soniyaravi
Member
Nice

Achhachooபிரம்மா 2
ஒரு தலையாக அவனை பல வருடங்களாக காதலிப்பவள் அவள். ஆனால் அவனோ காதலை காயத்ரியிடம் கொட்டி விட, மனதளவிலேயே ஷாந்தியின் ஒரு தலைக் காதல் முற்றுப் பெற்று இருந்தது. ஏற்கனவே அவர்களின் திருமணத்தை பற்றி கேள்விப் பட்டு வலியில் இருப்பவளுக்கு இன்று அவனும் அவளை அவமானப்படுத்தி விட வலி மேலும் அதிகமாகி இருந்தது.. இந்த ஸ்டேஷனை விட்டுச் செல்வது ஒன்றும் அவளுக்கு பெரிய விடயம் அல்ல, அவனை விட்டுச் செல்ல வேண்டி வந்து விடுமே என்கின்ற தவிப்பு தான் தன்னிலை இறங்கி இப்போது காபி போடும் அளவுக்கு கொண்டு வந்து விட்டு இருந்தது.
அதே சமயம், அஜய்யின் முன்னே இருந்த காயத்ரியோ "நான் ஒரு சீக்ரெட் மிஷன் ஒண்ணுக்கு போக டிசைட் பண்ணி இருக்கேன்" என்று சொல்ல, அவனோ புருவம் சுருக்கி அவளைப் பார்த்து "வாட்? சீக்ரெட் மிஷனா? இப்போவா?" என்று கேட்க அவளோ "ம்ம் " என்று சொன்னாள் தலையைக் குனிந்தபடியே.
அவனோ அவளை ஆழமாக பார்த்துக் கொண்டே கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்தவன், தனது நாடியை நீவிக் கொண்டே "மாமா என்ன சொன்னார்?" என்று கேட்க அவளோ "உங்க கிட்ட பேசிட்டு டிசைட் பண்ண சொன்னார்" என்று சொன்னாள். அவனோ இதழ்களை பிதுக்கியவன் "நீ என்ன நினைக்கிற?" என்று அடுத்த முக்கியமான கேள்வியைக் கேட்க, அவளோ அவனை ஏறிட்டு பார்த்தவள் "என்னோட பிரெண்ட்ஸ் மூணு பேர் தொலைஞ்சு போய் இருக்காங்க, அவங்க இல்லாம நான் மட்டும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழுறது எனக்கு உறுத்தலா இருக்கு, எல்லாத்துக்கும் மேல ஒரு போலீசா எனக்கு என்னோட கடமை தான் ரொம்ப முக்கியம்" என்று சொல்ல, அவனோ "குட்" என்றவன் மேலும் "சோ உன்னோட பிரெண்ட்சை தேடி நீ போக போற ரைட்?" என்று கேட்க அவளும் "ம்ம்" என்று சொன்னாள். அவனோ "எங்க போக போறேன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்க அவளோ "அது சீக்ரெட் மிஷன்" என்று சொல்ல, அவனோ இதழ் பிரித்து இரு பக்கமும் தலையாட்டி சிரித்தவன் "நான் நினச்சா நீ இங்க இருந்து கிளம்பி அடுத்த செகண்ட் நீ எங்க போறேன்னு டீட்டெயில்ஸ் எடுக்க முடியும்னு உனக்கு தெரியாதா?" என்று கேட்க அவளோ "என்னோட கடமைக்கு மதிப்பு கொடுத்து அதை பத்தி விசாரிக்க மாட்டிங்கன்னு நம்புறேன்" என்று சொன்னாள். அவனோ புருவம் உயர்த்தி அவளைப் பார்த்து "பிரில்லியண்ட் ஆஹ் என்ன கட்டி போடுற" என்று சொல்லி விட்டு, பெருமூச்சுடன் "உனக்கு ஆட்சேபனை இல்லன்னா நானும் வரேன். உன் டிபார்ட்மென்ட் விஷயத்துல தலையிடக் கூடாதுன்னு தான் உன் பிரெண்ட்ஸ் பத்தி நான் எதுவும் விசாரிக்காமல் இருக்கிறேன். ஆனா எனக்கு உன்னோட சேஃப்ட்டி ரொம்ப ரொம்ப முக்கியம்" என்று சொல்ல, அவளோ "இவ பொண்ணு தானே எப்படி தன்னை தானே காப்பாத்திக்க முடியும்னு நினைக்கிறீங்களா?" என்று ஒரு மாதிரி குரலில் கேட்டாள். அவள் கேட்டது அவனுக்கு என்னவோ போல ஆகி விட, "என்ன பேசுற நீ? நான் ஏன் அப்படி நினைக்க போறேன். உன் சேஃப்டி முக்கியம்னு நான் நினைக்காம வேற யார் நினைப்பாங்க" என்று சொன்னவன் சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டி விட்டு "ஓகே பைன், நான் எப்போவுமே யாரோட முன்னேற்றத்தையும் தடுக்க மாட்டேன். எப்போ கிளம்புற அண்ட் எப்போ வருவ?" என்று கேட்டான்.
அவளோ " நாளைக்கே கிளம்புறேன்.. எப்படியும் கல்யாணத்துக்கு முதல் வர ட்ரை பண்ணுறேன்.. மக்சிமம் ரெண்டு மாசம் டைம் பிக்ஸ் பண்ணிக்கோங்க" என்று சொன்னாள். அவனோ "வாட்? ரெண்டு மாசமா? இட்ஸ் வியர்ட். பட் நான் பேசுனா நீ அத வேற டைரெக்ஷன்ல யோசிப்ப. சோ நான் எந்த கமெண்டும் பண்ணல" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ஷாந்தி காபி கப்புடன் வந்து அதனை மேசையில் வைத்தாள். உடனே அஜய் அதைக் குடிக்கும் படி காயத்ரியிடம் சைகையால் சொன்னவன் மேலும் "டு பீ பிராங்க், எனக்கு நீ இப்படி தனியா போறதுலே இஷ்டமே இல்ல, ஆனா நான் உன்னை கட்டுப்படுத்த கூடாதுன்னு நினைக்கிறேன். நீயும் ஒரு வெல் ட்ரேயின்ட் பொலிஸ் தானே, சோ உன்னை நீயே பத்திரமா பார்த்துக்கோ. எதுன்னாலும் எனக்கு கால் பண்ணு" என்று சொல்ல, அவளோ காபியைக் குடித்து மேசையில் வைத்து விட்டே "தன்க் யூ" என்று சொன்னவள் அருகே நின்ற ஷாந்தியை அழுத்தமாக பார்த்துக் கொண்டே "அஜய்" என்று அவனது பெயரை அழுத்தமாக சொல்லி முடித்து விட, ஷாந்தியின் முகம் இறுகி போக, அவள் ஏன் கூறுகின்றாள் என்று அறிந்து வாய் விட்டு சிரித்த அஜய் "ஓகே டேக் கேயார்" என்று சொன்னான். காயத்ரியும் அங்கிருந்து கிளம்பி விட, அவள் முதுகைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவன் அடுத்த கணமே திரும்பி அங்கே உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு நின்று இருந்த ஷாந்தியை விஷமமாக பார்த்து புன்னகைத்து விட்டு "எனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கா தானே" என்று கேட்க அவளோ "ம்ம்" என்று மட்டும் பதிலளித்தவள் மேசையில் இருந்த காபி கப்பை எடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.
அதே சமயம் அஜய்யும் அடுத்தது அழைத்தது என்னவோ காயத்ரியின் தந்தைக்கு தான். அவரும் போனை எடுத்ததுமே "அஜய் , காயத்ரி வந்தாளா?" என்று கேட்க அவனோ "ஆமா சார், அவளை அவ இஷ்டத்துக்கே விடலாம்" என்று அவளுக்கு சார்பாக தான் பேசினான். இதை எல்லாம் அங்கிருந்து கேட்டுக் கொண்டு இருந்த ஷாந்திக்கோ அவன் மீது காதல் இன்னும் பன் மடங்கானது தான் மிச்சம். அவனது வீரத்தையும் கோபத்தையும் அருகே இருந்து ரசித்து இருக்கிறாள். அதே சமயம், அவன் காயத்ரியிடம் மட்டும் காட்டும் மென்மையைப் பார்த்து பிரமித்தும் இருக்கிறாள். அந்த கணத்தில் அவள் மனதில் பொறாமை உண்டானது என்னவோ உண்மை தான். அவள் காதலிக்கும் ஜீவன் அல்லவா அவன்.
இப்படி அஜய்யும் காயத்ரியின் மனம் வலிக்க கூடாது என்கின்ற காரணத்தினால் அவளுக்கான வழியை விட, அவளும் அடுத்த நாளே புறப்பட்டு இருந்தாள் சித்தார்த்தனின் ஆய்வுகூடத்துக்கு ஒரு விஞ்ஞானி ஆக.
அவளுக்கான உடைகள் தொடக்கம் ஐ.டி கார்ட் வரை மதன் ஏற்பாடு பண்ணிக் கொடுத்து இருக்க, அவளும் நீண்ட தூர பயணத்தின் பின்னர் இலகுவாக அந்த ஆய்வுகூடத்துக்குள் நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகள் மத்தியில் நுழைந்து இருந்தாள். பிரசாத் தொடக்கம் காயத்ரி வரை செய்த ஒரே தவறு சித்தார்தனின் பலத்தை குறைத்து மதிப்பிட்டது தான். இவ்வளவு சீக்கிரம் அவர்களால் அந்த ஆய்வுகூடத்துக்குள் நுழையக் கூடியதாக இருக்கும் என்றால் ஏதோ ஒரு பொறி அவர்களுக்காகவே காத்துக் கொண்டு இருக்கின்றது என்று கணிக்க தவறி இருந்தார்கள். அவளோ உள்ளே நுழைய, அங்கு இருந்த மதனோ ப்ளூ டூத் வழியே "சார், சி லைன்ல ஆறாவதா நிக்கிற பொண்ணு தான். பெயர் காயத்ரி" என்று சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டு சி.சி.டி.வி வழியே அவள் வருகையைப் பார்த்துக் கொண்டு இருந்த சித்தார்தனின் இதழ்கள் கேலியாக வளைய "வெல்கம் மை ஸ்லேவ்" என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டான்.
அந்த ஆய்வுகூட அமைப்பின் படி, மேலே டிஜிட்டல் டிஸ்பிளேயில் விழும் எண்ணுக்கு ஏற்ற போல அவரவர்கள் தங்கள் எண் குறிப்பிடும் இடத்துக்கு பிரிந்து செல்ல வேண்டும். அவளுக்கும் இந்த அமைப்பு இருக்கின்றது என்று இப்போது தான் தெரியும். மதன் தான் முக்கியமான அனைத்தையும் அவர்களிடம் இருந்து மறைத்து இருந்தான் அல்லவா? அவளும் கூட்டமாக வந்தவள் ஒவ்வொன்றாக ஆட்கள் பிரிந்து செல்ல, தானும் தன்னுடைய எண் காட்டிய திசையில் நடந்தவள் மனமோ "இதென்ன தனியே மாட்டிட்டேன். நமக்கு சயன்ஸ் வேற ஒழுங்கா ஓடாதே, எதையும் கண்டு பிடிக்க சொன்னா பார்த்து பண்ணவும் யாரும் இல்லாம என்ன பண்ண போறேனோ" என்று நினைத்துக் கொண்டே அந்த இரு பக்கமும் உலோகத்தால் அடைக்கப்பட்டு இருந்த ஓடையினால் நடந்து சென்றாள். அவளது எண்ணும் தொடர்ச்சியாக இருந்த டிஜிட்டல் டிஸ்பிளேயில் விழுந்து கொண்டு இருக்க, " எவ்ளோ தூரம் இப்படியே நடக்கணுமோ தேரிலேயே" என்று நினைத்துக் கொண்டாள். அதே சமயம், அவளை விஷம புன்னகையுடன் ஸ்க்ரீனில் பார்த்துக் கொண்டு இருந்த சித்தார்த்தனோ "ஒரு பொண்ணு, அதுவும் என்னை அரெஸ்ட் பண்ண இவ்ளோ தூரம் தனியா வந்து இருக்கா? இன்டெரெஸ்ட்டிங்" என்று நினைத்தவன் தனது இருக்கையில் கையை குற்றி எழுந்து கொண்டே போட்டிருந்த ஷேர்ட்டை முட்டி வரை மடித்துக் கொண்டவன் பாக்கெட்டில் கையை போட்டுக் கொண்டே அவன் அறை வாசலை நோக்கி திரும்பினான்.
அந்த கணம் அவளும் தன்னுடைய எண் காட்டிய லிப்டில் ஏறிக் கொள்ள, அதுவோ அவனது அறையின் முன்னே வைத்து திறந்து கொண்டது. அவளோ "எங்க வந்து இருக்கேன்னு தேரிலேயே" என்று நினைத்தவள் லிப்ட்டின் கதவு திறக்கும் வரை காத்திருக்க, அது திறந்த அடுத்த கணமே அவளுக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போன உணர்வு. அவள் யாரை பிடிக்க வந்தாளோ அவனே அவளை அங்கே வரவேற்கும் பொருட்டு பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு நின்று இருந்தால் அவளால் நிலை கொள்ள முடியுமா என்ன? அவள் விழிகளோ விரிய "ஐயோ இவனா?" என்று நினைத்தவள் லிப்டில் கீழே இறங்கும் பொருட்டு லிப்டை மூட முயற்சிக்க அதுவோ ஒரு இன்ச் கூட அசையாமல் லாக் ஆகி இருந்தது. அவளது பதட்டத்தையும் லிப்டின் ஒவ்வொரு பட்டனாக அவள் தட்டுவதையும் பார்த்து வாய் விட்டு "ஹா ஹா" என்று அவன் சிம்மக் குரலில் சிரிக்க, அவளோ சற்றே அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனை சுற்றி பல காவலாளிகள் நிற்க, வாய் விட்டு சிரித்து விட்டு அவளை ஆழ்ந்து பார்த்தவன் "வெல்கம் மிஸ் காயத்ரி ப்ரொம் சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் டிபார்ட்மென்ட்" என்று சொல்ல, அவளோ அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.
இப்போது தான் அவளுக்கு புரிந்தது அவள் அவனைத் தேடி வரவில்லை, அவன் தான் அவர்களை வரவழைத்து இருக்கின்றான் என்று. அவள் அப்படியே நிற்க, அவனோ அவளை நோக்கி சொடக்கிட்டு தன்னை நோக்கி வர சொன்னான்.
அவளும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வந்தவள் மனமோ "நால்லா சிக்கிட்டேன்.. ஆனா எப்படியாவது இவன் கிட்ட இருந்து தப்பிக்கணும்... இங்க இருந்து தப்பிக்கணும்னா நாம இவனை தான் முதலில வீழ்த்தணும், அப்போ தான் ஆட்டோமேட்டிக் ஆஹ் அடுத்தவங்க விலகுவாங்க" என்று யோசித்தவள் கைகளில் துப்பாக்கி கூட இருக்கவே இல்லை. துப்பாக்கி தான் அந்த ஆய்வுகூடத்தில் அனுமதிக்கப்படாது என்று அறிந்தவள் தனது உடைகளையும் துப்பாக்கியையும் கூட ஆய்வுகூடத்துடன் சேர்த்து இருக்கும் விடுதியில் உள்ள மதன் சொன்ன அறைக்குள் வைத்து விட்டல்லவா வந்தாள். இப்படி நிராயுதபாணியாக சித்தார்தனிடம் அவள் மாட்டி இருக்க, அடுத்த கணம் யோசிக்காமல் அங்கிருந்து தப்பிக்கும் முனைப்புடன் , அவனை நோக்கி ஓடி வந்தவள் பாய்ந்து அவன் மார்பில் உதைத்து அவனை வீழ்த்த முற்பட, அவனோ லாவகமாக அவளது காலை பிடித்து சுழட்டி கீழே போட்டவன் தனது முட்டியை அவளது கழுத்தில் வைத்து அழுத்த, அவனது இந்த பலத்தை எதிர்பார்க்காதவள் அதிர்ந்து தான் போனாள். அங்கிருந்த அனைவரும் அவளை சுற்றி நின்று துப்பாக்கியை அவளை நோக்கி நீட்டி இருக்க, சித்தார்த்தனோ "நோ நீட், மூவ். சின்ன பொண்ணு தெரியாம பண்ணிட்டா" என்று சொன்னவன் அவளை ஆழ்ந்து நோக்கி "சயின்டிஸ்ட்னா மூளை மட்டும் தான் இருக்கும்னு அண்டர் எஸ்டிமேட் பண்ணிட்டியா?" என்று கேட்டவன் தனது முட்டியை, திமிரும் அவளது கழுத்தில் இருந்து எடுத்து விட்டு, அவளது கரத்தினை பிடித்து அதனை தனது நெஞ்சில் ஷேர்ட்டின் மீதே வைத்து கீழ் நோக்கி வருட வைக்க, அவள் கரமோ அவனது படிக்கட்டு தேகத்தை தெளிவாக உணர்ந்தாலும் இது வரை எந்த ஆண்மகனையும் இப்படி நெருக்கமான தீண்டி உணராதவளோ கையை வெடுக்கென்று தன்னை நோக்கி இழுத்துக் கொள்ள, ஒரு கேலி புன்னகையுடன் அவளை விட்டு எழுந்தவன் "ம்ம்" என்று மட்டும் தனது காவலாளிகளிடன் சொல்ல, அவர்களும் அவளை பிடித்து முட்டி போட்டு இருக்க வைத்தவர்கள் அவளது இரு கைகளையும் பின்னால் விலங்கு மாட்டி கட்டி விட்டார்கள்.
அவளுக்கோ அதுவரை இருந்த கடைசி நம்பிக்கையும் இக்கணம் சிதைந்து போய் இருந்தது.
தன் முன்னே மண்டியிட்டு பின்னால் இரு கைகளும் கட்டப்பட்டு இருந்தவளையும் ஆழ்ந்து பார்த்தான் சித்தார்த்தன். அவனது அனல் கக்கும் விழிகளோ அவளில் அழுத்தமாக பதிந்து இருக்க, அவளுக்கோ நெஞ்சில் நீர் வற்றிப் போன உணர்வு. இப்போது அவளது தலைமை அதிகாரி பிரசாத்,"அவன் எதுவும் செய்ய கூடியவன்" என்று கூறியது வேறு காதில் விழ, போலீஸ் அதிகாரிகள் கூட நெருங்க பயப்படுபவனிடம் வந்து தனியாக வேறு சிக்கி இருப்பதை நினைத்து இதயம் நின்று துடித்தது.
அவளுக்கோ வீரத்தை தாண்டி தனது பெண்மையை தீண்டி விடுவானோ என்கின்ற பயம் உருவானது சற்று முன் அவன் செய்த காரியத்தினால்.
அவளுக்கோ அதை நினைத்து கண்கள் தானாக கலங்கி போக அடிமேல் அடி வைத்து அவளை நோக்கி நடந்தான் அவன்.. அவன் பூட்ஸ் சத்தமே அவள் ரத்த அழுத்தத்தை எகிற வைக்க அவள் அருகே வந்தவன் அவளை நோக்கி சொடக்கிட அவளோ ஏறிட்டு பார்த்தாள்.. அவள் பார்வையில் "என்னை எதுவும் செய்து விடாதே" என்னும் இறைஞ்சல் அப்பட்டமாக தெரிந்தாலும் அவளை மன்னித்து விடுவிக்கும் அளவுக்கு இளகிய மனம் கொண்டவன் அல்ல அவன்.
அந்த இரும்பு மனதில் சின்ன ஈரத்துக்கு கூட வாய்ப்பே இல்லை.. அவன் இஷ்டப்பட்டால் தவிர அவனை வலுக்கட்டாயப்படுத்தி அவனது சுண்டு விரலை கூட அசைக்க முடியாது..
இப்போது அவனை சுற்றி அவன் ஆட்கள் உன்னிப்பாக அவன் கட்டளையை நிறைவேற்ற காத்துக் கொண்டு இருக்க , தன்னை நோக்கி நிமிர்ந்தவளது கண்களை பார்த்தவாறே ஓங்கி அறைந்து இருந்தான் அவன்.
அவன் அறைந்த அறையில் அவள் இதழ் வெடித்து ரத்தம் கசிய "ப்ளீஸ் சார்.. என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க" என்று உயிர் பயத்திலும் கற்பை காக்கும் எண்ணத்திலும் பிதற்ற ஆரம்பித்தாள். தைரியமான போலீஸ்கார பெண்ணவளுக்கு கூட அவன் ஏதும் பண்ணி விடுவானோ என்று ஒரு பதட்டம் உருவானது.
அவனோ "இதெல்லாம் நீ இங்க வர முதலே யோசிச்சு இருக்கனும்.. போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்ட கிரிமினலை எப்படி ட்ரீட் பண்ணுவாங்கன்னு உனக்கு தெரியும். ஆனா இந்த கிரிமினல் கிட்ட போலீஸ் மாட்டிக்கிட்டா என்ன எல்லாம் நடக்கும்னு உனக்கு தெரிய வேணாமா?" என்று கேட்டவன் "பீட்டரை கூட்டிட்டு வா " என்று அங்கிருந்தவனிடம் சொல்ல அடுத்த கணம் பீட்டர் வந்தான். பீட்டர் போன்றவர்கள் தான் சித்தார்த்தனைப் போன்றவர்களுக்கே ஆதாரம். உயிர் நாடி. தன்னையே பணயம் வைக்கும் பீட்டர் இல்லை என்றால் சித்தார்தனின் அடையாளமே இல்லை. அந்த பீட்டர் வேறு யாருமல்ல, அவனிடம் வளரும் சோதனை எலி தான்.
பீட்டரை கையில் ஏந்தியவன் "யூ லைக் பிளட் ரைட்??" என்று கேட்டுக் கொண்டே அவளை பார்க்க அவள் முகமோ அருவருத்துப் போக " சார் ப்ளீஸ் வேணாம் சார்.. என்னை இன்னும் நாலு அடி அடிங்க.. இது மட்டும் வேணாம்.. அத பார்க்கவே என்னமோ பண்ணுது" என்று சொல்ல அவனோ பீட்டரை பார்த்து "இவன் ரொம்ப இன்னசன்ட்.. இவனை பார்த்து பார்த்து நீ ஏன் பயப்படுற??" என்று சொல்லிக் கொண்டே அவளை நோக்கி பீட்டரை நகர்த்தினான்.
மூச்சு விடும் தூரத்தில் அந்த எலியோ அவளை முகர்ந்து பார்க்க, வாய் விட்டே சத்தமாக கத்தியவள் "சார் வேணாம், நீங்க என்ன சொன்னாலும் பண்ணுறேன்.. இது மட்டும் வேணாம்" என்று கண்ணீருடன் சொன்னாள். என்ன தான் பெரிய போலீஸ்காரியாக இருந்தாலும் இந்த விஷயங்களை சகித்துக் கொள்ளும் அளவுக்கு அவளிடம் சகிப்புத் தன்மை இருக்கவே இல்லை. அவனோ சத்தமாக சிரித்துக் கொண்டே எலியை அங்கிருந்தவனிடம் நீட்டியவன் " ஒரு எலிக்கு போய் பயப்படுற? என்ன பொலிஸ்காரி நீ? இதுல என்ன பிடிக்க மாறு வேஷம் வேற.." என்று அவள் போட்டு இருந்த வெண்ணிற கோர்ட்டை பிடித்து சொன்னவன் தனது பெருவிரல் கொண்டு அவள் இதழில் இருந்த ரத்தத்தைக் துடைக்க, அவளோ முகத்தை மற்றைய பக்கம் திருப்பினாள். அவனோ அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே "நான் துடைக்கட்டுமா இல்ல பீட்டர் துடைக்கட்டுமா?" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க, அவளோ "நீங்களே துடைச்சு விடுங்க சார்" என்று சொன்னாள். அவனும் "தட்ஸ் குட்" என்று சொன்னவன் அங்கிருந்த டிஸ்ஸுவை வாங்கி ரத்தத்தை துடைந்தவன் "எனக்கும் டைம் பாஸுக்கு நீ வந்து சிக்கி இருக்க, இனி ஐ வில் என்ஜாய் மை டேய்ஸ்" என்று சொல்லிக் கொண்டான். அவனுக்கோ அவளது கண்மூடி தனமான தைரியமும், எலிக்கு பயந்து அழும் குணமும் ஒரு வித ஆர்வத்தை அளிக்க, அவளை விதம் விதமாக சீண்ட நினைத்து இருந்தான்.
வேலை, ஆராய்ச்சி என்று இருப்பத்து நான்கு மணி நேரமும் ஓய்வின்றி இருப்பவனுக்கு என்டெர்டெய்ன்மெண்ட் ஆகி போனாள் அந்த போலீஸ்காரப் பெண் காயத்ரி.