பிரம்மா 16
முழுதாக அங்கிருந்த அவனது உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் மூலதனமாக கொண்டு சென்றது என்னவோ அவனது மூளையை மட்டும் தான்.. நரேனுடன் பாதிக்கு பாதி அவன் முதலீடு செய்து இருந்தாலும் அதில் ஒரு ரூபாய் கூட அவன் எடுத்து செல்லவில்லை. அவன் ஏற்கனவே உழைத்த பணத்தை மட்டும் வைத்துக் கொண்டே வேறு ஊருக்கு இடம் பெயர்ந்தவன், கையில் இருந்த பணம் மூலமும், லோன் மூலமும் அவனுக்கான தனி ஆய்வுகூடத்தை அமைத்து இருந்தான். பல மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட இருந்த அந்த ஆய்வுகூடத்தில் அவனால் அப்போதைக்கு மூன்று மாடிகள் மட்டும் தான் அமைக்கப்படக் கூடியதாக .இருந்தது. ஆனாலும் அவனுக்கு மனதில் எப்போதும் அவனது ஜீனோம் எடிட்டிங் பற்றிய எண்ணம் இருக்க. அதற்கான அறையை தன்னுடைய படுக்கை அறையுடன் சேர்த்து அமைத்தான். பல கோடி முதலிட்டு கடனாளியாக தான் இருந்தான் அவன்.. அவனுக்கு தன்னம்பிக்கை தவிர ஊக்கம் கொடுக்க யாரும் அருகே இருக்கக் கூட இல்லை.. மனதில் நண்பனின் துரோகம் வேறு அரித்துக் கொண்டு இருந்த சமயம் அது..
அவன் விஞ்ஞானிகளை தேடி செல்லவில்லை.. அவனைத் தேடி மாணவர்களும் விஞ்ஞானிகளும் அவனிடம் வேலை செய்ய ஆர்வமாக வந்து சேர்ந்தனர். அவனோ "உங்களுக்கு தகுதிக்கேற்ற சம்பளம் தர முடியாது" என்று அவன் நிலை உரைத்த போதிலும் அவர்கள் அவன் திறமையில் பிரமித்து குறைந்த செலவில் அவன் ஆய்வுகூடத்தில் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தார்கள். ஆரம்பத்தில் சற்றே தடுமாறினாலும் அவன் அயராத உழைப்பாலும் திறமையாலும் முன்னேற ஆரம்பித்து இருந்தான். அதே சமயம், நரேனோ ஏமாற்றிய காரணத்துக்காக பல கோடி பணத்தை இழந்து இருந்தவன் பணத்தாசையினால் தரம் குறைந்த மருந்துகளை வழங்கி அதில் வேறு அடி வாங்கி பணத்தை இழந்து கொண்டு இருந்தான். இந்த பக்கம் சித்தார்த் ஏறு முகத்தில் இருக்க, நரேனோ இறங்கு முகத்தில் இருந்தது மட்டும் அல்லாமல் தனது ஒவ்வொரு தோல்விக்கும் சித்தார்த் தான் காரணம் என்று அவன் மீதே வன்மத்தை வளர்த்துக் கொண்டு இருந்தான்.
இப்படியான ஒரு நாளில் தனது வேலைகளை முடித்து விட்டு அமர்ந்த சித்தார்த்துக்கு மனதில் ஒரு வெறுமை.. என்ன தான் ஆராய்ச்சி என்று நேரத்தைக் கடத்தினாலும் அருகே யாரும் இல்லாத தனிமை அவனை வதைத்துக் கொண்டு தான் இருந்தது. பெருமுச்சுடன் கார் கீயை எடுத்தவன் ரைட் போக ஆயத்தமாகினான். பொறியியலாளர்களின் கை வண்ணத்தில் உருவான பாலத்தைக் கடந்து சென்றவனை பௌர்ணமி அன்று தோன்றிய அந்த நிலவு ஈர்த்தது. அந்த நிலவின் வெளிச்சமோ ஆற்று நீரில் பட்டு தெறிக்க, அதைக் காரில் இருந்து கண்டவனுக்கு சிறிது நேரத்தில் அதனை ரசித்து விட்டுச் சென்றால் தான் என்ன என்று தோன்றியது..
சில பாரிய மாற்றங்களுக்கு சின்ன சின்ன மாற்றங்கள் காரணமாக அமைவது தான் butterfly effect என்று சொல்வார்கள். அந்த விஞ்ஞான புரட்சிக்கும் ஒரு உயிரை எமனிடம் இருந்து காப்பாற்றவும் அடிப்படையாக காரணமாக அமைந்தது என்றும் வெளியே செல்ல யோசிக்காத சித்தார்த் வெளியே சென்றதும் அந்த பௌர்ணமி நிலா அவனை ஈர்த்ததும். அவனோ காரை பார்க் பண்ணி விட்டு அங்கே வந்து நின்று இருந்தவன் அந்த நிலாவையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த சமயம், சற்று தள்ளி ஒரு உருவம் தன்னை முற்றாக மறைத்துக் கொண்டு அந்த பாலத்தில் கூட ஏற முடியாமல் ஏறியது. ஏற முடியாமல் வழுக்கி விழுந்த சமயம், அந்த உருவம் உண்டாக்கிய சத்தம் பக்கத்தில் நின்ற சித்தார்த்தின் காதில் விழ, சட்டென திரும்பிப் பார்த்தான்.நிலவு வெளிச்சத்தில் அவனுக்கு அவ்வளவு தெளிவாக தெரியவில்லை என்றாலும் "இந்த நேரத்தில யாரு?" என்று யோசித்துக் கொண்டே அந்த உருவத்தை நோக்கி நடக்க, கஷ்டப்பட்டு அந்த பாலத்தில் ஏறிய உருவம் பாய எத்தனித்த சமயம் அது. "ஓஹ் காட், சூசைட் ஆஹ்?'" என்று நினைத்த சித்தார்த்தோ அந்த உருவத்தின் உடையை இறுக பற்றி தன்னை நோக்கி இழுத்து இருந்தான். இழுக்கும் போது தான் உணர்ந்தான் அவனுக்கு உடலில் பாரமே இல்லை என்று. இழுத்ததில் விழ போனவனை பிடித்து காப்பாற்றிய சித்தார்த் "யார் நீ? இப்போ எதுக்கு சூசைட் பண்ணிக்க போற?" என்று கேட்க அவனோ "நான் சாக போறேன் என்ன விடு" என்று பெரியவனுக்கு அந்த சிறிய வார்த்தைகளைக் கூட தெளிவாக கூற முடியாதளவு குரலில் நடுக்கம். ஆனாலும் சித்தார்த்தை மீறி ஓட முடியவில்லை அவனால். ஓடக் கூட அவனிடம் தெம்பில்லை அல்லவா? சித்தார்த்தோ "எதுக்கு சாகணும்? உனக்கு என்ன தான் பிரச்சனை ?" என்று கேட்க அவனோ "இந்த உலகம் நான் வாழவே தகுதி இல்ல. தப்பு செய்தவன் எல்லாம் நல்லா இருக்கிறான். ஆனா யாருக்கும் எந்த துரோகமும் செய்யாத எனக்கு ஏன் இந்த கஷ்டம்?" என்று அழ, சித்தார்த்தோ "உன் முகம் எனக்கு தெளிவா தெரியல.. ஆனா உன்னோட தோற்றத்தை வச்சு சொல்றேன்.. யூ ஆர் சிக் ரைட்?" என்று கேட்க அவனோ "ம்ம்" என்று சொன்னவன் தொய்ந்து அமர போனான். உடனே சித்தார்த் அவனை சமாதானப்படுத்தும் பொருட்டு, "என்ன பிரச்சனைன்னு சொல்லு, நான் முடிஞ்சளவு காப்பாத்த ட்ரை பண்ணுறேன்" என்று சொல்ல, விரக்தியாக சிரித்தான் அஜய். ஆம் அந்த நிலையில் சாக போனது வேறு யாருமல்ல அஜய் தான்.
சித்தார்த்தை ஏறிட்டுப் பார்த்தவன் "பெரிய பெரிய டாக்டர்ஸ் கூட லாஸ்ட் ஸ்டேஜ்ன்னு சொல்லி கை விட்டு இருக்காங்க, கேன்சர் லாஸ்ட் ஸ்டேஜ் எனக்கு.. நீ எல்லாம் எம்மாத்திரம்?" என்று சொல்லும் போதே அவன் குரலில் ஒரு நடுக்கமும் வலியும். அந்த வலியில் சித்தார்த் என்ன உணர்ந்தானோ அவனுக்கு அஜய்யை காப்பாற்றவே மனம் உந்திக் கொண்டு இருந்தது. உடனே சித்தார்த் அவனை அழுத்தமாக பார்த்து உன்னை நான் வாழ வைக்கிறேன் என் கூட வா" என்று சொல்ல, அவனிடம் ஒரு நக்கல் சிரிப்பு தான் கேட்டது. சித்தார்த்தோ " எப்படியும் சாக போற.. வாழ ஒரு முயற்சி பண்ணலாமே" என்று சொன்னவன் "என் பெயர் சித்தார்த், நான் ஒரு சயின்டிஸ்ட்.. உன்ன ஜீனோம் எடிட்டிங் மூலம் நான் குணமாக்குறேன்" என்று சொல்ல, அஜய்யோ "உன் ஆராய்ச்சிக்கு டெஸ்ட் பீஸ் ஆஹ் நான் வேணுமா?" என்று கேட்டான். அதைக் கேட்ட சித்தார்த் "உன் இடத்தில இருந்து அப்படியும் நினைச்சுக்கலாம். அதே சமயம் என் இடத்தில இருந்து ஒருத்தன காப்பாத்த எடுக்கிற முயற்சியாவும் யோசிச்சுக்கலாம்" என்று சொன்னான். அஜய் அவன் பேச்சில் கவரப்பட்டு இருக்க வேண்டும். அடுத்த கணமே அவனை அழுத்தமாக பார்த்து "கடைசியா ஒரு முயற்சி எடுத்துடலாம்.. போக போற உயிர் உன் ஆராய்ச்சிக்காவது பயன்படட்டுமே" என்று சொல்ல. சித்தார்த்தோ அவனை மென்மையாக பார்த்து புன்னகைத்தவன் மனமோ அஜய்யின் நல்ல குணத்தை கணித்துக் கொள்ள, "இப்படி பட்டவனுக்கு எதுக்கு இந்த தண்டனை?" என்று தான் நினைத்துக் கொண்டான். அஜய்யாலோ ஒரு அடி கூட வைக்க உடலில் தெம்பு இல்லை.
கஷ்டத்தை உணர்ந்த சித்தார்த், அடுத்த கணமே அவனைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். அவனை காரில் ஏற்றி மறுப்புறம் ஏறியவன் லைட்டை போட்டு முதலில் அவனை முழுமையாக பார்க்க நினைத்தான்.
அவனோ லைட் வெளிச்சத்தில் கண்களை மூடிக் கொள்ள, அவன் கைகளை விலக்கி விட்டு அவனை முழுமையாக பார்த்தான். அவன் முகமோ தாடை எலும்பு தெரியும் அளவுக்கு ஒட்டி இருக்க, அவன் விழிகளோ வலியை அழுத்தமாக பிரதிபலிக்க, தலையோ எடுக்கப்பட்ட ட்ரீட்மெண்ட்டினால் மொட்டையாக இருந்தது. அவன் போர்வையை விலக்கி உடலை பார்க்க, அஜய்யின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே வழிந்தது. உடல் வலியுடன் சேர்ந்து சாக போகின்றோம் என்கின்ற மன வலியின் பிரதிபலிப்பு அது. உடலில் விலா எலும்புகள் தெரியும் அளவுக்கு அவன் மெலிந்து அலங்கோலமாக தான் இருந்தான். சித்தார்த்தோ அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே "எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு, கண்டிப்பா உன் ஆசைப்படி உன்னை வாழ வைக்கிறேன்.." என்று சொல்லிக் கொண்டே காரை கிளப்பினான். அஜய்யை எமனிடம் இருந்து மீட்க தயாராக இருந்தான் சித்தார்த்.
அஜய்யும் தனது வாழ்க்கை பற்றி சித்தார்த்திடம் பகிர்ந்து கொண்டே வந்தான். அஜய் தேவ் வீட்டில் ஒரே பையன். தந்தை சிறு வயதில் இறந்து விட, போலீஸ் ஆக வேண்டும் என்று அவனை தனியாக வளர்த்து ஆளாக்கிய தாயும் அவன் காலேஜ் போகும் வயதில் புற்று நோய்க்கு ஆளாகி இறந்து இருந்தார். இருவரையும் இழந்தாலும் தனியே உறவினர்களின் துணையுடன் வளர்ந்தவன் போலீசில் சேர்ந்து வேலைக்கு சென்று கொண்டு இருந்த காலம் அது. அவனுக்கோ திடீரென்று அடிக்கடி மயக்கமும், உடல் சோர்வும் இருக்க ஒரு நாள் ஸ்டேஷனில் வைத்தே மயங்கி விழுந்து இருந்தான். அவனது மேலதிகாரியோ "ஒரு போலீஸ் மயங்கி விழுறது எந்த பெரிய அவமானம் தெரியுமா? உன் ஹெல்த்துக்கு ஏதும் இஸ்ஸு இருக்கான்னு பாரு" என்று கூற அனுப்ப, பூரண பரிசோதனை செய்து கொண்ட போதே அவனுக்கு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. அவனுக்கோ தலையில் இடி விழுந்த உணர்வு. தனது வாழ்க்கையே சூனியமாகி விட, வைத்தியரை சென்று பேசியவனின் கடைசி நம்பிக்கையும் தளர்ந்து போனது. ஆம் அவன் புற்று நோயில் இறுதி கட்டத்தில் இருந்தவனோ மேலும் ஓரிரண்டு வருடங்கள் ட்ரீட்மெண்ட்டுடன் வாழ முடியுமே தவிர அவனால் உயிர் பிழைத்து வாழவே முடியாது என்று கை விரித்து இருந்தார். அவனை புற்றுநோயின் செல்கள் முழுதாக உருக்குலைத்து இருக்க, அலுவலகத்தில் ட்ரீட்மெண்டுக்காக நீண்ட விடுமுறை எடுத்து விட்டு வந்தவன் புற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான்.
உயிர் மீது ஆசை இல்லாத ஜீவன் உலகத்தில் உண்டோ? தினம் தினம் அவனது உடல் நிலை சோர்வாகி சோர்வாகி தன்னையே நோய்க்கு இரையாக்கிக் கொண்டு இருந்தவனுக்கு உடல் வலியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் இறந்துவிட்டால் என்ன? என்று தான் நினைத்து இருந்தான். அவன் கஷ்டகாலத்துக்கு இறப்பும் அவனை தேடி வராமல் இருக்க, ஆறுதல் சொல்லவும் தைரியம் அளிக்கவும் அருகே யாரும் இல்லாமல் அனாதையாக வைத்தியசாலையில் இருந்தவன் எடுத்த இறுதி முடிவு தான் தற்கொலை. தற்கொலை செய்யும் பொருட்டு தான் அந்த இரவில் எப்படியோ தப்பித்து வெளியே வந்தவன் வைத்தியசாலைக்கு அண்மையில் இருந்த பாலத்தை நோக்கிச் சென்று நீரில் குதிக்க ஆயத்தமானான். அதன் பிறகு நடந்தது தான் சித்தார்த்துடனான இந்த சந்திப்பு.
அஜய்யை அழைத்துக் கொண்டு ஆய்வுகூடத்துக்கு வந்தவன் அவனை நேரே அழைத்து சென்றது தனது அறைக்குள் தான். உள்ளே சென்றதுமே "உன்னால நிறைய நேரம் மெடிக்கல் சப்போர்ட் இல்லாம இருக்க முடியாது.. பட் என் கிட்ட உனக்கு தேவையான எல்லாமே இருக்கு" என்று சொன்னவன் அறையுடன் சேர்ந்து அமைக்கப்பட்டு இருந்த அந்த ரகசிய இரும்பு கதவால் ஆன அறைக்குள் அழைத்துச் சென்று அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து தூங்க வைத்தான். அஜய்யோ "நான் கூட நீ சும்மா சொல்றேன்னு தான் நினச்சேன்... நிஜமாவே நீ சயின்டிஸ்ட் தானா??" என்று கேட்க வாய் விட்டு சிரித்தவன் "போலீஸ் புத்தி தானே அப்படி தான் சந்தேகமா வரும் " என்று சொல்ல அந்த வலியிலும் அஜய் முகத்தில் ஒரு மென்னகை.
அஜய்யோ சித்தார்த் கொடுத்த மருந்தின் வீரியத்தால் தூங்க, தூக்கம் இன்றி போனது என்னவோ சித்தார்த்துக்கு தான். அவனுக்கு தேவையான சாம்பிள்களை அஜய்யில் இருந்து எடுத்தவன் சற்றும் தாமதிக்காமல் அவனுக்கான ட்ரீட்மெண்டுக்கான நடவடிக்கைகளை செய்ய ஆரம்பித்தான்.
பல பேர் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை எல்லாம் தனி ஒருவனாக சித்தார்த் செய்தான். இரவில் ஒரு மணி நேரம் தூங்குபவன் ஆய்வுகூடத்தையும் அதே சமயம் அஜய்யின் சிகிச்சையையும் ஒருங்கே மேற்கொண்டான்.
அஜய்யின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவன் சிகிச்சையை அசுர வேகத்தில் நடத்தினான் என்று தான் கூற வேண்டும்.. அஜய்யின் நாட்களோ மயக்கத்திலேயே கழிய அவனை மொத்தமாக செதுக்க ஆரம்பித்து இருந்தான் இந்த கலியுக பிரம்மன் சித்தார்த்தன்.
தூக்கம் இன்றி அவன் அருகே இருக்கையில் சாய்ந்து தூங்கிய நாட்களை கூட சித்தார்த் கடந்து இருந்தான். அவனது ஜீனோம் எடிட்டிங் முறையில் கொஞ்சம் கொஞ்சமாக அஜய் முன்னேறிய நாட்களை பக்கத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்தான் சித்தார்த். அஜய்யின் கனவோ போலீஸ் டிபார்ட்மெண்டில் சாதிப்பதைப் பற்றியே இருக்க, அவனுக்கு சோல்ஜர்.கரணின் டி.என்.ஏ யின் அமைப்பை பயன்படுத்துவது ஒன்றும் சித்தார்த்துக்கு தடையாக இருக்கவில்லை.. சில மாதங்கள் கடந்து அன்று அஜய்க்கான ட்ரீட்மென்டின் இறுதி நாள்.
அந்த ரகசிய அறைக்குள் வந்த சித்தார்த் மயக்கத்தில் இருந்த அஜய்யை ஆழ்ந்து பார்த்து "உன் வாழ்க்கைல இந்த நாள் எப்போவுமே.மறக்க மாட்ட அஜய்.. இன்னைல இருந்து உன் வாழ்க்கையை நீ வாழ ஆரம்பிக்கலாம்.. சந்தோஷமா சிறகடிச்சு பறக்கலாம்.. யாருக்கும் எந்த பாவமும் செய்யாத உனக்கு அந்த பிரம்மன் தலையெழுத்தை பிழையா எழுதி இருக்கலாம். ஆனா இந்த பிரம்மன் மாத்தி எழுதிட்டேன்" என்று பெருமையாக சொன்னவன் கரமோ படுத்து இறந்தவனின் நெற்றியில் இருந்து மார்பு வரை வருடியது.. என்பு மட்டுமே கொண்டு அவனிடம் வந்து இறங்கியவன் அல்லவா அவன்? இன்று திடகாத்திரமான மனிதனாக உரு மாறி இருக்கின்றான். அவன் மார்பில் கை வைத்தவன் கண் மூடி அவன் இதய துடிப்பை உணர்ந்தான். எப்போதுமே தாய்க்கு தான் பெற்றெடுத்த குழந்தை மீது அலாதி பிரியம்.இருக்கும்.. அதே போல ஒரு பிரியம் தான் அஜய் மீது சித்தார்த்துக்கு..
தாய் கருவில் குழந்தையை சுமந்து உயிர் கொடுப்பது போல அல்லவா அவனும் அஜய்யை இன்று செதுக்கி இருக்கின்றான். அவனை வருடும் பொது ஒரு பரவச உணர்வு..
ஆராய்ச்சி தாண்டி அவனுடன் ஒரு நெருங்கிய பிணைப்பும் சித்தார்த்துக்கு உருவாகி இருந்தது. சித்தார்த்தின் பலமும் பலவீனமும் அந்த பாசம் தான்.. நரேனிடம் முட்டாள் ஆகியதும் அந்த பாசத்தினால் தான்.
தனியே வளர்ந்தவன் எதிரியின் உயிரையும் எடுப்பான். பிடித்து விட்டால் உயிரையும் கொடுப்பான். இலகுவாக இதயத்துடன் இதயத்தை பிணைத்து விடுபவனுக்கு பீட்டர் முதல் அஜய் வரை தான் செதுக்கிய படைப்புகள் மீது அலாதிப் பிரியம்..
நண்பனுக்கும் மேலான ஒரு பிரியம்.. அவனுக்கான இறுதி ட்ரீட்மெண்டை முடித்து விட்டு அவன் கண் விழிப்பதற்கான ஏற்பாட்டை செய்து இருந்தவன் அவனையே பார்த்துக் கொண்டு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தான். கிட்டத்தட்ட சில மணி நேரங்கள் களைத்து அஜய் கண் விழித்தான் புது மனிதனாக.
எழுந்து அமர்ந்தவன் முன்னே இருந்த சித்தார்த்தைப் பார்த்துவிட்டு , சற்றே குனிந்து தனது மேனியை தான் பார்த்தான். எப்படி இருந்த மேனி அது. கண்ணாடியில் பார்க்கவே விரும்பவில்லை அல்லவா அவன்? ஆனால் இன்று ஒரு திடகார்த்திரமான மனிதனாக உருமாறி இருக்க, அவன் மேனியோ முதல் இருந்ததை விட உரமேறி இருந்தது. தனது கைகள் தொடக்கம் அனைத்தையும் பரவசத்துடன் பார்க்க, அவனையே மென் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான் சித்தார்த். அடுத்த கணமே எழுந்தவனோ கண்களை மூடி சத்தமாக கத்தினான். அவனுக்குள் இருந்த வலி எல்லாம் அந்த ஒரு கர்ஜனையில் வெளியேறி போக, எழுந்து நின்ற சித்தார்த், "உன் வாழ்க்கையை நீ வாழ ஆரம்பிக்கலாம் அஜய்" என்று சொன்னதுமே கண் விழித்து அவனை கலங்கிய கண்களுடன் பார்த்தவன் "சொன்ன போல செஞ்சுட்ட சித்தார்த்.." என்று சொல்லி அவனை நெருங்கி இறுக அணைத்துக் கொண்டான். இறப்பின் விளிம்பில் இருந்தவன் மீண்டும் பிறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வு அவனுக்கு. சித்தார்த்தின் அணைப்பில் இருந்தபடியே "உனக்கு என்ன வேணுமோ கேளு சித்தார்த்.. என் வாழ்க்கையை நீ மீட்டு கொடுத்து இருக்க, என் தலையெழுத்தையே மாத்தி எழுதுன பிரம்மன் நீ" என்று சொல்ல, அவனை விலக்கி விட்டபடி அவனை அமர வைத்து அவனது ரத்த அழுத்தம் எல்லாம் பரிசோதித்தவன் சற்றே நிமிர்ந்து பார்த்து "உனக்கு உன் அம்மா உயிர் கொடுத்தத்துக்கு பரிகாரமா என்ன கொடுப்ப?" என்று கேட்க அவனோ புரியாமல் பார்த்தான். உடனே சித்தார்த் "பரிகாரமா கொடுத்தா அந்த உறவுக்கு அர்த்தமே இல்ல. அது போல எனக்கும் பரிகாரம் பண்ணுறேன்னு சொல்லி கொச்சை படுத்திடாதே" என்று சொல்லி விட்டு எழ, அஜய்யோ "நான் மட்டும் பொண்ணா இருந்தா உன்னை கல்யாணமே பண்ணி இருப்பேன்.. என்ன பண்ணுறது? பையனா பிறந்துட்டேன்" என்று சொல்ல, சட்டென திரும்பிப் பார்த்த சித்தார்த் வாய் விட்டு சத்தமாகச் சிரித்துக் கொண்டான்.