பிரம்மா 8
அதே சமயம், தனது ஆய்வுகூடத்தில் இருந்த சித்தார்த்துக்கு சற்றே நெருடலாக இருந்தாலும் அவளை இயல்புக்கு கொண்டு வர அவனும் இயல்பாக இருக்கவேண்டிய கட்டாயம். சாப்பிட்டு விட்டு அவளை அவன் அழைத்து இருக்க, உள்ளே நுழைந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. ஆம் அவன் கையில் அமர்ந்து இருந்தது என்னவோ பீட்டர் தான். அவளோ அவனையும் அவன் கையில் இருந்த எலியையும் மாறி மாறி மிரட்சியாக பார்த்தவளது கைகள் தானாக அவள் போட்டு இருந்த ஷேர்ட்டைப் பற்றிக் கொள்ள, அதைக் கண்டவனுக்கு மனதில் பாரம் ஏறினாலும் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டே அவளை விழிகளால் அருகே வரும்படி அழைத்தான். சுற்றி நிறைய பேர் நின்று இருக்க, அவளுக்கோ அன்று நடந்த போல ஏதும் நடந்து விடுமோ என்கின்ற பதட்டம் தான் உருவானது. சற்றே தயங்கி தயங்கி அவனை முறைத்துக் கொண்டே அடி மேல் அடி வைத்து அவனை நோக்கி நடக்க, அவனோ எலியை வருடிக் கொண்டே அவளை ஏறிட்டுப் பார்த்தவன் "எல்லாருக்கும் நாய் பூனைன்னு விதம் விதமா பெட்ஸ் இருக்கும். ஆனா என்னோட பெட் இந்த பீட்டர் தான். ஹீ இஸ் க்ளோஸ் டு மை ஹார்ட்.. நிறைய நாளா என் கூடவே இருக்கிறான்.. எப்போவுமே நான் செதுக்கிறவங்க கிட்ட அதிகமா அன்பு .வைப்பேன். அதுல இவன் முக்கியமானவன். எஸ் இவன் தான் முதல் முதலா என்னால ஜீனோம் எடிட்டிங் பண்ணப்பட்டவன்... சோ இவன் மேல ஒரு தூசு படக் கூட நான் விட்டது இல்ல... பட் ஐ க்னோ உனக்கு இவன் மேல கொலைவெறி இருக்கும்னு.. இவின் என் மேல கூட இருக்கும்.. என்னை காயப்படுத்தனும்னா உனக்கு இவனை விட்டா வேறு வழி இல்ல.. நீ இவனை என்ன பண்ண நினைக்கிறியோ பண்ணிக்கலாம்" என்று நீளமாகப் பேசியவன் கையில் இருந்த எலியை அவளிடம் நீட்டினான். அவளுக்கு அந்த எலி மீது கோபம் இருந்தாலும், வாயில்லாத ஜீவனை வதைக்கும் அளவுக்கு மனசாட்சி இல்லாதவள் அல்ல அவள்.
பெருமூச்சுடன் அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டே கையில் அவன் கொடுத்த எலியை வாங்கினாள். எலி என்றாலே காத தூரம் ஓடுபவளுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்று அவளுக்கும் தெரியவே இல்லை. அந்த எலியை முதன் முதலில் ஆழ்ந்து பார்த்தாள். அவள் விரல்களை முகர்ந்து பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க, அதன் செவி மற்றும் கால்கள் ஜீனோம் எடிட்டிங் காரணமாக பச்சை நிறத்தில் காட்சியளிக்க, அதுவோ அவள் உள்ளங் கையில் கன்னத்தை வைத்து உரச, அதன் நடவடிக்கையைப் பார்த்தவளுக்கு இதழில் ஒரு மென் புன்னகை தோன்ற அடுத்த கரம் கொண்டு அதனை வருடியவள் அவனிடம் அதை நீட்டிக் கொண்டே "அந்தளவுக்கு மனசாட்சி இல்லாத பொண்ணு இல்ல நான்" என்று சொன்னாள். அவன் இதழ்களில் ஒரு மென் புன்னகை தோன்றினாலும் அதனை வெளிக்காட்டாமல் எலியை வாங்கிக் கொண்டவன் "நீ போலீஸுக்கு தகுதியே இல்லாத பொண்ணு நீ, எப்படி தான் உன்னை செலக்ட் பண்ணுனாங்களோ தெரியல.. ஏதும் இன்ப்ளுவென்ஸ்ல உள்ள நுழைஞ்சியா?" என்று மனதில் தோன்றியதை கேட்டு விட, அவள் முகம் இறுகிப் போக "பாவமென்னு அத ஒண்ணும் பண்ணாம விட்டேன்.. ஆனா நீங்க என்னை திரும்ப திரும்ப மட்டம் தட்டுறீங்க சார்" என்று சொன்னாள் சற்று காட்டமாகவே. அவனுடன் ஏட்டிக்குப் போட்டியாக பேசிக் கொண்டு இருந்தவளுக்கு முதல் நாள் நடந்த சம்பவம் மனதில் இருந்து அகன்று அவளும் இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டு இருந்தாள். அவன் இயல்பு நிலைக்கு அவளை மாற்றிக் கொண்டு இருந்தான் என்று தான் கூற வேண்டும்.. அவனோ புருவம் சுருக்கி அவனைப் பார்த்தவன் "நான் எங்க மட்டம் தட்டுனேன்? போலிஸுக்கு தான் பொருத்தம் இல்லன்னு சொன்னேன். பட் ஒரு மகளா, நண்பியா, மனைவியா, தாயா இருக்க ரொம்ப பொருத்தமானவ.." என்று சாதாரணமாக சொல்ல, அவளோ அவனை விழி விரித்துப் பார்க்க, அவளுக்கோ அவன் வார்த்தைகளைக் கேட்டு மனதில் இனம் புரியாத உணர்வு தோன்றியது.
சட்டென தன்னையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவனிடம் இருந்து பார்வையை தாழ்த்திக் கொண்டவள் "அடுத்து என்ன பண்ணனும்?" என்று கேட்க அவனோ காவலாளிகளிடம் கண்களைக் காட்ட, அவர்கள் அவளை அங்கிருக்கும் பூச்செடிகளுக்கு நீர் ஊற்ற அழைத்து சென்றனர். அவனும் அவளுக்கென்று மென்மையான வேலைகளை ஒதுக்கி இருக்க, அவளும் செடிகளின் அழகையும் பூக்களின் அழகையும் ரசித்துக் கொண்டே அந்த வேலையை செய்ய போனள். போகும் போது அவள் முதுகை ஆழ்ந்து பார்த்த சித்தார்த்தின் இதழில் ஒரு மென் புன்னகை. அவனுக்கும் இன்று அவள் மீது உண்டான பரிதாபம் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ரசிக்கவும் வைத்தது. அதன் விளைவு ஆராய்ச்சி அறைகளுக்குள் நுழைந்தவனோ விஞ்ஞானிகளிடம் பேசிக் கொண்டே அடிக்கடி சி.சி.டி வி யைப் பார்த்துக் கொண்டான். அதில் அவள் பூக்களை வருடிக் கொண்டே பூங்காவில் இருப்பதைப் பார்த்தவன் இதழ்களில் அவனையே அறியாமல் ஒரு மென் புன்னகை. அங்கிருந்தவர்களுக்கு அவனை அடிக்கடி பார்த்துக் கொள்ள, அவர்களுக்கும் சித்தார்த்தின் இந்த மென்மை புதிது.
அதே சமயம், நரேனோ நடக்க இருக்கும் கருத்தரங்கில் பங்கு பற்றி அறிவை விருத்தி செய்கிறானோ இல்லையோ சித்தார்த்தை கொலை செய்து விட வேண்டும் என்று வெறியாக இருந்தான். அதன் விளைவாக அவன் வடநாட்டில் இருந்து ஒருத்தனை இறக்குமதி செய்து இருக்க, அவன் முன்னே இருந்தவனோ கையில் மூன்று விரல்களைக் காட்டிக் கொண்டு இருந்தான். ஆம் அவன் சித்தார்த்தைக் கொல்ல நரேனிடம் பேசிக் கொண்டு இருந்த பேரத்தின் மதிப்பு மூன்று கோடி.. நரேனோ "அடேய் ராம், இதெல்லாம் ரொம்ப ஓவர்டா, இங்க இருக்கிற முனியாண்டிக்கிட்ட சொன்னாலே பத்தாயிரத்துக்கு வேலையை முடிச்சு தருவாங்க" என்று அவன் சொல்ல அவனோ "சாரே, சித்தார்த் ஒன்னும் நம்ம ஊர்க்காரனுங்க போல இல்ல.. நஷனல் இல்ல இன்டெர்னஷனல் பர்சன்.. கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சுன்னா என்னோட உயிர் கூட போயிடும்.. கூட்டமா சேர்ந்து அவனைப் போட முடியாது.. தனியா தான் போடணும்... கூட்டாமா பிளான் பண்ணினா சீக்கிரம் மாட்டிப்போம்.. இந்த மூணு கோடி அவன் உயிரோட மதிப்பு மட்டும் இல்ல, என் உயிரோட மதிப்பும் கூட" என்று சொன்னவன் மேலும் "மூணு கோடின்னா டீல் ஓகே. இல்லன்னா நான் கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். நரேனோ ஆழமாக யோசித்தவனுக்கு சித்தார்த் இறந்தால் பல கோடி சம்பாதிக்க முடியும்.. இந்த மூன்று கோடி பெரிய பணம் இல்லை, என்று தோன்ற "ஓகே டீல்" என்று பெருவிரலை உயர்த்திக் காட்ட, புன்னகையுடன் அமர்ந்த ராம் "எனக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்ல ஒருத்தனோட ஹெல்ப் வேணும்" என்று சொன்னான். உடனே நரேனுக்கு பிரசாத்தின் நினைவு வர, அவனும் பிரசாத்துக்கு அழைத்து இருந்தான்.
அதே சமயம், கருத்தரங்கு நடக்க இருக்கும் நாளுக்கு மூன்று நாட்கள் முன்னர் அந்த இடத்துக்கு போலீஸ் காவலாளிகளுடன் வந்து இருந்தான் அஜய். அருகே நின்ற போலீஸ்காரனிடம் "இந்த இடத்தை சுற்றி இருக்கிற எல்லா பில்டிங்லயும் நம்ம ஆட்களை விட்டு கிளியர் பண்ணியாச்சா?" என்று கேட்க அவனோ "எஸ் சார், எல்லாமே நீங்க சொன்ன போல பக்காவா பண்ணியாச்சு" என்று சொன்னான். உடனே அஜய், "இது இன்டெர்னஷனல் கன்பெரன்ஸ், உலக நாடுகள் எல்லாமே வாட்ச் பண்ணிட்டு இருக்கு. ஒரு சின்ன பிரச்சனை வந்தா கூட நம்ம டிபார்ட்மென்டுக்கு ப்ளக் மார்க் ஆயிடும்.. சோ ரொம்ப அடெண்டிவ் ஆஹ் இருங்க.. நம்ம கொடுத்த போலீஸ் பேட்ச் இருக்கிறவங்க தவிர யாருமே வர்ற வி.ஐ.பி ஸ் கிட்ட நெருங்கக் கூடாது.. அது எந்தப் பெரிய போலீஸ் ஆபீஸரா இருந்தா கூட பேட்ச் இல்லாம உள்ளே விடக் கூடாது.. ஏன்னா கல்ப்ரிட்ஸ்க்கு போலீஸ் கெட்டப்ல உள்ளே நுழையுறது ரொம்ப ஈஸி.. அண்டர்ஸ்டாண்ட்?" என்று கேட்க அவனோ "எஸ் சார்" என்று சொன்னான்.
ஆம் அவன் குற்றவாளிகளைப் பற்றி சரியாகத் தான் கணித்து இருந்தான். போலீஸ் கெட்டப்பில் தான் ராமும் உள்ளே நுழைய நினைத்து இருந்தான். மாணவர்களும் விஞ்ஞானிகளும் மற்றும் வி.ஐ.பி களின் காவலாளிகளும் கூட அக்குவேறு ஆணிவேறாக பரிசோதிக்கப்பட்டுத் தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வி.ஐ.பி க்கள் கூட தங்களுடன் இரு காவலாளிகளை மட்டுமே அழைத்து வர அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்களுக்கான மேலதிக பாதுகாப்பை போலீஸ் டிபார்ட்மென்ட் வழங்கும் என்று உறுதி மொழி அளிக்கப்பட்டு இருக்க, வி.ஐ.பி க்களுடன் கூட வரும் காவலாளிகள் பற்றிய விபரங்கள் அனைத்தும் இரு நாட்கள் முன்னரே போலீஸ் கமிஷனரிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அவர்களும் அந்த காவலாளிகளின் பூர்வீகத்தை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்தறிந்து விட்டு தான் அவர்களுக்கான சீக்ரெட் கோட் உடன் கூடிய அனுமதி வழங்கப்படும்.. ஆரம்பத்தில் அந்த காவலாளிகளுடன் காவலாளியாக நரேனுடன் ராம் செல்ல நினைத்து இருந்த போதிலும் அவன் பூர்வீகம் ஆராய போனால் அனைத்தும் வெளி வந்து விடும் என்று உணர்ந்த நரேன் அந்த முடிவு சரி வராது என்று கூறி இருந்தான்.
மேலும் ராம் சிக்கி விட்டால் தானும் சிக்கிக் கொள்வோம் என்கின்ற பயமும் அவனுக்கு இருந்தது. அதன் பிறகே அஜய் கணித்த போல போலீஸ் யூனிபார்ம் உடன் உள்ளே செல்ல நினைத்து இருந்தவன் அதற்கான உதவிகளை பிரசாத்திடம் இருந்து பெற்று இருந்தான். போலீஸ் என்றால் ஆயுதங்களும் அனுமதிக்கப்படும் என்கின்ற விடயம் அவனுக்கு சாதகமாகி போனது. ஆனால் அஜய் புதிதாக அறிமுகப்படுத்தி இருந்த அந்த பேட்ச் தான் இப்போது அவர்களுக்கு தலையிடியாகி இருந்தது. டிஜிட்டல் எண் கொண்ட அந்த பேட்ச் அவ்வளவு சீக்கிரம் வெளியே தயாரிக்க முடியாது. அதே சமயம், பிரசாத்துக்கு அந்த பேட்ச் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதனை ராமிடம் கொடுத்து விட்டு பிரசாத் கருத்தரங்குக்கு போகாமல் நிற்க முடியாது. ஏன் என்றால் அந்த பேட்ச் அணிந்து உள்ளே நுழைந்தாலே பிரசாத் வந்ததாக அந்த பேட்ச் காட்டிக் கொடுத்து விடும். அதனால் பிரசாத்தும் உள்ளே செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
அதைப் பற்றி நீண்ட நேரம் யோசித்தவர்கள், எப்படியாவது அதிகாரத்தினை பயன்படுத்தி பிரசாத் உள்ளே நுழைய வேண்டும் என்று தான் இறுதியாக முடிவெடுத்துக் கொண்டார்கள். இவர்கள் ஏற்பாடு இப்படி இருக்க, கருத்தரங்குக்கு முதல் நாள் புறப்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தான் சித்தார்த்.
அதே சமயம், அவன் அறைக்குள் இருந்து அவனுக்கான உடைகளை ராஜ் மற்றும் காயத்ரி அடுக்கிக் கொண்டு இருக்க, ராஜ்ஜோ காயத்ரியிடம் "அன்னைக்கு என்னாச்சு காயத்ரி? அந்த சயின்டிஸ்ட் ஏதும் தப்பா நடந்துக்கிட்டானா?" என்று கேட்க அவளோ கண்களை மூடி திறந்தவள் "நத்திங் ராஜ்" என்று வெடுக்கென்று பதிலளித்து அதனைப் பற்றி பேசப் பிடிக்கவில்லை என்று மறைமுகமாகக் கூறினாள்.ராஜ்ஜோ "சரி விடு, இங்க இருந்து தப்ப ஒரே வழி உன்னை தேடி அஜய் வந்தா மட்டும் தான்" என்று சொல்ல, அவள் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டன. "எப்படி அவனை மறந்தாள் அவள்? அதுவும் அவள் திருமணம் செய்ய இருப்பவனின் நினைவு இத்தனை நாட்களில் ஒரு தடவை கூட வந்தது இல்லை அல்லவா? தன்னையே நினைத்து அதிர்ந்தவளாக “ம்ம்” என்று மட்டும் பதில் அளித்தவளுக்கு ஏனோ அஜய் வரக் கூடாது என்கின்ற எண்ணமே தன்னையும் மீறி தோன்ற அவளுக்கு தனது எண்ணத்தை நினைத்து தூக்கி வாரிப் போட்டது.
"ஏன் எனக்கு இப்படியான எண்ணம் வருகின்றது?" என்று தன்னைத் தானே கேட்டவளுக்கு பதிலும் தெரியவில்லை. சித்தார்த்துக்கு அடிமையாக வேலை செய்ய ஏன் மனம் விரும்புகின்றது என்றும் தெரியாமல் இருந்தவளோ "இத கொண்டு அவரோட ரூம்ல வை ராஜ்" என்று மடித்த அவனது ஷேர்ட்டை கொடுத்தாள். அவளிடம் முதல் இருந்த அந்த கலகலப்பு மறைந்து போனதை உணர்ந்த ராஜ்ஜும் அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாக அவள் கொடுத்த துணிகளை வாங்கிக் கொண்டே அவனது படுக்கை அறைக்குள் நுழைந்தவனுக்கு அவன் அறைக்குள் இருந்த அவனது ஆளுயர படம் கண்ணில் பட்டது. அதைக் கண்டவனுக்கு சில நாட்கள் முன்னர் அறையை துப்பரவு செய்த சமயம் அந்த படத்தின் பின்னால் இருந்த இரும்புக் கதவு நினைவுக்கு வந்து போனது.. எப்போதுமே அவனது போலீஸ் மூளைக்கு மறைத்து வைக்கப்பட்ட அதற்குள் என்ன இருக்கின்றது என்று பார்க்க மனம் துடிக்கும்.. ஆனால் அதற்கான சந்தர்ப்பமே அவனுக்கு என்றும் கிடைத்தது இல்லை.
வழமையாக தனியே இருக்கும் போது அதற்குள் போக தயங்குபவனுக்கு இன்று காயத்ரியும் சிக்கி இருக்க, "காயத்ரி இங்க வா" என்று அழைத்தான். அவளோ பெருமூச்சுடன் எழுந்து "என்னடா?" என்று கேட்க, அவனோ சித்தார்த்தின் ஆளுயர படத்தை நகர்த்தியவன் "இதுக்குள்ள என்ன இருக்குன்னு பார்த்துடலாமா? கண்டிப்பா பெறுமதியான ஏதாவது தான் இருக்கும்" என்று சொல்ல, அந்த கதவை அதிர்ச்சியாக பார்த்து விட்டு அவனை முறைத்தவள் " எதுக்கு சும்மா ரிஸ்க் எடுக்க போற? இங்க சுத்தி சி சி டி வி அண்ட் மைக் இருக்கும்னு தெரியுது தானே. இதுக்குள்ள நீ போறத பார்த்துட்டு அந்த வளர்ந்து கெட்டவன் உன்னை வச்சு செய்ய போறான்" என்று சொல்ல, அவனோ "இது அவனோட பெட் ரூம், சோ சி.சி.டி.வி அண்ட் மைக் ஒண்ணும் இருக்க வாய்ப்பில்லை. ஆனா ஒரு சின்ன மாற்றம்னு சொன்னா கூட அவன் கண்டு பிடிச்சிடுவான்... நாம போலீஸ்னு தெரிஞ்சும் இங்க நமக்கு அவன் பெர்மிஷன் கொடுத்தது பெரிய விஷயம் தான்.. சப்போஸ் நாம பண்ண போறத கண்டு பிடிச்சா கூட மிஞ்சி மிஞ்சி போனா பீட்டர் கடிப்பான்.. அதுக்கு அந்த சயின்டிஸ்ட் ஊசி போட்டு காப்பாத்திடுவான்.. அவ்வளவு மோசம் இல்ல அவன்... நமக்கு எப்போ விடிவுன்னு தெரில, இருக்கிற நாளுல ஒரு மிஷன் கூட பண்ணலன்னா என்ன போலீஸ்காரன் நாம?" என்று கேட்டான். காயத்ரியோ "ஏதோ உனக்கு இங்க இருக்க பெர்மிஷன் கொடுத்த போல பேசுற? அவன் பெர்சனல் வேலை முடிக்கணும்னா பெர்மிஷன் கொடுத்து தானே ஆகணும். அது சரி உனக்கு என்னடா திடீர்னு இவ்ளோ தைரியம்?" என்று கேட்டவள் மேலும் "சரி எப்படி உள்ள போக போற?" என்று ஒரு ஆர்வம் மிகுதியில் கேட்டாள். பயம் இருந்தாலும் அவர்களுக்கு ஆர்வம் இருந்தது என்னவோ உண்மை தான்.
உடனே அவன் "இதுக்கு ஒரு எலெக்ட்ரிக் கார்ட் இருக்கு.. உள்ளே நுழைய நமக்கு பெர்மிஷன் கொடுத்திடும்... அத தவிர எந்த லாக்கும் இந்த ரூமுக்குள்ள இல்ல" என்று சொல்ல, அவளோ "ராஜ் எனக்கு என்னவோ தப்பா தெரியுது.. அப்படி அவன் கெயார்லெஸ் ஆஹ் ஒரு எலெக்ட்ரிக் காட் மட்டும் வச்சுக்க கூடிய ஆள் இல்ல. அப்படி இருக்குன்னா இந்த ரூம்ல ஏதோ ஒன்னு இருக்கு" என்று சொல்ல, ராஜ்ஜோ "அத தான் நாம பார்த்துடலாம்" என்று சொன்னான். அவளோ "சரி, முடிவெடுத்துட்ட.. ஆனா அந்த கார்ட் எங்க இருக்கு?" என்று கேட்டாள். அவனோ கண்களை சிமிட்டியவன் , கையில் இருந்த அவனது கோர்ட்டின் பாக்கெட்டில் இருந்து எடுத்து அதனைக் காட்ட "அடப்பாவி" என்று வாயில் கை வைத்துக் கொண்டாள்.