Vana Lakshmi
Member
Super
Super sisபிரம்மா 5
அதே சமயம் எலிக்கு தீனி போட்டுக் கொண்டு இருந்தவளிடம் வந்த காவலாளியோ "சார் அடுத்த வேலை கொடுத்து இருக்கிறார்" என்று சொல்ல அவளோ வாசுவிடம் "இத விட நல்ல வேலையா இருக்கும் போல" என்று சொல்ல, "ஓவர் கற்பனைல போகாதடி" என்று எச்சரித்து அனுப்பினான் வாசு. அவளோ "உனக்கு பொறாமைடா" என்று சொல்லி விட்டு செல்ல, "க்கும், பொறாமை பட்டுட்டாலும்" என்றான் அவன்.
காவலாளியுடன் அவள் சென்றது அடுத்து சென்றது என்னவோ சித்தார்த்தின் அறைக்குள் தான்.
அங்கே அவளது அடுத்த நண்பன் ராஜ் அமர்ந்து அவனது உடைகளை அயர்ன் பண்ணிக் கொண்டு இருக்க, அவளோ "ஓஹ் நாம ஆயா வேலை பார்க்கணும் போல" என்று நினைத்துக் கொண்டே "ராஜ்" என்று அழைத்தாள். அவனோ குரல் கேட்டு நிமிர்ந்தவன், "காயத்ரி, நீ எங்க இங்க?" என்று கேட்க அவளோ தனது கதையை புலம்பிக் கொண்டே இருக்க, அதைக் கேட்ட காவலாளிக்கு சலித்து போனது. அடுத்த கணமே அவள் முன்னே சித்தார்த்தின் ஷூ அனைத்தையும் எடுத்துப் போட்டவன் "எல்லாம் பொலிஷ் பண்ணிட்டே உன் புலம்பலை கன்டினியூ பண்ணு" என்று சொல்ல, அவளோ அவனை முறைத்துப் பார்த்தவள் "சரி சரி" என்று கடுப்பாக சொல்லிக் கொண்டே ராஜ் அருகே அமர்ந்தாள். ராஜ்ஜோ அயர்ன் பண்ணிய உடைகளை மடித்துக் கொண்டு இருக்க, "நீ ஆம்பிள ஆயா, நான் பொம்பிளை ஆயா, நம்ம நிலைமையை பார்த்தியா?" என்று சலிப்பாக சொல்லிக் கொண்டே அவனது ஷூ ஒவ்வொன்றாக எடுத்து துடைக்க ஆரம்பித்தாள். அவள் இதழ்களோ "இத விட கேவலமான வேலை இங்க ஏதும் இருக்கா ராஜ்?" என்று கேட்க, அவனோ "இல்லன்னு நினைக்கிறன்.. வந்தா கண்டுக்க வேண்டியது தான்" என்று சொன்னான்.
இருவரும் தத்தமது வேலையை செய்து கொண்டு இருக்க, காயத்ரியிடம் திரும்பிய ராஜ், " இப்படியே நீ ஷூவோடயும் நான் ஷேர்ட் ஓடையும் வாழ வேண்டி வந்திடுமோன்னு பயமா இருக்குடி" என்று சொன்னான். அவளுக்கோ அவன் மீது கடுப்பாக " ஒண்ணுக்கு மூணு ஆம்பிளை போலீஸ் இருக்கீங்க ஏதாவது பண்ண வேண்டியது தானே" என்று சொல்ல அவனோ "எதுக்கு? எலி கிட்ட கடி வாங்கவா?" என்று கேட்டவன் இடுப்பில் இருந்த தழும்பைக் காட்டி "இது நான் இங்க இருந்து எஸ்கேப் ஆக ட்ரை பண்ணின நேரம் என்னை பிடிச்சுட்டானுங்க.. அப்புறம் சித்தார்த் என்னை அவனோட பீட்டர் கிட்ட விட்டுட்டான்.. எலி தானேன்னு தைரியமா தான் இருந்தேன்.. பசியா இருந்திருக்கும் போல, இடுப்புல கடிச்சிடுச்சு.. அப்புறம் அவனே எனக்கு இன்ஜெக்ஷன் போட்டு விட்டான்" என்று சொல்ல காயத்ரியோ "அவன் மனுஷன் தானா? இப்படி சாடிஸ்ட் ஆஹ் இருக்கான்" என்று கேட்க, அவனோ "நான் அவனை புகழ்றேன்னு நினைக்காத.. ஓபன் ஆஹ் சொல்றேன்.. அவன் கண்ணாடி மாதிரி.. நாம நல்லது பண்ணுனா நம்ம கூட நல்லா இருப்பான்.. ஆனா நாம ஏதும் தப்பு பண்ணினா கண்டிப்பா தண்டனை கொடுக்கிறான்" என்றான். அவளோ "சி.சி.டி.வி, மைக் இருக்குன்னு கவனமா பேசுறியா?" என்று கேட்க ராஜ்ஜோ ஒரு பெருமூச்சை மட்டும் பதிலாகக் கொடுத்தவன் மீண்டும் உடைகளை மடித்து வைக்க ஆரம்பித்தான். இருவருக்கும் பேச நிறைய இருந்தாலும் பேச முடியாத நிலையில் தான் இருவரும் இருந்தார்கள் அவர்களை சுற்றி கண்காணிப்பு கமெரா இருக்கின்றது என்கின்ற பயத்தில்.
அன்று அவர்களுக்கான உணவும் வழங்கப்பட, தொடர்ச்சியான வேலைகள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. சித்தார்த்தும் சற்று வேலையாக இருந்ததால் என்னவோ அவன் மீண்டும் அவளை அழைக்கவே இல்லை. அன்று மாலையும் கூட அவளை அவளுக்கான அறைக்குள் அழைத்துச் சென்று விட்டது என்னவோ காவலாளிகள் தான். உள்ளே வெறுமையான அறையில் பாத்ரூமுடன் சேர்த்து ஒரு பாய் கீழே விரிக்கப்பட்டு இருந்தது. "பிளடி மதன்" என்று அவனுக்கு திட்டியவள் குளித்து விட்டு அங்கே இருந்த அவளது உடைப்பெட்டியில் இருந்து உடையை அணிந்து கொண்டே வெளியே வந்தாள். அந்த தனி அறையில் சி.சி.டி.வி இருக்குமோ என்கின்ற பயம் அவளுக்கு. சுற்றும் முற்றும் அவள் பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு தெரியவில்லை அவள் உள்ளே நுழைந்து அடுத்த கணம் சித்தார்த் செய்த வேலை பற்றி. ஆம் அவள் உள்ளே நுழைந்தது தெரிந்த அடுத்த கணமே அவளது அறைக்குள் இருந்த அனைத்து இன்விசிபிள் சி சி டி வி களையும் தனது கையில் இருந்த லெப்டாப்பின் உதவி கொண்டே செயலிழக்க செய்து இருந்தான். அவன் மோசமானவன் தான் ஆனால் ஒரு பெண்ணின் கற்பை வைத்து விளையாடும் அளவுக்கு தரம் கெட்டவன் அல்ல.
ஆனால் அவளுக்கு தூக்கம் வந்தால் தானே. யோசனையுடனேயே படுத்தவளுக்கு "நான் என்ன பண்ணுனாலும் பார்ப்பானே அவன்.. ஒரு பிரைவசி கூட இல்லையே" என்று யோசனையாக இருக்க, பாயில் படுத்தவளுக்கு தூக்கமும் வரவே இல்லை. அதே சமயம், தனது வேலைகளை முடித்து விட்டு இரவு பதினோரு மணி போல காயத்ரியின் அறையைத் தாண்டி தனது அறையை நோக்கிச் சென்றவனுக்கு ஏனோ மனம் நெருடலாக இருக்க, அவளது கதவைத் தட்டினான். அவளும் புரண்டு புரண்டு படுத்தவள் எழுந்து வந்து கதவைத் திறந்து அவனை கேள்வியாகப் பார்க்க, அவனோ "எல்லா சி.சி.டி.வி யையும் டிஸ்கனெக்ட் .பண்ணிட்டேன். யூ ஹாவ் யோர் பிரைவசி.. நிம்மதியா தூங்கு" என்று சொல்லி விட்டு விறு விறுவென செல்ல அவனது முதுகைப் பார்த்தவள் "இவன் நல்லவனா இல்லை கெட்டவனான்னு தெரிலேயே" என்று நினைத்துக் கொண்டாள்.
அவன் சொல்லி விட்டு சென்ற பிறகு தான் அவளுக்கு கொஞ்சமாக தூக்கமே வந்தது. அந்த சமயத்தில் சித்தார்த்துக்கும் அடுத்தடுத்த நாட்கள் பணிச் சுமை அழுத்த, காயத்ரியை காவலாளிகளது பொறுப்பில் ஒப்படைத்தவன் தனது வேலைகளை மும்முரமாக செய்து கொண்டு இருந்தான். காயத்ரியோ தினமும் வேலை செய்வதும் அறைக்குள் வந்து படுப்பதாகவும் இருந்தவளுக்கு “இங்கிருந்து தப்பிச் சென்றால் என்ன?” என்று தான் தோன்றியது. அவன் சி.சி.டி.வி யை டிஸ்கனெக்ட் பண்ணி இருந்தது அவளுக்கு வசதியாகிப் போக, குளித்து விட்டு குளியலறையினை சுற்றி பார்த்தவளோ அந்த ஃபான் லைட்டினை ஆழ்ந்து பார்த்தாள். அவளுக்கு தான் போலீஸ் ட்ரெயினிங்கில் புகுந்து புறப்பட்டு வெளியே வருவதற்கு எல்லாம் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கின்றது அல்லவா? அடுத்த கணமே அங்கிருந்த வாளியை பின் பக்கமாக திருப்பி சுவரை எம்பிப் பிடித்தவள் தனது முழு பாரத்தையும் கையில் கொடுத்து மேலே ஏறி இருந்தாள். அவளோ மெல்லிய தேகம் உடையவளாக இருக்க, அந்த துளையும் அவள் வெளியேற போதுமானதாக இருந்தது. இருள் சூழந்த காரணமாகவும் அந்த பக்கம் எந்த வெளிச்சமும் இல்லாத காரணத்தினாலும் மறுபக்கம் என்ன இருக்கின்றது என்று அவளுக்கு தெரியவே இல்லை.
அவளோ உடலை குறுக்கி அந்த துளைக்குள் நுளைந்தவள் கீழே பாய்ந்த பிறகு தான் பார்த்தாள் அது வெளிப்பக்கம் அல்ல, ஒரு குழாய் போன்ற வழி என்று. அவள் மனமோ "அரசனை நம்பி புருஷனை கை விட்ட போல எங்க வந்து சிக்கி இருக்கேனோ" என்று நினைத்தபடி வெளிச்சத்தை தேடி குத்து மதிப்பாக நடக்க ஆரம்பித்து இருந்தாள். அவள் மனமோ "நாம அறிஞ்சு ஃபான் லைட்டுக்கு அடுத்த பக்கம் நிலம் தானே இருக்கும்.. இது என்னன்னு தெரியலையே" என்று நினைத்துக் கொண்டே நடந்து போக, ஒரு இடத்தில் அந்த குழாய் முடிவுற்று ஒரு பெரிய கதவு இருந்தது.
அந்த கதவோ பல குழாய்களின் முடிவுக்கும் கதவாக இருக்க "இது என்னன்னு தேரிலேயே" என்று இருளில் தடவியவள் கதவின் குமிழ் முனையை பிடித்து திறந்தபடி வெளியே வந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
ஆம் அவள் வந்து சேர்ந்து இருந்தது சித்தார்த்தின் ஒரு ஆராய்ச்சி அறைக்குள் தான். சித்தார்த்தோ அறைக்குள் நுழைந்து அங்கிருந்த எலிகளை ஆராய்ந்து கொண்டு இருக்க, பக்கத்தில் இருந்த கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவன் உள்ளே இருந்து அதிர்ந்த முகத்துடன் வெளியே வந்த கயத்திரியைக் கண்டதுமே அவன் முகமும் இறுகிப் போனது.
அவன் எதை வேண்டும் என்றாலும் தாங்கிக் கொள்வான் ஆனால் தன்னுடைய சலுகையை பயன்படுத்தி நம்பிக்கை துரோகம் செய்தால் அதனை மட்டும் தாங்கிக் கொள்ள மாட்டான். நரேன் கொடுத்த வலி அவனுக்கு ஆழ் மனதில் பதிந்து இருக்க, அவனால் அவள் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவளுக்கென்று சி.சி.டி.வி எல்லாம் நிறுத்தி விட்டவன் அல்லவா அவன்? அவனோ காவலாளிகளைப் பார்த்து கண்ணைக் காட்ட, மறுபக்கம் திரும்பி ஓட முயன்ற காயத்ரியின் இரு கைகளையும் பிடித்து அவளை அவன் முன்னே இழுத்து வந்தார்கள் அவர்கள். அவனோ அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களிடம் "யூ கர்ரி ஒன்" என்று சொன்னவன் அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டே அவளை மேலிருந்து கீழ் அழுத்தமாகப் பார்த்தான். அவளோ "ஐயோ இப்படி மாட்டிட்டேனே, ஏதாவது சொல்லி சமாளி காயத்ரி" என்று நினைத்தவள் "சார், நான் தப்பிக்கணும்னு நினைக்கவே இல்ல. சும்மா வெளியே என்ன இருக்குன்னு பார்க்க தான் குதிச்சேன். இங்க வந்து சேர்ந்துட்டேன்" என்று சொன்னவள் உணரவே இல்லை தான் பேசிக் கொண்டு இருப்பது சாதாரண அடிப்படை அறிவு இல்லாதவனிடம் அல்ல, புகழ் பெற்ற விஞ்ஞானியிடம் என்று.