது போக சில டென்டர்கள் எடுத்து செய்றதுன்னு ஊருக்கு தேவையான நல்லத பார்க்குறாங்க.

இந்த குடும்பத்தோட மூத்த விழுதுகள் குலசேகரபாண்டியன், வீரமுத்தமாள் ,இவர்களுக்கு,பசுபதி, ரகுபதி ன்னு இரண்டு பசங்க ,லெட்சுமி ன்னு ஒரு பொண்ணு.

லெட்சுமிய சொந்ததுல தான் கட்டி கொடுத்து இருக்காங்க பக்கத்து ஊருக்கு தான்.

பசுபதியும், ரகுபதியும் அண்ணதம்பிகள் கல்யாண ஆனவுடன் பங்காளிகளா மாறிடக்கூடாது குடும்பம் பிரிஞ்சிடக்கூடாதுன்னு, ஒரே வீட்டு பொண்ணுங்கள தான் கல்யாணம் பண்ணிருக்காங்க, அமிர்தவள்ளி, யோகவள்ளி.

அக்கா அமிர்தவள்ளி, பசுபதியையும், தங்கச்சி யோகவள்ளி ரகுபதியையும் கல்யாணம் பண்ணிருக்காங்க.

குடும்ப வாரிசுகள் ,
பூபதி பாண்டியன்,( பசுபதி,அமிர்தவள்ளி)
சபரிநாதன் @ சபா(ரகுபதி, யோகவள்ளி)
லக்க்ஷனா @ லக்கி(லெட்சுமி,தனராஜ்)

இப்போதைக்கு இவங்கள மட்டும் தெரிஞ்சுகோங்க, மத்தவங்க எல்லாம் கதையோட ஓட்டத்துல உங்களுங்கே தெரியும்.

கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது ,கைகலப்புக்கும் பஞ்சம் இருக்காது

இதுக்கு மேலே ....
என்னத்த சொல்ல , நீங்களே படிச்சுகோங்க அதான் உங்க தலைவிதி 😄😄😄 என்ன ஆரம்பிக்கலாமா 😄😄😄😄
 

Attachments

  • ei3LYE841410.jpg
    ei3LYE841410.jpg
    725.2 KB · Views: 7

Naga Novels

Active member
Wonderland writer
அத்யாயம் 💕1

"மானூத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர்சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசுகொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே"



"இந்தா பாட்ட போட்டுடாங்கல்ல ,பாரதிராஜா படம் எடுத்தாலும் எடுத்தார் , என்னமோ இவங்களுக்கே பட்டா போட்டு கொடுத்த மாதிரி ,கல்யாணம் பண்ணி கொடுத்து அனுப்பும் போது ஒருபாட்டு இப்ப குழந்தை பெத்ததுக்கு ஒரு பாட்டுன்னு ,எப்ப பாரு இந்த படத்தோட பாட்ட போட்டு கொள்ளுராங்கபா ச்சை" என தனராஜ் தலையில் அடித்து கொண்டார்.


தனராஜ் சலிப்பை பார்த்த லெட்சுமி ,
"யோவ்,என் அண்ணன்மார்கள் மேலே ஏன்னயா பொறாமை,உம்மருக்கு தான் அக்கா தங்கச்சி யாரும் இல்லை,ஒத்தகட்டையா இருக்கீரு, ஏதோ என் ஐய்யன் தங்கச்சி சாவக்கிடக்குதே உறவு வுட்டு போவகூடாதுன்னு ,
அந்த மனுசி மேல வச்ச பாசத்துக்காக உம்மருக்கு கட்டி வைச்சுபுட்டாக , என் அண்ணமார்க மட்டும் இல்லைனா நீர் இழுத்துட்டு வர பஞ்சாயத்துக்கு எவனாட்டு போட்டு தள்ளிருப்பானுவ "


என மூச்சு வாங்க பேசிய தன் மனைவியை ,வாயில் கை வைத்த படி பார்த்து கொண்டே "அடியே ,அடியே இம்புட்டு நேரம் மியாவ், மியாவ்ன்னு மொனங்கி கிட்டு கிடந்த, இப்ப என்னடி எட்டுவூர்க்கு சவுண்ட் கேட்கிற மாதிரி பேசுற " என்று லெட்சுமியை மேலும் கீழும் பார்த்தார்.


"அது அது , உங்க அப்பாரு வீட்டு வலசல் வந்திருந்தாகல்ல, அதுவும் உங்களுக்கு சின்ன சித்தப்பா மகா அந்த முண்டக்கண்ணி மூக்கம்மா, அவா கண்ணு இருக்கே, கொள்ளி கண்ணு நான் தெம்மா இருக்கிறது தெரிஞ்சா ,பார்வையிலையே ஆள சாச்சி புடுவா அதான் கொஞ்சம் மேலுக்கு முடியாத மாதிரி கிடந்தேன்" என்று தன் மேல் உள்ள போர்வையை சரிசெய்துகிட்டே சொன்னவளிடம்,


"அதுசரி, எங்க வலசல் எல்லாம் வஞ்சனம் புடிச்சவுக , இவா வலசல் மட்டும் அப்படியே அளிக்கொடுத்துடு வாங்க, என் ஐய்யன் சொன்னுச்சு உன் ஆத்தா சொந்தம் வேண்டாம்டா, என் தங்கச்சி பொண்ண கட்டிக்கோன்னு கேட்டேனா நானு வெள்ளத்தோல்க்கு மயங்கிட்டேன், ம்ம்ம்" என்று தனராஜ் இடம் இருந்து பெருமூச்சு வர


"என்ன மாப்புள சத்தம் சந்தி வரை கேட்குது" என்று கதவை திறந்து கொண்டு பசுபதி உள்ளே வர


"ஒண்ணும் இல்லை மச்சான் சும்மா உங்க பெருமைய பேசிட்டு இருந்தேன்" என தனராஜ் கூறிவிட்டு லெட்சுமி படுத்திருந்த கட்டிலுக்கு அடுத்த பக்கம் போய் கையை கட்டி நின்று கொண்டார்.


"அண்ணேன் வா ணே" என லெட்சுமி படுக்கையில் இருந்து எந்திரிக்க போக ,


"அம்மாடி அம்மாடி , புள்ள பெத்த உடம்பு படுமா எந்திரிக்காத , என லெட்சுமி தலையை நீவி விட, அருகில் அமிர்த வள்ளியும் வந்து நின்றார்.


"என்ன புள்ள உடம்பு எப்படி இருக்கு" என கேட்ட அமிர்த வள்ளியை பார்த்து,


"வாங்க மதினி" என அழைத்து விட்டு, அண்ணே எங்க சின்ன அண்ணன காணோம்,சின்ன மதினிய காணோம்" என அறை வாசல் புறம் தேட


"க்கும், அவன் இன்னேரம் எங்கனக்குள்ள உரண்டை இழுத்துட்டு திரியுறானோ" என தனராஜ் வாய்குள்ளே முனங்கினார், சத்தம் வெளியே வந்தா சட்டினி ஆகிடுவோம்னு பயபுள்ளைக்கு பயம்.


"அதுவா " என பசுபதி ஆரம்பிக்கும் முன்னே,


"எவன் அது, நாங்க எத்தனை பேரும்னாலும் வருவோம், எப்ப வேண்ணும்னாலும் வருவோம் உள்ளே உடன் மாட்டேன் சொல்லுறுதுக்கு நீயாரு , தொலைச்சுபுடுவேன் தொலைச்சு " என்று சண்டை போட்டு கொண்டு இருந்த ரகுபதியை இழுக்காத குறையாக இழுத்து வந்தார் யோக வள்ளி ,


"இந்த மனுசனோட, நாளும் இதே பாடு ,ஏங்க நம்ம புள்ள இங்க இருக்கு அதிகமா பேசாதீங்க" என அவரை இழுத்து கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.


பசுபதி அமைதி,ரகுபதி அடாவடி ,லெட்சுமிக்கு தன் பெரிய அண்ணன் பாசம் மரியாதை இரண்டும் இருக்கும் ,சின்ன அண்ணன் மேல அளவு கடந்த பாசம் மட்டும் இருக்கும் ,மரியாதை எல்லாம் மறந்தே போய்விடுவாள்.


"சின்னவனே" ,என அழைத்த தங்கையிடம் ஓடி வந்தவன் அவள் கையை பிடித்து கொண்டு "ஆத்தா , எப்படி தா இருக்க " என கேட்கவும்.


"நான் நல்லா இருக்கேன் மொதல்ல, உங்க மருமவளபாருங்க " என தொட்டிலை கை காட்ட ,


தொட்டிலில், வெள்ளை தாமரை போல் படுத்திருந்தது ஒரு வெண்ணிலா, அதை கையில் தூக்கிய பசுபதி ,"அடியே அமிர்தம் என் மருமவள பாரு மகாலெட்சுமி மாதிரி இருக்கா " என கூறிவிட்டு ரகுபதி கையில் தந்தார் ரகுபதி ,யோகம் கையில் யோகம் தன் அக்கா அமிர்தம் கையில் கொடுக்க குழந்தை கைமாறி கைமாறி போவதை கண்ட செவிலி ,


"ஏங்க என்னங்க பண்ணுறீங்க, பச்ச குழந்தைங்க இத்தனை பேரு தூக்குனீங்கனா ,அதுக்கு மேலு வலிக்கும் , தொட்டில்ல படுக்க வைங்க " என கூறவும் அவரை ஒரு முறை முறைத்த ரகுபதி கையை கிள்ளி விட்டார் யோகம்.


"ஏன்டா , இப்படி அந்த பொண்ண முறைக்குற ரவுடி பயலே ,அது சரியாதான சொல்லுது,உன் தங்கச்சி என்னியவே இரண்டு நிமிஷதுக்கு மேல தூக்கவுடலையா சதிகாரி அண்ணனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம் " என தன்ராஜ் மனதில் நினைத்து கொண்டார்


"ஏக்கா, அவுக சொல்லுறதும் சரிதான் புள்ளைக்கு மேலுக்கு முடியாம போயிடப்போகுது ,நீ தொட்டில படுக்கவை " என்றவுடன் அமிர்தம் தொட்டிலில் படுக்க வைத்தார் குழந்தையை அது நல்ல திராட்சை பழ கண்ணோடு முழித்து கொண்டிருந்தது.


"ஏண்ணே, புள்ளைக்கு சேன தண்ணீ தொட்டு வைண்ணே" என்றாள் .


பசுபதியும் சேன தண்ணீ தொட்டு வைத்து விட்டு தங்க சங்கிலி போட்டு விட்டார்.


அடுத்து ரகுபதி சேன தண்ணீ தொட்கு வைத்து இடுப்பில் தங்க கொடி போட்டு விட்டார்,


இரண்டு மதினி மார்களும் , தங்க வளையலும் , கொலுசுமாக மாட்டி விட்டனர்.


இதை பார்த்த தன்ராஜ், "அடப்பாவிகளா பொறந்த குழந்தைய இப்படி நடமாடும் நகைகடையா ஆக்கிட்டீங்களடா, நீங்களும் உங்க செய்முறை சீதனமும், ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா" என மானசீகமாக தலையில் அடித்து கொண்டார்.


அந்த குடும்பத்தில் அவர் மட்டுமே பெரிய படிப்பு படித்தவர் ,அதாவது +2 .கொஞ்சம் முற்போக்காக யோசிப்பவர் சில பல பஞ்சாயத்து களை நல்ல முறையில் பேசியே தீர்த்து வைத்து விடுவார் , அதை தாண்டி கைகலப்பாக மாறும் போது , மச்சான்மார்கள் அவருக்கு பாதுகாப்பு வேலியாக நிற்பர்.

" அண்ணே ,என் மருமகங்கள எங்க ? " என கேட்கவும்.

"என் தம்பி பச்சக்கிளி கூப்பிட போயிருக்கான்" என சொல்லி முடிக்கவும்,

அறைக்கு வெளியே சண்டை சச்சரவு போல சத்தம் வரவும்

"இதோ ஆரம்பிச்சுடானுகல்ல இவனுகலுக்கு வேற வேலையே இல்லை " என அனைவரும் வெளியே எட்டிபார்க்க..

பார்த்துட்டே இருங்க அடுத்த எபில தெரியும்😀😀😀😀

நட்பூக்களே வழக்கம் போல உங்கள் ஆதரவை தெரிவியுங்கள் 🙏🙏🙏

அடுத்த எபில பார்ப்போம் வர்ட்டா....... ஆ..ஆ...ஆ.😀😀
 

Naga Novels

Active member
Wonderland writer
அத்யாயம் 💕2

அறைக்கு வெளியே வாக்குவாதமும் ,
சண்டையிடும் சத்தமும் கேட்டு,அனைவரும் வெளியே வந்து பார்த்தனர்.

"இவனுங்க மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்களா" என அமிர்தம் தலையில் அடித்து கொள்ள,அப்படி என்னதான் நடந்ததுன்னு பார்த்தா,

இரண்டு பசங்க பள்ளி சீருடையில் ஒருவன் சட்டையை மற்றொருவன் பிடித்து சண்டையிட்டு கொண்டனர்.

அதை ஒரு அப்பாவி ஜீவன் பள்ளி பைகளை இரு கைகளிலும் சுமந்த படி சண்டையை விலக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.

அது வேற யாரும் இல்லை அவரு பெயர் தான் மிஸ்டர் .பச்சை கிளி ,குலதெய்வம் பேருன்னு வைச்சுருக்காங்க சாருக்கு.

ஐய்யாவுக்கு படிப்பு வரல ,கழுத படிக்காம, கம்மா ,வயக்காடு, படித்துரைன்னு சுத்திட்டு அலைஞ்சுது ,சரி உருப்படாம சுத்திட்டு அலையுறதுக்கு, தன்னோட இரண்டு பொண்ணுங்களுக்கு கூட மாட ஒத்தாசையா இருக்கட்டும்னு,மிஸ்டர் பச்சை கிளிய கல்யாண சீர் வரிசையில ஒண்ணா இங்க அனுப்பி வச்சுட்டாங்க, வயசு என்னமோ 18 தான் ஆனா பச்சபுள்ள கூட அறிவுரை சொல்லுற அளவுக்கு தான் சார் நடந்துப்பார்.

மிஸ்டர், பச்சை கிளிய பத்தி போக போக உங்களுக்கே தெரியும்.

சரி இங்க இரண்டு நண்டு,சிண்டு சண்டை போட்டுச்சே ,அது தான் நம்ம பசுபதி, ரகுபதி பெத்து போட்ட முத்துக்கள்.

மூத்தவன் பூபதி பாண்டியன், இளையவன் சபரிநாதன், இல்லை, இல்லை மூத்தவன் இளையவன் கிடையாது , இரண்டும் ஒரு மணிநேரம் முன்ன பின்ன பொறந்ததுங்க .

அக்கா, தங்கச்சிங்க ஒண்ணா கல்யாணம் முடிச்சு, ஒண்ணா புள்ள உண்டாகி, ஒண்ணாதேன் மருத்துவமனையில சேர்ந்துங்க,

ஆனா மூத்தவளுக்கு வலி வந்தாலும் பிரசவத்தில சிக்கல் வந்துட்டு, அதனால அவளுக்கு ஆப்ரேசன் பண்ணி பூபதி பாண்டியன வெளியே எடுத்தாங்க,

அதிலிருந்து ஒரு மணிநேரத்துல ,இளையவளுக்கு சுக பிரசவத்துல சபரிநாதன் பொறந்தான்.

இதுக்கும் ,இவங்க சண்டைக்கும் என்ன சம்பந்தம் தானே யோசிக்கீங்க,

அது... விவரம் தெரிய ஆரம்பிச்ச நாள் , இரண்டு பேரும் வீட்டு முத்தத்துல விளையாடிட்டு இருந்தானுங்க,

அப்போ தோட்டத்தில இருந்த குலசேகர பாண்டியன், "அடேய் மூத்தவனே இங்க வா" என விளையாடிட்டு இருந்த பையங்களை பார்த்து கூப்பிட ,இரண்டும் ஓடி வந்து
"என்ன தாத்தா" ன்னு கேட்க ,அவரு மனுஷன் வாயவச்சுட்டு சும்மா இருக்காம ,

"எய்யா நான் மூத்தவன்னு பூபதியலா கூப்பிட்டேன்" ன்னு சொல்லவும் , சின்னவனுக்கு இல்லை இல்லை சபாக்கு கோபம் வந்து பேச ஆரம்பித்தானே பார்க்கனும்.

"தாத்தா , நான் தான் தானா பொறந்தேன், அவன ஆப்ரேசன் பண்ணி எடுத்தாங்கன்னு,அப்பத்தா சொல்லிச்சு, அப்படி பார்த்தா அவன வேணும்னு தான எடுத்து இருக்காங்க, என்ன மாதிரி பொறக்க வுட்டா அவன் எனக்கு அப்புறந்தேன் பொறந்துருப்பான், கணக்கு பார்த்தா நான் தான் மூத்தவன்,அவன் எனக்கு இளையவன்னு" பயபுள்ள தாத்தாவ புடி புடின்னு ஒரு புடி படிச்சுடுச்சு.

குலசேகரன் பாண்டியன் இவன் பேசுனத பார்த்து வாயில கைவச்சு அசந்துட்டாரு என்ன அறிவுடான்னு , இதே சமயம் பூபதி சட்டுன்னு சபா சட்டைய புடிக்க , நான் தான் மூத்தவன் நான் தான்னு இரண்டு பயபுள்ளைகளும், யூ.கே,ஜி படிக்கும் போது ஆரம்பிச்ச சண்டை ,இன்னிக்கு இரண்டு பேரும் இரண்டாம் கிளாஸ் படிக்காங்க இன்னும் தொடருது.

"அடேய் ,அடேய் , ஏன்டா என்னத்துக்குடா இப்படி சண்டை போடுறீங்க"ன்னு , அமிர்தம் சபாவ பிடிச்சு இழுக்க, யோகம் பூபதிய பிடிச்சு இழுத்தனர்.

"சொல்லுங்கடா இங்க வந்தும் சண்டையா ,எதுக்கு சண்டை? " என யோகவள்ளி கேட்கவும்.

"சித்திமா, பாப்பாவ நான் முதல்ல பார்ப்பேன் ,நாதானே மூத்தவன்" என சத்தம் போட்டும், திமிரிக்கொண்டும் சொல்ல,

"பெரிம்மா, நாதானே மூத்தவன் நான் தானே முதல்ல பார்க்கனும் சொல்லுங்க என தன் பள்ளி சீருடையை சரிசெய்து கொண்டே அமைதியாக கூறினான் சபா.

இதை கேட்ட இரண்டு வள்ளிகளும் , தலையில்
அடித்து கொண்டனர்.

சத்தம் கேட்டு வெளியே வந்த பசுபதியும் ,ரகுபதியும் , வந்து ஆளுக்கொரு பையனை தூக்கி சமாதானம் செய்து கொண்டே அறைக்குள் சென்றனர்.

பசுபதி, சபாவை தூக்கிகொண்டார், ரகுபதி பூபதியை தூக்கி கொண்டார்.

என்ன முழிக்கிறீங்க, அப்படி எல்லாம் முழிக்கப்பிடாது ஏன்னு விளக்கம் தாரேன்.

பசுபதி, ரகுபதி யோட மகனா இருந்தாலும் தன்னை போல் அமைதியாக நிதானமாக, அதே சமயம் சமயோசிதமாக பேசும் குணம், யோசிக்கும் குணம், விவேகமா இருக்கிறதுனால பசுபதிக்கு சபாவ ரொம்ப பிடிக்கும்.

அதே போல தான் ரகுபதிக்கு, பூபதி எதுக்கும் பயப்படாம ,நல்லா தில்லா உரக்க பேசுற பேச்சு அந்த தோரண அந்த வீரம் அதான் பூபதிய ரகுபதிக்கு ரொம்ப பிடிக்கும்.

என்ன புரிஞ்சுதா , அண்ணணுக்கு தம்பி மகனா உசுரு, தம்பிக்கு அண்ணன் மகன் மேல உசுரு .

இதுக்கு நடுவுல இந்த இரண்டு வள்ளிக தான் சில்லி, சில்லியா சிக்கி சின்னா பிண்ணமாக மாறுங்க.

அதவிடுங்க இரண்டும் உள்ளே போயி என்ன அக்கபோரு பண்ணுதுகன்னு பார்ப்போம்.

இரண்டு பசங்களை பார்த்ததும்,
" மருமகன்களே வாங்கயா இரண்டு பேரும் வந்து பாருங்க பாப்பாவ " என லெட்சுமி கூப்பிடவும் .

இரண்டும் ஒருத்தனை ஒருத்தன் இடித்து தள்ளிக்கொண்டு தொட்டில் பக்கத்தில் வந்து நின்றனர்.

அந்த மாம்பிஞ்சு இரண்டு பேரையும் பார்த்து அழகாக சிரித்தது.

"அட பாருண்ணே இவ்வளவு நேரம் நாமும் தூக்கி வச்சு கொஞ்சினோம் சிரிச்சாளா , இப்போ மச்சான் மார்கள பார்த்தவுடன் எப்படி சிரிக்குறா அடியாத்தே " என லெட்சுமி தன் மகளுக்கு நெட்டி முறிக்க.

"ஏண்டி அது பச்ச மண்ணு அதுக்கு எப்படி டி மச்சான் ,மாமன்னு தெரியும், ஆனாலும் இது உனக்கே ஓவரா தெரியல " என்று லெட்சுமி காதில் தன்ராஜ் கிசு கிசுக்க.

"யோவ் வாய மூடிட்டு சும்மா இரும் இல்ல என் ஆத்தா வீட்டுக்கு போறவ வரமாட்டேனாக்கும் ஆமா " என மிரட்டவும்,

"எப்பபாத்தாலும் திட்டி,சண்ட போட்டுட்டே இருக்க டி நீ என் மேல பாசமே இல்லையா உனக்கு, தாயில்லா புள்ளடி நான்" என பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறினார்.

"போதும் போதும் இந்த பாசம் உம்மருக்கு" ன்னு புண் சிரிப்புடன் குழந்தைகள் பக்கம் திரும்பினார் லெட்சுமி.

கொஞ்சி கொண்டே இருந்தாதான் பாசமா, திட்டி, சண்டை போட்டு கொள்வதும் ஒரு வித பாசம் தான் காதல் தான்.

வீல்..ன்னு குழந்தை அழும் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர்..

அடேய் ,அடேய் கொஞ்சம் டயலாக் பேசவுடுறீங்களாடா என்னய, உடனே எழரைய கூட்டிடாங்களே ....🙄🙄🙄🙄

என்னானு அடுத்த எபில சொல்லுறேன் மக்களே..... 🤪🤪🤪🤪

என்னாத்த பண்ணி வச்சாய்ங்களோ ரீடர்ஸ் மைண்ட் வாய்ஸ்😀😀😀😀

நட்புடன்
💙 நாகா 💙
 

Naga Novels

Active member
Wonderland writer
பிழை திருத்தம் 💕3

குழந்தை வீரிட்டு அழுத சத்ததில் அனைவரும் திரும்பி குழந்தையை பார்த்தனர்.

குழந்தை விடாமல் அழுது கொண்டு இருந்தது.

"டேய் என்னடா நடந்துச்சு, பாப்பா நல்லா தானே சிரிச்சிட்டு இருந்தா இப்போ ஏன் அழுகுறா " என்று அமிர்தவள்ளி குழந்தையை தூக்கினார்.

"ஆ...ஆ.ஆஆ.. ம்.ம்.ம் வேண்டாம் மா வேண்டாம் அழதாமா " என தோளில் போட்டு அதன் முதுகை தடவி விட்டு சமாதானம் செய்து கொண்டே,

"எவனாட்டு சொல்லுங்கடா என்ன பண்ணிங்க" என கேட்டார்.

சபா வேகமா " பெரியம்மா பாப்பா என் கையை பிடித்து ஆட்டி விளையாடிட்டு இருந்தாளா , இவன் இந்த பூபதி வேண்டும்னே பாப்பா கையை பிடிச்சு இழுத்து விட்டுட்டான் மா அது வலிக்குது போல " என பாவமா முகத்தை வைத்து கொண்டு அதுவும் மிக தெளிவாக அனைவரும் நம்பும் படியாக கூறினான்.

இதை கேட்ட பூபதி, "யம்மா இவன் , பொய் சொல்லுறான் ,பாப்பா என் கைய தான் புடிச்சு இருந்தா இவன் தான் பொறாமையில இப்படி பண்ணி அழவச்சுட்டான் " என்று சொன்ன தோடு நிறுத்தி இருந்தால் அனைவரும் நம்பி இருப்பார்கள் ,ஆனால் பூபதியோட கெட்டநேரம் அவன் முன் கோபத்தில வந்து நின்றது.

பேசிக்கொண்டு இருந்தவன் பட்டென்று சபாவை அடித்து விட்டான்.

இதை பார்த்து கோபமான பசுபதி ,சட்டென்று பூபதி காதை பிடித்து திருகி " அப்படி என்னடா இந்த வயசுலேயே உனக்கு இவ்வளவு கோபம்" என திருக.

"அப்பா விடுங்க ,நான் தப்பு பண்ணல ,அவன் போய் சொன்னா அடிச்சேன்" என கதறவும் ,

"அண்ணே , புள்ளைய விடுங்க " என ரகுபதி பூபதியை தூக்கி கொண்டான்.

டேய் ரகு நீ கொடுக்குற செல்லம் தான் உன்ன மாதிரியே முன்கோபகாரனா, மடையனா இருக்கான்.இந்த வயசுலயே சொந்த தம்பியையே இவன் கை ஓங்குறானா, இன்னும் வளந்தவுடன் என்ன பிரட்சனை, அடிதடில இறங்குவானோ " என கூறிவிட்டு தலையில் அடிக்க,

அவர் சொன்ன தம்பி என்ற வார்த்தையில், வெடுக்கேன அவரை பார்த்த சபா ,கொஞ்சம் கடுப்பானாலும் ,பின் பூபதி வாங்கிய திட்டில் மனம் குளிர்ந்து , சந்தோஷ பட்டு போனான்.

ஏன் சந்தோஷ படமாட்டான் ,அதுவந்து என்ன நடந்ததுனா, இவங்க இரண்டு பேரும் புள்ளைய கொஞ்சிட்டு இருந்தாங்களா, அப்போ அந்த நண்டோட பிஞ்சு கையை தொட்டு பார்க்க ஆசைபட்டு பூபதி அவன் விரலை வைத்து லேசாக தொட்டான்,

பூபதி விரல் படவும் அந்த மொட்டு சட்டென அவன் விரலை கெட்டியா பிடிச்சு கிட்டு அவன் முகத்தை பார்த்து சிரித்து கொண்டிருந்தது,

இதை பார்த்த சபா வேண்டும் என்றே தன்னோட விரலை அந்த குட்டி கையில வைக்க அது பார்க்கவே இல்லை, அதில் முகம் சுனங்கியவன், அந்த குட்டியோட கையை பிடித்து விரல்களை பிரித்து அதுக்குள்ள தன் விரலை நுழைத்தான் ,அப்படியும் அந்த வாண்டு பிடிக்கவும் இல்லை, அவன் முகத்தை பார்க்கவும் இல்லை, அது பூபதிய பார்த்து தான் சிரிச்சிட்டு இருந்துச்சு.

இதுல சபா சார் கடுப்பாகி , பூபதி விரலையும் ,குட்டி விரலையும் கொஞ்சம் கடுமையா பிரிச்சு விடவும் தான் அந்த நண்டு வீல்னு அழ ஆரம்பிச்சுட்டு.

எல்லாரும் பார்க்கவும் தான் டக்கென பிளேட் மாத்தி போட்டு எஸ் ஆனது.

அறைக்குள் அதிகப்படியான சத்தம் கேட்கவும் ,உள்ளே வந்த மருத்துவர்,
என்ன நடக்குது இங்க ஒரு பேசன்ட சுத்தி எத்தனை பேரு நிக்கீங்க, இங்க என்ன நீங்க மட்டுமா இருக்கீங்க ,மத்த பேசண்ட்டும் இருக்காங்க, உங்களுக்கு வேணா உங்க தங்கச்சி பெருசா இருக்கலாம் எங்களுக்கு எல்லா பேசன்ட்டும் ஒண்ணு தான் எல்லாரும் வெளியே போங்க " என கூறிவிட்டு , லெட்சுமிய சோதித்து விட்டு ,

செவிலி இடம் "இவங்கள நாளைக்கு டிஸ்ஜார்ஜ் பண்ணிடுங்க, கிரவுட் அ கிளியர் பண்ணிட்டு, குழந்தைக்கு பிளட்குரூப் செக் பண்ணிடுங்க " என கூறிவிட்டு வெளியே நடந்தார்.

செவிலி தயக்கத்துடன் ரகுபதியை பார்க்க, அவர் பூபதியை தூக்கி கொண்டு வெளியே நடந்தார்.

மற்றவர்களும் அப்படியே வெளியே சென்றனர்.

"சரி லெட்சுமி மா உடம்ப பார்த்துகோ ,மதினி மதியம் சாப்பாடு கொண்டு வருவாள்" என கூறிவிட்டு பசுபதியும் கிளம்பி விட்டார்.

"பார்த்து இருந்துகோ தா ,அண்ணே எதாட்டு வேண்டும்னா போன் பண்ணுங்க, நான் குடுத்துவிடுறேன், பச்சை கிளி இங்கு உங்களுக்கு கூட மாட இருக்கட்டும், நா வாறேன் " என அமிர்தமும் வெளியே சென்றார்.

அமிர்தம் வெளியே செல்லவும் தான், எப்பா என்னா ஒரு குடும்பம் என பெருமூச்சு விட்டார் தன்ராஜ்.

மறுநாள் விடிந்தது , லெட்சுமி டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்துவிட்டார்.

வந்ததுல இருந்து வீடே ஒரே அமளி துமளி தான் , இரண்டு அண்ணன்மார்களும், மதினிகளும் கையில் வைத்து தாங்கி கொண்டனர்.

பள்ளி முடிந்து வந்த இரண்டு மாமன் மக்ன்களும் பாடிகார்ட் மாதிரி, குழந்தைக்கு இந்த பக்கம், அந்தபக்கம் உட்கார்ந்து அதையே பார்த்துகிட்டு விளையாடிட்டு இருப்பாங்க.

மாதம் ஒன்றாகி குழந்தைக்கு பெயர் வைக்கும் நாளும் வந்தது.

ஐய்யர கூப்பிட்டு தடபுடலா ,நிகழ்ச்சிய ஏற்பாடு பண்ணாங்க,எல்லாரும் ஆளாளுக்கு ஒரு பெயர் சொல்லி இறுதியில் லக்க்ஷனா என்று முடிவானது .

பெரியவர்கள் குழந்தை காதில் லக்க்ஷனா என்று பெயர் கூறிவிட்டு இறுதியில் பூபதி, சபா விடம் வந்து நின்றார்கள், அதிலும் ஆரம்பித்தது சண்டை, முதல்ல யாரு நீ, நான் என்று.

ஒருவழியாக நந்தி காதில் வேண்டுதல் சொல்லுற மாதிரி வலது காதில ஒருத்தனும், இடது காதில ஒருத்தனும் ஒரே நேரத்தில சொல்லி முடிச்சாங்க.

அப்படி என்ன சொன்னாங்கன்னா ,
" லட்ச்சு சபாகூட நீ பேச கூடாது விளையாட கூடாதுன்னு,எனக்கு மட்டும் தான் நீ சொந்தம்" என்று பூபதியும்,

"லக்கி, அந்த பூபதி பக்கமே திரும்ப கூடாது ,அவன் உனக்கு வேண்டாம் சரியா ,நீ என் கூட மட்டும் தான் இருக்கனும் " என்று சபாவும் ,

அந்த பச்சபுள்ள காதில மிரட்டி வச்சாங்க..

அடேய் அது பச்ச புள்ளடா , அத போய் எனக்கு உனக்குனு பங்கு போடுறீங்க , நாதாரிகளா ,
அம்மாடி லக்ஷனா இந்த இரண்டு மாமன் மகன்களும் உன்ன படாத பாடு படுத்த போறாங்கன்னு நல்லா தெரியுது .

இப்பேவே இப்படினா ,வயசுபுள்ளையானா ?🤪🤪

பாவம் புள்ள 😀😀😀😀😀

நட்புடன்
💙நாகா 💙
 

Naga Novels

Active member
Wonderland writer
பிழை திருத்தம் 💕4

அந்தா இந்தானு வருஷம் 15 ஆகிட்டு, சபா என்ஜினீயரிங் முடிச்சு, சென்னையில ஒரு கார் கம்பெனியில டிசைனர் ஆ வேலை பார்க்கிறான்.

நம்ம பூபதி ஒரு டிகிரியோட ,அடி தடி ,கட்டப்பஞ்சாய்த்து, கூட போனா போகுதுன்னு அவங்க குடும்ப தொழில் ரைஸ் மில் அதையும் பார்த்துட்டு இருக்கான்.

அப்புறம் நம்ம லக்ஷனா ...

"அடியே லகக்ஷனா ,லக்ஷனா எங்க போயிட்டா இவ ?" என தேடிக்கொண்டு வந்தார் அமிர்தம், தலையில் ஆங்காங்கே ஒன்று இரண்டு வெள்ளை முடியுடன், வட்டு கொண்டை போட்டு வீட்டின் மூத்த மனிஷி என்பதற்கு அடையாளமாய் இருந்தாள்.

"யோகி, நம்ம லக்ஷனாவை பார்த்தியா? என அங்கு வரவேற்பறையில் தெய்வமான பெரியவர் குலசேகர பாண்டியன், மற்றும் வீரமுத்தமாள் படங்களுக்கு மாலை அணிவித்து கொண்டிருந்த யோகியிடம் கேட்டக,

"தெரியலக்கா , இங்க தான் புள்ளைகளோட விளையாடிட்டு இருந்தா எங்க போனான்னு தெரியலையே " என அவளும் அங்கலாய்க்க,

"இந்த புள்ளைக்கு கூறே இல்லை , எங்கனயாட்டு போனா சொல்லிட்டு போன்னு சொல்லிருக்கேன் " என்று சற்று கவலையாக பேசவும்.

"இங்கன தான் இருப்பா, நீ என் இவ்வளவு கவலைபடுத, அவ என்ன சின்ன புள்ளயா ?" என யோகி தன் அக்கா அமிர்தம் கையை பிடித்து ஆறுதல் கூற,

"அதானடி , என்னோட கவலை, அவ சின்ன புள்ளை கிடையாதுதான், அதே சமயம் பெரியவளும் கிடையாதடி, இரண்டு கட்டானா இருக்காளே 15 வயசு ஆகுது, இன்னும் பெரிய மனுஷி கூட ஆகல ,இப்பவோ ,எப்பவோன்னு இருக்கா ,இப்படி இவ பாட்டுல எங்கனயாது போயி எதாட்டு ஆகிட்டுனா ,அவளோட இரண்டு மாமாக்கும் என்ன பதில் சொல்ல ஆத்தாடி அவ்வளவு தான்" என அமிர்தம் படபடப்பாக கூறவும், சற்று யோகிக்கும் பயம் தொற்றியது,

"ஆமாக்கா, உன் புருஷன் அதான் பெரிய மச்சான் அவுகலாவது பரவாயில்லை, கொஞ்சம் யோசிக்கும், ஆனா என் புருஷன் இருக்காரே சண்டியர் அப்படியே என்ன பொலி போட்ரு வாரு " என யோகி அவ பங்குக்கு அவளோட சோக கதையை பேசிட்டிருந்த நேரம்,

நல்ல வாட்ட சாட்டமான காளை போன்ற உடற்கட்டுடன், அலைபாயும் கேசத்துடன், முருக்கி விடப்பட்ட மீசையுடன், அரை கை கருப்பு நிற சட்டை வெள்ளை வேட்டி , என தனது புல்லட்டை நிறுத்தி விட்டு, அதே கண்ணாடியில் மறுபடியும் தன் மீசையை முருக்கி விட்டபடி படியேறிய தன் மகனை பார்த்தனர் யோகியும், அமிர்தமும்.

" அக்கா , வேற வழி இல்லை பூபதி வர்றான், அவன போய் , எங்க இருக்கான்னு பார்த்து கூட்டிட்டு வர சொல்லுவோம், பொழுதடைய போகுது , கருக்கல் வர்றதுக்குள்ள லக்ஷனா வீட்டுகுள்ள வரனும் பார்த்துக்க" என யோகி ,அமிர்தம் காதை கடிக்க,அமிர்தம் பூபதியை அழைத்தார்.

அவனோ கடைவீதியில் பிள்ளைக கிட்ட சில்மிஷம் பண்ணவங்களை ,எலும்பை உடைத்து , புத்தூர்க்கு அனுப்பிட்டு ,உள்ளே வந்தவனிடம்

"எய்யா பூபதி ,இங்கன வாயா" என அமிர்தம் அழைக்க, அவரை நெற்றி சுருங்க பார்த்த பூபதி .

"என்ன இன்னிக்கு ,அழைப்பு எல்லாம் ஒரு வித்தியாசமா இருக்கு, இன்னேரத்துக்கு கடைவீதி நீயூஸ் இவுக காதுக்கு சுட சுட வந்துருக்குமே இரண்டும் சந்திரமுகி ஆகாம இருக்கு" என தன் தாடையை தடவி கொண்டே அவர்கள் இருவரிடமும் வந்தான் பூபதி .

"என்ன விஷயம் ,அக்காவும் தங்கச்சியும் நடுவீட்டுல மாநாடு போட்டுட்டு இருக்கீக" என தன் புருவம் தூக்கி கேட்ட மகனிடம் நடந்ததை கூறி அவன் செய்ய வேண்டியதையும் கூறினார்,அதை கேட்டவன் தன் வேட்டியை மடித்து கட்டி கொண்டே,

"ஹா, ஹா, மறுபடியும் வெளியே ஓடிட்டாளா, வேணும் உங்களுக்கு, ஒரு மனுஷன் காப்பி தண்ணீ கேட்டா அக்காளும் தங்கச்சியும் அவ்வளவு பிகு பண்றது, ஆனா அந்தம்மா வாய திறக்குறது குள்ள, ஹார்லிக்ஸ் வேணுமாமா, பூஸ்ட் வேணுமாமான்னு ஓவரா பண்றது" சிரித்துக் கொண்டே கூறியவனிடம்.

"மகனே மகனே சிரிக்காதடா உன் அப்பாரு வர்ற நேரமுடா வந்து பார்க்கும் போது லக்ஷனா இல்லைனா பேயாட்டம் ஆடிருவாரு டா , போடா போய் பார்த்து கூட்டியாடா", என அமிர்தம் கெஞ்சவும்

தன் தலையை இரு பக்கமும் ஆட்டிக்கொண்டே, "முடியவே, முடியாது அவளுக்கு செல்லம் குடுக்கீகள்ள நல்ல உங்க புருஷன் மார்க கிட்ட வாங்கி கட்டுங்க என நகரப்போனவனை ,

"அடேய், இப்ப நீ மட்டும் அவள பார்த்து கூட்டியரலைனா? என யோகி மிடுக்காக கேட்க

"கூட்டியரலைனா" என தலையை திருப்பி நக்கலாக கேட்டவனிடம்.

"ஒண்ணும் இல்லை மகனே, லக்க்ஷனா கடை தெருவுக்கு போகனும்னா ,நாங்க இரண்டு பேரும் உன் கூட பத்திரமா அனுப்பிச்சு வைச்சோம், நீ கடை தெருவுல சண்டை புடிச்சு பஞ்சாயத்து பண்ணதுல புள்ளய அங்கனையே மறந்து விட்டுட்டு வந்துட்டன்னு சொல்லுவோம், அப்புறம் என்ன நடக்கும்னு உனக்கே தெரியும் மை பிக் சன் " என யோகி கையை கட்டி கொண்டு பூபதியை பார்த்து கூறவும்.

அவனுக்கு பசுபதியும், அவர் கையில் உள்ள பெல்ட்டும் தான் கண் முன்னாடி வந்தது.

"அடங்கொப்பத்தா, அம்மா மாதிரியா பேசுற சித்திமா நீ, அக்காளும் தங்கச்சியும் பூலாந்தேவி அளவுக்கு பிளான் போடுறீகளே , ஆத்தாக்களா , அந்த பிசாசு எங்க இருந்தாலும் கூட்டிட்டு வந்து தொலைக்கிறேன் எல்லாம் என் நேரம்" என தன் தலையில் அடித்தவன் இரண்டு பேரையும் எவ்வளவு முறைக்க முடியுமோ அவ்வளவு முறைத்து விட்டு லக்ஷனாவை தேடி சென்றான்.

அவன் பேதியான மாதிரி ஓடவும் ,அமிர்தமும் ,யோகியும் சிரித்து கொண்டே, ஆடுற மாட்ட ஆடி கறக்கனும், பாடுற மாட்ட பாடி கறக்கனும்ங்கிறது சரி தாண்டி" , என்று அமிர்தம் யோகிய பார்த்து கூற,

"அதும் பூபதி மாட்ட இப்படி மிரட்டி தான் பணியவைக்கனும் , எத்தனை வருஷமா என் புருஷன் கூட குடும்பம் நடத்துறேன் இது கூட தெரியலனா எப்படி" என யோகி தன் முந்தானையை உதற,

"அப்போ கொளுந்தநாருக்கும் இதே டிரீட்மென்ட் தான் போல " என கிண்டலடித்து சிரித்து விட்டு இருவரும் தத்தம் வேலையை செய்தனர்.

வாசலுக்கு வந்து புல்லட்டை எடுத்தவன்" "அடியே ராட்சச்சி, உனக்காக என்ன மாட்டிவிடுதுக இந்த வள்ளிகள் இரண்டும், எங்கடி போய் தொலைஞ்ச ,எரும மாடு கையில மாட்டு கால கட் பண்றேன்" என ஆத்தரத்தோட லக்ஷனாவை தேடி சென்றான் பூபதி .

அடேய் ராசா அவளோட நகத்த கூட நீ கட் பண்ண முடியாது , நீ அவ கால கட் பண்ண போறீயா , பண்ணுடி பண்ணித்தா பாறேன் ,உன் அப்பமார்கள் இரண்டு பேரும் உன்ட எத கட் பண்ணு வாங்கன்னே தெரியாது 😄😄😄😄😄😄

நமக்கு எதுக்கு இந்த பஞ்ச் நாம சாலியா அடுத்த எபிக்கு வெயிட் பண்ணுவோம்.

நட்புடன்
💙 நாகா💙
 
Status
Not open for further replies.
Top